(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்???

ஒரு விறு விறுப்பான சேசிங்,ஒரு அற்புதமான ரொமான்ஸ், பக்காவாக பிளான் போட்டு திருடும்ஒரு திருடன், அவர்னை தூரத்தும் ஒரு படைபலமும் பணபலமும் மிக்க கூட்டம் இப்படி எல்லாம் கலந்த கலவையாக வெளிவந்து சக்கை போடு போட்டபடம்தான் “செயின்ட்”

ஒரு விறுவிறுப்பான படம் பார்க்க ஆவலாக இருப்பவர்கள் இந்த படத்தை உடனே பாருங்கள் , பார்த்வர்கள் திரும்பவும் இன்னோருமுறை பாருங்கள்.

வால்கில்மர் என்ற அந்த நடிகனின் சிரிப்பை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதே போல் எலிசெபத் ஷு அந்த பெண்மணியின் சிரிப்பும் கண்களும் மிகுந்த போதையை வர வழிப்பவை, மேலே சொன்ன இருவரும் சேர்ந்து நடித்த படம்தான் “செயின்ட்”

அவள் மிக அழகானவள் Dr. Emma Russell(Elisabeth Shue), மிகஅற்புதமான அறிவுக்கு சொந்தக்காரி,கலைகளில் அவளுக்கு அதீத ஈடுபாடு கொண்டவள், ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் எரிபொருளுக்கு மாற்று எரி சக்தி கண்டு பிடிக்க போராடுபவள்.... அதற்க்காக இரவு பாராமல் அந்த ஆராட்சிக்காக படித்து கொண்டு இருப்பவள்.

அவன் ஹைடெக் திருடன்Simon Templar (Val Kilmer) அவனுக்கு அசைன் மென்ட் எல்லாம் மெயிலில் வந்து விடும வேலை முடிந்ததும் அவனுக்கான பணம் சுவீஸ் பேங்க் அக்கவுன்ட்டில் போட்டு விடுவார்கள், சட்டென பல முகங்களை மாற்றி போலீ்சுக்கும் எதிரிகளுக்கும் தண்ணி காட்டுபவன்.

அப்படி பட்டவனுக்கு ரஷ்யாவில் ஆயில் கம்பெனி வைத்து நடத்தும்IvanTretiak (Rade Serbedzija) ரஷ்யாவையே ஆள நினைக்கின்றான்.அதற்க்காகடாக்டர் எம்மா வைத்து இருக்கும் மாற்று எரிசக்தி குறிப்புகளை அபகரித்து வர நம்ம ஜகஜால திருடன் சைமன் வசம் அந்த பொறுப்பு வருகின்றது சைமன் இதுவரை தனது பேங்க் அக்கவுன்டில் 47 சொச்ச பில்லயின்கள் பணம் வைத்து இருக்கின்றான் கடைசி அசைன்மென்ட்டாக இதை எடுத்து பேங்க் பேலன்சை முழுதாக 50மில்லியன் டாலர் ஆக்க முயற்ச்சி செய்கின்றான்....

அந்த பெண் ஏமாந்து அந்த பார்முலாக்களை இவனிடம் கொடுத்தாளா? இந்த திருடன் அவளை எப்படி ஏமாற்றினான்? அந்த ஆயில்கம்பெனி வில்லன் ரஷ்யாவை ஆளும் எண்ணம் நிறைவேறியதா???

மனைவி ஊருக்கு போய் இருக்கும் போது, உறக்கம் வராத நடு நிசியில் கவுந்து அடித்து படுத்தும் தூக்கம் வராமல் புரளும் போது கேபிள் டிவியை ஆன் செய்து, ஸ்டார் மூவீஸ், அல்லது ஹெச் பீ ஓ சேனல் வையுங்கள் உங்கள் நேரம் நன்றாக இருந்தால் அதில் ஒளிபரப்பலாம்......

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

பொதுவாக விறு விப்பான கொள்ளை படங்களில் ரொமாண்ஸ் சீன்கள் ஏதோ பேருக்கு இருக்கும். உதாரணத்துக்கு பாண்ட் படங்களில் ரொமான்ஸ் சீனகள் எல்லாம் அறிமுகமாகும் பெண்ணின் உள்ளாடைகளை காட்டுவதிலேயே குறியாக இருக்கும்...

ஆனால் இந்த படத்தின் கில்மர்,எலிசெபெத்துடன் பேசும் அந்த பத்து நிமிட ஹோட்டல் சீனாகட்டும் அதன் பிறகு அவள் வீட்டில் படுக்கைஅறை சீனாக இருக்கட்டும் வாவ்..சூப்பர் சீன்....

அந்த உரையாடளில் ஒரு பெண்ணை எப்படி எல்லாம் பேசினாள் கவிழுவாள் என்பதை டைரக்டர் ஸ்கெட்ச் போட்டு விலக்கி இருப்பார்....

பெண் என்பவள் அவ்வளவு சீக்கிரம் மடியமாட்டால் அப்படி மடிந்தால் அவளுக்கு ஊர் பேர் எல்லாம் மூன்றாம் நான்காம் பட்சம் என்பதை காட்சிகளில் சொல்லி இருக்கின்றார்....இந்த படத்தின் இயக்குநர்....Phillip Noyce


படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அந்த டெம்ட் குறையாமல் எடுத்து செல்ல மிக அற்புதமான திரைக்கதை அமைத்தால் மட்டுமே அது சாத்தியம் அந்த வகையில் சூடு கறையாமல் இந்த படத்தை இயக்கியPhillip Noyce பாராட்டுககு உரியவர்...

புனிதர் என்ற பெயர் இந்த படத்துக்கு ஏன் வைத்தார்கள் என்றால் திருட்ட கதாநாயகன் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் பெயர்கள் எல்லாம் எதாவது ஒரு செயின்டை தொடர்பு படுத்தியே இருக்கும்...

நிமிடத்துக்கு நிமிடம் முகத்தை மாற்றும் வால்கில்மர் அந்த மேக்கப்புகள் எந்த இடத்திலும் துரித்துக்கொண்டு தெரியாது...

இந்த படத்தை பார்த்து தமிழில் சூட போட்டுக்கொண்ட படம் தல அஜீத் நடித்த சிட்டிசன்....


எதற்க்காக அந்த பார்லாவை திருடினாய்? என்று எம்மா கேட்க,
“ எட்டு மில்லியன் பிசினசுக்காக”
என்று சைமன் சொல்ல, நீ சதாரணமாக கேட்டு இருந்தாலே நான் அந்த பணத்தை கொடுத்து இருப்பேன் என்று அவள் சொல்லும் போது அந்த கண்களில் காதலின் பெயரால் தான் ஏமாற்றபட்டு இருக்கின்றோம் என்று கண்களில் காதலோடு பேசும் இடம் அழகோ அழகு ....

எல்லா இடத்திலும் அவனை எப்போதும் அவள் கேட்கும் கேள்வி உன் பெயர் என்ன? என்பதுதான்.. அதற்க்கு கடைசிவரை பதில் சொல்லாமல் இழுத்து செல்வது டைரக்டர் சாமர்த்தியம்....

ரஷ்யாவின் ளிரை படம் பார்க்கும் நம் அனைவருக்கும் பீல் செய்யவைக்கும் ஒளிப்பதிவு (Cinematography ) Phil Meheux மிக அழகு ரஷ்யாவை காட்டும் லேண்ட்ஸ்கேப் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து உள்ளார்...

அதே போல் கடைசிகாட்சியில் சைமன் காரில் போகும் போது அப்படியே “பேர்ட்ஐ வியூவ்” காட்சியாக மாற்றி அது தொடர்ந்து 5 நிமிடங்கள் என்ட் டைட்டில் போட எடுத்த காட்சிகள் அருமை..

Directed by Phillip Noyce
Produced by David Brown
Robert Evans
William J. MacDonald
Mace Neufeld
Written by Characters:
Leslie Charteris
Screenplay:
Jonathan Hensleigh
Wesley Strick
Starring Val Kilmer
Elisabeth Shue
Rade Šerbedžija
Music by Graeme Revell
Cinematography Phil Meheux
Editing by Terry Rawlings
Distributed by Paramount Pictures
Release date(s) April 4, 1997
Running time 116 min.
Country United States
Language English
Budget $70,000,000 (est.)
Gross revenue $169,500,000
விறுவிறுப்பை ரசிப்பவர்களை ஏமாற்றாத படம் இது


அன்புடன்/ஜாக்கிசேகர்

தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....
நன்றி

9 comments:

 1. அருமையான படம்,
  சூப்பரான திரைகதை

  கடைசி காட்சி சீட்டுநுனிதான் போங்கள்!

  ”போர்ன் ஐடெண்டி” படமும் இதுவும் கிட்டதட்ட ஒரே மாதிரி சேசிங் இருக்கும்!

  ReplyDelete
 2. ஓட்டு போட்டாச்சு நண்பரே!

  சிட்டிசன் இதை பார்த்து தான் அடித்தார்களா,

  சொந்தமாவும் செய்ய தெரியாது

  அடிச்சாலும் அதிலும் சரியில்லை

  எப்ப தான் நல்ல படம் வருமோ ...

  ReplyDelete
 3. ok...பார்த்துடுவோம்

  ReplyDelete
 4. mee firstu and pathivu toppu...நன்றி நைனா....

  ReplyDelete
 5. ”போர்ன் ஐடெண்டி” படமும் இதுவும் கிட்டதட்ட ஒரே மாதிரி சேசிங் இருக்கும்!// உண்மைதான் அந்த படத்தை பற்றி அடுத்த வரும் பதிவுகளில்

  நன்றி வால்பையன்

  ReplyDelete
 6. ok...பார்த்துடுவோம்

  நனறி ராஜ் தங்கள் தொடர் பின்னுட்ட ஆதரவுக்கு..

  ReplyDelete
 7. ஓட்டு போட்டாச்சு நண்பரே!

  சிட்டிசன் இதை பார்த்து தான் அடித்தார்களா,

  சொந்தமாவும் செய்ய தெரியாது

  அடிச்சாலும் அதிலும் சரியில்லை

  எப்ப தான் நல்ல படம் வருமோ ...//

  நன்றி ஜமால்

  ReplyDelete
 8. வால்கில்மர் படத்தில் போடும் வேஷங்களுக்கு கிறுத்தவ மத புனிதர்கள் பெயர்கள் வைத்துக்கொள்வான். ஆகவே படத்திற்கு செயிண்ட் என்று பெயர்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner