(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்?????ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க திரு்டனுக்கு தேள் கொட்டினா மாதிரி...
ஏன் அப்படி சொல்லறாங்கன்னா? திருட வந்த இடத்துல சத்தமே இல்லாம காரியத்தை முடிக்கனும் . திருட வந்த இடத்துல தேள் பாம்பு என்று எது கடிச்சாலும், அங்க கத்தனா? உடனடி சங்குதான்....

அப்படி ஒரு திருடனுக்கு தேள்கொட்ன கதையைதான் இப்ப நாம சந்தோஷமா பார்க்க போறோம்... திருடனுக்கு ள் கொட்டனா வலி எப்படி இருக்கும்? அது சாதரண வலியில்லை மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம ஒரு வலி இருக்குமே அது போன்ற ஒரு வலி....

வைரமுத்து சொன்னது காதலுக்கு....

“வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாதொறு உருண்டையும் உருளுதடி”


அது இப்ப நாம பார்க்க போற படா திருடனுக்கும் பொருந்தும்....

அவன் ஒரு பிரபல திருடன்Miles Logan (மார்ட்டின் Lawrence) அவன் ஒரு 20 மில்லியன் மதிப்புள்ள வைரத்தை திருடும் போது போலீஸ் ஸ்மெல் பண்ணி அவனை நெருங்குறாங்க... அப்ப வைரத்தை கொள்ளை அடிச்ச கட்டத்துக்கு எதிர் கட்டத்துல (அப்பதான் அந்த கட்டிடடத்தை கட்டிகிட்டு இருக்காங்க...) கயிறு மூலமா எதிர் கட்டிடத்துக்கு போய், அங்க இருந்து அந்த விலைமதிக்க முடியாத வைரத்தோட எஸ்கேப் ஆவரதுதான் அவனோட பிளான்...

அவன் அந்த புதுசா கட்டிக்கினு இருக்கற கட்டத்துக்கும் போயிட்டான்.
பாவம் அவன் எண்ணத்துல இடி உழுந்துடுச்சி, அந்த புதுசா கட்டிக்குனு இருக்குற கட்டத்தை சுத்தி போலீஸ் ரவுண்டப் பண்ணிடுச்சி.

இவன் இருக்குறது மூனாவது மாடியில, அதுல புதுசா கண்ஸ்ட்ரக்ட் பண்ணற ஏசி பிளான்ட் உள்ளே, அந்த வைரத்தை உள்ள வச்சி சல்லோ டேப் அடிச்சிட்டு அந்த இடத்தை விட்டு கிழே அவன் இறங்க, சில வினாடிகள் கழிச்சிஅமெரிக்க போலிஸ் வந்து நம்ம தலைவர் கையில விலங்கை மாட்டுது .

தலைவர் வெளியில வந்து ஜீப்ல ஏத்தும் போது அந்த தெருவோட பேரு.. அந்த புதுசா கட்டிக்கினு இருக்கற கட்டத்தோட பிளாட் ஏண் எல்லாத்தையும் மனசுல குறிச்சி வச்ச்க்கி்றான்.... தலைவருக்கு ரெண்டு வருஷம் களி திங்க சொல்லி கோர்ட்டு உத்தரவு போடுது....

திரையில் இரண்டு வருடம் கழித்து என்று டைட்டில் தெரிய , இரண்டு வருடம் கழிச்சி தலைவர் செம குஜால வெளிய, அடிப்பாடிக்கினே வர்ரார். நேரா அந்த பில்டிங்கு போய், அந்த வைரத்தை எடு்த்து அதை வித்து லைப்ல செட்டில் ஆகனும். வேற எந்த வேலையே அவனுக்கு இல்லை....

நேரா அந்த தெருவுக்கு போன அந்த புது கட்டிடத்தை பார்த்ததும் அவனுக்கு மயக்கம் வராத குறைதான் பூமியே அவன் காலை விட்டு நழுவனா போல இருந்தது... காரணம் அந்த கட்டத்துலதான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தோட போலீஸ் ஹெட் குவாட்டர்ஸ் இயங்கிட்டு இருக்கு...

இவன் திருடன், இவன் டைமண்ட் வச்சி இருக்கறது ஒரு போலிஸ் ஹெட் குவாட்ர்ஸ்... எப்படி அந்த டைமண்ட் எடுத்தான்? அந்த டைமண்ட் இவன் வச்ச இடத்துல இருந்ததா? என்பதை திருட்டு டிவிடியில் பார்த்து மகிழவும்....

படத்தின் சுவாராஸ்யங்களில் சில...

சிரி்ச்சி வயிறு புண்ணா போகனும்னு ஆசைப்படறவங்க இந்த படத்தை மொதல்ல பாருங்க...
முக்கியமா நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது. அந்த வகையில் இயக்குநர் Les Mayfield கை வலிக்கும் வரை பாராட்ட பட வேண்டியவர்...
இப்படிக்கூட யோசிக்க முடியுமாங்கற அளவுக்கான திரைக்கதை....

இரண்டு வருஷம் களி தின்னுட்டு வெளிய வந்ததும் சந்தோஷத்துல ஒர ஆட்டம் ஆடுவார் பாருங்க அந்த மகிழ்ச்சி உங்களையும் தொத்திக்கும்

மார்ட்டின் லாரன்சின் முக சேஷ்டை கடவுள் அவருக்கு மட்டுமே கொடுத்த வரம்.

அந்த இடம் போலிஸ் ஸ்டேஷன்னு தெரிஞ்சதும் ரொடுன்னுகூட பார்க்காம அவர் போடற சோக ஆட்டம் இருக்கே அதை இன்னைக்கு எல்லாம் ரிவைன்ட் பண்ணி பாத்துக்கிட்டே இருக்கலாம்...


மிக அற்புதமான சமாளிப்போடு அந்த வைரத்தை எடுக்க மார்டின் போடும் திட்டங்கள் வெகு அழகு...

எசி பிளான்ட் உள்ளே வைரம் தேடி போக அந்த ரூமில் இருக்கும் ஒரு அதிகாரி இட்சு கார்டை அவர் பேன்ட் உள்ளே கையை விட்டு துழவி தடவுவதை பார்க்கும் மார்டின், அடுத்த சில நொடிகளில் அவர் கை கழுவாத கையை பற்றிக் குலுக்க வேண்டிய கட்டாயம் வர, அதற்க்கு அவர் காட்டும் முக சேஷ்ட்டை, எல்லோருக்கும் சிரிப்பை வர வைக்கும்

போர்ஜரி செய்து போலிசில் வேலைக்கு சேரும் மார்ட்டின் அங்கு போனதும் ஒருவன் துப்பாக்கி முனையில் ஒரு ஷாப்பிங்கில் கொள்ளை அடிப்பதாக தகவல் வர அங்கு போய் பார்த்தால் அந்த கொள்ளையன் இவன் பழைய கூட்டாளி, அதை போலி்சுக்கு தெரியாமல் அவர் சமாளிக்கும் அழகே அழகு...

அதை விட காமெடி எல்லா போலி்சுக்கும் இவர் வகுப்பெடுப்பது வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை...
காமெடியில் மார்ட்டின் லாரன்சை அடித்துகொள்ள முடியாது....


கிளைமாக்ஸ் ரொம்ப ரொம்ப அற்புதம்.... வேற என்ன? படம் பாத்து என்ஜாய் செய்யுங்கள்....

Directed by Les Mayfield
Produced by Daniel Melnick,
Allen Shapiro
Written by Michael Berry,
John Blumenthal,
Stephen Carpenter
Starring Martin Lawrence,
Luke Wilson,
Dave Chappelle
Peter Greene
Olek Krupa
Nicole Ari Parker
Music by Ed Shearmur
Distributed by Columbia Pictures
Release date(s) September 17, 1999
(See release history)
Running time 93 min.
Language English
Budget $36,000,000 (estimated)


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி

20 comments:

 1. ஜாக்கி,

  கொட்டின தேள் பொம்புளைத் தேளா... :D


  கொட்டினாள் அல்ல கொட்டினால்...

  மாற்றிவிடுங்கள்..

  சீரியஸா எடுத்துக்காதேங்கோ..

  ReplyDelete
 2. மார்ட்டின இப்பெல்லாம் காணலயே. கடைசியா வில் ஸ்மித் கூட நடிச்ச ஒரு படம் பார்த்தேன். ஆனா அதுல இவருக்கு அவ்வளவு ஸ்கோப் இல்லைன்னு நினைவு.ஆனா, Blue Streak, மார்ட்டினுக்கு Perfect fit. Excellent Screen Play. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். 'Chris Tucker'-கு ஒரு Rush Hour மாதிரி, Martin'-கு ஒரு Blue Streak இல்லையா?

  ReplyDelete
 3. உங்கள் எழுத்தை படித்ததும் அந்த துள்ளல் எனக்குள்ளேயும் வந்த மாதிரி உள்ளது ...


  பொதுவாக வேற்று மொழிகளில் புரிந்து கொள்ள இயலாத விடயம் சிரிப்பு தான், அதுவும் நையாண்டியாக இருந்தால் சுத்தம் ...

  சப்-டைட்டிலோடு கிடைத்தால் எனக்கு கொஞ்சமாவது விளங்கும் ...

  தேடுவோம் ...

  ReplyDelete
 4. எங்க இருந்துதான் இந்த மாதுரி படம் பாக்குறிங்க ?? படிக்கும் போதே இணைக்கு அந்த படத்த வாங்கிடனும்ன்னு தோனுது .

  ReplyDelete
 5. ஜக்கி Russell Crowe நடிச்ச A Beautiful Mind , இந்த படத்த பத்தி எழுதுங்க . என்னை ரொம்ப ஈர்த்த படம் . அவரின் நடிப்புக்காக Oscor Award வாங்கியது .

  ReplyDelete
 6. /

  சிரி்ச்சி வயிறு புண்ணா போகனும்னு ஆசைப்படறவங்க இந்த படத்தை மொதல்ல பாருங்க...
  /

  OK OK
  அவ்ளோ சூப்பரா பாத்திடறேன்.

  ReplyDelete
 7. //ஜக்கி Russell Crowe நடிச்ச A Beautiful Mind , இந்த படத்த பத்தி எழுதுங்க . என்னை ரொம்ப ஈர்த்த படம் . அவரின் நடிப்புக்காக Oscor Award வாங்கியது //
  Russel Crowe got the oscar for Gladiaor. His acting in A Beautiful Mind was better though!

  ReplyDelete
 8. நண்பா உன் பதிவு சூப்பர் படிச்சு ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

  பிஞ்சு S.J சூரியா !!!!!plz vote

  http://www.tamilish.com/upcoming/category/FunnyImages

  by shiyamsena
  free-funnyworld.blogspot.com

  ReplyDelete
 9. Excellent SiR!. I am started to search for "Blue Streak" DVD....

  ReplyDelete
 10. நன்றி நைனா,சூரியன், மது

  ReplyDelete
 11. மார்ட்டின இப்பெல்லாம் காணலயே. கடைசியா வில் ஸ்மித் கூட நடிச்ச ஒரு படம் பார்த்தேன். ஆனா அதுல இவருக்கு அவ்வளவு ஸ்கோப் இல்லைன்னு நினைவு.ஆனா, Blue Streak, மார்ட்டினுக்கு Perfect fit. Excellent Screen Play. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். 'Chris Tucker'-கு ஒரு Rush Hour மாதிரி, Martin'-கு ஒரு Blue Streak இல்லையா//

  ஆம் சங்கர் அந்த படத்தின் பேரு பேட் பாய்ஸ்...ஆமே போல் கிரிஸ் மார்ட்டின் குறித்த கருத்துக்கள் உண்மை

  ReplyDelete
 12. உங்கள் எழுத்தை படித்ததும் அந்த துள்ளல் எனக்குள்ளேயும் வந்த மாதிரி உள்ளது ...


  நிச்சயம் படம் பார்க்கும் போது அதே துள்ளல் வந்து விடும் ஜமால் நன்றி

  ReplyDelete
 13. எங்க இருந்துதான் இந்த மாதுரி படம் பாக்குறிங்க ?? படிக்கும் போதே இணைக்கு அந்த படத்த வாங்கிடனும்ன்னு தோனுது .//

  நன்றி ராஜராஜன் நீங்கள் சொன்னது போல் எழுதுகின்றேன்

  ReplyDelete
 14. சிரி்ச்சி வயிறு புண்ணா போகனும்னு ஆசைப்படறவங்க இந்த படத்தை மொதல்ல பாருங்க...
  /

  நிச்சயம் மங்களுர் சிவா

  ReplyDelete
 15. நண்பா உன் பதிவு சூப்பர் படிச்சு ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க


  நன்றி நண்பா உங்க பதிவை திறக்க முடியலை

  ReplyDelete
 16. Excellent SiR!. I am started to search for "Blue Streak" DVD....//

  நன்றி விஜய்

  ReplyDelete
 17. //ஜக்கி Russell Crowe நடிச்ச A Beautiful Mind , இந்த படத்த பத்தி எழுதுங்க . என்னை ரொம்ப ஈர்த்த படம் . அவரின் நடிப்புக்காக Oscor Award வாங்கியது //
  Russel Crowe got the oscar for Gladiaor. His acting in A Beautiful Mind was better though!//

  நன்றி ரவி...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner