பொறுப்பற்ற பதிவர் எழுதுகின்றேன்...


முதலில் எனை வாசிக்கும் நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ளுகிறேன்...தயவு செய்து நீங்கள் பொறுப்பானவர் என்றால் இந்த பதிவை வாசிக்காதீர்கள்....இது பொறுப்பற்றபதிவராகிய நான் பதிவுலகின் மிக மிக பொறுப்புள்ள நபருக்கு எழுதும் பதில் பதிவு....


அவர் போட்ட பதிவுலேயே இதற்க்கான பதிலை சொல்லி இருப்பேன்... ஆனால் அவர் ரொம்ப விரசமில்லாத பதிவர்,பாவம் அவர் வலைதளத்தில் போய் நாம் ஏன் விரசப்படுத்த வேண்டும்... நானோ சாக்கடை கலீஜ்....


நேற்று கூட அந்த மகாத்மா என் பதிவில் வந்து மிக அடக்கம் ஒடுக்கமாக
என் பின்னுட்ட பகுதியில் வந்து நீங்கள் திருந்திட இந்த பதிவு உதவும் என்று ஒரு லிங்க் கொடுத்து பின்னுட்டம் இட்டார்....

அவர் இட்ட பின்னுட்டம் கீழே....

உங்கள் தவறை திருத்த இந்த பதிவு உதவும். http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_15.html


அதற்க்கு நான் இப்படி பதில் சொன்னேன்....

Delete
Blogger jackiesekar said...

உங்கள் தவறை திருத்த இந்த பதிவு உதவும்.
http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_15.html//

நான் எந்த தவறும் செய்யவில்லை,நீங்கள் என்னை திருத்தும் அளவுக்கு உங்கள் நேரத்தை இனி செலவிட வேண்டாம்

நன்றி
அப்புறம்தான் யோசித்தேன், அப்புறம் அடிக்கடி வந்து நம்ம தவற திருத்த வந்தா? என்ன செய்யறது... கொஞ்சம் விளக்கமா பதில் சொல்லிடுவோம்னுதான் இந்த பதிவு....


அவருக்கு ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன், என்னை பெத்த என் அப்பாவே சொல்லி திருந்ததாவன் நீங்கள் சொல்லியா திருந்த போகிறேன்? அதைவிட நீங்கள் என்ன மகாத்மாவா ? என்னை திருத்த அந்த அதிகாரம். உங்களுக்கு யார் கொடுத்தது...யார்வழங்கினார்கள்....


கருத்து சொல்ல மட்டுமே உங்களுக்கு உரிமை திருந்துவதும், திருந்தாதும் எனது பிறப்புரிமை...
ஆசையோடோ அல்லது வெறியோடோ நான் இந்த பூவுலகில் ஜனிக்க காரணமாக இருந்த என் அப்பாவே என்னை, திருந்தச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை... அவரே அந்த உரிமையை எடுத்துக்கொள்ள தயங்குவார்... நீங்கள் யார்....????????

நீங்கள் வேண்டுமானல் விரசமில்லாத முத்தம் கொடுத்தக்கொள்ளுங்கள், என்னையும் அப்படி கொடுக்க வேண்டும் என்ற கட்டாய படுத்தவும், அதன் படி செய்ய வேண்டும் என்ற சொல்ல நீங்கள் யார்?

என் தவறை திருத்த
நீங்கள் என்ன சூப்ரீம் கோர்ட் ஜட்ஜா??? அல்லது நாட்டாமை சரத்குமாரா????

என்னை திருத்த உங்களுக்கு அதிகாரம் வழங்கபடவில்லை....கருத்து சொல்லதான் உங்களுக்கு உரிமை. பதிவுலகில் நீங்கள் திருத்தும் அளவுக்கு புனிதர் பட்டம் யாரும் உங்களுக்கு கொடுக்கவில்லை...
மற்றவரை திருத்தும் அதிகாரம் உங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை... என்பதை மறவாதீர்...


இனி எனது பதில்கள்.....

முதலில் அந்த பின்னுட்டம் என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகனோ அல்லது வாசகியோ யாரோ ஒருவருடையது... அவர் இந்த மகாத்மா போட்ட பின்னுட்டத்தின் பாதியை காப்பி செய்து அதில் அவர் சில வேண்டுகோளை சேர்த்து இருந்தார்.
அது கிழே...

Delete
Blogger Sachanaa said...

இந்த வீடியோ பற்றிய விவரணம் இவ்வளவு தேவை அற்றது. ஒரு பெண் என்ன நிற உள்ளாடை போட்டிருந்தால் என்றது தொடக்கம் , மற்றை உங்கள் எழுத்தமைப்பே அந்த வீடியோ பார்த்த உணர்வை சில பேருக்கு கொண்டுவரலாம்...
ஏன் சொல்லுகிறேன் என்றால் சில பேருக்கு வீடியோ பார்ப்பதை விட இவ்வாறு விவரனங்க்களை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம், அவர்களை குறி வைத்துத்தான் செக்ஸ் கதைகள் கூட எழுதப்படுகின்றன.... THIS IS ABSOLUTELY RITE..
neenga solla vandha vishayam nalla irundhuchi but ivlo vakrama explain panna vendiya avasiyam enna??? usually i wont miss to read ur blog each n every post.. but unga sometimes unga wordings enaku pidikadhu.. solla vara vishayatha konjam abuse words use panni solreenga.. ex (saniyan, mayiru.. etc., )
nalla iruku unga blogs but indha chinna chinna vishayatha change pannikiteengana inum romba nalla irukum..

Blogger Sachanaa என்ற அந்த வாசகனோ அல்லது வாசகியோ,என் எகுத்தை ப்றறி, எனக்கு கருத்தை சொன்ன பதிவுக்காக, நான் பதில் சொல்லும் விதமாக நான் எழுதிய ஒரு பதிவை இந்த மகாத்மா பதிவர், தனக்கு எழுதியதாக நினைத்துக்கொண்டு களத்தில் இறங்கி கபடி ஆடிவிட்டார்...

அவர் களத்தில இறங்ககி கபடி ஆட காரணம் ரொம்ப சீம்பிள். அவர் என்னை பிரபலபதிவாராக உருவகம் செய்த கொண்டதால்தான்... அதன் பிறகு பார்த்தார் என் ஹீட்ஸ் கவுண்டர் வேறு அதிகமாக இருந்ததை வைத்து ,தனது மகாத்மா முகமுடியை அணிந்து, அட்வைஸ் அருணாச்சாலமாக உருமாறி என்னை வைத்து கபடி ஆடி விட்டார்...

அவர் எழுதிய பதிவை வைத்து அவருக்கு என்னால் சரிக்கு சரியாக என்னால் பதில் சொல்ல முடியும் , இதற்க்கு மேல் பதில் சொல்லி அவரை இன்னும் மகாத்மாவாக ஆக்க நான் விரும்பவில்லை...


நல்லவர்களையும் நல்ல உள்ளங்களையும் நாம் ஒரு போதும் காயப்படுத்துவது இல்லை. நாம் காயப்படலாம், இது மாதிரி பலது என் வாழ்வில் பார்த்து இருக்கிறேன்... அதனால் எனக்கு ஏதும் பிரச்சனை இல்லை... உங்களுக்கே தெரியும், நான் பொறுப்பில்லாதவன், விரசத்தின் உச்சமாய் பல கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன்....என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஏன் படிக்கின்றீர்கள்?????

இந்த வலையுலகை பொறு்த்தவரை என் பதிவை கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற கட்டாயம் எவருக்கும் இல்லை... முக்கியமாக உங்களுக்கு....


நான் இந்த வலையுலகத்தில் பயணித்து இதுவரை எந்த பதிவருக்கும் நான் அட்வைஸ் வழங்கியதில்லை.... நன்றாக இருப்பதை நன்றாக இருக்கின்ற்து என்பேன்.... நன்றாக இல்லை என்றால், அதுதான் நல்லாயில்லையே அப்புறம் எதுக்கு பதில் என்றுசும்மாவே விட்டுவிடுவேன் ஆனால் என் நண்பர்கள் பதிவில், கொஞ்சம் உரிமையாக, சுவாரஸ்யம் சற்றே குறைச்சாலக இருப்பதாக சொல்லுவேன்.... அதுதான் நாகரீகம்.

என்னை திருத்த இந்நத பதிவு உதவும் என்ற வரியிலேயே உங்கள் அனுபவ அறிவை நான் கண்டு கொண்டேன்....


என்னை திருத்தும் அளவுக்கு உங்களுக்கு அனுபவ அறிவு இல்லை... அதை நீங்கள் மறவாதீர்...


இந்த பொறுப்பற்றவன் பதிவுக்கு தங்களை போன்ற பொறுப்புள்ளவர்கள் வந்துதங்கள் நேரத்தினை செலவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
இதற்க்குகூட பதில் சொல்லமல் நான் போயிருப்பேன்...

கபடி என் ஆடுகளத்தில் என்னை வைத்து என்று சொல்லும் போது, பதில் கபடி பாட்டு ஒரு முறையேனும் நான் பாடாமல் எப்படி போக முடியும்....????

இதற்க்கு இன்னோரு பதிவு எழுதி அதற்க்கு நான் பதில் எழுதி இனி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை...உங்களை பொறுத்தவரை உங்கள் பார்வையில் பொறுப்பற்ற பதிவரான

ஜாக்கிசேகர்

59 comments:

 1. ஜாக்கி நீங்கள் இவ்வளவு விளக்கங்கள் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. எல்லோருமே எல்லோருக்கும் நல்லவனாகி விட முடியாது.

  நானும் பிட்டுபடம் பார்ப்பேன் என்று நேர்மையாக ஒப்புக்கொண்ட உங்களை பொறுப்பற்றவர், கெட்டவர் என்று சொன்னால் சொல்லிக்கொண்டு போகிறார்கள். அதற்காக நீங்கள் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்வீர்களா என்ன?

  இந்தப் பதிவுக்கு செலவழித்த நேரத்துக்கு நீங்கள் நல்லதாக நாலு படம் எடுத்திருக்கலாம்!

  அன்புடன்
  லக்கி

  ReplyDelete
 2. என்னாச்சு..?பதிவர்களே..தயவு செய்து திருந்துங்கள்..திருத்தாதீர்கள்...

  ReplyDelete
 3. நன்றி லக்கி தங்கள் கருத்துக்கு என் வருத்தம் என்ன வென்றால் அந்த பதிவை லெஸ்பியன் அதரவு என்று எழுதியதால் இந்த பதில் பதிவு...
  பதிவை கூட சரியாக படிக்காமல் கருத்து சொல்லம இவர்களை என்னவென்று சொல்வது...

  நன்றி லக்கி

  ReplyDelete
 4. என்னாச்சு..?பதிவர்களே..தயவு செய்து திருந்துங்கள்..திருத்தாதீர்கள்...//

  நன்றி தன்டோரா,
  இரண்டு வரியில் நச்

  ReplyDelete
 5. Why tension maa?
  Be cool.
  Less Tension More work.

  leave them.

  ReplyDelete
 6. அவரு கருத்து கந்தசாமி!
  நீங்க பொறுப்பு பொன்னுசாமி!

  இடையில நாங்க யாரு!

  தெரியலையேப்பா!

  ReplyDelete
 7. Why tension maa?
  Be cool.
  Less Tension More work.

  leave them.


  நன்றி நைனா இந்த டென்ஷன்லியும் என்னை சிரிக்க வச்சிட்ட..

  ReplyDelete
 8. அவரு கருத்து கந்தசாமி!
  நீங்க பொறுப்பு பொன்னுசாமி!

  இடையில நாங்க யாரு!

  தெரியலையேப்பா!//

  வாலு உன் வால்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு???

  ReplyDelete
 9. ஜாக்கி. எதுக்கு சவுண்டு..??

  வேலையப்பாரு, வேலையப்பாரு...

  ReplyDelete
 10. arokiyamana vivatham, (eppadiyelam poi solla vendi irruku)

  ReplyDelete
 11. ஜாக்கி. எதுக்கு சவுண்டு..??

  வேலையப்பாரு, வேலையப்பாரு...

  Dont'waste Time...

  ReplyDelete
 12. என்னங்க நியூட்டனின் மூனாம் விதி மாதிரி இருக்கு. ஓகே எங்களுக்கு டைம் பாஸ் ஆச்சு

  ReplyDelete
 13. அண்ணாச்சி நீண்ட நாட்களாக ஷீலாவின் படம் தான் காட்சி தருகின்றது வேறு ஒன்று மாற்றுங்கள். இதெல்லாம் பெரியவிடயமில்லை உங்கள் மனசாட்சிக்கு தெரியும் எது நல்லது எது கெட்டது என்று.

  ReplyDelete
 14. ஜாக்கி. எதுக்கு சவுண்டு..??

  வேலையப்பாரு, வேலையப்பாரு...-//

  நன்றி வண்ணத்து பூச்சி, இனி அதைதான் செய்யனும்

  ReplyDelete
 15. ஹே..ஹே..
  ம்ம்..இப்பத்தான் சூடு புடுச்சிருக்கு. அப்டியே பிக்கப் பண்ணி போயிருங்க தல.
  நானும் லக்கிய ரிப்பிட்டுறேன்.." அல்லாரும் அல்லாருக்கும் யோக்கியனா இருக்க முடியாது...!".
  வர்ரேன்பா.

  ReplyDelete
 16. arokiyamana vivatham, (eppadiyelam poi solla vendi irruku)-///
  நல்லா பதில் போடறிங்கையா...

  ReplyDelete
 17. என்னங்க நியூட்டனின் மூனாம் விதி மாதிரி இருக்கு. ஓகே எங்களுக்கு டைம் பாஸ் ஆச்சு//

  ஆதவன், ஊரு ரெண்டு பட்டா உனக்கும் டக்ளஸ்க்கும் கொண்டாட்டம்

  ReplyDelete
 18. ஹே..ஹே..
  ம்ம்..இப்பத்தான் சூடு புடுச்சிருக்கு. அப்டியே பிக்கப் பண்ணி போயிருங்க தல.
  நானும் லக்கிய ரிப்பிட்டுறேன்.." அல்லாரும் அல்லாருக்கும் யோக்கியனா இருக்க முடியாது...!".
  வர்ரேன்பா.//

  யோவ் டக்ளஸ் தம்பி நீ ரொம்ப நல்லவன்யா...

  ReplyDelete
 19. உடனடியாக தானைத் தலைவி வேகாவின் படத்தை மாற்றிய அண்ணன் ஜாக்கிக்கு நன்றிகள்.

  ReplyDelete
 20. //என்னாச்சு..?பதிவர்களே..தயவு செய்து திருந்துங்கள்..திருத்தாதீர்கள்...//

  ரிப்பீட்டோய்...!

  ReplyDelete
 21. அண்ணே,சோப்பிக்கண்ணு வேணாம்...வேற எதாவது படம் போடுங்கண்ணே.

  ReplyDelete
 22. //லக்கிலுக் said...

  ஜாக்கி நீங்கள் இவ்வளவு விளக்கங்கள் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. எல்லோருமே எல்லோருக்கும் நல்லவனாகி விட முடியாது.. //

  அதான்.. அதே..தான்..

  ReplyDelete
 23. சும்மா ஜாலிக்கு ன்னு சைடுல படத்தை வச்சிட்டு..
  யம்மாம் கடுப்புல பதிவ போடுறீங்க..
  அண்ணாச்சி.. என்னாச்சி? ம், நீங்க ஒரு பதிவு
  போடுவீங்க, அவன் ஒன்னு போடுவான்...
  தேவையா யிது?

  பொது பிரச்சனையை பற்றி
  எழுதனுமுன்னு வந்துட்டா,
  நல்லாயிருக்குன்னு நாலுபேரு சொல்லுவான்..
  நல்லாயில்லன்னு நாலுபேரு சொல்லுவான்
  கருத்துக்கள் அவரவர் பார்வையில் வேறுபடலாம்!
  அதுகெல்லாம் விளக்கம் குடுதுகினுயிருந்தா,
  பொழப்ப பாக்கமுடியதுண்ணே!

  அதனால,
  "பேக் டு பெவிலியன் "
  "ஐ யேம் பேக் "
  "வந்துட்டோமுல்ல!"
  அப்டின்னு பதிவெழுத ஆரம்பிங்க..

  ஓட்டு போட்டாச்சு!

  ReplyDelete
 24. இந்த மேட்ச் எப்போ முடியும்? முடிஞ்சதும் சொல்லுங்க நான் அப்பாலிகா வரேன்

  ReplyDelete
 25. ingkee raw, cia, mosaad, ellaarumee kuudi kudiyaik kedukkuRaangkaL.

  ReplyDelete
 26. ingkee raw, cia, mosaad, ellaarumee kuudi kudiyaik kedukkuRaangkaL.

  ReplyDelete
 27. நன்றி நண்பரே !
  நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்..
  ஏதோ போங்கள் நான் சொல்லி , முந்தானையை கழற்றிப் போட்டு நின்ற பெண்ணின் படத்தை எடுத்துவிட்டு , இப்படியாவது ஒரு படத்தை போடு அளவுக்கு மாறி இருக்கும் உங்களுக்கு , நன்றிகள்.

  ReplyDelete
 28. அந்த படம் உங்களுக்காக மாத்தியது இல்லை அது பதிவர் வந்தியதேவன் வேண்டு கோளுக்க இனங்க மாற்றப்பட்டது.... அதை நீங்கள் மேலுள்ள பி்ன்னுட்டத்தில் வாசித்து பார்த்தால் புரியும், எதையும் நன்றாக படித்து பாத்த்து பின்னுட்டம் மற்றும் பதிவிட வேண்டுகிறேன்...

  நன்றி
  மயாதி

  ReplyDelete
 29. Blogger வந்தியத்தேவன் said...

  அண்ணாச்சி நீண்ட நாட்களாக ஷீலாவின் படம் தான் காட்சி தருகின்றது வேறு ஒன்று மாற்றுங்கள். இதெல்லாம் பெரியவிடயமில்லை உங்கள் மனசாட்சிக்கு தெரியும் எது நல்லது எது கெட்டது என்று.

  Monday, June 15, 2009 11:19:00 PM

  ReplyDelete
 30. /*jackiesekar said...
  அந்த படம் உங்களுக்காக மாத்தியது இல்லை அது பதிவர் வந்தியதேவன் வேண்டு கோளுக்க இனங்க மாற்றப்பட்டது.... அதை நீங்கள் மேலுள்ள பி்ன்னுட்டத்தில் வாசித்து பார்த்தால் புரியும், எதையும் நன்றாக படித்து பாத்த்து பின்னுட்டம் மற்றும் பதிவிட வேண்டுகிறேன்...

  நன்றி
  மயாதி
  */

  ஜாக்கி பேரிலே மயாதியா....
  Something Wrong....!!!

  ReplyDelete
 31. அண்ணே விடுங்கண்ணே...
  அவரெல்லாம் உக்கார்ற இடத்திலே கட்டி வந்தா கூட, மருத்துவர்கிட்டே எப்படி காட்டுவாரோ...???!!!

  ReplyDelete
 32. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 33. மத்தங்கள் பேசும்
  வார்த்தைகள்
  போலல்ல
  அவை எப்போதும்
  என்னை
  காயப்படுத்தியதில்லை...

  அந்த படம் உங்களுக்காக மாத்தியது இல்லை அது பதிவர் வந்தியதேவன் வேண்டு கோளுக்க இனங்க மாற்றப்பட்டது.... அதை நீங்கள் மேலுள்ள பி்ன்னுட்டத்தில் வாசித்து பார்த்தால் புரியும், எதையும் நன்றாக படித்து பாத்த்து பின்னுட்டம் மற்றும் பதிவிட வேண்டுகிறேன்...

  நன்றி
  மயாதி

  மன்னித்து கொள்ளுங்கள் நான் பதிவுகளை மட்டும்தான் வாசிப்பேன், பின்னூட்டம் என்பது உங்களுக்கானது , எனக்கானது அல்ல....
  உங்கள் அனுபவ முதிர்ச்சிக்கு இது கூட தெரியாமல் போனது மாயம் தான்...

  ReplyDelete
 34. நிறைய பேருக்கு பதிவைகூட சரியாக வாசிக்கவும் புரிந்தும் கொள்ளாமல் பலர் அலைகின்றனர் கடவுளே...

  ReplyDelete
 35. இதுக்கு தான் அன்னே, நான் பின்னூட்டப் பகுதியே வெச்சுக்கல! பயப்படறேன்னு நன்பர்கள் சொல்லுவாங்க. எனக்கு என்னன்னா...எதப்போட்டாலும் அத நக்கல் பன்னி வெறுப்பேத்தவே சில பொழுதுபோகாத கூட்டமும் இருக்கு. எல்லாத்துக்கும் விதன்டாவாதம் பன்ற சொன்னாலும் ஒத்துக்காத மன்டேல ஏறாத சில கூட்டமும் இருக்கு. இவுங்க எழுதறத படிச்சு நம்ம ஏன் மூட கெடுத்துக்கனும்னு நான் முன்னோட்டமாவே சிந்தனை பன்னி பின்னூட்டம் பகுதியையே வெக்கலை. உங்க புலம்பலை பாக்கும் போது தப்பிச்சேன்டா சாமின்னு இருக்கு.

  Regards,
  ram

  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 36. ஸ்ஸப்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே
  :)

  ReplyDelete
 37. Atra Sakkai,Atra Sakkai....

  Romba Naalachuppa ippadi Parthu.

  ReplyDelete
 38. இந்த மாதிரி “ஓவர் நல்லவங்க” சொல்ற கருத்தை எல்லாம் லூஸ்ல விட்டுட்டு தொடர்ந்து எழுதுங்க சார்.

  ReplyDelete
 39. ஜாக்கி...

  அவர் ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார், அவ்வளவே...அது முற்றிலும் அவரது பார்வை...

  அதை நீங்கள் ரொம்ப ஹர்ட்டிங்காக எடுத்துக்கொள்ள தேவையில்லை...

  Infact, நல்ல விமர்சனங்கள் உங்களை மேலும் மெருகேற்ற உதவும்...

  நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை....

  **

  நான் கூட அவரைப்போல ஆரம்பத்தில் சில பதிவுகளை படித்து ஷாக் ஆனதுண்டு, கோபம் கூட பட்டதுண்டு. குமுதம் ஆனந்தவிகடன் தினமலர் கட்டமைத்த பொதுப்புத்தி மாறியவுடன் 'திருந்தினேன்'....

  ReplyDelete
 40. மாயாதிக்கு என்னுடைய கமெண்ட்..

  நீ இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படித்தான் எழுதவேண்டும் என்று அடுத்தவருக்கு உத்தரவிடுவது மிகப்பெரிய வன்முறை...

  அதே சமயம் பொது தளத்தில் பொறுப்புணர்ச்சியோடு எழுதுவதும் குறைந்தபட்ச அடிப்படை நாகரீகத்தை காப்பதும் கூட மிக மிக முக்கியமானது...

  இதை ஜாக்கிக்கும் போடப்போறேன்...

  ReplyDelete
 41. ஹேய்..செந்தழல் ரவி அண்ணே இறங்கிட்டாப்ல..!
  இனிமேல் அடுத்த "இண்டர்நெட் அழியப்போகுது, எல்லாரும் உள்ள போகப் போறீங்க" தான்.
  ஜாக்கிரதை.

  ReplyDelete
 42. உங்கள் பயணத்தின் நடுவே ஓய்வெடுக்கலாம், இப்படி நேரத்தை வீணாக்க கூடாது...
  சரி சரி அடுத்த பதிவுக்கு ரெடியாகுங்க

  ReplyDelete
 43. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 44. ஜாக்கி,

  இந்தியாவில் இலவசமாக கிடைப்பது அடுத்தவன் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று மூலைக்கு நாலாக தூக்கி வீசப்படும் அட்வைஸ்களே... உத்தமர்களுக்கும் பஞ்சமில்லை..

  இப்பொழுது அடுத்தவர்கள் எப்படி எழுத வேண்டும் என்றும் பாடம் எடுக்க வந்துவிட்டார்கள்....

  இந்த உத்தமர்கள் தொல்லை தாங்க முடியல போங்க!

  ReplyDelete
 45. ஜாக்கி விடுங்க பாஸ் . இந்த மாதுரி பதிவு போட்ட மட்டும் அவங்க திருந்தவா போறாங்க .

  இது உங்க வலைபூ நீங்க என்ன வேணும் நாலும் எழுதுங்க படிக்க நாங்க இருகோம் .

  ReplyDelete
 46. ஜாக்கி நீங்கள் இவ்வளவு விளக்கங்கள் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. எல்லோருமே எல்லோருக்கும் நல்லவனாகி விட முடியாது.. //

  அதான்.. அதே..தான்..-//

  நன்றி தீப்பெட்டி

  ReplyDelete
 47. அதனால,
  "பேக் டு பெவிலியன் "
  "ஐ யேம் பேக் "
  "வந்துட்டோமுல்ல!"
  அப்டின்னு பதிவெழுத ஆரம்பிங்க..


  நன்றி கலை அப்படியே செய்கின்றேன்

  ReplyDelete
 48. இந்த மேட்ச் எப்போ முடியும்? முடிஞ்சதும் சொல்லுங்க நான் அப்பாலிகா வரேன்//

  இப்பவே முடிஞ்சிடுத்து கிஷோர்

  ReplyDelete
 49. இதுக்கு தான் அன்னே, நான் பின்னூட்டப் பகுதியே வெச்சுக்கல! பயப்படறேன்னு நன்பர்கள் சொல்லுவாங்க. எனக்கு என்னன்னா...எதப்போட்டாலும் அத நக்கல் பன்னி வெறுப்பேத்தவே சில பொழுதுபோகாத கூட்டமும் இருக்கு. எல்லாத்துக்கும் விதன்டாவாதம் பன்ற சொன்னாலும் ஒத்துக்காத மன்டேல ஏறாத சில கூட்டமும் இருக்கு. இவுங்க எழுதறத படிச்சு நம்ம ஏன் மூட கெடுத்துக்கனும்னு நான் முன்னோட்டமாவே சிந்தனை பன்னி பின்னூட்டம் பகுதியையே வெக்கலை. உங்க புலம்பலை பாக்கும் போது தப்பிச்சேன்டா சாமின்னு இருக்கு.

  Regards,
  ram


  உண்மைதான் ராம் அதற்க்காக வெட்ட வெளியில் கத்தி வீசக்கூடாது அல்லவா?

  ReplyDelete
 50. ingkee raw, cia, mosaad, ellaarumee kuudi kudiyaik kedukkuRaangkaL./

  உங்கள் கருத்துக்கு நன்றி புகழினி

  ReplyDelete
 51. ஸ்ஸப்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே
  :)//

  நன்றி சிவா

  ReplyDelete
 52. Atra Sakkai,Atra Sakkai....

  Romba Naalachuppa ippadi Parthu.

  Tuesday, June 16, 2009 1:31:00 AM//

  அதுக்காக தான் இந்த கருத்து மோதல் தம்பிராஜா

  ReplyDelete
 53. இந்த மாதிரி “ஓவர் நல்லவங்க” சொல்ற கருத்தை எல்லாம் லூஸ்ல விட்டுட்டு தொடர்ந்து எழுதுங்க சார்.//

  ராஜா நீங்க சொல்வது போல் பிரியா விட்டாச்சு...

  ReplyDelete
 54. செந்தழல் ரவி உங்கள் நடுநிலையான கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 55. உங்கள் பயணத்தின் நடுவே ஓய்வெடுக்கலாம், இப்படி நேரத்தை வீணாக்க கூடாது...
  சரி சரி அடுத்த பதிவுக்கு ரெடியாகுங்க//

  நன்றி அக்னி

  ReplyDelete
 56. ஜாக்கி,

  இந்தியாவில் இலவசமாக கிடைப்பது அடுத்தவன் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று மூலைக்கு நாலாக தூக்கி வீசப்படும் அட்வைஸ்களே... உத்தமர்களுக்கும் பஞ்சமில்லை..

  இப்பொழுது அடுத்தவர்கள் எப்படி எழுத வேண்டும் என்றும் பாடம் எடுக்க வந்துவிட்டார்கள்....

  இந்த உத்தமர்கள் தொல்லை தாங்க முடியல போங்க!//

  உண்மைதான் அதுசரி

  ReplyDelete
 57. ஜாக்கி விடுங்க பாஸ் . இந்த மாதுரி பதிவு போட்ட மட்டும் அவங்க திருந்தவா போறாங்க .

  இது உங்க வலைபூ நீங்க என்ன வேணும் நாலும் எழுதுங்க படிக்க நாங்க இருகோம் .//
  நன்றி ராஜ ராஜன் உங்களை போன்றவர்கள் இருக்கம் போது எனக்கென்ன கவலை...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner