நண்பர் பதிவர் கலையரசன் சொன்னது போல ஐயம் பேக்.....
சன் டிவிதான் இன்றும் தமிழில் நம்பர் ஒன்... ஆனால் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத டிவிக்கள் தமிழ்நாட்டில் தாக்கு பிடிக்க முடியாது என்பதே உண்மை... அதற்க்கு பல உதாரணங்கள் சொல்லமுடியும் வேண்டாம் அது எல்லாம் வீழ்ச்சி கதைகள்...
இப்போது கூட வேறு எந்த டிவியும் சன்டிவியுடன் போட்டி போட முடியவில்லை... முதலில் அதன் தரமும் துல்லியமுமே அது எல்லோர் மனதிலும் இடம் பிடிக்க முக்கியகாரணம்.... அது மட்டும இல்லாமல் முதல்ரசிப்பு தமிழ்நாட்டில் அந்த டிவிதான்...
திரைப்படம் ஓடும் போது ,ராஜ் டிவியி்லும் விளம்பரம் போடுவார்கள், சன்டிவியிலும் விளம்பரம் போடுவார்கள். ஆனால், படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே அடி வயிற்றில் குத்து விடுவது போல சட்டென விளம்பரம் ராஜ் டிவியில் ஓடும்...இதனை இந்தியன் படம் பார்த்த பலர் இந்த வேதனையை அனுபவித்து இருக்கின்றார்கள்...
ஒரு கட்டத்தில் நெடுத்தொடர்தமிழக மக்களை பன்றி காய்சல் போல் பயமுறுத்தி வந்த போது விஜய் டிவி சட்டென தன் அடையாளத்தை வெளிப்படுததியது...அவர்கள் வடநாட்டு சேனலில் ஹிட் ஆன நிகழ்ச்சிகளை தமிழ் நாட்டின் நேட்டிவிட்டிக்கு ஏற்ப்ப பல மாற்றங்களுடன் பல நிகழ்ச்சிகள் செய்தார்கள். அந்த நிகழ்ச்சிகள் வெற்றி நடை போட ஆரம்பித்தன....
பாவம் தமி்ழ் நாட்டு மக்களும் எத்தனை நாளைக்குதான் பாலில் விஷம் கலப்பதையும், காரின் பிரேக் ஒயர் பிடுங்கி விடுவதையும் நெடுந்தொடர்களில் காண்பிப்பதை, எத்தனை நாளைக்குதான் பார்க்க முடியும் ஒரு சேன்ஜ் தேவைப்பட அந்த ஆவலை மிகச்சரியாக பூர்த்தி செய்து கொண்டது விஜய் டிவி.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் (ஜுனியர் சீனியர்),நீயா நானா, காபி வித் அனு, லொள்ளுசபா,காமெடி கிங், போன்ற நிகழ்ச்சிகள் வெற்றி வாகை சூடஆரம்பித்தது.. அப்போது சட்டென விழுத்துக்கொண்ட சன்டிவி விஜய் டிவி நிகழ்ச்சிகளை சின்ன சின்ன மாற்றங்கள் செய்து அதனை சன் டிவி காப்பி அடிக்க அதில் சிலது வெற்றி பெற்றது, பல வெற்றி பெறாமல் போனது...
இருப்பினும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஏற்படுத்திய மாற்றங்களை வேறு எந்த சேனலும் மருந்துக்கு கூட புது முயற்ச்சியாக செய்யவில்லை... எனென்றால் பயம்... எங்காவது புது நிழ்ச்சி செய்து அது தோற்று போய் டி ஆர் பி ரேட்டிங் குறைந்த விட்டால் ? எல்லோரும் பயந்து கொண்டு இருக்க விஜய் டிவி முயற்ச்சி செய்துமிக ஆனாயாசமாக வெற்றிக்கண்டது என்பது வரலாறு....
அதே போல் ஆங்கில படங்களை தமிழில் விஜய் டிவி ஒளிபரப்ப அதனையும் சன் சட்டென ஒளிபரப்ப ஆரம்பித்தது...
இருப்பினும்இரண்டாம் இடத்தில் இருக்க வேறு பல காரணங்கள் இருந்தாலும், இந்த அளவுக்கு வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுத்த விஜய் இன்னும் இரண்டாம் இடத்தில் இருக்க மிக முக்கிய காரணம்....
சன்டிவியிடம் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் திரைப்படங்களின் ரைட்ஸ்.....
நீங்கள் என்னதான் சமுக கொடுமைகளை தோல் உரித்து காட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பினாலும் சன் டிவி சட்டென படையப்பாவை ஒளிபரப்பினால் ரஜினி மாஸ் முன்னால் சமுக நிகழ்ச்சி பின்னுக்கு தள்ளபட்டு விடும்,என்பதே உண்மை...
விஜய் டிவி மட்டும் அல்ல வேறு எந்த டிவியும் சன்னுடன் போட்டி போடமுடியாமல் இருக்க மிக முக்கிய காரணம்..அவர்களிடம் இருக்கும் அயிரக்கணக்கான திரைப்பட ரைட்ஸ்... அதே போல் புதுபடம் என்றால் சன்டிவி என்று பெயர் வேறு வாங்கி விட்டது.
திரைப்படங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தமிழர்கள் தருவார்களா? என்றால், தமிழக முதலமைச்சர்களில் வரலாற்று பிழையான ஓ.பன்னீர் செல்வத்தை தவிர அத்தனைபேரும் சினிமா பின்னனி உள்ளவர்கள் என்பதை நாம் மறக்ககூடாது...
அன்புடன்/ஜாக்கிசேகர்
ஓட்டு போட மறவாதீர்.. உற்சாகப்படுத்த மறவாதீர்...
//சன் டிவி சட்டென படையப்பாவை ஒளிபரப்பினால் ரஜினி மாஸ் முன்னால் சமுக நிகழ்ச்சி பின்னுக்கு தள்ளபட்டு விடும்,என்பதே உண்மை...//
ReplyDeleteநச் வரிகள். உண்மையின் பிரதிபலிப்பு!!!
//ஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை....//
ReplyDeleteஅப்படியா சொல்றீங்க??
நல்ல அலசல் ஜாக்கி சார்!
ReplyDeleteபுதிதாக குறும்படம் எடுக்கவிருப்பதாக அறிந்தேன் வாழ்த்துகள்!!
வெங்கடேஷ்
சரியான அலசல் ஜாக்கி.. இந்த உண்மை தெரிந்ததால்தான் கலைஞர் டிவி ஆரம்பிக்க்கப்பட்ட் போது முதலில் அவர்கள் கை வைத்தது புதிய திரைப்பட உரிமைகளை.
ReplyDeleteஇதுக்கு பேரு தான் உண்மைன்னு சொல்லுறது.
ReplyDeleteஇதென்னா... புதுசா...???
ReplyDeleteமாடுரேசன்....????
சந்தோஷம் பாஸ்.. திரும்பி வந்ததற்க்கு!
ReplyDeleteவிஜய் மக்கள் டிவி மீது எனக்கு
ReplyDeleteமிக பெரிய மரியாதை உண்டு...
அழுது வடியும் சீரியல்கள்,
மெகா சீரியல்கள் உள்ளிட்டவற்றைத்
எத்தனையோ தமிழ் தொலைக்காட்சிகள்
வசதியிருந்தும் வாய்ப்பிருந்தும் செய்யாததை,
விஜய் டிவியும், மக்கள் டிவியும்
செய்து கொண்டிருக்க்கிறது என்பதை
மறுக்கமுடியாத, மறைக்கமுடியாத
உண்மை!!
முத்தமிழை விற்று தமிழனை
தொலைக்காட்சியில் அடகுவைத்து
காசுபார்க்கும் கயவர்களையும்,
தமிழின துரோகிகளையும் வேரோடு
பிடிங்கி எறிய தமிழர்கள் அனைவரும்
அதை புறக்கணிக்கவேண்டும்!!
டானிக் குடுத்தாச்சு
(அதாண்ணே, ஓட்டு போட்டாச்சு)
//தமிழக முதலமைச்சர்களில் வரலாற்று பிழையான ஓ.பன்னீர் செல்வத்தை தவிர அத்தனைபேரும் சினிமா பின்னனி உள்ளவர்கள் //
ReplyDeleteதமிழக முதலமைச்சர்களில்???
தமிழக திராவிட முதலமைச்சர்களில் என்று இருக்க வேண்டுமோ? ;-)
visit
சௌந்தர சுகன்
சில காலமாக சன்னால் புதிய பல திரைப்படங்களை வாங்கமுடியவில்லை காரணம் கலைஞர் அவற்றை வாங்கிவிட்டார். அதனால் இப்போது தங்கள் தயாரிப்புகளை வைத்து ஓட்டத்தொடங்கிவிட்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் வெளியான சில நாட்களில் தெனாவட்டு சென்றவாரம் ஒளிபரப்பினார்கள். காதலில் விழுந்தேன் காதலர் தினச் சிறப்பாக ஒளிபரப்பினார்கள். தீபாவளிக்கு அயனை எதிர்ப்பார்க்கலாம்.
ReplyDeleteவிஜய் டிவியின் இன்னொரு பலவீனம் இவர்களது பல நிகழ்ச்சிகள் ஆங்கிலத்திலையே நடக்கும் சமீபத்திய உதாரணம் காபி வித் அனுவில் மால்குடி சுபாவும் உஷா உதூப்பும் இடையிடையே மட்டும் தமிழில் கதைத்தார்கள். எந்தப் பாமரன் இதனைப் பார்ப்பான். இவர்களின் ரியாலிட்டி ஷோக்களின் நடுவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கருத்துச் சொல்வார்கள். நீயா நானாவில் இளம்பெண்கள் ஆங்கிலத்தில் மட்டுமே மவுண்ட் பேட்டன் பேத்திகளைப் போல் பீட்டர் விடுவார்கள். ஏதோ ஒரு மணித்தியாலம் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சில் தமிழ் ஒலிக்கின்றது. மற்றும்படி விஜய் தொலைக்காட்சி தமிழர்களுக்காக நடத்தப்படும் ஆங்கிலத் தொலைக்காட்சி.
//சன் டிவி சட்டென படையப்பாவை ஒளிபரப்பினால் ரஜினி மாஸ் முன்னால் சமுக நிகழ்ச்சி பின்னுக்கு தள்ளபட்டு விடும்,என்பதே உண்மை...//
ReplyDeleteநச் வரிகள். உண்மையின் பிரதிபலிப்பு// நன்றி லொள்ளு சபா
//ஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை....//
ReplyDeleteஅப்படியா சொல்றீங்க??//
அப்படித்தான் தருமி
நல்ல அலசல் ஜாக்கி சார்!
ReplyDeleteபுதிதாக குறும்படம் எடுக்கவிருப்பதாக அறிந்தேன் வாழ்த்துகள்!!
வெங்கடேஷ்//
நன்றி வெங்கடேஷ் குறும்படம் எடுத்து போட்டிக்கும் அனுப்பியாகி விட்டது...
சரியான அலசல் ஜாக்கி.. இந்த உண்மை தெரிந்ததால்தான் கலைஞர் டிவி ஆரம்பிக்க்கப்பட்ட் போது முதலில் அவர்கள் கை வைத்தது புதிய திரைப்பட உரிமைகளை.//
ReplyDeleteநன்றி வெண் பதிவை சரியாக புரிந்து கொண்டதறக்கு
இதுக்கு பேரு தான் உண்மைன்னு சொல்லுறது.//
ReplyDeleteநன்றி நைனா
இதென்னா... புதுசா...???
ReplyDeleteமாடுரேசன்....????//
நாம் நேரத்தை சரியாய் செயல்படுத்த..
சந்தோஷம் பாஸ்.. திரும்பி வந்ததற்க்கு!//
ReplyDeleteநன்றி கலை
டானிக் குடுத்தாச்சு
ReplyDelete(அதாண்ணே, ஓட்டு போட்டாச்சு)//
நன்றி கலை
நல்ல பதிவு. சூப்பரா சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteநல்ல பதிவு. சூப்பரா சொல்லியிருக்கீங்க.--//
ReplyDeleteநன்றி சிவா
தமிழ் தொலைக் காட்சிகளையா சொன்னீர்கள்? இதுகள் எல்லாம் ஆங்கிலச் சனல்களாச்சே.
ReplyDeleteஅருமையான ஆய்வு...
ReplyDeleteஎனக்கு விஜய் தான் பிடிக்கும்...
:)))
சூப்பரப்பு..
ReplyDeleteஅருமையான அலசல்..
நீங்கள் சொவது தவறு நண்பரே கல்லூரியில் படிக்கும் என் வயதை ஒட்டிய அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரே தமிழ் தொலைக்காட்சி விஜய் டிவி மட்டும் தான் ......சன் டிவி யை நாங்கள் விளம்பர இடைவேளையில் கூட பார்ப்பதில்லை சன் டிவி கவர்ந்திருருப்பது வீட்டில் இருக்கும் பெண்மணிகளையும் 40 ஐத் தாண்டிய ஆண்களையும் தான் .....மேலும் இலங்கைத்தமிழர் பிரச்சனையை கண்டு கொள்ளாத சன் குழும தொலைக்காட்சிகளை ஐரோப்பா மற்றும் கனடா வாழ் தமிழ் மக்கள் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர் எங்கள் உறவினர் உட்பட 70 சதா வீதம் சன் இணைப்பை துண்டித்து விட்டனர் ....அது மட்டும் அல்லாமல் சன் குழுமம் தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர் , இதனால் தான் சூர்யாவுக்கு கனடாவில் அதிகமான ரசிகர்கள் இருந்தும் அயன் படம் வெளியான முதல் நாளிலேயே காற்று வாங்கியது ...யூத்து (இளமை ) கிட்ட விஜய் தான் டாப்பு மத்தவெனுக்கெல்லாம் ஆப்பு
ReplyDeleteகரெக்ட்ஆ சொன்னிங்க அண்ணே.....
ReplyDeleteஒட்டு போட்டாச்சு
sun tv just telecasting cinema based programs but makkal television is the best television in Tamil because it programs are different and several useful programs
ReplyDeleteIf you dont know to view www.makkal.tv .
ReplyDelete"Dantanakkaa don taamilan vaiyelaa sun TV poduvaan mannu "
Naanka paakurom makkal enkalukku theeruthu sikkal
ippadikku
saudiyilirunthu
chozhan
தமிழ் தொலைக் காட்சிகளையா சொன்னீர்கள்? இதுகள் எல்லாம் ஆங்கிலச் சனல்களாச்சே.//
ReplyDeleteநீங்கள் சொல்வதும் உண்மைதான் புகழினி
அருமையான ஆய்வு...
ReplyDeleteஎனக்கு விஜய் தான் பிடிக்கும்...
:)))//
நன்றி வழிப்போக்கன்
சூப்பரப்பு..
ReplyDeleteஅருமையான அலசல்..//
நன்றி சுரேஷ்
சூப்பரப்பு..
ReplyDeleteஅருமையான அலசல்..//
நன்றி சுரேஷ்
(இளமை ) கிட்ட விஜய் தான் டாப்பு மத்தவெனுக்கெல்லாம் ஆப்பு//
ReplyDeleteநல்லது நன்பரே
கரெக்ட்ஆ சொன்னிங்க அண்ணே.....
ReplyDeleteஒட்டு போட்டாச்சு//
நன்றி ஜெட்லி தங்களை போன்றவர்கள் கொடுக்கும் தொடர் ஆதரவுக்கு
sun tv just telecasting cinema based programs but makkal television is the best television in Tamil because it programs are different and several useful programs//
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஆனந்தன்
Naanka paakurom makkal enkalukku theeruthu sikkal//
ReplyDeleteநச் சோழன்
kamarajar is not from cinema industry
ReplyDeleteமாற்றங்கள் மட்டுமே நிலையானது...
ReplyDeleteVijay TV will be a number one Tamil Channel by very soon. It will take some time to achieve this. I don’t think so Sun TV will change their aspect since they are very much confident about the TN ladies and their interest with Mega serials.
Let see who is going to be the winner.
I have watched Vijay awards in the internet and I was totally speechless due to the way they conducted the awarding ceremony.
If they are keep doing the same again and again then this will going to be a talk of the Cinema in another couple of years.
சத்தியமான கவலை என்ன தெரியுமா? - தமிழன் வாழ்க்கையின் அம்சங்களுள் ஒன்றான திரைப்படத்தை வாழ்க்கையாக கொண்டுவிட்டான். இது மாற்றப்பட வேண்டும் - மாற்றம் இலகுவானதல்ல ஆனால் சாத்தியமானது.
ReplyDeleteநல்ல அலசல் சேகரண்ணே...
ReplyDeleteமுதல்முதலில் தூர்தர்ஷனுக்கு மாற்றாக வந்தது சன்டிவி என்பதால் அதனை பின்னுக்குதள்ளுவது சற்று கடினம். பல ஊர்களில் கேபிள்டிவி என்றாலே சன்டிவிதான்.
பான்ட்ஸ் பவுடர், மாருதிகார் மாதிரி அதுஒரு அது ஒரு பிரான்ட் நேம் ஆகிவிட்டது.