எனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான என்பதிலும்...


இதற்க்கு முந்தைய பதிவான “உடையகளையும் முன் யோசியுங்கள் பெண்களே” பதிவுக்கு பல வாசக நண்பர்கள் பாராட்டியும் சிலர் வருத்தப்பட்டும் பின்னுட்டம் இட்டு இருந்தார்க்ள்... பொதுவாய் உடன்பாடு இல்லாத கேள்விக்கு அல்லது கருவை புரிந்து கொள்ளாத கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதில்லை.

அதே போல் வைரமுத்துவுக்கு எனக்குமான ஒற்றுமை பதிவில் வைரமுத்து என்ன ஊறுக்காய? என்று கேட்டு இருந்தார் ஒரு நண்பர்.... அவர் என் பதிவை ஒழுங்காக வாசிக்காமல் இந்த கேள்வியை கேட்டார்....

வைரமுத்து என்ன சிங்கமா? அல்லது புலியா? அவரும் மனுஷன்தானே? அவர் அப்பாவிடம் முறைப்பில் இருக்கிறார் அதே போல் நான்... சரி வைரமுத்துவை நான் ஊறுகாயாக பயன்படுத்தினால் என்ன குடி முழுவி போய்விட போகின்றது. பொதுவாக அது போன்ற கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.

ஒரு பின்னுட்ம் என் எழுத்தை விமர்சித்து வந்த பின்னுட்டத்திற்க்கு நான் தனிப்பதிவே போட்டால் அது எல்லோருக்கும் போய் சேரும் என்பதால்,


அந்த பின்னுட்டத்துக்கு பதில் இதோ....

முதலில் அந்த பின்னுட்டம்.....

இந்த வீடியோ பற்றிய விவரணம் இவ்வளவு தேவை அற்றது. ஒரு பெண் என்ன நிற உள்ளாடை போட்டிருந்தால் என்றது தொடக்கம் , மற்றை உங்கள் எழுத்தமைப்பே அந்த வீடியோ பார்த்த உணர்வை சில பேருக்கு கொண்டுவரலாம்... ஏன் சொல்லுகிறேன் என்றால் சில பேருக்கு வீடியோ பார்ப்பதை விட இவ்வாறு விவரனங்க்களை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம், அவர்களை குறி வைத்துத்தான் செக்ஸ் கதைகள் கூட எழுதப்படுகின்றன.... THIS IS ABSOLUTELY RITE.. neenga solla vandha vishayam nalla irundhuchi but ivlo vakrama explain panna vendiya avasiyam enna??? usually i wont miss to read ur blog each n every post.. but unga sometimes unga wordings enaku pidikadhu.. solla vara vishayatha konjam abuse words use panni solreenga.. ex (saniyan, mayiru.. etc., ) nalla iruku unga blogs but indha chinna chinna vishayatha change pannikiteengana inum romba nalla irukum..

இதோ என் பதில்.... அந்த பதிவின் நோக்கம் நல்ல நெருக்கமான நண்பியால் அவளை கண்வீன்ஸ் செய்து அவள் ஒவ்வோறு உடையும் கழட்ட வைப்பதை சொல்ல அந்த விவரனை தேவையாய் இருந்தது. அது மட்டும் அல்ல அதில் அந்த பெண்ணின் அப்பாவித்தனத்தையும் வெளிபடுத்தி இருப்பேன்...

எதையும் கூர்ந்து கவனித்து எழுதும் எனக்கு இப்படித்தான் எழுத வந்தது . அது மட்டும் இல்லாமல் அந்த பெண் பிராவோடும் ஜட்டியோடும் இருந்தால் என்று மட்டும் எழுதி இருந்தேன்.

7ஜீ ரெயின்போகாலனி படத்துல ஜனவரிமாதம் சாங்ல குரூப் டான்சர் சட்டென சட்டையை கழட்டி ,எல்லாருமே கருப்பு பிராவும் கருப்பு ஜட்டி அனிந்த ஆடுவார்கள் அது நம் வீட்டு வரவேற்பு அறைக்குள்ளே டிவி சாதனம் மூலம் நாம் அனைவரும் பார்த்து இருக்கின்றோம்....

நான் அந்த பெண் என்ன கலர் பிரா ஜட்டி போட்டால் என்று சொல்லியதை பெரிதாக எடுத்து கொண்டு இருக்கின்றீர்கள். நன்றி


“ஏன் சொல்லுகிறேன் என்றால் சில பேருக்கு வீடியோ பார்ப்பதை விட இவ்வாறு விவரனங்க்களை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம், அவர்களை குறி வைத்துத்தான் செக்ஸ் கதைகள் கூட எழுதப்படுகின்றன....”

என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தர் அந்த நண்பர். பார்த்தா பாத்துட்டு படிச்சுட்டு போகட்டும், நமக்கு அவங்களை பத்தி கவலை என்ன...? நாம் பதிவில்ஓர் உயிர் இரு உடலாக இருக்கும் நண்பியாக இருந்தாலும் இது போல் வீடியோ எடுக்க அனுமதிக்காதீர்கள் என்று சொல்லவே அந்த விவரம். நம் நோக்கம் முற்றிலும் வேறு....

வலைதளத்தில் கட்டற்ற சதந்திரம் இருப்பதாலேயே நான் எதையும் எழுதுபவன் அல்ல...எனது அளவு எனக்கு தெரியும்...


. neenga solla vandha vishayam nalla irundhuchi but ivlo vakrama explain panna vendiya avasiyam enna???


அதே போல் வக்ரமாக எழுத வேண்டிய அவசியம் பற்றி கேட்டு இருந்தார் நண்பர்...நண்பரே, அது விரிவான விவரனை என்று சொல்லலாமே ஒழிய அது வக்கரம் என்று சொல்ல இயலாது,

எது வக்ரம் தெரியுமா?பெத்த அம்மாவையே பையன் புனர்வதாகவும்,அப்பா தான் பெற்ற பெண்ணை புனர்வதாகவும், சித்தியை கட்டிலில் சாய்து விட நேரம்பார்க்கும் பிள்ளை என்று , இப்போது இனையங்களிலே பல வக்கர கதைகள் இப்படித்தான் எழுதுகின்றார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சரோஜாதேவி கதைகள்தான் மிக வக்கிரமாக இருக்கும், அதுதான் வக்ரம்.



“usually i wont miss to read ur blog each n every post.. ”


மிக்க நன்றி நண்பரே...



“ solla vara vishayatha konjam abuse words use panni solreenga.. ex (saniyan, mayiru.. etc., ) ”


நண்பரே ,என்னை என் அப்பா அம்மா கான்வெட்டில் படிக்க வைக்கவில்லை, நான் விளிம்புநிலை மனிதராக இருந்தே இப்போது இந்த இடத்திற்க்கு வந்து உள்ளேன். பழக்க தோஷம், கோபத்தில் அது போல் வார்த்தை பிரயோகம் வருகின்றது... இனி குறைப்பேன் என்று என்னால் உறுதி கூற முடியாது ஆனால் முடிந்தவரை தவிர்க்க முயிற்ச்சிக்கிறேன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.

மயிர் சனியன் இரண்டமே தப்பான வார்த்தை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு என்று நினைக்கின்றேன்.


அதே போல் மயிர் என்ற வார்த்தை சுத்தமான அக்மார்க் தமிழ் சொல்... ஆனால் அதனை நம்ம ஆட்கள் எப்போதுமே தப்பாக புரிந்து எதிர்ப்பு தெரிவிப்பது போல் இதற்க்கும் எதிர்ப்பு தெரிவித்து விட்டார்கள்....

சற்றே யோசித்து பாருங்கள் மயிர் தலையில் அதிகமாக இருக்கின்றது. உடம்பின் அந்தரங்கத்திலும் கொஞ்சம் இருக்கின்றது. அனால் மயிரை புடுங்கு என்று கோபத்தில் சொன்னால் ,நம்ம பய புள்ளைக்கு அங்கதான் புத்தி போகும்.

அதைதான் வள்ளுவர்

மயிர் நீப்பின் வாழக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.

இதை தான் கற்றது தமிழ் படத்தில் காட்சியாக வைத்து இருப்பார் இயக்குநர் ராம்..... மயிர் சுத்த தமிழ் சொல்...

இது நாள் வரை என் தனித்தன்மை எவருக்காகவும் நான் விட்டு கொடுத்தது இல்லை... ஒரு முறை பஸ்சில் கொஞ்சம் சத்தமாக நான் சிரிக்க நண்ப்ர்கள்டேய் இத பஸ்சுடா என்றார்கள்... மற்றவர்கள் தப்பாக நினைத்து கொள்வார்கள் என்று பயந்தார்கள்... அடுத்த ஸ்டாப்பில் இறங்குபவனுக்காக கவலை கொண்டார்கள்..

நான் சொன்னேன் நான் தப்பாக எதும் பேசவில்லை நான் சிரித்தேன் அவ்வளவே, நான் என் வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவன்...பஸ்சில் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்று வருத்தப்பட்ட நண்பர்களிடம் நான் கேட்டேன். இந்த பஸ்சில் பயணம் செய்பவர்கள்,அடுத்த மாதம் என் வீட்டு கரண்ட் பில் யாராவது கட்டுவார்களா? என்றேன். அவர்கள் இல்லை என்றார்கள் அப்புறம் எப்படி நான் அவர்களுக்காக என் சிரிப்பை அடக்க முடியும்?? அதுவும் தொடர்ந்து சிரித்தால் கூட பரவாயில்லை...



நம் சமுகம் மற்றவர்கள் என்ன நினைத்து கொள்வார்களோ என்று நினைத்து தன் சந்தோஷங்களை விட்டு கொடுத்து விடுகின்றது... அது மற்றவர்களுக்காவே வாழ்கின்றது.

நான் அது போல் இருக்ககூடாது என்று கூடுமானவரை வாழ முயற்ச்சிப்பவன்.


“nalla iruku unga blogs but indha chinna chinna vishayatha change pannikiteengana inum romba nalla irukum..”

எனக்காக நேரம் ஒதுக்கி பின்னுட்டம் இட்டதற்க்கும்,தங்கள் கருத்துக்கும் உங்கள் பாராட்டக்கும் நன்றி நண்பரே...

மற்றபடி பி்ன்னுட்டம் இட்டு என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் அனைத்து பதிவுலக நண்பர்கள் மற்றும்வாசகர்ளுக்கு என் நன்றிகள்....

அன்புடன்/ஜாக்கிசேகர்

27 comments:

  1. தலைவா,

    புரியாதவங்களுக்காக இவ்வளவு பெரிய பதில் சொல்லணுமா? அருமையான குறள் விளக்கம். பதிவர் சந்திப்பு பத்தி எழுதிருக்கேன். படிச்சு, ஓட்டுப் போட்டு வாழவைங்க.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. //நான் சொன்னேன் நான் தப்பாக எதும் பேசவில்லை நான் சிரித்தேன் அவ்வளவே, நான் என் வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவன்...பஸ்சில் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்று வருத்தப்பட்ட நண்பர்களிடம் நான் கேட்டேன். இந்த பஸ்சில் பயணம் செய்பவர்கள்,அடுத்த மாதம் என் வீட்டு கரண்ட் பில் யாராவது கட்டுவார்களா? என்றேன். அவர்கள் இல்லை என்றார்கள் அப்புறம் எப்படி நான் அவர்களுக்காக என் சிரிப்பை அடக்க முடியும்?? அதுவும் தொடர்ந்து சிரித்தால் கூட பரவாயில்லை...//

    nach! valid point! pirarukkaga naam nam iyalbai vittu kodukka theevai illai!

    ReplyDelete
  3. ஜாக்கி,

    அந்த பின்னூட்டம் நானும் படித்தேன். அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால் படிப்பதற்கே வக்ரமாக இருப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அதைவிட வக்ரமுடையவர்களால் எடுத்து ஆன்லைனில் விடப்பட்டதுதான் அந்த விடியோ.

    அப்படி ஒரு நிலை நமக்கோ நம் சகோதரிகளுக்கோ தவறியும் வந்துவிடக்கூடாது. நீங்கள் எழுதியதில் தவறாக எதுவும் இல்லை. சிலவற்றை இவ்வாறு கூறினால்தான் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    செக்ஸ் கதை படிப்பவன் படம் / விடியோ பார்ப்பவனுக்கு இனையத்தில்தான் கொட்டிக்கிடக்கிறதே இங்கு வந்தா படிக்க போகிறார்கள்?

    ReplyDelete
  4. Ungal vilakkam romba nermaiyagavum nenjai sudum nijamagavum irundhadhu,,Padhivin nokkam puriyamal pinnotam ittadharku varundhukiren...Krish

    ReplyDelete
  5. ஜாக்கி.. பிரியா விடு.. பிரியா விடு மாமே..

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. விடுங்க பாஸ்! இப்படி பின்னூட்டத்திற்கு
    பதில் சொல்ல ஆரம்பிச்சா...
    மாதத்திற்க்கு 10 பதிவிடனும்..

    புதிய இடுகை இட்டுள்ளேன், வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...
    http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

    ReplyDelete
  8. மயிர் என்பது தமிழ்ச் சொல் தான் கெட்டவார்த்தை அல்ல. பொதுவாக நம்ம நாட்டில் சலூனுக்கு போவதை மயிர் வெட்டப்போகிறேன் என்றுதான் சொல்வோம். அத்துடன் மயிரை விட்டான் சிங்கன் என்ற பழமொழியும் இருக்கின்றது இதற்கான விளக்கம் மறந்துபோய்விட்டது.

    வர்ணனை என்ற விடயம் இல்லாவிட்டால் எழுத்துஊடகத்தில் வாசகர்களுக்கு விளக்கமுடியாது. சாண்டில்யன் செய்யாத வர்ணனையா? இல்லை சுஜாதா எழுதாத வர்ணிப்புகளா?

    நீங்கள் உங்கள் பதிவில் அவளின் ஆடைகளை அகற்றச் சொல்லி நண்பி வற்புறுத்தினால் என மட்டும் எழுதியிருந்தால் அது அவ்வளவாக எடுபட்டிராது காரணம் எழுத்தின்மூலம் நீங்கள் சொல்லவந்த விடயத்தை காத்திரமாக வாசகனுக்கு புரியவைக்கவேண்டும். இதுவே விசுவல் மீடியா என்றால் அவளது உடைகள் கழட்டி எறியப்படுவது மட்டும் காட்டி விளக்கப்பட்டிருக்கும். எழுத்து ஊடகத்தில் அப்படிச் செய்யமுடியாதே?

    உங்கள் விளக்கத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. அந்த பதிவில் தலையங்கத்தில் மட்டும் எச்சரிக்கையிருந்தது. பின்னுட்டம் இட்ட நண்பரின் கருத்தே எமதும்.
    //...said...
    வர்ணனை என்ற விடயம் இல்லாவிட்டால் எழுத்துஊடகத்தில் வாசகர்களுக்கு விளக்கமுடியாது.//
    வர்ணனை - ரசித்து விபரிப்பது??!!!!

    //...said...
    செக்ஸ் கதை படிப்பவன் படம் / விடியோ பார்ப்பவனுக்கு இனையத்தில்தான் கொட்டிக்கிடக்கிறதே இங்கு வந்தா படிக்க போகிறார்கள்?//

    ஆம், இதுவும் அவைமாதிரி ஆகிவிடுமோ என்ற கவலையில்தான் இக்கருத்துக்கள் நண்பரே.

    மற்றவரிட்காக உங்கள் சந்தோஷங்களை விட்டுக் கொடுகத்தேவையில்லை.

    ReplyDelete
  10. ஜாக்கி... இதுபற்றி நானும் சொல்லணும்னு நினைச்சேன்... ‘மயிர்' என்ற வார்த்தைய பாவித்தாலே சண்டைக்கு வாறாங்களே..... மயிர் சுத்தத் தமிழ் சொல். அப்புறம் கேபிளாரின் ஜெயா நிகழ்ச்சியில் பேசியிருந்தீர்கள் போல் இருக்கே

    ReplyDelete
  11. அண்ணே, சாந்தம் சாந்தம். இயல்பை விட்டுக்குடுக்காத (நல்ல) பிடிவாதத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தலைவா,

    புரியாதவங்களுக்காக இவ்வளவு பெரிய பதில் சொல்லணுமா? அருமையான குறள் விளக்கம். பதிவர் சந்திப்பு பத்தி எழுதிருக்கேன். படிச்சு, ஓட்டுப் போட்டு வாழவைங்க.

    ஸ்ரீ....-//

    நன்றி ஸ்ரீ என் உணர்வை புரிந்த கொண்டதற்க்கு

    ReplyDelete
  13. //நான் சொன்னேன் நான் தப்பாக எதும் பேசவில்லை நான் சிரித்தேன் அவ்வளவே, நான் என் வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவன்...பஸ்சில் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்று வருத்தப்பட்ட நண்பர்களிடம் நான் கேட்டேன். இந்த பஸ்சில் பயணம் செய்பவர்கள்,அடுத்த மாதம் என் வீட்டு கரண்ட் பில் யாராவது கட்டுவார்களா? என்றேன். அவர்கள் இல்லை என்றார்கள் அப்புறம் எப்படி நான் அவர்களுக்காக என் சிரிப்பை அடக்க முடியும்?? அதுவும் தொடர்ந்து சிரித்தால் கூட பரவாயில்லை...//

    nach! valid point! pirarukkaga naam nam iyalbai vittu kodukka theevai illai!//

    நன்றி நாமக்கல் சிபிசார் தங்கள் பின்னுட்டத்திற்க்கு

    ReplyDelete
  14. அப்படி ஒரு நிலை நமக்கோ நம் சகோதரிகளுக்கோ தவறியும் வந்துவிடக்கூடாது. நீங்கள் எழுதியதில் தவறாக எதுவும் இல்லை. சிலவற்றை இவ்வாறு கூறினால்தான் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    செக்ஸ் கதை படிப்பவன் படம் / விடியோ பார்ப்பவனுக்கு இனையத்தில்தான் கொட்டிக்கிடக்கிறதே இங்கு வந்தா படிக்க போகிறார்கள்?//

    நன்றி மங்களுர் சிவா

    ReplyDelete
  15. Ungal vilakkam romba nermaiyagavum nenjai sudum nijamagavum irundhadhu,,Padhivin nokkam puriyamal pinnotam ittadharku varundhukiren...Krish//

    நன்றி கிரிஷ் தர்கம் பன்னாமல் புரிந்து கொண்டாலே போதும் எதற்க்கு வருத்தம் எல்லாம்...

    ReplyDelete
  16. ஜாக்கி.. பிரியா விடு.. பிரியா விடு மாமே..//

    நன்றி கேபிள்

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. விடுங்க பாஸ்! இப்படி பின்னூட்டத்திற்கு
    பதில் சொல்ல ஆரம்பிச்சா...
    மாதத்திற்க்கு 10 பதிவிடனும்.. //

    நன்றி கலை

    ReplyDelete
  19. வர்ணனை என்ற விடயம் இல்லாவிட்டால் எழுத்துஊடகத்தில் வாசகர்களுக்கு விளக்கமுடியாது. சாண்டில்யன் செய்யாத வர்ணனையா? இல்லை சுஜாதா எழுதாத வர்ணிப்புகளா?//

    மிக்க நன்றி வந்தியதேவன்

    ReplyDelete
  20. ஆம், இதுவும் அவைமாதிரி ஆகிவிடுமோ என்ற கவலையில்தான் இக்கருத்துக்கள் நண்பரே.//

    நன்றி உங்களுக்கு என்மேல் இருக்கும் கவலையை விட எனக்கு என் மேல் நிறைய இருக்கின்றது.

    உங்கள் பின்னுட்டத்திற்க்கு மிக்க நன்றி சங்கர்

    மங்களுர் சிவா பின்னுட்டம் உங்கள் கேள்விக்கு பொறுந்தும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  21. ஜாக்கி... இதுபற்றி நானும் சொல்லணும்னு நினைச்சேன்... ‘மயிர்' என்ற வார்த்தைய பாவித்தாலே சண்டைக்கு வாறாங்களே..... மயிர் சுத்தத் தமிழ் சொல். அப்புறம் கேபிளாரின் ஜெயா நிகழ்ச்சியில் பேசியிருந்தீர்கள் போல் இருக்கே//

    ஆம் குமாரசுவாமி கேபிள் நிகழ்ச்சியில் பேசினேன்

    ReplyDelete
  22. அண்ணே, சாந்தம் சாந்தம். இயல்பை விட்டுக்குடுக்காத (நல்ல) பிடிவாதத்துக்கு வாழ்த்துக்கள்.//
    நன்றி
    விஜய் கோபால்சாமி

    ReplyDelete
  23. //நான் சொன்னேன் நான் தப்பாக எதும் பேசவில்லை நான் சிரித்தேன் அவ்வளவே, நான் என் வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவன்...பஸ்சில் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்று வருத்தப்பட்ட நண்பர்களிடம் நான் கேட்டேன். இந்த பஸ்சில் பயணம் செய்பவர்கள்,அடுத்த மாதம் என் வீட்டு கரண்ட் பில் யாராவது கட்டுவார்களா? என்றேன். அவர்கள் இல்லை என்றார்கள் அப்புறம் எப்படி நான் அவர்களுக்காக என் சிரிப்பை அடக்க முடியும்?? அதுவும் தொடர்ந்து சிரித்தால் கூட பரவாயில்லை...//

    தவறுதான் சேகர், பொது இடத்தில் அடுத்தவருக்கு முடிந்தவரை தொந்தரவு இல்லாமல்தான் நடந்து கொள்ளவேண்டும்! பொது இடத்தில் எழவுக்கு போகிறவர்கள், நோயுற்றவர்கள், அதிக துக்கத்தில் உள்ளவர்கள் கூட இருப்பார்களே! அவர்களுக்கு உங்கள் சத்தமான சிரிப்பு எப்படி இருக்கும்? ம்ம்...? அப்போ, யாராவது உங்கள் வீட்டு கரண்ட்பில் கட்டினால் நான் குனிவேன் என்றால்...? அவ்வளவுதானா தங்களது சுயமரியாதை? ?????????

    ReplyDelete
  24. ஏன் அண்ணே இவங்களுக்கு பதில் சொல்லி உங்க டைம் வேஸ்ட்
    பண்றீங்க?
    //
    மயிர் சனியன் இரண்டமே தப்பான வார்த்தை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு என்று நினைக்கின்றேன்.
    //

    செம பதிலடி அண்ணே.....

    ReplyDelete
  25. மனப்பாக்கம் தலைவரே நாஙக் கடலூர்ல இருந்து பாண்டிச்சேரிக்கு படத்துக்கு போனோம் நைட் சிங்கிள் ஒரு 20 பேர் பயணம் செஞ்சாங்க...ஒரு உதாரணத்துக்கு சொன்னது அது நீங்க ரொம்ப பீல் ஆயிட்டிங்க போல இருக்கு.

    சுயமரியாதைன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறிங்க...

    நீங்கள் மிகுந்த சுய மரியாதையான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்..

    தங்கள் விரிவான பின்னட்டத்துக்கு என் நன்றிகள்

    நீங்கள் மிகுந்த சு

    ReplyDelete
  26. ஏன் அண்ணே இவங்களுக்கு பதில் சொல்லி உங்க டைம் வேஸ்ட்
    பண்றீங்க?
    //
    மயிர் சனியன் இரண்டமே தப்பான வார்த்தை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு என்று நினைக்கின்றேன்.
    //

    செம பதிலடி அண்ணே.../

    நன்றி ஜெட்லி....

    ReplyDelete
  27. என்னமோ நடக்குது.

    பதிவுலகத்தில்...இது சண்டை சீசன் போல.

    ம்ம்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner