(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெரிதானது..பாகம்/20.எமாற்றுதலில் பல வழிகள் இருந்தாலும், இன்றளவும் நம்பிக்கை துரோகத்தால் ஏற்படும் வலியானது அது வார்த்தையாலும்,எழுத்தாலும் வர்னிக்கமுடியாத ஒன்று... புலித்தலைவர் பிரபாகரன், மிகப்பெரிய நம்பிக்கை வைத்த கருனா சிங்கள ஆதரவாளனாக மாறியது.

இலங்கையில் கொல்லப்படுவது தமிழர்கள் அதுவும் நமது தொப்புள்கொடி உறவுகள் என்று தெரிந்தே இலங்கைக்கு ஆயுத உதவி செய்த, இந்திய அரசு தமிழக மக்களுக்கு செய்தமிகப்பெரிய நம்பிக்கை துரோகம்.
சத்யம்கம்யூட்டர் ராஜு அவரை நம்பி இருந்த கம்பெனிக்கு செய்த நம்பிக்கை துரோகம்,
கடைசிவரை பதவி அனுபவித்து காங்கிரஸ் விட்டு வெளி வந்த பாமக அதனையே தேர்தலில் எதிர்த்த நம்பி்க்கை துரோகம்,
காதலன் காதலிக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்,
கணவனுக்கு மனைவி செய்யும் நம்பிக்கை துரோகம்,
நண்பன் என்று வீட்டில் நுழைந்து விட்டு நண்பன் மனைவியை பெண்டாலும் நம்பிக்கை துரோகம்,
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் வளர்த்து விட்டமுதலாளியையே பிசினசில் அழிக்கும் நம்பிக்கை துரோகம், இப்படி துரோகங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

நம்பி்க்கை துரோகம் செய்பவர்களின் ஒரே எண்ணம் தான் நலமாய் இருக்க எந்த காரியத்தையும் செய்ய துணியும் எண்ணம்தான்... அப்படி முழுக்க முழுக்க நம்பிக்கை துரோகத்தை மையபடுத்தி எடுத்த இந்தி படம்தான் ஜானிகதார். ஒரு நல்ல திரில்லிங் ஸ்டோரி பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது என்று குறைபட்டுகொள்பவராக இருந்தால், உடனே இந்த படத்தின் டிவிடியை வாங்கி பார்த்து ரசித்துக்கொள்ளுங்கள்.

உயிர்வாழ தகுதியுடையவர்கள் மட்டுமே உயிர்வாழ்வாழ்வர்கள் என்ற கருத்தை முன்வைத்த ஒன்லைன் ஆர்டர்தான் கதை...

5 பார்ட்னர்கள் அவர்கள் செய்யும் தொழில் நேர்மையான தொழில் அல்ல.. அவர்களின் தலைவனுக்கு போன் வருகின்றது இரண்டரை கோடி மதிப்பிலான பொருள் பெங்களுருவில் இருப்பதாகவும் முன்று நாளில் வந்து வாங்கி செல்லும் படி சொல்ல,அவர்கள் ஆளுக்கு 50 லட்சம் ஷேர் போட்டு அதாவது இரண்டரை கோடி பணம் போட்டு மும்பையில் இருந்து பெங்களுருக்கு ரயிலில் வந்து பணத்தை கொடுத்து அந்த இரண்டரை கோடி மதிப்பிலான பொருளை அதே ரயி்லில் மும்பை எடுத்து சென்று பிறகு அதனை விற்று பங்கு போட்டு கொள்வதாக பிளான். பணம் பெங்களுருக்கு ரயிலில் எடுத்து செல்லும் போதே பணம் களவாடபடுகின்றது...

பணத்தை விட்டவர்கள் எல்லாம் சாதாரன ஆளா, எல்லாம் எமகாதக பசங்கள், அந்த பணத்தை அவர்கள் திரும்ப பெற்றர்ர்களா? ஹுஸ் த பிளாக் ஷுப் எல்லாம் நொடிக்கு நொடி சஸ்பென்ஸ் உடன் வெண்திரையில் காண்க...

படத்தை பற்றி சுவாரஸ்யங்கள் சில.....


நொடிக்கு நொடி படப்படப்பை ஏற்படுத்தும் திரைக்கதை... அதற்க்கு ஏற்றார் போல் இயல்பான கோணங்கள் கேமரா கோணங்கள்.

ஒரு திரில்லர் லோ பட்ஜெட் படம் மும்பையில் எடுத்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடித்து சொல்லலாம் .

படத்தினை தயாரித்து இருப்பது அட்லாப்ஸ் நிறுவனம்.

படத்தின் முதல் காட்சியில், அவள் அவனை எங்கு இருக்கிறாள் என்று செல்போனில் கேட்கின்றாள், அதற்க்கு அவன் என்ன கலர் உடை அணிந்து இருக்கின்றாய்? என்று கேட்க அவள் பிங்க் கலர் சல்வார் என்று சொல்ல, திரும்பவும் கலர் என்று கேட்க, அவள் பிரா கல்ர் என்று நினைத்து பிளாக் என்று சொல்ல, அவனும் அதைதான் கேட்டு இருப்பான். சட்டென மேடம் நான் இப்ப நீங்க வந்துக்குனு இருக்கற பஸ் கலரை கேட்டேன் என்று டாகால்ட்டி பண்ண , இப்படி இளமை கொண்டாட்டமாக ஆரம்பிக்கும் படம் போக போக ரத்தகளரியாக மாறுவது யாரும் எதிர்பாராத சஸ்பென்ஸ்.டான் குழுவின் தலைவராக தர்மேந்திரா நடித்து இருப்பதும் அவர் மனைவி பேசிய பேச்சை எப்போதும் டேப்பில் கேட்டு கொண்டு இருக்கும் கேரக்டராக அற்புதமாக நடித்து இருக்கின்றார். ரொம்ப நாள் கழித்து தர்மேந்திரா சிங்கம் சீறுகின்றது...

அதே போல் தர்மேந்திரா விக்ரமிடம் சிவாவை ரயி்லில் நான் ஏற்றி விட்டதாக சொல்லவில்லையே என்ற கேட்டு விட்டு ஒரு பேன் சுற்றும் சவுன்ட் மட்டும் கேட்டபடி சில நொடிகள் நகம் காட்சி அருமை....விக்ரம் கேரக்டரில் நடித்து இருக்கும் புதுமுகம் அருமையாக அற்புதமாக செய்து இருக்கின்றார்.கதையை கொஞ்சம் விவரித்தாள் கூட சஸ்பென்ஸ் உடைந்து விடும் என்பதால் எந்த காட்சியையும் என்னால் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை.

இந்த படத்தின் இன்டெர்வெல் காட்சியை படம் பார்த்த யாராலும் மறக்க முடியாது.

படத்தின் எந்த இடத்திலும் லாஜிக் மீறல் கொஞ்சமும் இருக்காது... அந்த அளவுக் அற்புதமான திரைக்கதை இயல்பான வசனங்கள் மிகை இல்லாத நடிப்பு... இது போல் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகின்றது....என்ற நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள்...

இதற்க்கு முன் இதன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் ,ஏக் ஹசினா ஹை என்ற படத்தை இயக்கி இருக்கின்றார். அதற்க்கு தயாரிப்பு ராம் கோபால் வர்மா... இவர் 45நிமிட ராமன் ராகவ் என்ற டாக்கமென்ட்ரி படத்தை இயக்கி இருக்கின்றார்.

இந்த படத்தின் ஒளிப்திவு முரளிதரன் அவார்
இதன் இசை சங்கர் எசான் லாய்... எப்படி ரகுமானுக்கு “‘இருவர்” படம் சவாலோ அதே போல் இவர்களுக்கு இந்த படம்...
அந்த பணம் டிரெயினில் இருந்து எடுத்து வ்ந்ததும்“ ஹெய் ஜானி” என்று தொடங்கும் பாடலின் துள்ளல்இசை அற்புதம்.

அதே போல் 70களில் வந்த படத்தை வைத்து சில காட்சிகள் வருவதால் படம் முழுக்க பழைய படங்களின் இசை படம் முழுவதும் இருக்கும் படி பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தி பெயர் போட்டு 5 பேரையும் காட்டி விட்டு அதன் குறியீடாக 5 மீன்கள் மேல்“ த கேங்” என்ற எழுத்து போடுவதும் அதன் மேல் சிவப்பு சாயம் பூசும் ஒரு காட்சி போதும் படத்தை பற்றிய ஒப்பீடுக்கு....

படம் முதலில் பிளாக் அன்ட் ஒயிட்டில் காட்டி ரத்தம் தெரிக்கும் போது கலராக மாற்றுவதிலேயே படத்தினை வித்யாசமாக எடுத்து இருக்கின்றார்கள் என்பதற்க்கு ஒரு உதாரணம்

Cast: Dharmendra, Rimi Sen, Zakir Hussain
Music Director: Shankar-ehsaan-loy
Director: Sriram Raghavan

Year: 2007
Genre: Hindi

அன்புடன் /ஜாக்கிசேகர்

பாத்தே தீர வேண்டியபடங்கள் இத்தோடு 20பது வந்து விட்டது அதே போல் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்கள் போல் பாக்கவேண்டிய படங்கள் என்ற கேட்டகிரியிலும் தொடர்ந்து சினிமா விமர்சனம் எழுத உத்தேசுத்துள்ளேன். தொடர்ந்து உற்சாகபடுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்....

நன்றி வணக்கம்


குறிப்பு / எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போடமறவாதீர்

6 comments:

 1. //எமாற்றுதலில் பல வழிகள் இருந்தாலும், இன்றளவும் நம்பிக்கை துரோகத்தால் ஏற்படும் வலியானது அது வார்த்தையாலும்,எழுத்தாலும் வர்னிக்கமுடியாத ஒன்று... புலித்தலைவர் பிரபாகரன், மிகப்பெரிய நம்பிக்கை வைத்த கருனா சிங்கள ஆதரவாளனாக மாறியது.//

  நாமதான் இப்படி புலம்பிகிட்டு திரியறோம்!சில தமிழ் இணையம் பக்கம் போய் பார்த்தோமுன்னா தமிழர்களா இருந்துகிட்டு எப்படி இவர்களால் இப்படி எழுதவும் சிந்திக்கவும் முடியுதுன்னு வருத்தம் மட்டுமே வருகிறது.ஒருவேளை அவர்கள்தான் மனநிலைகளை சரியாகப் பிரதிபலிக்கிறார்களோ என்ற சந்தேகம் கூட வந்து விடுகிறது.அதற்கு தகுந்த மாதிரி நம்ம அரசியல் அண்ணாத்தைகளின் ஆட்டமும் அவர்களுக்கு தோதுவாப் போகுது.

  (ஆமா!நீங்க யாரு:)ஜாக்கி கைல காமிரா அல்லவா வச்சுகிட்டு சுத்துவாரு!எழுத்தின் முதிர்வு முகத்தில் தெரிகிறதோ?)

  ReplyDelete
 2. நன்றி ராஜநடராஜன்,சிலர் அப்படித்தான் எழுதுகின்றார்கன் என்ன செய்ய...

  எவ்வளவு நாள்தான் கைல கேமாரா இருக்குறா மாதிரி போஸ் கொடுக்கறது??? சொல்லுங்க... கை வலிக்காது??? அதான்

  ReplyDelete
 3. பார்த்திருக்கேன்........சுவாரசியமான படம்......தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்க

  ReplyDelete
 4. பார்த்திருக்கேன்........சுவாரசியமான படம்......தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்க--//

  நன்றி ராஜ் இந்த படம் பார்த்துஅதிலிருந்து வெளிவர பத்து நிமிடங்கள் ஆயிற்று...

  ReplyDelete
 5. ம்ம்ம்ம்.. நல்ல விமர்சனம், கதையின் முக்கிய முடிச்சுகளை சொல்லாமல் பார்க்கும் ஆவலை தூண்டி இருக்கீங்க ஜாக்கி.. நன்றி.

  ReplyDelete
 6. பட அறிமுகம் மிக அருமை. கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner