(dance me to my song-உலக சினிமா 15+) பேசவும் முடியாத,நடக்கவும் முடியாத,உடல்ஊனமுற்ற பெண்ணுக்கு காதல்வந்தால்???


காதல் ஒரு அற்புதமான விஷயம். அது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும்,எங்கு வேண்டுமானாலும் வரலாம்.அதை தான் தனது முதல் படமான “அழகிய தீயே” படத்தில் “பூம்” என்ற காதலுக்கு குறியீடு கொடுத்து இருப்பார் இயக்குனர் ராதா மோகன்...

“பூம்” யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம், காதல் எப்போது வேண்டுமானாலும் எவர் மீதும் எற்படலாம்..இப்போது பிரபுதேவா நயன்தாரா காதலை கூட உதாரணத்துக்கு சொல்லலாம். ஆனால் அந்த பெண்ணால்,

வாய் பேச முடியாது, அவளால் எழுந்து நடக்க முடியாது,எல்லாவற்றி்ர்க்கும் மேலாக ஒருவர் உதவி இல்லாமல் பாத்ரூம் கூட போக முடியாது.... இவ்வளவு ஏன் அவள் வாழ்க்கை சக்கர நாற்காலிதான்... அந்த பெண்ணுக்கு காதல் வந்தாள்??? அதுதான்“ டான்ஸ் மீ டூ மை சாங்” படத்தின் கதை....

ஊனமுற்றவர்களாக இருந்தாலும் காதலும் காமமும் பொது இதை நம் சமுகத்தில் பலர் உணர்வதில்லை...

“ ஏன்டி லட்சுமி, அந்த நொண்டி நாய்க்கு எதுக்குடி இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம்? எதோ வெந்ததை தின்னுட்டு வீட்ல ஒரு ஓரமா இருக்காம” என்று எங்கள் ஊரில் காதல் வயப்பட்ட ஒரு ஊனமுற்ற பெண்ணை பற்றி தண்ணீர் பிடிக்கும் இடத்தில் இப்படித்தான் பேசினார்கள்...
இத்தனைக்கும் அந்த பெண் லேசாக விந்தி விந்தி நடப்பாள் அவ்வளவுதான்...

ஆனால் இந்த பெண் சக்கர நாற்க்காலியில் உடல் கோனலாக ,உட்கார்ந்து இருப்பாள்(Heather Rose) அவள் பேச வேண்டும் என்றால் அவள் வீல் சேரில் கம்யுட்டருடன் இனைக்கப்பட்ட கீ போர்டில் அவள் சூம்பி போன கையால் டைப் அடித்து எதிராளிக்க அவளுக்கு என்ன வேண்டும் என்பதனை சொல்ல வேண்டும்...எவ்வளவு கொடுமை பாருங்கள்....
அவளை பார்த்க்கொள்ளும் பெண் (joey kennedy) மிகவும் அலட்சியம் கொண்டவள், அவளை பார்த்துக்கொள்ளதான் அவள் ஆனால் , அந்த ஊனமுற்ற பெண் அடம் பிடிக்கும் போது அவளை அடித்து கொடுமை படுத்துவாள்... அவள் பயங்கர கோபக்காரியும் கூட....

எல்லாத்தையும் நாம் பொறுத்துக்கொண்டாலும், அந்த ஊன முற்ற பெண் எதிரில் அவள் பாய் பிரண்டுகளுடன் அவள் செக்ஸும் வைத்துக்கொள்வாள்... அவள் ஊனமுற்ற பெண்தான் ஆனால் அவள் உணர்வுகள் ஒன்றும் மரக்கட்டையில்லையே???

அப்படி அந்த வீட்டில் அந்த ஆடங்காப்பிடாரியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள அந்த தெருவிலேயே வசிக்கும் ஒருவன், ( jhon brumpton) ஒருநாள் அந்த வீட்டுக்கு வருகின்றான்.. அந்த பெண்ணோடு செக்ஸ் வைத்துக்கொள்கின்றான்...
அதன் பிறகு அந்த வீட்டை கடக்கும் போது இந்த ஊனமுற்ற பெண் தனியாக சாப்பாடு மற்றும் பாத்ரூம் கூட போக முடியாமல் தவிக்க, அப்போது அந்த வழியாக வரும் ஜான் அவளுக்கு உதவுகின்றான்.... அதன் பிறகு அவன் அந்த வழி கடக்கும் போதெல்லாம் அந்த ஊனமுற்ற பெண் கம்யுட்டர் மூலம் ஒளியெழுப்ப, அவன் அந்த ஊனமுற்ற பெண்ணிடம் காட்டும் பரிவு , நட்பாக, பின்பு காதாலாக மாறியதா? அல்லது அந்த கோபக்கார பெண் இவர்கள் நட்பைஅல்லது காதலை, ஏற்றுக்கொண்டாளா? என்பதை தேடிப்பிடித்து இந்த ஆஸ்த்திரேலிய படத்தின் டிவிடி வாங்கி பார்க்கவும்....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இதன் இயக்குநர் Rolf de Heer அலெக்சாண்ட்ரா புராஜக்ட் என்ற அற்புதமான படத்தை எடுத்தவர்... அந்த படத்தின் விமர்சனம் இதே லேபிளில் போய் படிக்கவும்...

ஆஸ்த்திரிலேயாவின் மிக முக்கியமான இயக்குனர் இவர். இவரிடம் எனக்கு பிடித்த விஷயம் எந்த தளத்திலும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல் எல்லா தளங்களிலும் இயங்குபவர்...இந்த படத்தின் ஊனமுற்ற பாத்திரத்தில் நடித்த நாயகிக்கு பெஸ்ட் ஆக்டரஸ் ஆவார்டை இந்த படம் பெற்றுதந்தது....

அந்த ஊனமுற்ற பெண்ணின் காமத்தை இவ்வளவு அழகாக வேறு எந்த இயக்குனரும் வெளிப்படுத்தி இருக்க முடியாது...

படத்தின் கிளைமாக்ஸ் சான்சே இல்லை அந்த அளவுக்கு சூப்ப்ரோ சூப்பர்...

படத்தின் பல காட்சிகளில் என் கண்கள் குளமாயின...


இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனரே...

மிக அற்புதமான திரைக்கதை ....

படத்தில் நிறைய நிர்வாணக்காட்சிகள் அதனால் 18வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கலாம். குடும்பத்துடனும் பார்ப்பதை தவிர்க்கவும்.

இயக்குநர் முதலில் டெலிவிஷன் ஸ்டுடியோவில் வேலை பார்த்தவர்...

இந்த படம் சென்னை 4வது உலக படவிழாவில், உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது..
Director:
Rolf de Heer
Writers:
Heather Rose (writer)
Frederick Stahl (writer)
Awards:
2 wins & 7 nominations
Release Date:
22 October 1998 (Australia)
Genre:
Drama
Tagline:
A love triangle? Depends on you point of view really...
Plot:
A woman (Heather Rose) trapped in a twisted body from her bouts with the debilitating cerebral palsy...
Awarded the 1998 Australian Catholic Film Award

*Film Critics Circle of Australia: Nominated for Best Original Screenplay, Best Actress (Heather Rose) and Best Supporting Actress (Rena Owen)

*Awarded the Premier's Literary Award Script Writing Prize, New South Walesஅன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....
நன்றி

17 comments:

 1. DVD கிடைக்குமா தல!
  கண்டிப்பா பார்க்கனும்னு தோணுது!

  ReplyDelete
 2. DVD கிடைக்குமா தல!
  கண்டிப்பா பார்க்கனும்னு தோணுது!

  ReplyDelete
 3. List ல சேர்த்தாச்சு

  ReplyDelete
 4. இப்படியும் படம் எடுக்க இயலும் என்பது ஒரு ஸவால் தான்.

  E-Wall என்ற படத்தில் அந்த இயந்திரங்களின் காதலை கூட புரிந்து கொள்ளும் விதமாக படமாக்கியிருந்தார்கள், அவர்களின் முயற்சியை நினைத்து ரொம்ப நெகிழ்வாய் இருந்தது.

  தற்போது தாங்கள் சொல்லியிருக்கு படம் பற்றி படிக்கும் பொழுது BLACK என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது.

  எவ்வளவோ விடயங்கள் குவிந்து கிடக்குது உலகில் சொல்ல, நம்ம ஆட்கள் மட்டும் இன்னும் கோடி கணக்கில் செலவுகள் செய்து படப்பெட்டிகளில் கோடியில் போடக்கூட அறுகதையற்ற ஒளி/ஒலி சுருள்களை சேர்க்கின்றனர் ...

  இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து இப்படியெல்லாம் நம்மூரில் படம் வருமோ ...

  ReplyDelete
 5. DVD கிடைக்குமா தல!
  கண்டிப்பா பார்க்கனும்னு தோணுது!//

  நன்றி வால்பையன் தொடர் வாசிப்புக்கு
  டிவிடி நான் தேடியும் கிடைக்கலை இது 2 வருஷத்துக்கு முன்ன பார்த்த படம்

  ReplyDelete
 6. List ல சேர்த்தாச்சு//

  நன்றி ராஜ்

  ReplyDelete
 7. எவ்வளவோ விடயங்கள் குவிந்து கிடக்குது உலகில் சொல்ல, நம்ம ஆட்கள் மட்டும் இன்னும் கோடி கணக்கில் செலவுகள் செய்து படப்பெட்டிகளில் கோடியில் போடக்கூட அறுகதையற்ற ஒளி/ஒலி சுருள்களை சேர்க்கின்றனர் ...//

  நன்றி ஜமால் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  ReplyDelete
 8. ///

  “பூம்” யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம், காதல் எப்போது வேண்டுமானாலும் எவர் மீதும் எற்படலாம்..இப்போது பிரபுதேவா நயன்தாரா காதலை கூட உதாரணத்துக்கு சொல்லலாம்.

  ///

  super

  ///

  ஊனமுற்றவர்களாக இருந்தாலும் காதலும் காமமும் பொது இதை நம் சமுகத்தில் பலர் உணர்வதில்லை...

  “ ஏன்டி லட்சுமி, அந்த நொண்டி நாய்க்கு எதுக்குடி இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம்? எதோ வெந்ததை தின்னுட்டு வீட்ல ஒரு ஓரமா இருக்காம” என்று எங்கள் ஊரில் காதல் வயப்பட்ட ஒரு ஊனமுற்ற பெண்ணை பற்றி தண்ணீர் பிடிக்கும் இடத்தில் இப்படித்தான் பேசினார்கள்...
  இத்தனைக்கும் அந்த பெண் லேசாக விந்தி விந்தி நடப்பாள் அவ்வளவுதான்...

  ///

  இப்படிப்பட்ட உங்களின் சொந்த விவரணங்களினால் இந்த விமர்சனத் தொடர் இன்னும் அழகாகிறது. தொடர்ந்து பின்பற்றவும்

  ///

  குடும்பத்துடனும் பார்ப்பதை தவிர்க்கவும்.

  ///

  நீங்க தனியாவா பாத்தீங்க...?

  அன்பு நித்யன்

  ReplyDelete
 9. தல... Torrentsல கண்டிப்பாக கிடைக்காது போல.தெரிந்த DVD Centreகளுக்கு எல்லாம் mail அனுப்பியுள்ளேன். கிடைக்கிறதா பார்ப்போம்...

  ReplyDelete
 10. அப்பா... ஒரு பார்க்காத படம் கிடைச்சிடுச்சு!
  இன்னகே டவுன்லோட்தான்...
  நன்றி ஜாக்கி பாஸ்!!

  ReplyDelete
 11. /*அலெக்சாண்ட்ரா புராஜக்ட் என்ற அற்புதமான படத்தை எடுத்தவர்...*/

  "அந்த" 'அலெக்சாண்ட்ரா'வாண்ணே..!?!?!?

  ReplyDelete
 12. நான் எப்படி பார்க்காம விட்டேன்..?

  ReplyDelete
 13. குடும்பத்துடனும் பார்ப்பதை தவிர்க்கவும்.

  ///

  நீங்க தனியாவா பாத்தீங்க...?


  நன்றி நித்யா தனியாகத்தான்

  ReplyDelete
 14. தல... Torrentsல கண்டிப்பாக கிடைக்காது போல.தெரிந்த DVD Centreகளுக்கு எல்லாம் mail அனுப்பியுள்ளேன். கிடைக்கிறதா பார்ப்போம்.//

  பாத்துட்டுட சொல்லுங்க பிரதீப்

  ReplyDelete
 15. /*அலெக்சாண்ட்ரா புராஜக்ட் என்ற அற்புதமான படத்தை எடுத்தவர்...*/

  "அந்த" 'அலெக்சாண்ட்ரா'வாண்ணே..!?!?!?//

  அது வேற அலெக்சான்ட்ரா நைனா

  ReplyDelete
 16. அப்பா... ஒரு பார்க்காத படம் கிடைச்சிடுச்சு!
  இன்னகே டவுன்லோட்தான்...
  நன்றி ஜாக்கி பாஸ்!!//
  நன்றி கலை படம் மனதிலேயே நிற்க்கும்

  ReplyDelete
 17. நான் எப்படி பார்க்காம விட்டேன்..?//
  நீங்க அவரோட ரெண்டு படத்தையும் மிஸ் பண்ணிட்டிங்க...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner