அதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து...

(படங்களை கிளிக்கி பெரிதாக பார்த்துக்கொள்ளுங்கள்)


மிகச்சரியாக அரை மணி நேரத்துக்கு முன் நந்தம்பாக்கத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன்... ஏற்க்கெனவே அகதி வாழ்க்கை வாழ்பவர்க்ள் சென்னை டிரேட் சென்ட்ர் எதிரில் இருந்த மரங்களில், மரத்துக்கு மரம் தூளி கட்டி குழந்தைகளை தூங்கச்செய்து கொண்டு இருந்தார்கள்.

சிலர் பசியிலோ அல்லது உண்ட களப்பிலோ மர நிழல்களின் புண்ணியத்தால் இளைப்பாறிக்கொண்டு இருந்தார்கள். தூரத்தில் நான் என் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருக்கும் போதே நான் அநத் கரும்புகையை கண்டேன், முதலில் ஏதோ குப்பை எறிகின்றது என்றே எண்ணினேன்...

சில பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு ஓடுவதை பார்த்ததுமே ஏதோ வீடு எறி்கின்றது என்று நினைத்தேன். அதே போல் நிகழ்ந்து விட்டது... நாம் சில பதிவுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் பதிவர்க்ளுக்கு நினைவில் இருக்கலாம் . அதே மியோட் ஆஸ்பிட்டல், அதே அடையார் பாலம், அதன் அருகில் ஒரு வாரத்துக்கு முன் குடிசைகள் எரிந்து சாம்பல் ஆயின... அந்த இடத்தில் இருந்து சரியாக 100 மீட்டரில் அதே ஆற்று ஓரம் வாழ்ந்த மக்களின் குடிசைகள்இன்ற மதியம் 2 மணி வெயிலில் சொக்கபானை போல் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தன. வாகனத்தில் போனவர்கள் எல்லாம் பாலத்தில் நிறுத்தி வேடிக்கை பார்க்க, சிலர் பயர் சர்விஸ்க்கு கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள் அதற்க்குள் அந்த இடத்தில் டிராபிக் ஜம் ஆக ஆரம்பித்தது....


வீட்டில் இருந்த தட்டுமுட்டு சமான்களை எல்லாம் தம் வீட்டில் தீ பரவும் முன் முன்னேற்பாடாக அடையார் ஆற்றில் எடுத்து கொண்டு பல குடும்பத்தினர் ஓடினர்... சிலர் பாலத்துக்கு மேலேயே செய்வது அறியாது கைபிசைந்து நின்றனர்....

அங்கு தலையில் கைவைத்து இருந்த பெண்மணியிடம் பேசிய போது தொடர்ந்து மூன்று நாட்களாக வீடுக்ள் திடிர் திடிர் என்று எரிவதாகவும்...இது யாரோ செய்கின்ற சதி என்று கோபத்துடன் சொன்னார்...

பயர் சர்வீஸ் வருவதற்க்குள் அங்கு எரிந்த தீ மட்டுப்டுத்தப்பட்டது, அங்கு இருந்த மக்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து விட்டு தலையில் கை வைத்து நின்று கொண்டு இருந்தனர்..

இந்த பதிவு எழுதும் இப்போது கூட அவர்கள் கைகள் பதட்டத்தில் நடுங்கி கொண்டுதான் இருக்கும்... அவர்கள் படபடப்பு இன்று இரவு வரை குறையாது...

இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஏன் இப்போது மட்டும் அடிக்கடி நிகழ்கின்றது என்று தெரியவில்லை என்றும்,

“ இதை செய்யறவன் மட்டும் என்கைல மாட்னா ங்கோத்தா அவன் கைமாதான்” என்று ஒரு பெரிசு கோபத்தில் புலம்பியது.....

எப்படியும் மூன்று குடிசைகளாவது எரிந்து இருக்கும்...அகதி வாழ்க்கையில் அந்த குடும்பத்தினரும் சேர்ந்து விட்டார்கள்.. இப்படி நெருப்பு வைத்து பலர் குடி கெடுக்கும் அந்த மனிதாபிமானம் இல்லாத நாய்க்கு தெரியுமா? இடப்பெயர்வின் வலியை????

நான் காலையில் இருந்து சாப்பிடாததால் தலை கீர் என்று சுற்ற நான் அந்த இடம் விட்டு நகர்ந்தேன்....நான் அந்த இடம் விட்டு நகரும் வரை பயர் சர்வீஸ் வாகனம் வரவில்லை....

அன்புடன்/நிழற்படம்/ஜாக்கிசேகர்

15 comments:

  1. அகதி வாழ்க்கையில் அந்த குடும்பத்தினரும் சேர்ந்து விட்டார்கள்\\

    மிகவும் வேதனையாக இருந்தது இந்த வரிகளை படிக்கையில் ...

    ReplyDelete
  2. நண்பரே..

    இன்று மதியம் நாம் பேசிக்கொண்டிருக்கும் வரையில், “சீக்கிரம் போய் சாப்பிடுங்க” என்றுதானே சொல்லிக்கொண்டிருந்தேன்.

    என்ன கொடுமைங்க இது?

    விளிம்பு நிலை மக்கள் திசை மாறிச் செல்வதற்கு இதைப்போன்ற நிகழ்வுகளும் காரணம் என்றால் அது மிகையில்லை.

    வருத்தத்துடன் நித்யன்

    ReplyDelete
  3. அகதி வாழ்க்கையில் அந்த குடும்பத்தினரும் சேர்ந்து விட்டார்கள்\\

    மிகவும் வேதனையாக இருந்தது இந்த வரிகளை படிக்கையில் ...\\

    என்ன செய்வது ஜமால் மிக வருந்ததக்க நிகழ்வு

    ReplyDelete
  4. இன்று மதியம் நாம் பேசிக்கொண்டிருக்கும் வரையில், “சீக்கிரம் போய் சாப்பிடுங்க” என்றுதானே சொல்லிக்கொண்டிருந்தேன்.

    உங்களை விட்டு வந்த பத்தாவது நிமிடம் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்ன செய்ய?

    ReplyDelete
  5. உடனுக்குடன் பதிவு செய்தமைக்கு நன்றி ஜாக்கி........

    ReplyDelete
  6. நன்றி செந்தழில் ரவி அது நம் கடமை ஆயிற்றே

    ReplyDelete
  7. /*இப்படி நெருப்பு வைத்து பலர் குடி கெடுக்கும் அந்த மனிதாபிமானம் இல்லாத நாய்க்கு தெரியுமா? இடப்பெயர்வின் வலியை????*/

    அது மட்டுமா அண்ணே....
    சிறுக சிறுக சேர்த்த பணம், அரண்மனையில் வைத்து வளர்க்க முடியாவிட்டாலும் ஆசையாய் பிள்ளைக்கு வாங்கிய பொருள்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு மட்டுமாவது அணிய பாதுகாத்த உடுப்புகள் அத்தனையும் அழியும் போது கண்ணில் வருவது நீராக மட்டும் இராது....

    ReplyDelete
  8. அது மட்டுமா அண்ணே....
    சிறுக சிறுக சேர்த்த பணம், அரண்மனையில் வைத்து வளர்க்க முடியாவிட்டாலும் ஆசையாய் பிள்ளைக்கு வாங்கிய பொருள்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு மட்டுமாவது அணிய பாதுகாத்த உடுப்புகள் அத்தனையும் அழியும் போது கண்ணில் வருவது நீராக மட்டும் இராது....---//


    மிகச்சரியாக சொன்னாய் நைனா நன்றி வேதனையை பகிர்ந்ததுக்கு

    ReplyDelete
  9. சென்னையில் ஆற்றோரக் குடிசைப் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இதையடுத்து இம்மக்கள் சுமார் 20 25 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒக்கியம் துரைப்பாக்கம் செம்மஞ்சேரி பகுதிக்கு இடம் பெயர்க்கப்படுகின்றனர். நகர் நெடுக உள்ள ஆற்றோரம், கால்வாய் ஓரம் பறக்கும் நெடுஞ்சாலைப் பாலத்தை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ள அரசு குடிசை வாசிகளை அகற்றி வருகிறது என்பது இத்துடன் சேர்ந்து கவனிக்க வேண்டிய தகவல். இது குறித்து வர இருக்கும் குமுதம் ஓ பக்கங்களில் எழுதியிருக்கிறேன். பல வருடங்கள் முன்னை செண்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக முர்மார்க்கெட்டை காலி செய்து தரும்படி கேடபோது வியாபாரிகள் மறுத்தார்கள். பின்னர் முர்மார்க்கேட்டில் தீ விபத்து ஏற்பட்டு அது சாம்பலாகியதும் அந்த இடத்தில் இப்போதைய புற நகர் ரயில் நிலையம் கட்டப்பட்டது.

    அன்புடன் ஞாநி

    ReplyDelete
  10. மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    பட்ட காலிலே படும்.கெட்ட குடியே கெடும் எனும் சொல் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  11. பல வருடங்கள் முன்னை செண்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக முர்மார்க்கெட்டை காலி செய்து தரும்படி கேடபோது வியாபாரிகள் மறுத்தார்கள். பின்னர் முர்மார்க்கேட்டில் தீ விபத்து ஏற்பட்டு அது சாம்பலாகியதும் அந்த இடத்தில் இப்போதைய புற நகர் ரயில் நிலையம் கட்டப்பட்டது.-//

    ஞானி நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் உண்மை....

    நன்றி ஞானி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  12. மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    பட்ட காலிலே படும்.கெட்ட குடியே கெடும் எனும் சொல் நினைவிற்கு வருகிறது.//

    உண்மை ராஜா

    ReplyDelete
  13. கடவுளே.........!//

    என்ன செய்ய ராஜ்???

    ReplyDelete
  14. ///

    பல வருடங்கள் முன்னை செண்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக முர்மார்க்கெட்டை காலி செய்து தரும்படி கேடபோது வியாபாரிகள் மறுத்தார்கள். பின்னர் முர்மார்க்கேட்டில் தீ விபத்து ஏற்பட்டு அது சாம்பலாகியதும் அந்த இடத்தில் இப்போதைய புற நகர் ரயில் நிலையம் கட்டப்பட்டது

    ////

    இதிலும் கூட இவ்வளவு உள்குத்து வேலைகள் உள்ளனவா...?

    ஞானி சொல்வதைப் பார்த்தால் அப்பக்கம் போவதற்கே பயமாக இருக்கிறதே.

    நித்யன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner