சாண்ட்விச் (29,06,09)

தற்போதுதான் தெரிய வந்தது திரு வடகரை வேலன் அவர்கள் பதிவர் கார்க்கி அவ்ர்கள் காக்டெயில் என்ற அந்த தலைப்பில் வெகுகாலமாய் எழுது வருகிறார் என்று சொன்னார்... அதனால் கார்க்கியிடம் இப்படி நடந்து விட்டது என்ற வருத்தப்பட்டடேன்...

அதற்க்கு அவர் பெருந்தன்மையாக அது என்ன காப்பிரைட்டா? என்றும் கலக்கல் காக்டெயில் தலைப்பால் குழுப்பம் வராது என்றார் இருப்பினும்...எப்போதுமே நாம் கொஞசம் கோபத்தோடும், எகனை முகனையாகவும் எழுதுவோம் அதை பதிவர் கார்க்கியை பாதித்து விடக்கூடாது அல்லவா? அதனால் தலைப்பை சாண்ட்விச் என்று மாற்றிவிட்டேன்... கார்கிக்குநன்றி




ஒரு நல்ல பேர் கேட்டதற்க்கு நிறைய போ் நிறைய ஐடியாக்கள்,எல்லாம் சொல்லி,ஒரு வழியாக பதிவர்கள் முரளி தண்டோரா,கேபிள் சொன்ன சாண்ட்விச் என்ற தலைப்பில் சில, பல, சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஜோக் எல்லாம் இதில் எழுதபோகின்றேன்.... அதே போல் உள்ளே இருக்கும் விஷயஙகளுக்கு ஆல்பம், சான்ட்விச் சால்னா போன்ற பெயர்களை பரிந்துரைத்த கலையரசன்,கேபிள்,முரளிகண்ணன்,தண்டோரா,அக்னிபார்வை போன்ற பதிவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....


மற்றபடி தலைப்பு கேட்டதும் வாரி வழங்கி, ஐடியா கொடுத்த அனைத்து பதிவர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...

ஆல்பம்...
சில நாட்கள் முன்வரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை, இப்போது வரும் சில செய்திகள் என்னையும் அசைத்து பார்க்கின்றன... உண்மை சுடும் என்பது இதுதானோ.....போன சனிக்கிழமை ஜுனியர் விகடனில் தலை மேல் வெட்டுப்பட்ட படம் பார்த்த போதும் அதன் செய்திகளை வாசித்த போதும் மனம் ரொம்பவும் வருத்தம் கொள்ளசெய்கின்றது.....


மைக்கேல் ஜாக்சன் பாடல் பிரபலம் ஆன நேரம் அது.... அப்போது எங்கள் அத்தை வீட்டில் டிவி வாங்கிய நேரமும் கூட...அப்போது ஒரு மைக்கேல் ஜாக்சன் பாடல் டிவியில் ஒளிபரப்பானது என் அத்தை...
“ஏன்டா எப்ப பார்த்தாலும் அவன் அங்கயே கையை வச்சி்கிட்டு ஆடறான்? அதை போய், வச்சகண்ணு மாறாம பாத்துகிட்டே இருக்க.... இரு சாயிந்திரம் உங்க அப்பன் வரட்டும் அவன்கிட்ட சொல்லறென்”
என்று என் அத்தை பயமுறுத்தியது இன்னும் என் நினைவுகளில்....எப்படி இருப்பினும் வீடியோ ஆல்பங்களில் மைக்கேல் ஆல்பம் என்றால், எப்போது வேண்டுமானாலும் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்....

மிக்சர்...

பதிவர்கள் பலரின் படைப்புகள் சிறுகதைகளாக வாரப்பத்திரிக்கைகளில் வந்தாலும் பதிவர் லக்கி அவர்கள் குமுதம் ரிப்போர்டரி்ல் தொடராக சைபர் கிரைம் எனும் தலைப்பில் எழுதுவது பாராட்டுக்கு உரியது.... மிக மிக சந்தோஷமாகவும் இருக்கின்றது... சகபதிவர் கண்களுக்கு எதிரில் வளர்வது குறி்த்து மிக்க மகிழ்ச்சி அவருக்கும் அவர் வாசகர்களுக்கு என் வாழ்த்துக்கள்....


விக்ரமாதித்யன் வேதாளம் கதையாக தொடர்ந்து கதை சொல்லும் கேபிள் விரைவில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..... அதே போல் கால சூழலில் சில பல விஷயங்களை விட்டு வெளியே வந்து அதே துறையில் திரும்பவும் சாதிக்க வாய்பு கிடைக்க பெற்ற தண்டோராவுக்கும்...என் வாழ்த்துக்கள்....


ஒரு பதிவர் அதுவும் சபையில் மற்ற பதிவருடைய எழுத்துக்களை சிலாகித்து பேச, நல்ல மனசு வேண்டும். அந்த வகையில் நேற்று பதிவர் கனேஷ் அவர்கள்,நர்சிம் எழுத்துக்களை சிலாகித்த பேசியது எனக்கு மகிழ்வை தந்தது...வாழ்த்துக்கள் நர்சிம் மற்றும் கனேஷ்.....

சால்னா...
அந்த கல்லூரியில் பாயாலஜி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது... பேண்ட் போட்ட வாத்தியார் எல்லோரும் ஆணின் ரீபுரெடெக்ஷன் உறுப்பை வரைந்து பாகம் குறிக்க வேண்டிக்கொண்டார்...

அப்போது கடைசி பெஞச் மாணவர்கள் ...

“சார், முதல்ல உங்க பேண்ட் ஜிப்பை போடுங்க பஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்து இருக்கற பொம்பளை பசங்க, அதை காப்பி அடிச்சி அப்பட்டமா அப்படியே வரையுதுங்க என்றனர்....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

6 comments:

  1. நான் சொன்ன கருத்தை நேர்மறையாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி சேகர்.

    கடைசி ஜோக் கொஞ்சம் உவ்வே டைப் என்றாலும், அதற்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது.

    ReplyDelete
  2. அண்ணே நீங்க அழிச்சுட்டு திருப்பி பதியாமே அப்படியே எடிட் பண்ணி இருக்கலாமே...

    ReplyDelete
  3. நன்றி வேலன் சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கை, கார்க்கி பெருந்தன்மையாக சொல்லாம் அந்த தலைப்பை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அது அவர் பெருந்தன்மை ஆனால் அந்த தலைப்பில் அவர் வேறு மாதிரி எழுதி இருக்கலாம் ஆனால் அந்த பேரை நாம் கெடுக்க கூடாது....என்றதால் சட்டென தலைப்பை மாற்றிவிட்டேன்...நீங்களே சொல்லிவிட்டீர்கள்... அந்த ஜோக் உவ்வே என்று அது உங்கள் கருத்து அதே போல் இப்படி நான் எழுதி அது அவரை பாதிக்கலாம் அல்லவா? அதனால்தான்...
    நன்றி வேலன் சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கை...

    சிலருக்கு தயிர்சாதம் பிடிக்கும் சிலருக்கு மீன் கொழம்பு பிடிக்கும் எனக்கு நேத்து வச்ச மீன் குழும்பு என்றால் ரொம்பவும்,....

    ReplyDelete
  4. அண்ணே நீங்க அழிச்சுட்டு திருப்பி பதியாமே அப்படியே எடிட் பண்ணி இருக்கலாமே...--//

    பண்ணலாம் நைனா ஆனா அந்த தலைப்பு தமிழ்மனத்துல அப்படியே இருக்கும் அல்லவா? அதனால்தான்

    ReplyDelete
  5. /*பண்ணலாம் நைனா ஆனா அந்த தலைப்பு தமிழ்மனத்துல அப்படியே இருக்கும் அல்லவா? அதனால்தான்*/

    இப்படி பண்ணுனாலும் இருக்கும்.

    அதான் நாம தார்மீக பொறுப்பேற்று மாதிட்டோமே... அப்புறம் இருந்தாலும் தவறில்லை... மன்னிக்கப்படலாம்.

    அப்புறம் வேலன் அண்ணாச்சிக்கு ஒரு பதில் மட்டும் சொல்லிகறேன். ( தயவு செய்து தவறாக என்ன வேண்டாம், விவாதமும் வேண்டாம், ஒரு தகவலாக மட்டுமே )

    நம்ம ஊருலே தான் "திருட்டு புருஷன்" படம் ஒரு வருஷம் ஓடிச்சு...

    ReplyDelete
  6. /
    “ஏன்டா எப்ப பார்த்தாலும் அவன் அங்கயே கையை வச்சி்கிட்டு ஆடறான்? அதை போய், வச்சகண்ணு மாறாம பாத்துகிட்டே இருக்க.... இரு சாயிந்திரம் உங்க அப்பன் வரட்டும் அவன்கிட்ட சொல்லறென்”
    /
    :))))))))))
    ROTFL

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner