உலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.???கமல் என் மனம் கவர்ந்த நடிகர். ரசிகர்கள் படத்தை ரசித்து விட்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று எப்போதும் வேண்டுகோள் விடுப்பவர். தன் ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் இல்லை என்பதை நிருபிக்க தன் ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் நற்பணிமன்றங்களாக்கிய பெருமை தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே நடிகர் கமல் ஒருவர்தான் செய்தார்.அவர் பிறந்தநாளின் போது இலவச ரத்த முகாம்கள்,நலிந்தோருக்கான நலதிட்ட உதவிகள் என்று சமுகத்தில் இருக்கும் வலுவான இளைஞர் கூட்டத்தை நற்பனி என்ற பெயரை ஒப்பிக்கவைத்து அதன் பக்கம் திரும்ப செய்தவர்.

கூடுமானவரை தமிழில் பேச முயற்ச்சிசெய்பவ்ர்.இப்போதும் சகலகலாவல்லவன் போல் படம் எடுத்து பாக்கெட் ரொப்பாமல், குருதிப்புனல்,மகாநதி,அன்பேசிவம்,நம்மவர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை அடுத்த தளத்துக்கு அழைத்து போனவர்.


என்னால் இனிமேல் ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று சொல்லி கல்லூரிக்கு போவது போல் நடிக்க முடியாது என்று பகிங்கரமாக பேட்டிக்கொடுத்தவர். தான் நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பேராசைகாரர்.

வாக்கு அளிப்பதையும், வரிகட்டுவதையும் தலையாய ஜனநாகய கடமை என்பதை ஒவ்வோரு முறையும் நிருபித்து வருபவர். அதனை எல்லோரும் ஃபாலோ செய்ய வேண்டும் என்று அதற்க்கான விளம்பரபடங்களில் நடித்து
மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படு்த்தியவர்.


மிக முக்கியமான விஷயம் தன் புகழ் கெட்டு விடக் கூடாது என்பதற்க்காக சில விளம்பர படங்களில் பிரபலங்கள் நடிக்க தயங்குவார்கள். அனால் இந்தியாவில்
எந்த நடிகரும் செய்ய தயங்கிய, எயிட்ஸ் விழிப்புனர்வு விளம்பரங்களுக்கு தன் பிரபல புகழை கொடுத்து மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தி வருபவர்.


இப்படி எல்லாம் சமுக பொறுப்பில் தனித்தன்மை கானும் கமல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் கமல், தற்போது திரைக்கதைக்கான பயிற்ச்சி பட்டறையை உருவாக்கி இருக்கிறார். அதற்க்கு 2500ரூபாய் அல்லது 3000ரூபாய் அளவுக்கு டிடி எடுத்து அதன் பிறகு பயிற்ச்சி பட்டறையில் கலந்து கொள்ள அனுமதிப்பார்கள் என்ற நானும் செய்திதாளில் படித்தேன் . ஆங்கிலத்தில்தான் பயிற்ச்சி வகுப்பு நடத்தபடுகின்றது. ஒரு கார்பரேட் கம்பெனி நேர்த்தியோடு அது நடைபெற ஆங்கிலத்தில் நடத்துகின்றார்கள்.

பல வடநாட்டு ஜாம்பவான்கள் வருகின்றார்கள் அதனால் தமிழ் சாத்தியம் இல்லை என்ற சப்பகட்டு வேண்டாம். ஒரு டிரன்ஸ்லேட்டர் வைத்தால் போயிற்று...

இவ்வளவு ஏன் எங்கள் அண்ணன் அழகிரிக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. இருந்தாலும் மத்திய மந்திரியாக மாறினாரா இல்லையா?மந்திரி பதவி கிடைத்தது, அவ்வளவுதான் விமான நிலையத்தில் பறிதவித்த பயனிகளை டிரெயினில் ஏற்றி சென்னை அனுப்பினாரா இல்லையா? அவர் மொழி தெரிந்தா இவ்வளவும் செய்தார்.

தென்மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் பேருந்து ஏறி பல லட்சக்கானக்காக உதவி இயக்குநர்கள் சென்னை வந்து , தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு இன்னும் சினிமா பற்றிய புரிதல் இல்லால் சுற்றிக்கொண்டே இருக்கின்றார்களே? அவர்களுக்கு என்ன செய்ய போகின்றீர்கள் கமல்.?

உங்கள் தேவர்மகன் படத்தில் சிவாஜி ஒரு வசனம் பேசுவார்.

“விதை நாம போடனும் அதுக்கப்புறம் அது மரமா வளர்ந்து அது பல தலைமுறைகள் பயன்படுத்தும்.” வெற்றிவேல் வீரவேல்னு ஓடன கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறுவான்.

ஆங்கிலத்தில் உங்கள் திரைக்கதை பயி்ற்ச்சி பட்டறை நடத்த வேண்டாம் என்ற சொல்லவில்லை ஆனால் தமிழ் உதவிஇயக்குநர்கள் பலர் உங்கள் படம் பார்த்து கொம்பு சீவப்பட்டு தானும் ஒரு வருங்கால இயக்குநர் என்று நம்பி சென்னை வந்தவர்கள். அதே போல் எல்லா உதவி இயக்குநர்களுக்கும் கமலை வைத்து ஒருபடம் என்ற வாழ்நாள் கனவு இல்லாமல் இல்லை. அது உங்களுக்கும் தெரியாமல் இல்லை.மொழி என்ற விஷயத்தை வைத்து அவர்களை புறக்கனிக்காதீர்கள். ஏன் என்னை போன்ற குறும்பட படைப்பாளிகள் ,எதை தின்றால் பித்தம் தனியும் என்று ஓடி ஓடி கற்றுக்கொண்டு இருக்கின்றோம். இதை நீங்கள் தமிழில் நடத்தினால் என்னை போன்றவர்களுக்கு அது ஒரு அற்புதமான களம்.

தமிழ் உதவி இயக்குநர்களுக்கு ஏதாவது செய்யுங்கள் கமல், விதை நீங்கள் போட்டதாகவே இருக்கட்டும்.


உதவி இயக்குநர்கள் பற்றி நான் எழுதிய கவிதை இங்கே.....

லட்சிய இளைஞர்கள் (தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள்)
அழுக்கேறிய ஜுன்சும்

ஆறுமாதகால தாடியும் தான்

இவர்களின்

அடையாளங்கள் ...தொடர்ந்து புகைப்பதால்

தடித்த உதடுகளும்

எண்னைப் பார்க்காத தலையும்

அவர்களின்

அக்மார்க் முத்திரைகள்...தூக்கம் தொலைந்த

கண்களில்

அரை நூற்றாண்டு

சரித்திரத்தை மாற்றும்

கனவுகள் இலவசம்.புரிந்தாலும்

புரியாவிட்டாலும்

ஒரு நாவல் புத்தகம்

ஒரு கைக்குறிப்பேடு

இவர்களின் கையில்

நிச்சயம் இருக்கும்.


தெருவோர

டீக்கடைகள் தான்

இவர்கள் இளைப்பாறும்

வேடந்தாங்கல்.


இவர்களின்

பெற்றோர்களின் கனவு

தன் மகனை

மருத்துவராகவோ

பொறியாளனாகவோ

பார்க்கத்தான் ஆசை


ஆனால்

இவர்களின் கனவோ

வேறானது...


திருமண வயதை தாண்டி

ஜன்னல் வழியாக

சாலை வெறித்துப்

பார்க்கும்

சகோதரிகள்...


ஒரு பக்க நுரையீரலை இழந்து

காச நோயால் அவதிப்படும்

அம்மா...


வெள்ளாமை பொய்த்தால்

ஐம்பது வயதிலும்

வேதனைப்படும்

அப்பா...


இது

எதுபற்றியும் இவர்களுக்கு

கவலை இல்லை

இவர்களின் ஒரே கவலை

"வாழ்நாள் கவலை"

நல்ல தமிழ் சினிமா

எடுப்பது தான்...
(சமர்ப்பணம் சினிமா பற்றிய புரிதல் இல்லாது சினிமா பார்ப்பதாலேயே தாணும் ஒரு இயக்குநராக மாறவேண்டும் என்று தென்மாவட்டங்களிலிருந்து பஸ் பிடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும்)

தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நொந்தபடியே,

அன்புடன் - ஜாக்கிசேகர்


24 comments:

 1. ஜாக்கி அண்ணாச்சி
  இந்தப் பயிலரங்கத்தில் பலமொழிபேசுகின்றவர்கள் கலந்துகொண்டபடியால் தான் கமல் ஆங்கிலத்தில் நடத்தினார் என அறிகின்றேன். அத்துடன் அவர்கள் வாங்கிய 2500 ரூபாக்கு பெறுமதியான உபகரணங்களும் மூன்று நாட்கள் இலவச உணவு என பல செய்திருக்கின்றார்கள்.

  அதே நேரம் நீங்கள் கூறியபடி கமல் தமிழ் உதவி இயக்குனர்களுக்கு மட்டும் தமிழில் பயிலரங்கம் செய்வாரா? முரளிகண்ணன் போன்றவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 2. //“விதை நாம போடனும் அதுக்கப்புறம் அது மரமா வளர்ந்து அது பல தலைமுறைகள் பயன்படுத்தும்.” //

  இதுல இந்த வரிகளையும் சேர்த்துக்கங்க...

  "வித போட்டது யாரு? அது என்ன பெருமையா? கடமை...."

  நல்ல பதிவு.. இதனை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தால் நல்லது.

  ReplyDelete
 3. அன்பு ஜாக்கி சேகர்,

  இந்த திரைக்கதை பயிற்சிப்பட்டறை பலரால் தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

  இந்தியாவில் உள்ள அனைவரும் பங்கு கொண்டு ஒட்டு மொத்த தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே அப்ஜெக்டிவ். மேலும் திரைக்கதை எழுதும் உத்திகள், அதற்கு எடுத்துக் காட்டாக கூறப்படும் திரைப்படங்கள் எல்லாம் பல மொழிகளைச் சேர்ந்தவை.

  ஆங்கிலத்தில் படத்தைப் பற்றி ஒரு அப்ஸ்ட்ராக்ட் எழுதத் தெரிந்தால் போதும் என்பதே தகுதியாக வைக்கப்பட்டிருந்தது.

  1500 விண்ணப்பங்கள் அதில் வடிகட்டி 250 பேர் தேர்வு செய்யப்பட்ட்னர்.

  ஐந்து நாள் தங்கும் வசதி, காலை மாலை டீ, மதிய உணவு அனைத்தும் மிகத் தரமாக வழங்கப்பட்டன.

  மெட்டீரியல்ஸ்யும் (டி சர்ட், பேக், நோட்ஸ், ப்ரிண்டட் மெட்டீரியல்) என கட்டணமான 2500க்கும் அதிகமாகவே திருப்பித் தரப்பட்டது.

  (லாப நோக்கு அல்ல) என்பதை தெரிவிக்கவே.

  ReplyDelete
 4. ஏன் தமிழில் என்பதே இல்லை?

  என்பதே கேள்வி.

  பலமொழி வல்லுநர்கள் வகுப்பெடுத்தார்கள்.
  இண்டராக்டிவ் செசன் நடை பெற்றது.

  ஆங்கிலம் அங்கே அத்தியாவசியமாக இருந்தது.


  இது ஐஐடி ஆதரவில் நடைபெற்றது. அது தேசிய நிறுவனம். அதில் குறிப்பிட்ட மாநில மக்களுக்கு மட்டும் என்று
  சொல்வது சரியல்ல.

  மேலும் தமிழர்களும் 30 பேர் அளவில் கலந்து கொண்டார்கள்.

  ReplyDelete
 5. இதற்க்குமுன் அவ்வை சண்முகி பட தயாரிப்பின் போது, வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களைக் கொண்டு ஒரு பயிற்சிப்பட்டறை தமிழ் கலைஞர்களுக்காக கமல் நடத்தினார்.

  மேலும் ஆளவந்தான் பட சமயத்திலும்
  ஸ்டண்ட் கலைஞர்களுக்கு வகுப்பு நடத்தப் பட்டது.

  மேலும் முழுக்க முழுக்க தமிழிலும் நடத்த பின்னாட்களில் வாய்ப்பு இருக்கிறது.

  ReplyDelete
 6. நன்றி வந்திய தேவன் நெஷனல் லெவலில் நடத்தபடும் பயிலரங்கம் ஸ்டேட் லெவலில் நடத்தபட வேண்டும் என்பதே என் அவா....

  ReplyDelete
 7. "வித போட்டது யாரு? அது என்ன பெருமையா? கடமை...."//

  செந்தில்வேலன் வரியை ஞாபகபடுத்தியதற்க்கு நன்றி.

  ReplyDelete
 8. முரளி அவர் பணத்தை கொள்ளை அடித்து விட்டார் என்று சொல்லவில்லை, முதலில் நேஷனல் லெவல் பேகும் முன் ஸ்டேட் லெவலி்ல் அவர் ஆரம்பித்து இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. இந்த முயற்ச்சி வெற்றி பெறட்டும ஏதாவது கல்யாணமண்டபத்தில் நம்வர்களுக்கு நடத்தினால் போதுமானது.

  மற்றபடி இந்த பதிவு வேண்டுகோள்தான்


  ஆங்கிலத்தில் உங்கள் திரைக்கதை பயி்ற்ச்சி பட்டறை நடத்த வேண்டாம் என்ற சொல்லவில்லை ஆனால் தமிழ் உதவிஇயக்குநர்கள் பலர் உங்கள் படம் பார்த்து கொம்பு சீவப்பட்டு தானும் ஒரு வருங்கால இயக்குநர் என்று நம்பி சென்னை வந்தவர்கள்//

  அதனால்தான் இந்த பதிவு.


  மற்றபடி ஒரு தமிழ் திரைபல்கலைகழகமே நேரில் வந்து பதில் சொன்னது போல் இருந்தது. நல்ல ஞாபகசக்தி முரளி உங்களுக்கு... நன்றி முரளி கண்ணன்

  ReplyDelete
 9. தலைவா..பின்னி எடுக்கறிங்க..நீங்க நினைக்கற மாதிரி குடிகாரன் நா இல்ல..தொழில் முதலில்…அதன் பின் தான் அடி,தடி,குடி எல்லாம்..தமிழில் ஒரு பட்டறை நடத்த முன் வந்தால் கமல் நிச்சயம் இலவசமாகவே முன் வருவார் என்பதே உண்மை..மற்ற கலைஞர்களை விட கமலின் தமிழ் சினிமா பற்று அளவிட முடியாதது

  ReplyDelete
 10. good article...

  but you have to understand this is the first step taken by kamal...you cannot except all the elements in the initial step..


  it will develop step by step...all over india participants and different language people are gathered. so you cannot except to teach in tamil...

  ReplyDelete
 11. அது இங்கிலிபீஸுலயா நடந்தது? - !

  ReplyDelete
 12. முதல் ஓட்டு என்னோடதுதான்..!

  எல்லாஞ் சரி..

  அந்த சைடு பிட்டு படம் எதுக்கு..?

  தமிழ்ச் சினிமாவில் நுழையக் காத்திருக்கும் கோடானு கோடி உதவி இயக்குநர்களுக்காகவா..?

  ReplyDelete
 13. அவர் தமிழிலும் நடத்த வேண்டும் என்பதே உஙக்ள் நோக்கம் என்றால், தலைப்பு ஏன் இப்படி?

  உங்கள் பதிவு முழுவதுமே கமல் ஏன் இந்த பட்டறையை தமிழில் நடத்தவில்லை என்பதாகவே எனக்குப் பட்ட்டது.. குறிப்பாக தலைப்பு அப்படி வைத்ததால்..

  முடிந்தால் தமிழிலும் நடத்தலாமே கமல்ன்னு மாத்துங்க..

  ReplyDelete
 14. ///கார்க்கி said...
  அவர் தமிழிலும் நடத்த வேண்டும் என்பதே உஙக்ள் நோக்கம் என்றால், தலைப்பு ஏன் இப்படி?

  உங்கள் பதிவு முழுவதுமே கமல் ஏன் இந்த பட்டறையை தமிழில் நடத்தவில்லை என்பதாகவே எனக்குப் பட்ட்டது.. குறிப்பாக தலைப்பு அப்படி வைத்ததால்..
  ////

  வழிமொழிகிறேன்

  ReplyDelete
 15. இதற்குக் கமலைக் கேட்டு யாதொரு பயனுமில்லை என்றே நினைக்கிறேன்.தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கங்கள்,நடிகர் சங்கங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்.அதே போல இன்று வெற்றி பெற்ற எல்லா இயக்குனர்களும் ஒரு நாள் மிகவும் கஷ்ட்டப்பட்ட உதவி இயக்குனர்களே.அவர்கள் ஏன் உதவி இயக்குனர் ஆகத் துடிப்பவர்களிலிருந்து சரியான நபர்களைத் தேடிப் பிடித்து உணவு,உடை,உறைவிடம் வழங்கி ஆதரிக்கக் கூடாது?...............

  ReplyDelete
 16. பாவம் கமல்...முரளி சொன்ன மாதிரி 2500 ரூபா கட்டணத்துக்கு மேலெ செலவு செய்ய ஐ.ஐ.டி போல யாராவது கிடைத்தால்தான் உண்டு... என்னைப் பொறுத்தவரை தமிழில் மட்டும் பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும் என்றால் தமிழ் சினிமாவின் so called சங்கங்கள் கை கோர்த்து முயன்றால் மட்டுமே உண்டு

  ReplyDelete
 17. இந்தப் பதிவில் எனக்கு ஒப்புதல் இல்லை.

  கமலுக்கிருக்கும் தமிழ்ப்பற்றை நீங்கள் சந்தேகப்பட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பின்னூட்டம்.

  சினிமா இன்று மொழி என்ற எல்லையை கடந்துவிட்ட மீடியம். நம்ம ஊரு முருகதாஸ் பாலிவுட்டிலும், பாஸ்கர் டோலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருப்பதை உதாரணமாக சொல்லலாம்.

  சினிமா பற்றிய நல்ல கல்வியை தரும் மாட்யூல்கள் ஆங்கிலத்தில் இருக்கும் நிலையில் தமிழர்களுக்கென பிரத்யேகமாக தமிழில் பயிற்சி தருவது அசாத்தியமானது. அந்த மாட்யூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியதுதானே? என்று கமலைப் பார்த்து கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  கமலால் தமிழில் எவ்வளவு முடியுதோ அவ்வளவை செய்யட்டும், போதும்.

  ReplyDelete
 18. உங்களது ஆதங்கத்திற்கு முரளி தெளிவாக பதில் கூறிவிட்டார்

  --

  உங்களது கேள்வியும் நியாயமானதே

  அதற்கான பதிலும் நியாயம் தான் என்பது என் கருத்து

  --

  நியாயமான கேள்விக்கு நியாயமான பதில் இருக்கக்கூடாது என்று சட்டமில்லையே

  --

  அது சரி

  இன்று 2009ல் தமிழ் நாட்டில் உங்களுக்கு தெரிந்து யாராவது காசநோயால் அவதிப்படுகிறார்களா

  இருந்தால் முகவரி தாருங்கள்

  இலவசமாக மாத்திரை வீட்டிற்கு வந்து விடும்

  ReplyDelete
 19. தலைவா..பின்னி எடுக்கறிங்க..நீங்க நினைக்கற மாதிரி குடிகாரன் நா இல்ல..தொழில் முதலில்…அதன் பின் தான் அடி,தடி,குடி எல்லாம்..தமிழில் ஒரு பட்டறை நடத்த முன் வந்தால் கமல் நிச்சயம் இலவசமாகவே முன் வருவார் என்பதே உண்மை..மற்ற கலைஞர்களை விட கமலின் தமிழ் சினிமா பற்று அளவிட முடியாதது//

  நன்றி தன்டோரா, இது கமலை பற்றிய குறை சொல்லும் பதிவு இல்லை

  ReplyDelete
 20. good article...

  but you have to understand this is the first step taken by kamal...you cannot except all the elements in the initial step..


  it will develop step by step...all over india participants and different language people are gathered. so you cannot except to teach in tamil...//

  வினோத் உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்

  ReplyDelete
 21. அது இங்கிலிபீஸுலயா நடந்தது? - !//

  ஆம் ஊர் சுற்றி

  ReplyDelete
 22. ஜாக்கி

  நிகழ்ச்சி ஐ.ஐ.டியால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி

  அங்கு கமல் கலந்து கொண்டார் அவ்வளவு தான்

  --

  இதற்கும் கமல் தனது வீட்டில், அலுவலகத்தில், அவராகவே நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

  சொந்த சீருந்தை ஓட்டுவது என்றால் எப்படி வேண்டுமென்றாலும் ஓட்டலாம்

  அரசு பேரூந்தில் ஓட்டுனராக பணிபுரிந்தால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் தான் நிறுத்த வேண்டும்

  அவ்வளவுதான் !!

  ReplyDelete
 23. ஒண்ணுமே பண்ணாம இருந்தா பிரச்சனை இல்ல ..ஏதாவது பண்ணுறவன நொள்ளை கண்டுபிடித்து நொங்கெடுத்துடணும் .ஹைய்யோ .

  ReplyDelete
 24. Kamalai kurai koori vambukku ilukkira mathiri illamal aarokiyamana vimarsanamagave yenakku indha padhivu padugirathu.But andha kavidhai...Thinikka patta sokhangaloda padu seyarkaiya irukka madhiri thonudhe...[unghaloda urainadai padhivugalukku yeppavume naan rasigan andha urimayil idhai solgiren]...Krish

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner