பாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள ஓர கைகாட்டி மரங்கள்...

கால ஓட்டத்தில்காணாமல் போனவைகளில் இந்த பகுதியில் இன்று ரயில் பாதையோரத்தில் இருந்த கைகாட்டி மரங்களை பற்றி பார்ப்போம்.

ரயில் எல்லோருக்கும் பிடிக்கும் .
சின்னவயதில் அது போகும் போது ஏற்படுத்தும் தாளகதி, டடக் டக் டக் என்று சுருதி மாறமல் தொடர்ந்து செல்லும் சத்தம் எனக்கு ரொம்ப பிடித்தமானது...

பள்ளி விட்டு வரும் போது ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து, அது நொறுங்கும் அழகை பார்த்து ரசிப்போம்...
அதில் ஒரு கண்டு பிடிப்பாளன்..

இப்படி தண்டவாளத்துல கல்ல வச்சி ஒடச்சிதான் கோலமாவு செய்யறாங்க என்று சொல்ல எல்லோரும் அவன் வாயையை பார்த்தோம், காரணம் அவன் லாஜிக்காக சொன்னதுதான்..

நான் மட்டும் ஒரு படி கோலமாவுக்கு எத்தனை கல் வைப்பாங்க? இப்படி தணட்வாளத்துல வச்சி தூள் தூள் ஆன எப்படி பெருக்கி எடுப்பாங்க?என்ற கேள்வி என் மனதில் நெடுநாள் இருந்தது. இப்போது அந்த சயின்டிஸ்ட் ஊரில் மேஸ்த்திரி வேலை செய்கின்றான்...

தண்டவாள ஓரத்தில் இருக்கும் அய்யனார் கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் போது ரயில் வந்தால் போட்டது போட்டபடி ஓடிப்போய் ரயிலுக்கு டாட்டா காட்டி இருக்கின்றோம்.

இப்படி ஒரு நாள் தண்டவாளத்துல கல் வச்சி சதி செயல் செய்த போது தூரத்தில் இருந்து பார்த்து விட்டஅந்த ரயில் என்ஜீன் டிரைவர் எங்கள் மேல், கனகனன்னு எரியும் நிலக்கரியை வாரி போட எல்லாரும் துண்டைக்கானோம் துணியைக்கானோம் என்று அந்த இடம் வி்ட்டு ஓட்டம் பிடித்தோம்

அப்படி ஒரு பிரமாண்ட ரயிலை நிறுத்தி சில மணித்துளிகள் காக்க வைக்கும் அந்த கைகாட்டி மரங்கள் மேல் எப்போதும் ஒரு மதிப்பு எனக்கு உண்டு...
பாரேன், அது தூக்கனா ரயில் போகுது அது இறக்கனா ரயில் நிக்கிது..என்று நண்பர்களுக்குள் சிலாகித்து பேசுவோம்...

அதே போல் பள்ளி விட்டு வரும் போது கைக்காட்டி மரத்தை நோக்கி போகும் இரண்டு கம்பிகளுக்கு நடுவில் ஒரு சின்ன குச்சியை வி்ட்டு சரசரவென கைகாட்டி தூக்கி இருக்கும் போதே அந்த கம்பியை முறுக்கி விடுவோம் ரயில் போன பின்பு வெகுநேரம் அந்த கைகாட்டி தூக்கியபடி இருக்கும், நாங்கள் அந்த குச்சியை எடுத்து கம்பி முறுக்கலை விட்டால்தான் தூக்கிய கைகாட்டி இறங்கும்.


அப்புறம் எங்களுக்கு புத்தி வந்தது. இதையே மத்த பசங்க பாத்தா இதையெ திரும்பவும் செய்து ரயில் விபத்து ஏற்படக்கூடாதுன்னு அந்த விளையாட்டை அப்பையே ஓரங்கட்டிட்டோம்.

இராவுல கைகாட்டி மரம் தெரியனும்னு அதில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு விளக்கை வைப்பாங்க... அந்த ஆள் ஏறி வௌக்கவச்சிட்டு ஏறி இறங்கறதை கண் கொட்டாம பார்ப்போம். எங்களை பொறுத்தவரைக்கும் அப்போதைக்கு ரொம்ப பெரிய டவர் அதுதான்.

பள்ளிவிட்டு வரும் போது, எங்கையோ மூச்சி இறைக்க ஓடிவரும் ரயிலுக்கு ஸ்டேசன் “பிரி”ன்னு இப்பவே கையை தூக்கிட்டு நிக்கும்.
நாங்களும் ரயில் பாக்கறதுக்காக பத்து நிமிஷம் வெயிட் செய்து ரயில் பார்த்து விட்டு வீடு செல்வோம்....

அதுக்கப்புறம் கால ஓட்த்தில் எல்லாம் மின்மயம் ஆகி கைகாட்டி மரங்கள் காணாம போச்சு. அதுக்கப்புறம் போன மாசம் ஊட்டி போனப்ப இந்த கைகாட்டி மரங்களை பார்த்தேன்...

எவ்வளவுதான் புதுமை பரட்டி போட்டாலும் wantedஆ சில விஷயங்களை பொத்தி, பொத்தி, பாதுகாக்கறது நல்ல விஷயம்தான்...


என் மனைவி கேட்டால் என்ன ஒரு மாதிரியா இருக்கிங்க?? ஊட்டி ரயில் நீங்க எதிர்பார்த்தது போல் இல்லைதானே? என்ற என்னை படித்தவள் போல் கேட்டாள்....

நான் எப்படி சொல்ல முடியும்,
அங்கு பார்த்த கைகாட்டி மரங்கள் என் பால்யகாலத்தை ரொம்ப நினைக்க வச்சிடுச்சி... என்று???

அப்படியே சொன்னாலும்.... என் மனைவியின் பதில் இதுதான்...

பொண்டாட்டிய தவிர மத்தது எல்லாம் ஞாபகத்துக்கு வரும் என்ற சொல்லி கிள்ளிவிடுவாள்.



நிழற்படம்/அன்புடன்/ஜாக்கிசேகர்

ஓட்டு போட மறவாதீர்

11 comments:

  1. Good.

    பதிவா போட்டு தள்ளுங்க ராசா.

    உங்க கிட்டேந்து சுட்டது.


    வந்து பாருங்க.

    http://mynandavanam.blogspot.com/search/label/Cable%20Sankar

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாயிருந்திச்சு ரயிலடி நினைவுகள்.. ..

    ReplyDelete
  3. www.Tamilers.com

    You Are Posting Really Great Articles... Keep It Up...

    We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

    தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

    அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

    தமிழர்ஸின் சேவைகள்

    இவ்வார தமிழர்

    நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

    இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

    இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

    இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

    சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

    Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
    உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

    நன்றி
    உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
    தமிழர்ஸ்
    தமிழர்ஸ் பிளாக்

    ReplyDelete
  4. பதிவா போட்டு தள்ளுங்க ராசா.

    //

    நன்றி சூர்யா...

    ReplyDelete
  5. நன்றி அகிலன்
    ரொம்ப நல்லாயிருந்திச்சு ரயிலடி நினைவுகள்.. ..

    ReplyDelete
  6. நாம் தொலைத்த, தொலைத்து வரும் விஷயங்கள்.. ஞாபகப் பதிவு அருமை தல..

    ReplyDelete
  7. romba nalla irundhadhu ungal rail ninaivugal anna nenga chennail ulla rail musuem ennum nallarukkum nenga parthuirkkingala ?

    ReplyDelete
  8. நாம் தொலைத்த, தொலைத்து வரும் விஷயங்கள்.. ஞாபகப் பதிவு அருமை தல..--//

    நன்றி பாண்டியன்

    உங்கள் தொடர் பி்ன்னுட்டம் இட்டு என்னை உற்சாகபடுத்துவதற்க்கு

    ReplyDelete
  9. romba nalla irundhadhu ungal rail ninaivugal anna nenga chennail ulla rail musuem ennum nallarukkum nenga parthuirkkingala ?//

    இன்னும் இல்லை பிஸ்கோத்துபயல் நிச்சயம் பார்க்கின்றேன்

    ReplyDelete
  10. /
    பொண்டாட்டிய தவிர மத்தது எல்லாம் ஞாபகத்துக்கு வரும் என்ற சொல்லி கிள்ளிவிடுவாள்.
    /

    ஜஸ்ட் கிள்ளறதுமட்டுமா??
    பொறாமையா இருக்குங்ணா. இங்கல்லாம் டைரக்டா அடிதான் :))))))))))))))

    ReplyDelete
  11. மறந்த விஷயங்களை உயிர்பிப்பதற்கு மிக்க நன்றி. மற்றொரு அருமையான பதிவு.

    ஸ்ரீ....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner