(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப்கான் பழங்குடி மக்களும்...


திரைக்கதையை இந்த படத்தினை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்...இந்த படமும் மிகச்சிறந்த படங்களின் வரிசையில் வந்த படம்..
ஒரே ஒரு இரணுவ டாங்கியும், 5 பேரையும் வைத்து மிச்சிறப்பாக விறுவிறுப்பாக கதை சொல்ல முடியுமா? முடியும் என்று நிருபித்து இருக்கின்றார்கள்...

இலங்கை ராணுவம் என்பது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு படை அவர்களுக்கு எது தேவை என்றாலும் உலக நாடுகளிடம் கண்ணீர் விட்டு அழுது சாதித்து.. எந்த ராணுவ தளவாடங்களையும் உடனே பெற்றுக்கொள்ள முடியும்.

இராணுவ செலவினங்களுக்கு கடனாக பக்கத்து நாடுகளில் நிதி உதவி பெற்று போர் புரிய முடியும், எல்லா வற்றையும் விட அடிபட்டபோர் வீரர்களுக்கு, சரியான மருத்துவ உதவிகளை செய்ய முடியும். ஆனால், புலிகள் அப்படி அல்ல... அவர்கள் பொருளாதரம் புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பிய விஷயம்... அவர்களுக்கு அடிப்பட்டால் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் திண்டாடினார்கள், முக்கிய நெடுஞ்சாலைகள், எல்லாம் முடிவைத்து அவர்களை முற்றுகை நடத்தினர். அவர்களுக்கு ஏதாவது ஒரே ஒர நாட்டின் அதரவு வெளிப்படையாக கிடைத்து இருந்தால் கூட இந்த ஈழ போரின் முடிவு வேறாக இருந்து இருக்கும்.

எளியாரை வலியார் துன்புறுத்திய கதையாக எம்மக்களை நடைபினங்களாக ஆக்கி அதுவும் சொந்த நாட்டு மக்களையே குண்டு போட்டு சாகடித்தார்கள்.. அனால் புலிகள் புத்திசாலிகள் அதனால்தான் முப்படை வைத்து கடந்த 12 வருடங்கள் ஆட்சி புரிந்தார்கள் . தமிழர்கள் எப்போதுமே புத்திசாலிகள் அதுதான் மத்த சமுகத்து மக்களுக்கு நம் மீதான பொறாமையும் கூட.....

இதே போல் எளியார் வலியார் கதைதான் இந்த பீஸ்ட் படத்தின் கதை ...

ரஷ்யா ஆப்கான் மேல் போர் தொடுத்து அந்த படிப்பறிவு இல்லா மக்களை, விளிம்பு நிலையில் பாலைவணத்தில் மண் வீட்டில் வாசம் செய்யும் மக்களை தன் ராணுவ டாங்கிகளால் துளைத்து எடுக்கின்றது, பல பேர் மரணம் அடைகின்றனர், பலர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பக்கத்து மலைதொடர்களில் மறைந்து உயிரை காப்பாற்றிக்கொள்கின்றார்கள்....

ஒரே ஒரு ராணுவ டாங்கி அதன் கமாண்டர் கொடுரமானவன், அவன் கீழே 4 பேர் அவர்கள் தப்பி ஓடிய மக்களை சாகடிக்கின்றனர் அதில் அப்பாவி மக்கள் கொல்லபடுவதை அந்த வீரர்களில் பலருக்கு உடன்பாடு இல்லை .. ஆனாலும் அந்த கொடுரன் சொல்வதை கேட்டு ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்....

இதில் மலை பகுதியில் வாழ்ந்த அந்த படிப்பறிவி்ல்லா, ஆப்கன் மக்கள் தங்கள் கையில் இருக்கும் சிறு ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவற்றை வைத்துக்கொண்டு அந்த ராணுவ டாங்கியை துரத்துகின்றனர்....

அவர்கள் அந்த துரத்தலில் ராணுவ டாங்கியை அழித்தார்களா? என்பதை வழக்கம் போல் சின்ன திரையிலோ அல்லது வெண்திரையிலோ பார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ஒரு சோவியத் ராணுவ டாங்கியில் 5 பேர் மற்றும் ஆப்கான் பழங்குடியினர் கையில் கோலையும் கம்பையும் வைத்து்கொண்டு அந்த டாங்கியை துரத்துவதும் அதனை சுவாரஸ்யமாக இந்தளவுக்கு திரைக்கதை அமைத்து சுவாரஸ்யப்படுத்தியது அருமையிலும் அருமை....

அந்த டாங்கி பல குடிகளை கெடுத்தது அதனை அழிக்க பெண்கள் எல்லாம் கிளம்பி அதனை தேடி ஓடிக்கொண்டே இருப்பதும் அருமையிலும் அருமை...


அந்த டாங்கி மேல் அந்த பெண்களுக்கு இருக்கும் கோபமும், அதனை துரத்தி ஓடியபடியே இருப்பதும் அவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்த அந்த சனியன் டாங்கியையும், அதில் உள்ள வீரர்களையும் ஒழித்த கட்ட வெறியோடு அலைவது என்பது சாது மீராண்டல் காடு கொள்ளாது என்பதை நிருபிக்கும் ரகம்


இந்த படம் 1988 இல் வெளி வந்த படம் , வாழ்வில் தவறவிடக்கூடாத படம்.


சோவியத் சோல்ஜர் மிக அற்புதமாக காய் நகர்த்த இந்த அப்பாவி ஆப்கான் மக்கள் அதில் மாட்டிக்கொள்வது பரிதாபத்தை வரவழைக்கும் காட்சிகள்....

இந்த படத்தில் டாங்கி காமாண்டராக நடித்த இருப்பவர் கொடுரத்தின் உச்சம் இது போன்ற ஆட்கள் கையில் அதிகாரம் கொடுத்த விட்டால் அவர்கள் கிழே வேலை செய்பவர்களின் கதி அதோ கதிதான்.....

மண் வீட்டில் இருப்பவர்களிடம் தன் மிப்பெரிய ஆயுத பலத்தை அந்த அப்பாவி பொது மக்கள் மீது பிரயோகிப்பது எவ்வளவு மிருகத்தனமானது என்பதை படம் பார்க்கும் அனைவருக்கும் புரியும் படி சொல்லி இருக்கின்றார்கள்...

ஒரு அளவுக்கு மேல் எந்த கொடுங்கோலனும் இந்த பூமியில் நிம்மதியாய் வாழ்ந்தது இல்லை அதே போல் அவர்கள் சாவுகூட ரொம்ப கோரமானதாக இருக்கும் என்பதையும் இதன் இயக்குநர் வலியுறுந்துகின்றார்...

கடைசிவரை போர் அடிக்காமல் சுவாரஸ்யம் குறையாமல் அமைத்த திரைக்கதைதான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது மிகையில்லை


உமர் முக்தார் படத்துக்கு பிறகு முழுக்க முழுக்க பாலைவணத்தில் எடுக்கப்பட்ட படம் இது..

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஈரானில் எடுக்கப்பட்டது....


படத்தின் முதல் காட்சியில் மிக அமைதியாக அந்த கிராமத்தை காட்டி விட்டு அடுத்த சில நொடிகளில் அந்த கிராமத்தை டாங்கிவைத்து தரைமட்டமாக்குவது கொடுரத்தின் உச்சம் ..

பீஸ்ட் என்றால் கொடுரமான விலங்கு என்று பொருள் நீங்கள் படம் பார்த்தால் அந்த வார்த்தைக்கான அர்த்ததை உணர்வீர்கள்

Director:
Kevin Reynolds
Writer:
William Mastrosimone (play) (screenplay)
Contact:
View company contact information for The Beast of War on IMDbPro.
Release Date:
29 September 1988 (West Germany) more
Genre:
Drama | History | War more
Tagline:
War brings out the beast in every man. more
Plot:
During the war in Afghanistan a Soviet tank crew commanded by a tyrannical officer find themselves lost... more |
Plot Keywords:
Tank | Battle | Village | Commander | 1980s
more
Awards:
1 win more

அன்புடன்/ஜாக்கிசேகர்

தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....
நன்றி

29 comments:

 1. என்னாச்சி உங்களுக்கு?
  நிறைய பட விமர்சனம் வருது...
  பகிர்ந்ததற்க்கு நன்றிகள்

  ReplyDelete
 2. முதல் ஓட்டு நான்தான் போட்டேன்..!

  படம் இதுவரைக்கும் பார்க்கலே.. இனிமே பார்க்குறேன்.. டிவிடியை கொடுத்தா..?!!!

  ReplyDelete
 3. இல்லை கலை நிறைய படங்கள் எழுத வேண்டும் என்று இருந்தேன் சோம்பேறிதனம் இதற்க்கு மேலும் நான் எழுதவில்லை நல்ல படங்களை மறந்து விட வாய்ப்பு உள்ளது அதனால்..தான்

  ReplyDelete
 4. பல நல்ல படங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதற்கு நன்றி :-)

  ReplyDelete
 5. முதல் ஓட்டு நான்தான் போட்டேன்..!

  படம் இதுவரைக்கும் பார்க்கலே.. இனிமே பார்க்குறேன்.. டிவிடியை கொடுத்தா..?!!!-//

  நன்றி உண்மைதமிழன் ஆனால் படங்கள் என்னிடம் இல்லை...

  ReplyDelete
 6. பல நல்ல படங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதற்கு நன்றி :-)//

  நன்றி யாத்திரீகன் இன்னும் நிறைய இருக்கின்றது நண்பரே

  ReplyDelete
 7. நானும் இந்த படத்தை பார்த்து இருக்கேனு நினைக்கிறேன் :)


  டாங்கியை ஒரு முதியவரின் மேல் ஏற்றி கொள்வார்கள் ..!

  குடிநீரில் விஷம் கலப்பது..

  பின்பு அதே குடிநீரை குடித்து வீரர்கள் இறப்பது என்று இயக்குனர் விறு விறுப்பக எடுத்து இருப்பார்

  நானும் வியந்த படம் !!

  ReplyDelete
 8. நான் பார்த்து வியந்த படங்களில் ஒன்று ஜாக்கி.. படத்தில் முதலில் ஒரு ஆப்கனை டாங்க் ஏற்றிக் கொல்வதும் பாதிப்படத்தில் டாங்கில் ஏதோ சத்தம் வர, அவர் என்ன என்று பார்த்து, செத்தவனின் கையை எடுப்பதும் உறைய வைக்கும் காட்சிகள். பகிர்தலுக்கு நன்றி..

  ReplyDelete
 9. நானும் இந்த படத்தை பார்த்து இருக்கேனு நினைக்கிறேன் :)


  டாங்கியை ஒரு முதியவரின் மேல் ஏற்றி கொள்வார்கள் ..!

  குடிநீரில் விஷம் கலப்பது..

  பின்பு அதே குடிநீரை குடித்து வீரர்கள் இறப்பது என்று இயக்குனர் விறு விறுப்பக எடுத்து இருப்பார்

  நானும் வியந்த படம் !!//

  மின்னல் நீங்க நினைக்க எல்லாம் வேண்டாம் அதே படம்தான்
  நன்றி

  ReplyDelete
 10. நான் பார்த்து வியந்த படங்களில் ஒன்று ஜாக்கி.. படத்தில் முதலில் ஒரு ஆப்கனை டாங்க் ஏற்றிக் கொல்வதும் பாதிப்படத்தில் டாங்கில் ஏதோ சத்தம் வர, அவர் என்ன என்று பார்த்து, செத்தவனின் கையை எடுப்பதும் உறைய வைக்கும் காட்சிகள். பகிர்தலுக்கு நன்றி..//

  ஆம் வெண்பூ அந்த காட்சி நிச்சயம் படம் பார்பவர்களுக்கு பகிர் ரகம்தான்

  ReplyDelete
 11. Once again Thanks Jaki for tell about this film.

  ReplyDelete
 12. ஆஹா வெண்பூ, மின்னுது மின்னல் சொல்றத எல்லாம் பார்த்தால் ரொம்ப கொடூரமா இருக்கும் போல இருக்கே :((

  ReplyDelete
 13. புஸ்தக விமர்சணங்களும் முயற்சி செய்யுங்கள் நண்பரே


  ஓட்டியாச்சு நண்பா

  ReplyDelete
 14. தமிழ் படமும் வரும்.

  ReplyDelete
 15. நான் இந்த படம் பார்த்து இருக்கிறேன்.. இதில் டாங்கியை ஒருவர் மீது ஏற்றுவது தான் கொடூரமாக இருக்கும் ..விறுவிறுப்பான படம்

  ReplyDelete
 16. சிறப்பு தலைவரே...

  உங்கள் சொந்த சரக்கை அதிகம் கலந்து எழுதினால் சுவாரஸ்யம் கூடும் என்பது உறுதி.

  பட ஆர்வலர்கள் உங்கள் வலையைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். வருவார்கள்.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 17. //ஏதாவது ஒரே ஒர நாட்டின் அதரவு வெளிப்படையாக கிடைத்து இருந்தால் கூட இந்த ஈழ போரின் முடிவு வேறாக இருந்து இருக்கும்.//

  ரொம்ப கஷ்டமா இருக்கு.......

  உங்கள் எழுத்து அருமை. பட விமர்சனத்தின் இடையில் இது போன்ற விசயம் சொல்வதால் இன்னும் அதிகமானவரை சென்றடைகிறது.

  நன்றி.

  ReplyDelete
 18. விமர்சனம் சூப்பர்... இப்பதான் படிச்சேன்... ரொம்ப நாளைக்கு முன்னாடி ஸ்டார் மூவிஸ்ல பாத்தேன்... எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் அது....

  ReplyDelete
 19. Once again Thanks Jaki for tell about this film.//

  நன்றி புதுவை சிவா மற்றும் மங்களுர் சிவா

  ReplyDelete
 20. புஸ்தக விமர்சணங்களும் முயற்சி செய்யுங்கள் நண்பரே


  ஓட்டியாச்சு நண்பா//

  நன்றி ஜமால் முயற்ச்சிக்கின்றேன்

  ReplyDelete
 21. தமிழ் படமும் வரும்.//

  நிச்சயமாக புகழினி

  ReplyDelete
 22. நான் இந்த படம் பார்த்து இருக்கிறேன்.. இதில் டாங்கியை ஒருவர் மீது ஏற்றுவது தான் கொடூரமாக இருக்கும் ..விறுவிறுப்பான படம்//

  ஆமாம் கிரி

  ReplyDelete
 23. சிறப்பு தலைவரே...

  உங்கள் சொந்த சரக்கை அதிகம் கலந்து எழுதினால் சுவாரஸ்யம் கூடும் என்பது உறுதி.

  பட ஆர்வலர்கள் உங்கள் வலையைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். வருவார்கள்.

  அன்பு நித்யன்//

  நன்றி நித்யா தங்கள் வாழ்த்துக்கு

  ReplyDelete
 24. //ஏதாவது ஒரே ஒர நாட்டின் அதரவு வெளிப்படையாக கிடைத்து இருந்தால் கூட இந்த ஈழ போரின் முடிவு வேறாக இருந்து இருக்கும்.//

  ரொம்ப கஷ்டமா இருக்கு.......

  உங்கள் எழுத்து அருமை. பட விமர்சனத்தின் இடையில் இது போன்ற விசயம் சொல்வதால் இன்னும் அதிகமானவரை சென்றடைகிறது.


  நன்றி என்பக்கம்

  ReplyDelete
 25. விமர்சனம் சூப்பர்... இப்பதான் படிச்சேன்... ரொம்ப நாளைக்கு முன்னாடி ஸ்டார் மூவிஸ்ல பாத்தேன்... எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் அது....//

  நன்றி கனேஷ்

  ReplyDelete
 26. தல .. இன்னைக்கு காலைல இந்த படம் பாத்தேன்... முடிஞ்சதும், இன்னும் அந்த பாலைவனத்தில கூட சேர்ந்து டாங்கை சேர்ந்து துரத்திகிட்டு இருக்குற ஒரு உணர்வு... தஞ்சம் கேட்டது பரம எதிரியாய் இருந்தாலும் குடுப்போம்னு அந்த அப்கான் சொன்னதும் , என்ன ஒரு உன்னதமான கலாச்சாரம்னு சொல்லுவான் பாருங்க.. மிகச்சரி, பிற நாடுகளின் கலாச்சார,வரலாற்று பிண்ணனி தெரியாமல் தலையை கொடுக்கும் பெரியண்ணங்கள் அமைதியாய் இருந்தாே பிரச்சனைகள் சிரிதாய் இருந்தே சரியாயிருக்கும்..

  ReplyDelete
 27. மிக மிக சந்தோஷம் நண்பரே... ஏதோ படத்தை பாத்தமா போனமா இல்லாம நீங்க அந்த படத்தில் உணர்ந்த விஷயத்தை என்னோட பகிர்ந்துக்கினிங்க பாருங்க... நீங்க ரொம்ப கிரேட் நன்றி...யாத்ரீகன்

  ReplyDelete
 28. அட என்ன பாஸ் பெரிய வார்த்தையெல்லாம்.. திரைப்பட இரசிகன் நான்... ஒரு நல்ல திரைப்படம் அறிமுகப்படுத்தியிரு்க்ீங்க (ஒன்னு இல்ல..பல.. அதுல இப்பதான் ஒன்னு பாத்துருக்ேன்.. ;-) .. உங்க கிட்ட கட்டாயம் அந்த சந்ோஷத்தை பகிர்ந்துகனும்னு நெனச்ேன்.. :-)

  ReplyDelete
 29. இந்தப்படம் மிகச்சிறந்த திரைக்கதையுடன் கூடிய விறுவிறுப்பான படம் .இப்படத்தினை ௨௦௦௦மாவது ஆண்டில் முதன்முறையாக பார்த்தேன்.இப்போது நான்காவது முறையாக பார்க்கிறேன்.தொன்மையான கலாசாரம் மிக்க ஆப்கன் மக்களை தலிபான்கள் ,ரஷ்ய ராணுவம் சிதைத்தது.பற்றாக்குறைக்கு அமெரிக்கா நேட்டோவின் போர்வை அணிந்து சூறையாடியது.பாவம் ஆப்கானிஸ்தான் மக்கள் .

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner