(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று போனவள் என்ன செய்யவாள்???
எல்லோருடைய காதலும் வெற்றி பெறுவதில்லை... அப்படி வெற்றிப் பெறாதவர்கள் யாரும் சோர்ந்துப் போய் விடுவதில்லை...அதன் பிறகு இருக்கும் சொற்ப காலத்தில் அந்த நினைவுகளோடு வாழ்பவர்களும் உண்டு.. அல்லது வேறு ஒருவரை மணந்து கொண்டுச் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்களும் உண்டு....
நான் கடலூரில் ஒரு பெண்ணைக் காதலித்தேன் அந்த பெண்ணின் பெயர் மாலதி... அந்த பெண் பணக்கார வீட்டு பெண். என் வீடு கூரை வீடு, அவள் கான்வென்ட் படிப்பு, நானோ அரசு உதவிப்பெறும் நடுநிலைப்பள்ளியில் படிப்பு...
அப்போ நான் ஒரு லூனா டிரைவர் அந்த வேலையை சொன்னால், அது ஒரு பெரிய கதை அதை அப்புறம் பார்க்கலாம் .தினமும் பஸ்ஸில் போகும் போது அந்த பெண்ணுக்கும் எனக்கும் பழக்கம்...எல்லா காலியான இருக்கைகளையும் விட்டு விட்டு என் பக்கத்தில் வந்து உட்காருவாள்.... எனக்கு கூச்சம் பிடுங்கி தின்னும் நம்ம பர்சனாலிட்டி பத்தி எனக்கு ரொம்பவே தெரியும்...
அப்ப அந்த பொண்ணு பிளஸ் ஒன் படிச்சா...தினமும் பள்ளி முடிந்து இவ்னிங் நான் போகும் பேருந்தில் வருவாள்.. கைபிடிக்கும் கம்பியில் ஐ லவ்யு எழுதி காண்பிப்பாள்.. அப்போது அந்தக் காதலை ஒத்துக்கொண்டு இருந்தாள், இருவர் வாழ்க்கையும் நரகமாகி இருக்கும்....
நான் என் வேலை ,படிப்பு ,நிலையானத் தொழில் இல்லாமைப் போன்ற காரணங்களால் அந்த காதலை நான் ஏற்றக்கொள்ளவில்லை... அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்த போது
“ஏய் ஆட்டோ என்று ஒரு குரல் கூப்பிட, எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட குரலாக இருந்ததால் நான் எனது ஆட்டோவை திரும்ப , எதிரே அவள்”
நான் ஆட்டோவில் கைலியுட்ன் உட்கார்ந்து இருக்கின்றேன். அவளோ மிக அழகாக உடை உடுத்தி் இருந்தாள், கூடவே அவள் நண்பர்களுடன்..ஒரு பத்து வினாடிகள்அந்த இடம் அமைதியாய் இருந்தது...நான் சட்டென அவள் பேசுவதற்க்கு முன் ஆட்டோவை பஸ்ட் கியர் போட்டு ஒரு குலுக்கி குலுக்கி வேகம் எடுத்து போய் வேகத்துடன் வெறும் ஆட்டோவை ஓட்டி நேராக எங்கள் கடலூர் சில்வர் பீச்சில் என் ஆட்டோவை நிறுத்தினேன்...
அரைமணிநேரம் என்னுள்ளே மனதுடன் ஒரு பனிப்போர் நடந்தது ..என் இயலாமை நினைத்து என்னை நானே திட்டிக்கொண்டேன்... அரைமணிநேரம் கழித்து நான் ஆட்டோ எடுத்த போது என் கண்களில் கண்ணீர்... என் புறங்கையால் துடைத்து விட்டு அப்போது நான் ஆட்டோ எடுத்தவன்தான் இன்று வரை அந்த நினைவுகள் என்னை பாதிக்கவில்லை...இப்போது அந்த நினைவுகளை நினைக்கையில் உதட்டோரம் மெல்லிய புன்னகை மட்டு்மே....அப்படி தோற்றக் காதல் கூட சுகம்தான் ஒரு சிலருக்கு....
nadine என்ற நெதர்லெண்ட் படத்தின் கதை இதுதான் ...
காதலில் தோற்று திருமணமே செய்து கொள்ளாத 40 வயது பெண்மணி தனது பழையக் காதலனை ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் பார்க்கின்றாள்... அவன் குழந்தையுடன் பொருள்வாங்க வந்து இருக்கின்றான். அவன் தன் ஒன்றரை வயது குழந்தை சாமை அறிமுகப்டுத்துகின்றான்... அவள் பொருள் வாங்கி அவனிடம் விடை பெற்று போகும் போது சட்டென சாத்தான் மனதில் குரல் கொடுக்க திரும்பவும் உள்ளே போய் அந்த குழந்தையை கடத்திக்கொண்டு வந்து விடுகின்றாள்....
குழந்தை கடத்திக்கொண்டு வந்தாகி விட்டது ஆனால் குழந்தை வளர்த்து பழக்கம் இல்லாதவள்... அந்த குழந்தை அழ அவள் துடிக்கின்றாள்.... அவளை போலீஸ் வலை வீசி தேடுகின்றது.. அவள் அந்த குழந்தையை வைத்துக்கொண்டு நாய் படாத பாடுப் படுகின்றாள்... வெவ்வேறு ஊர்களுக்கு காரில் பயணம் செய்து மறைந்து வாழ்கிறாள்...
அவள் போலீஸில் பிடிப்பட்டாளா?
அவள் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தாளா?
என்பதை படத்தை டவுன்லோடு செய்து பாருங்கள்....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இந்த படத்தில் nadine என்ற கதாபாத்திரத்துக்கு மூன்று ஒரே சாயல் கொண்ட பெண்களை தேர்ந்து எடுத்து நடிக்க வைத்து இருப்பார்...இயக்குனர்Erik de Bruyn..
உணர்வுகளை மட்டுமே வைத்து கதையை நகர்த்துவதற்க்கு சாமர்த்தியம் வேண்டும்... அதை நன்றாகவே செய்து இருக்கின்றார்...
குழந்தையை காரில் கடத்திக்கொண்டு போகும் போது குழந்தை அழ அதை சமாதானம் செய்ய தெரியாமல் நேஷ்னல் ஹைவேசில் காரை நிறுத்தி...வெளியே வந்து தன் இயலாமையை நினைத்து சத்தம் போட்டு கத்துவது ரொம்ப அற்புதமான காட்சி இது....
தனிமையும் குழந்தை இல்லாத வேதனையையும் ஒரு பெண்ணின் பார்வையில் எவ்வளவு அழகாக சொல்லி இருப்பார்....Director:
Erik de Bruyn
இந்த படத்தின் இயக்குனர் என்னை போலவே விருப்ப பாடம் சோசியாலஜி படித்தவர்....
குழந்தையை கடற்கரையில் தொலைத்து விட்டு அவள்(nadine)கதறும் கதறல் இருக்கேஅந்த நடிப்புக்காகவே விருது கொடுக்கலாம்...
படம் வெளியான ஆண்டு 2007....
இந்த படத்தின் டிரைலர் பார்க்கhttp://www.moviestrailer.org/nadine-movie-trailer.html இங்கே சென்று கண்டு களிக்கவும்...
அந்த படத்தின் மேலாதிக்க தகவல் பெற..http://www.nadinethemovie.com/
Director:
Erik de Bruyn
Writers:
Gwen Eckhaus (scenario)
Erik de Bruyn (scenario)
Release Date:
25 October 2007 (Netherlands) more
Genre:
Drama
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
இதே கதையை ஷ்யாம், சந்தியா நடிப்பில் வந்த படத்தில் .. வரும்ம்ம்ம்
ReplyDeleteஅண்ணே... வந்தாச்சு... படிச்சாச்சு...
ReplyDeleteஆக்சன் படம் போட்டு "அடிக்குறீங்கோ"...
காதல் படம் போட்டு "காட்டுறீங்கோ"...
திரில்லர் படம் போட்டு "பயப்படுத்துறீங்கோ"...(பிளாகிலே இருக்கிற உங்க படத்தை சொல்லவில்லை...சரியா..!!!)
இந்த படங்களுக்கெல்லாம் அறிமுகம் தாறீங்கோ..... நல்லதுதான்....
அதனாலே ஒரு சின்ன ரெகுவஸ்து...
அப்படியே சிறுவர்களை பெரியவர்களாக்கும் கலை பொக்கிசங்களான அலெக்ஸ்சான்றா, சிராக்கோ, அண்டர் கவர் போன்ற அயல்தேசத்து அபிமான சுந்தரிகளின் அறிவியல் பூர்வமான படங்களையும் கொஞ்சம் அறிமுக படுத்துவீங்களா... இதெல்லாம் நான் படிச்சு பாசான ஓல்ட் சிலபஸ், கொஞ்சம் புது சிலபஸ் வேணும் அதுக்கு தான்...
புதுமையான கதையா தான் இருக்கு!
ReplyDeleteதமிழ் சினிமாகாரங்க யாரும் பார்க்கல போல இன்னும்!
//காதலில் தோற்று திருமணமே செய்து கொள்ளாத 40 வயது //
ReplyDeleteகாதலனை கைப்பிடித்தால்... காதல் ஜெயிக்குமா! இந்த வார்த்தை பிரயோகம் சரியெனப்படவில்லை.
காதலித்த காலத்தை நினைத்துப் பார்த்தால்... மகிழ்வாக தான் இருக்கவேண்டும். கசப்பு சுரக்கக்கூடாது. சுரந்தால்... அதில் பல கோளாறுகள் இருப்பதாக அர்த்தம்.
நல்ல அறிமுகம் ஜாக்கி. டவுன்லோடு செய்திடவேண்டியதுதான்.
ReplyDeleteநன்றி
இந்த படம் தமிழில் கொஞ்சம் மாற்றங்களுடன்
ReplyDeleteவந்துயிருக்கு அந்த படம் பேரு...
"தூண்டில்"
எங்க இருந்துதான் இந்த மாதுரி படம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கிறதோ .
ReplyDeleteஅது சரி உங்களுக்கு இப்ப வேலை கிடைத்துவிட்டதா ??
இப்போது அந்த நினைவுகளை நினைக்கையில் உதட்டோரம் மெல்லிய புன்னகை மட்டு்மே....அப்படி தோற்றக் காதல் கூட சுகம்தான் ஒரு சிலருக்கு....
ReplyDeleteஎல்லோருக்கும் ,..
காதலில் ஜெயித்த எல்லோருமே ,வாழ்கையில் ஜெயிப்பதில்லை..
இதே கதையை ஷ்யாம், சந்தியா நடிப்பில் வந்த படத்தில் .. வரும்ம்ம்ம்-// அப்படியா ராமன் நான் அந்த படத்தை பார்க்கவில்லை..இருப்ினும் தகவலுக்கு நன்றி
ReplyDeleteஅலெக்ஸ்சான்றா, சிராக்கோ, அண்டர் கவர் போன்ற அயல்தேசத்து அபிமான சுந்தரிகளின் அறிவியல் பூர்வமான படங்களையும் கொஞ்சம் அறிமுக படுத்துவீங்களா... இதெல்லாம் நான் படிச்சு பாசான ஓல்ட் சிலபஸ், கொஞ்சம் புது சிலபஸ் வேணும் அதுக்கு தான்...//
ReplyDeleteநைனா எனக்கு சிராகோ படம் வேனும் உன்கிட்ட இருக்கா?
புதுமையான கதையா தான் இருக்கு!
ReplyDeleteதமிழ் சினிமாகாரங்க யாரும் பார்க்கல போல இன்னும்!//
தூண்டில்னு படம் வந்துடுத்தான் தலை..
காதலனை கைப்பிடித்தால்... காதல் ஜெயிக்குமா! இந்த வார்த்தை பிரயோகம் சரியெனப்படவில்லை.
ReplyDeleteகாதலித்த காலத்தை நினைத்துப் பார்த்தால்... மகிழ்வாக தான் இருக்கவேண்டும். கசப்பு சுரக்கக்கூடாது. சுரந்தால்... அதில் பல கோளாறுகள் இருப்பதாக அர்த்தம்.//
நன்றி அது தங்கள் கருத்து அவ்வளவே
நல்ல அறிமுகம் ஜாக்கி. டவுன்லோடு செய்திடவேண்டியதுதான்.
ReplyDeleteநன்றி
நன்றி மங்களுர் சிவா
இந்த படம் தமிழில் கொஞ்சம் மாற்றங்களுடன்
ReplyDeleteவந்துயிருக்கு அந்த படம் பேரு...
"தூண்டில்"
நன்றி கலை தகவலு்க்கு
எங்க இருந்துதான் இந்த மாதுரி படம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கிறதோ .
ReplyDeleteஅது சரி உங்களுக்கு இப்ப வேலை கிடைத்துவிட்டதா ??//
இல்லை ராஜராஜன் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கேன்
காதலில் ஜெயித்த எல்லோருமே ,வாழ்கையில் ஜெயிப்பதில்லை..//
ReplyDeleteஉண்மை பேரரசன் ஆனால் நீங்கள் சொல்லும் கருத்தை முழுவதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை நன்றி