டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்கு இந்த பதிவு சமர்பணம்)
தமிழக அரசியலைபற்றி பேசும் போது, ஏதாவது திட்ட வேண்டுமானாலும் அல்லது பாராட்ட வேண்டுமானாலும் கலைஞர் என்ற பெயரை பயன்படுத்தாமல் நீங்கள் தமிழக அரசியலை பற்றி பேசவும் எழுதவும் முடியாது என்பதே நிதர்சன உண்மை...
முதன் முறையாக நான் எங்கள் ஊர் கடலூரில்தான் அவரை நேரில் பார்த்தேன்...தேர்தல் பிரசாரத்துக்கு வந்தவரை காரில் வைத்துபார்த்தேன்..
எங்கள் ஊரில் என் உறவுக்கூட்டம் அத்தனையும் திமுக அபிமானிகள்...நானாவது திமுக தவறு செய்தால் ஆம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று உறக்க சொல்லுவேன்.. என் அத்தை,மாமாக்கள் எல்லாம் அவரை ஒரு அவதார புருஷராகவே பார்ப்பார்கள்....
எவன்தான் தவறு செய்யலை? ,யார்தான் தவறு செய்யலை? என்று கலைஞருக்கு வக்காலத்து வாங்குவார்கள்...
தேர்தல் காலங்களில் எனக்கு பிடித்தபாடல்... பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தது யாரு ? நம்ம தலைவரின் ....என்று தொடங்கும் பாடல்....
நான் சென்னையில் வீடியா கேமராமேனாக, போட்டோகிராபராக, இருந்த போது, பல தலைவர்கள் வீட்டு விசேஷங்களை படம் பிடித்து இருந்தாலும், எனக்கு என்னவோ எவருடன் புகைபடம் எடுத்துக்கொள்ளவேதோனாது...எதிராளியை மனிதராக பாவித்தே பழக்கபட்டு விட்டேன் நீ உன் தொழிலில் பெஸ்ட் என்றால் நான் என் தொழிலில் பெஸ்ட் என்ற தன்னம்பிக்கை மனோபாவம்தான் காரணம்....
இருப்பினும் சிலருடன் நான் விருப்பப்பட்டு எடுத்துக்கொண்டவையும் உண்டு அவர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால்... ஒரு மலரும் நினைவுக்காக...
இப்பவும் நடிகர் ஜாக்கிசானுடன் புகைபடம் எடுத்துக்கொள்ள மிக ஆவலாய் உள்ளேன்...
தலைவர் கலைஞருடன் நான் நிற்க்கும் இந்த படம் சென்னை ஜி ஆர் டி ஓட்டலில் எடுத்தது... எப்போதும், இப்போதும் கலைருடன் வாழும் உதவியாளர் சண்முகசுந்தரம் அவர்கள் மணிவிழாவில் நான் வீடியோ கேமராமேனாக பணி புரிந்த போது எடுத்தபடம் இது ...
அபி என்பவர்தான் இந்த படத்தை எடுத்தார். அப்போது என் கையில் கேமரா இருந்த காரணத்தால் துரைமுருகன் என்னை அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தார்...
நான் கலைஞரிடம்,
“ ஐயா,ஒரு நிழற்படம் உங்க கூட எடுத்துக்கனும் கொஞ்சம் நில்லுங்க... என்றேன்”
கொஞ்சம் சத்தமான என் குரலும் என் தமிழும் அவரை வசீகரப்படுத்தி இருக்க வேண்டும்...
அவர் சட்டென என்னோடு 3 வினாடிகள் நின்றார்.... என்னோடு போஸ் கொடுத்தார்... இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது...
தலைவருக்கு ஆர்டர் போட இவன்யார்? என்று என்னை ஒரு மாதிரியாக அமைச்சர் துரை முருகன் பார்ப்பதை நீங்கள் பார்க்கலாம்...
சில புகைப்படங்கள் பொக்கிஷங்கள்... அந்த வகையில் இந்த படம் எனக்கு சேரனின் பொக்கிஷத்தை விட மேலானது....
குறிப்பு /
பதிவர் லக்கி இது போல் ஏதாவது படம் வைத்து இருக்கின்றாரா? அவர் உயிர் மூச்சில் தலைவர் இருக்கும் போது நிழற்படம் எதற்கு????
அன்புடன்/ஜாக்கிசேகர்
Subscribe to:
Post Comments (Atom)
மீட்டெடுக்கும் நினைவுகளில் மூழ்குவதே ஒரு தனி சுகம் தான் ...
ReplyDeleteசூப்பர் தோழர், இன்னிக்கே இதை எடுத்து கிராபிக்ஸ் பண்ணி உங்க படத்தை எடுத்துட்டு எங்க படத்தை போட்டுருவோம்
ReplyDeleteதுறை முருகன் உங்களையே கூர்ந்து பார்கிறார் அவர் இடத்தில நீங்க வந்துவிட கூடாது என்று பயந்து பார்த்தமாதிரி இருக்கு ....
ReplyDeleteஅண்ணே....!!!
ReplyDeleteஉள்ளேன் அண்ணே...
இந்த புகைப்படம் நிஜமாவே பொக்கிஷம் தான்..
ReplyDeleteநல்லா இருக்குது... :-)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதலைவரை நெருக்கத்தில் சந்திக்கும் வாய்ப்பும் இரண்டு, மூன்று முறை கிடைத்தும் படம் எடுத்துக்கொள்ளவில்லை ஜாக்கி :-(
ReplyDeleteபொதுவாகவே பர்சனாலிட்டி குறித்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இருப்பதால் படங்கள் எடுத்துக்கொள்வதில் ஆர்வமில்லை.
நான் சேர்ந்து நின்று படமெடுத்துக் கொண்ட ஒரே தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுடன் மட்டுமே.
நல்ல நினைவுகள்
ReplyDeleteசூப்பர்! நல்ல பொக்கிஷம் ஜாக்கி!
ReplyDeletenice!
ReplyDeleteமீட்டெடுக்கும் நினைவுகளில் மூழ்குவதே ஒரு தனி சுகம் தான் ...//
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான் சிவா...
சூப்பர் தோழர், இன்னிக்கே இதை எடுத்து கிராபிக்ஸ் பண்ணி உங்க படத்தை எடுத்துட்டு எங்க படத்தை போட்டுருவோம்//
ReplyDeleteசிறப்பாக செய்யுங்கள்
துறை முருகன் உங்களையே கூர்ந்து பார்கிறார் அவர் இடத்தில நீங்க வந்துவிட கூடாது என்று பயந்து பார்த்தமாதிரி இருக்கு ....//
ReplyDeleteஉண்மைதான் மலர்...என்ன ரொம்ப நாளா ஆளையே கானோம்
அண்ணே....!!!
ReplyDeleteஉள்ளேன் அண்ணே...//
நன்றி நைனா நீ என்ட தளபதி
இந்த புகைப்படம் நிஜமாவே பொக்கிஷம் தான்..//
ReplyDeleteகண்டிப்பாக தீப்பெட்டி
நல்லா இருக்குது... :-)//
ReplyDeleteநன்றி சரவண குமரன்
பொதுவாகவே பர்சனாலிட்டி குறித்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இருப்பதால் படங்கள் எடுத்துக்கொள்வதில் ஆர்வமில்லை.
ReplyDeleteலக்கி நீங்களே இப்படி சொன்னா நாங்க எல்லாம் அதை பத்தி பேசக்கூட முடியாது...
நன்றி முரளிகண்ணன், அபி அப்பா, மங்களுர் சிவா...
ReplyDeleteபெரிய ஆளுதான் நீங்க ஜாக்கி.. இதை காமிச்சி ஊருல ஏதும் வசூல் பண்ணியிருக்கீங்களா? :)))) (சும்மா லுல்லல்லாயி...)
ReplyDeleteபீரோவில் இருக்குற ஒவ்வொரு படத்தையும் எடுத்து வச்சு கிட்டு ஒவ்வொரு பதிவா..??
ReplyDeleteவிஜய் T. ராஜேந்திரோட எடுத்து கொண்ட படம் எங்கே..??
அந்த போட்டோவும் பதிவும் போடவும். Please...
என்கூட எடுத்த படத்தை பதிவா போடவேண்டாம் சேகர்.
ReplyDelete:)
ReplyDelete//எதிராளியை மனிதராக பாவித்தே பழக்கபட்டு விட்டேன் நீ உன் தொழிலில் பெஸ்ட் என்றால் நான் என் தொழிலில் பெஸ்ட் என்ற தன்னம்பிக்கை மனோபாவம்தான் காரணம்....//
ReplyDeletethe best
//தமிழக அரசியலைபற்றி பேசும் போது, ஏதாவது திட்ட வேண்டுமானாலும் அல்லது பாராட்ட வேண்டுமானாலும் கலைஞர் என்ற பெயரை பயன்படுத்தாமல் நீங்கள் தமிழக அரசியலை பற்றி பேசவும் எழுதவும் முடியாது என்பதே நிதர்சன உண்மை...//
ReplyDeleteஐயா கலைஞர் அவர்கள் தான் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் கடந்த 40 வருங்களாக ஆதலால் ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக மேலே சொன்ன வாசங்களை சொல்ல வேண்டாம்.
உண்மையிலே நாம் அவரைத்தான் குற்றம் சொல்ல முடியும் நீங்கள் போய் உங்க பக்கத்து வீட்டுகாரை குற்றம் சொல்லமுடியாது.
உங்கள் ஊர் பள்ளி சரியில்லை என்றாலோ லஞ்சம் என்றாலோ, அரசு துறைகளில் ஊழல் என்றாலோ மற்றும் தி.மு.க ஆட்சி வந்தாலே குண்டர்களுக்கு கொண்ட்டாட்டம் என்றாலோ நீங்கள் அவரைத் தான் திட்டமுடியும் அவரை விடுத்து வேறுயாரையும் திட்டமுடியாது.
இதனால் தமிழக அரசியலை பற்றி பேசினால் இங்குள்ள தலைவர்கள் பற்றிதான் பேசமுடியும். புரிஞ்சிதா...
எல்லோருக்கும் தெரிந்த தலைவர்கள் என்றால் பெரியார், காமராஜர்,அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா.
ஏன் நாம் ம்ற்றவர்களைப் பற்றி பேசுவது கிடையாது என்றால் மற்றவர்கள் யாரும் நாட்டை ஆண்டது
கிடையாது.அப்படியென்றால் பெரியார் ஆண்டாரா என்றால் தமிழக அரசியலின் தந்தை.
ஆதலால் கலைஞரை புகழவேண்டுமே என்பதற்காக இதை நீங்கள் சொல்லவேண்டாம்.
புரியாத மாதிரியே இருக்கா..
hai dhanush nice rememberance
ReplyDeleteYou can send this photo to Ananda Vikatan.... This can be selected by the editorial....
ReplyDelete