பத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்கும் சென்னை உள்வட்டசாலைகள்...


நீங்கள் புதிதாய் சென்னை வந்து மச்சான் வீட்டில் அல்லது மாமா வீட்டில் அவசரத்துக்கு ரெண்டு நாள் தங்கி செல்பவரா? அப்போது அவர் டூவிலர் எடுத்து ஓட்டுபவரா? அப்படி என்றால் அவசியம் நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க வேண்டும்.

சென்னை மெயின் ரோட்டை விடுத்து பல உள்வட்ட சாலைகளை எடுத்துக்கொண்டாள் . எந்த இடத்தில் ஸ்பிட் பிரேக் வைப்பது என்ற வரைமுறை இல்லாமல் பத்தடிக்கு ஒரு ஸ்பிட் பிரேக்கர் வைத்த உயிரை எடுக்கின்றார்கள்.. ரோடு போடும் எமகாதக தெய்வங்கள்.


பொதுவாக பள்ளி மற்றும் வலைவுகளில் ஸ்பிட் பிரேக்கர் வைப்பார்கள். தேவையே இல்லாமல் பத்தடிக்கு ஒரு ஸ்பிட் பிரேக்வைத்து நம் உயிரை எடுப்பது சென்னை உள் வட்ட சாலைகளில் சகஜம்... அதுவும் மடிப்பாக்ம், ராமாபுரம், நெசப்பாக்கம் என உதாரனத்திற்க்கு பல இடங்களை சொல்லலாம்.

நேத்து மடிப்பாக்கத்துல ஒரு நண்பரை விட போனேன். மடிப்பாக்க வாசிகளே, உங்களை எல்லாம் நெனைச்சா ரொம்ப பாவமா இருக்கு... எப்படிய்யா வண்டியை அங்கன ஓட்டறிங்க? ராமாபரத்துலயும் இதே ரோதனைதான்... ஒரு தெருவுல சொன்ன நம்ப மாட்டிங் நேர் ரோட இருக்கற ரோட்ல , ஒரு கிலோ மீட்டர்ல 15 ஸ்பிட் பிரேக் இருக்கு.

ஏற்க்கனவே சென்னை சாலைகளில் இருக்கும் மேன்ஹொல்கள் எல்லாமே
ஸ்பீட் பிரேக்கர்கள்தான்... அதனால் இது போன்ற ஸ்பிட் பிரேக்கர்கள் தேவையற்றது...


சரிடா நீங்க ஸ்பிட் பிரேக் வச்சிட்டிங்க, அதுக்கு ஏதாவது அறிவிப்பு பலகை வைக்கனு்மில்ல.. அதச் செய்யனும் இல்லை? செய்ய மாட்டானுங்க.. ஏன்னா அதே தெருவுல இருக்குற பாண்ணாடை பசங்களுக்கு தெரியும் . இதுவே கோடம்பாக்கத்தல இருந்து மடிப்பாக்கம் போறவனுக்கு எப்படி தெரியும் .
உழுந்தா???? உழுந்துட்டு போறான் எனக்கென்ன? எவ்வளவு குருர புத்தி????

அதுவும் நைட்ல ஒரு பையன் மிதமான வேகத்துலதான் போனான். நைட்ல ஸ்பீட் பிரேக்கர் தெரியலை விழுந்துட்டான், அதுக்கு ஒரு தே/பை சொல்லறான், எதுக்குடா இவ்வளவு வேகம்னு? விழுந்தவனை கேட்கறான்... ஏன்டா ? ஸ்பிட்பிரேக் வச்சிங்கல்ல, ஒரு போர்டு வைங்கலேன்டா? வைக்கமாட்டான்க... ஏன் தெரியுமா? நம்ம புத்தி அப்படி எவனோதானே குடும்பத்தோட விழறான்? எனக்கென்ன????

இதே போல் ஒரு இளம் கணவன் மனைவி , ஒரு வயதானவர் என்று கேகே நகரில் விழுந்து வாரியதை நான் அறிவேன் நிறைய பேர் விழுந்து வாரி சில்லரை வாங்கி செல்கின்றார்கள்...

ஒரு ரோடு போடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த தெருவில் ஒரு கவுன்ஸ்லர் வீடு இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த இடத்தில் தேவையே இல்லாமல் ஒரு ஸ்பிட் பிரேக்கர் நிச்சயம் .

அதே தெருவில் ஒரு கல்வி தந்தை இருக்கிறார். அவருக்கு சென்னையில் நாலைந்து பொறியியல் கல்லூரி இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் வீட்டு வாசலில் லெப்ட்ல ஒரு ஸ்பீட் பிரேக்கர் ரைட்ல ஒரு ஸ்பீட் பிரேக்கர் வைத்து ரோடு போடுவார்கள். ரோடு போடற காண்ட்டிராக்டர் நாயி, அந்த கல்வி தந்தை தூக்கி போடுற 100 ரூபாய் காசுக்காக இவன்க மத்தவன்க தாலியை அறுப்பானுங்க....

சென்னையில் பல இடங்களில் மெயின் ரோடுகளில் பல இடங்களில் ஸ்பீட் பிரேக்கு இருக்கின்றது என்று அறிவிக்க எந்த அறிவிப்பு பலகையும் இல்லை.
அதுவும் மடிப்பாக்கத்துல நேத்து நைட்ட போய் நொந்துட்டேன்...


கவுன்ஸ்லர் வீட்டு வாசல்ல ஸ்பீட் பிரேக் வைத்து அந்த வீட்டைகடக்கும் வாகனம்கள், அவர் வீட்டு வாசல்ல ஸ்லோவா போனா அது மரியாதைன்னு, நினைச்சு வாழற சமுக கட்டமைப்புல நாம வாழறோம். இது எப்படி இருக்கு தெரியுமா? முன்னெல்லாம் சைக்கிள்ள லைட்டு இல்லாம போனா போலிஸ் ஸ்டேஷன் வாசல்ல இறங்கி நடந்து போய் அப்புறம் சைக்கிள் ஓட்டிக்கிட்டு போவனும். அத போல இது ரொம்ப கேனத்தனமா இருக்கு....

நாம் வசதி வாய்யுகளோடு வாழ்க்கை முறையில் மாறுதல் அடைந்து விட்டோம் என்ற நினைத்து கொண்டு இருக்கின்றோம். அப்படி நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இரக்கின்றோம் என்று அர்த்தம்.

இதைவிட குறுகலான சாலைகளையும் வலைவுகளையும் நான் ஆங்கில படத்தில் பார்த்து இருக்கிறேன். அங்கெல்லாம் ஒரு ஸ்பிட் பிரேக்கர் கூட நான் பார்த்து இல்லை அப்படியே இருந்தாலும் 200 மீட்டர் முன்பே அறிவிப்பு இருக்கும் என்பதையும் நாம் மறுக்க கூடாது.


எவ்வளவு சொன்னாலும் ரோட்டில் பாய் போட்டு குடும்பத்தோடு படு்த்து உறங்ககும் மக்கள் அதிகம் நிறைந்து இருக்கும் சமுககட்டமைப்பு நம்முடையது... கோபத்தை பிளாக் எழுதிதான் தீர்த்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது என்ன செய்ய????பத்தடிக்கு நேர் ரோட்டுல ஸ்பிட் பிரேக்கர் வைக்கறதுக்கு , ங்கோத்தா ஏன்டா ரோடு போடறீங்க? ரோடே போடாம இருக்கலாமே? ரோடும் குண்டும் குழியுமாக இருக்கும். தொண்டை விக்கிட்டு சாவகிடந்தாலும் பொறுமையா போவானுங்க இல்லை...???

அன்புடன் /ஜாக்கிசேகர்

ஓட்டு போடமறவாதீர்.....

17 comments:

 1. ஸ்பீட் பிரேக்கர்களுக்கு பல ஸ்பெசிஃபிகேஷன்கள் உண்டு. அதில் முக்கியமானது செங்குத்துத் தன்மை.

  இப்போது ஸ்பீட் பிரேக்கர்கள் படிக்கட்டு ரேஞ்சுக்கு இருக்கின்றன. அவ்வாறு இல்லாது, மெதுவாக குறைந்த அளவு டிகிரியில் எழும்பி லேசாக மறுபக்கம் அதே டிகிரியில் கீழிறங்க வேண்டும். அதன் நீளம் இதற்கேற்ப கணிசமாக இருக்க வேண்டும். அதன் மேல் சாய்வு கோடுகள் வெளிச்சத்தை ரிஃப்லெக்ட் செய்யும் பெயிண்ட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் வண்டியின் ஹெட் லைட்டுகளில் அவை தெரியும்.

  போர்டு வைப்பது மிக மிக அவசியம்.

  இதெல்லாம் செய்யாமல் இருந்தால் விபத்துகள் நிச்சயம்.

  பை தி வே நீங்கள் குறிப்பிட்ட அந்த கவுன்சிலரை யாராவது ரகசியமாக செருப்பாலடித்தால் அவர்களை மனதுக்குள் வாழ்த்துபவர்களும் அனேகம் பேர் இருப்பார்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 2. நியாயமான வார்த்தைங்க நீங்க சொன்னது..

  ஒரு போர்டு கூட இல்லாட்டி என்ன பண்றது ???

  ReplyDelete
 3. //குறுகலான சாலைகளையும் வலைவுகளையும் நான் ஆங்கில படத்தில் பார்த்து இருக்கிறேன். அங்கெல்லாம் ஒரு ஸ்பிட் பிரேக்கர் கூட நான் பார்த்து இல்லை அப்படியே இருந்தாலும் 200 மீட்டர் முன்பே அறிவிப்பு இருக்கும்//

  என்ன ஜாக்கி சார்... மொட்ட தலைக்கும் முழங்காழுக்கும் முடிச்சு போடுறீங்க! ரோட்ட பளபளன்னு வெச்சிருக்குற அவங்க எங்க... புதுசா ரோடு போட்டு அடுத்த ரெண்டு நாளுல குழி தோண்டுற நாம எங்க...!

  எல்லா நண்பர்களுக்கும் ஒரு தகவல் சொல்றேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒருமுறை ஓட்டு கேட்பதற்காக எங்க ஊர் பக்கமா வந்தாங்க. அவங்க கார்ல வர்றாங்க என்றதும் ரெயில்வே கேட்டுக்கு இருபுறமும் இருக்குற ஸ்பீட் பிரேக்கரை இடிச்சு... சமநிலைக்கு கொண்டு வந்துட்டாங்க. ஏன்னு கேட்டா... அம்மா வர்றாங்க. ரொம்ப குலுங்கிச்சின்னா அம்மாவுக்கு கோபம் வந்துடும்னு மேலிடத்துட இருந்து சொன்னதால இப்படி ஒரு முன்னேற்பாடு நடவடிக்கைனு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிங்க சொன்னாங்க. அதனால மடிப்பாக்ம், ராமாபுரம், நெசப்பாக்கம் உள்ளிட்ட ஏரியாவுக்கு ஒருமுறை அம்மாவையோ அல்லது ஐயாவையோ கார்ல வரச்சொன்னீங்கன்னா ரோடு சமநிலைக்கு வருவதுடன், புத்தம் புது ரோடும் போட்டுடுவாங்க...!

  ReplyDelete
 4. நல்லா சொன்னீங்கண்ணே! அட்லீஸ்ட் புலோரசன்ட் ஸ்டிக்கர் றாவது ஒட்டலாம். முட்ட போடுற
  கோழிக்குதானே வலி தெரியும்! விழந்தவனுக்கு தானே வயிதெரியும்..

  ReplyDelete
 5. நியாயமான கோபம் உங்களுடையது,தொடரட்டும்.

  ReplyDelete
 6. //ஏற்க்கனவே சென்னை சாலைகளில் இருக்கும் மேன்ஹொல்கள் எல்லாமே
  ஸ்பீட் பிரேக்கர்கள்தான்... அதனால் இது போன்ற ஸ்பிட் பிரேக்கர்கள் தேவையற்றது...//

  இது வார்த்தை. திருந்துவார்களான்னுதான் தெரியல. சூப்பர் பதிவு.

  ஸ்ரீ....

  ReplyDelete
 7. இதெல்லாம் பெங்களூரை கம்பேர் பண்ணினா தூசு மாமே!!!

  ஒரே ரோட்டில், அது கொஞ்சம் சின்னது என்ற ஒரே காசணத்தால் சின்ன சின்னதாய் ஒன்றல்ல ரெண்டல்ல ஏழு ஸ்பீட்பிரேக்கர்கள்!!!!

  பெரிய ஸ்பீட்பிரேக்கர் வைத்த பல மெய்ன் ரோட்களில் லைட் உண்டு அனால் எரியாது. இதனால் எனக்கு ஆக்இடெண்ட் ஆகி என் பெண் பார்க்கும் னிகழ்ச்சி ஒரு வாரம் தள்ளிப்போச்சு!!

  சென்னை போலன்றி எந்த ரோடும் நேராகப்பொய் நேராஅ வராது.

  ஒரு இடத்துக்கு போக ஒரு வழி, வர வேறு வழி. அதனால் செம குழப்பங்கள்

  ஆட்டோகாரர்களுக்கே எல்லா ஏரியாவும் தெரியாது!!

  ஒரு ரோட்டின் முனை ப்துவாக மூன்றாக மட்டுமே பிரியும், நாமும், லெஃப்ட் ரைட் நேர் என்று வழி சொல்வோம், இஙு, பல மெயின் ரோட்கள் நாலாக, ஐந்தாகப்பிரியும். நீங்கள் எப்படி வழி சொல்வீர்கள்???

  புதிதாக ஒரு இடத்துக்கு போனால் யார் வழி சொன்னாலும் புரியாடு. அதே பக்கம் செல்லும் யாரையாவது ஃபாலோ பண்ணினால் மட்டுமே உண்டு, அதுவும் பகல் வேளைகளில் தான். இரவில் மறுபடியும் வந்தால் வழி புரியாது!! ட்ராஃபிக் வேறு காட்டுத்தனமாக இருக்கும். ஸ்பீட்பிரேக்கர் மற்றும் குண்டு குழிகள் ஏராளம்.

  ஒரு மெயின் ரோட் ட்ராஃபிக்காக இருந்தால், சென்னை போல நினைத்து, பக்கத்து ரோட்டில் () நுழைந்து போகப்பார்த்தால் அது பல நேரங்களில் ஆக இருக்கும்!! மறுபடியும் திரும்பி வந்து சிஞலில் வெயுட் பண்ண வேண்டியது தான்.

  மழை வந்தால் அவ்வளவுதான், ரோட்டிலேயே சிலமணி நேரங்கள் வாழவேண்டும்

  பெங்களூரு ஊட்டி அல்ல. ஆனால் அதைவிட மோசமாக பல ரோடுகளும் சும்மா சள்ளின்னு ஏரும் இறங்கும். சில மெயின் ரோட்கள் __ இப்படி இல்லாமல் \ இருக்கும்! நேராக இல்லாமல் சாய்ந்து!!

  உலகிலேயே மோசமான பெங்களூரு தான்,

  சென்னை போலன்றி மெயின் ரோட்டை மக்கள் கடக்க எந்த வழியும் இல்லாமல் பாவம், வண்டிகள் இல்லாத நேரம் பார்த்து ரோட்டை கடப்ப வேகமாக ஓடுவார்கள்!!  ஆனால் சில் நல்ல விஷயம்,

  சென்னையைவிட பல பெரிய மேம்பாலங்களும் சப்வேக்களும் உள்ளது ஆனாலும் ஸ்டாலின் போல எந்த அரசியல்வாதியும் இங்கு பீற்றிக்கொள்வதில்லை.

  சில மேம்பாலம் மேல் சிக்னல் எல்லாம் இருக்கு! தென்னிந்தியாவிலேயே மிக நீளமான மேம்பாலம் 3 வருடங்களாக கட்டுகிறார்கள் 15 கிலோமீட்டர். ஆனால் அதை உலகிலேயே யாரும் இவ்வளவு மெதுவாக கட்டமாட்டார்கள். இதுவே சென்னை என்றால் ஒன்றரை வருடஙளில் முடித்தே விடுவார்கள்

  சைதாப்பேட்டையில் ஒரு பஸ்ஸாட்ட்பில் ஸ்டாலின் பேர் போட்டிருக்கு, அவர் அடை திறந்தாராமாம். பஸ் ஸ்டாப்களாஇ அரசாங்கம் திரக்காமல் வேறு யார்??இதில் கூட பப்ளிசிட்டி தேடும் நம்ம ஆட்கள் போலில்லாமல் நவீனமாக இருக்கும். ரோடில் சில பஸ் ஸ்டாப்கள் க/ண்ணாடி போட்டு கவர் பண்ணிருப்பாங்க, மழை காலத்திற்காக

  ReplyDelete
 8. உலகிலேயே மோசமான பெங்களூரு traffic & city building, planning, தான்,

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. (நம்ம ஊர்)ஸ்பீட் பிரேக்கர்கள் என்பது ”சாலை உபயோகிப்பவர்களின் மீதான கொடூர நகைச்சுவை” என்று சொல்லுவார்கள்.

  A cruel joke on road users.

  இது கேண்டிட் கேமரா நிகழ்ச்சி வகையறாவைச் சேர்ந்தது.யாரோ ஒருவரை எதுவாலாயோ பயமுறுத்தி
  திடுக்கிட வைத்து முட்டி சிராய்த்து
  கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள்.

  இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரசாங்கம்.

  நீங்கள் கூட ஒரு ஸ்பீட் பிரேக்கர் வைத்துள்ளீர்கள்.(படிக்க விடாமல் சோம்பல் முறிக்கும் ‘“சும்மா ஜாலிக்கு”)

  ReplyDelete
 11. என்னத்த சொல்லி என்னத்த ஆகப்போகுது :((((((((((
  எங்க அண்ணன் இருப்பது ராமாவரம் ஏரியாதான் :((((((((((((

  ஸ்பீட் பிரேக்கர் விடுங்க ஸ்பீட் குறைக்க ரோடின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை ஸ்பீட் குழி நோண்டி வைச்சிருக்காங்களே கேனப்பசங்க அங்கங்க என்ன செய்ய :((((((((((((

  ReplyDelete
 12. நன்றி டோண்டு சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...

  நீங்கள் சொல்வது போல் அந்த கவுன்ஸ்லர் எங்கிட்ட தனியா மாட்னான்னு வச்சிக்குங்க மத்தவங்க அடிக்கவானாம் நானே அடிச்சிடுவேன்...

  நன்றி
  ஜாக்கிசேகர்

  ReplyDelete
 13. நியாயமான வார்த்தைங்க நீங்க சொன்னது..

  ஒரு போர்டு கூட இல்லாட்டி என்ன பண்றது ???//

  நன்றி கடைக்குட்டி

  அப்புறம் உங்களுக்கும் வாழ்த்துக்கள்...இந்த வார தமிழராக தேர்வு செய்யப்பட்டதற்க்கு

  ReplyDelete
 14. என்ன ஜாக்கி சார்... மொட்ட தலைக்கும் முழங்காழுக்கும் முடிச்சு போடுறீங்க! ரோட்ட பளபளன்னு வெச்சிருக்குற அவங்க எங்க... புதுசா ரோடு போட்டு அடுத்த ரெண்டு நாளுல குழி தோண்டுற நாம எங்க...!///


  உண்மைதான் லொள்ளுசபா அப்படி கம்பேர் பண்ணியிருக்க கூடாதுதான் என்ன செய்ய...

  ரயில்வே கேட் அருகே பிரேக்கர் அவசியம் அதையே அவுங்களுக்காக சரி பண்ணாங்கன்னா அது கொஙசம் ஓவர்தானே

  ReplyDelete
 15. Chennai roadukke ippadi polambaringale,Bangalore Mysore roadla travel panni disk slip aagi 2 matham maruthuva manayil paduthu iruntheen...Chennai roadgalukku salaam pottu kumbidalaam

  ReplyDelete
 16. //பத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்கும் சென்னை உள்வட்டசாலைகள்...//

  I disagree.
  Half of the world's speed breakers are in India. Rest are in Bangalore!

  ReplyDelete
 17. உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

  என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-புத்தம்புதிய அழகிய templates
  3-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner