( பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா, நான்)
சிறு வயதில்அதாவது 3ம் வகுப்பிலிருந்து 7வதுபடிக்கும் வரை தினத்தந்தியில் தொடர்ந்து கன்னித்தீவு ,சாணிக்கியன் சொல், இந்த இரண்டையும் படிக்காமல் வளர்ந்த தமிழ் சமுகமே இல்லை எனலாம் .
அதன் பிறகுகொஞ்சம் மீசை முடி எட்டிபார்க்கும் வயதில் , ராஜேஷ்குமார் அதன் பிறகு சுபா,பட்டுகோட்டை பிரபாகர், தமிழ்வாணன்,அதன் பிறகு வேறுதளத்துக்கு செல்ல ஜெயகாந்தன், சுஜாதா,பாலகுமாரன் என்று அது வேறு தனி லிஸ்ட்...
20 வருடங்களுக்கு முன் பருவ வயதில் ராஜேஷ்குமார்,சுபா,பட்டுக்கோட்டை பிரபாகர் வாசிக்காதவர்கள் இருக்க முடியாது என்பேன்....
ரஜேஷ்குமார் ,சுபா,பிகேபி போன்றவர்கள் கிரைமில் அந்த காலகட்டத்தில் பின்னி பெடலெடுத்தார்கள்... இப்போது இருந்தாலும், டிவி வெகுஜன வாசகர்களை சற்றே குறைத்து விட்டது என்று சொல்வதை விவாதம் பண்ணாமல் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...
அந்த நேரத்தில் பாக்கெட் நாவல் ஆசிரியர் அசோகன் அவர்கள் முயற்ச்சியால் தென்மாவட்டத்து இளைஞர்களிடம் பாக்கெட் நாவல் கதைகள் ஒரு வாசக தாக்கத்தை ஏற்படுத்தின. இது போன்ற புத்தகங்கள் வரிக்கு வரி வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தின... ஒரு கட்டத்தில் எல்லா இளைஞர் கூட்டமும் பாக்கெட் நாவல், ஏ நாவல் டைம், உல்லாச ஊஞ்சல், கையுமாக திரிந்தார்கள்...
நம்ம அப்பன் ஆத்தா ஊட்டிக்காண்வெண்டிலியா படித்தார்கள்??? ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், சிட்னி ஷெல்டன் எல்லாம் படிக்கறதுக்கு???
இயல்பாய் அந்த வயதில் மிகவும் ரசித்து படிக்க உந்தும் கதைகள் கிரைம் இன்வெஸ்ட்டிங் அடிப்படை கதைகள்தான் என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது....
மிக முக்கியமாக விவேக் ரூபலா ,நரேன் வைஜெயந்தி,பரத் சுசீலா,கனேஷ் வசந்த் போண்ற கதாபாத்திரங்களோடு கற்பனையில் வாழ்ந்து இருக்கிறேன்....
விவேக் ரூபலா சரவனபவன் போல் சைவம் என்றால், நரேன் வைஜெயந்தி, பரத் சுசீலா, கனேஷ் வசந்த் போன்ற கதாபாத்திரங்கள் முனியான்டி விலாஸ் ரேஞ்சுக்கு இளமை துள்ளலோடு இருக்கும்....
அதன் பிறகு பெரும் போராட்டத்த்திற்க்கு பிறகு (இப்போதும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றேன்) சீரியல்களில் கேமரா அசிஸ்டென்ட் வேலை...
அப்போது மெட்டி ஒலி திருமருகன் இயக்கி , சன் டிவியில் ஒளிபரப்பான பஞ்சவர்ணகிளி சீரியலின் கதை வசனகர்த்தாக்கள்எழுத்தாளர் சுபாஅவர்கள்...
பால்ய பருவத்தில் உலகத்தை தங்கள் எழுத்தின் மூலம் உலகத்தை கற்றறுக்கொடுத்தவர்களை , வித்லவ் சுபா அவர்களை நேரில் பார்ப்போம் என்று கனவிலும் நான் நினைத்தது இல்லை... மிக முக்கியமாக சென்னை என்ற நகரத்தை அவர்கள் விவரனை மூலமே தெரிந்து கொண்டேன்... அப்போது ஈகிள் ஐ, ராமதாஸ்,ஜான் சுந்தர்,இன்ஸ்பெக்டர் பால்ராஜ், என்று அவர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களை பேசி சிலாகிக்க அவர்களுக்கு என்னை மிகவும் படித்து போனது...எனக்கு எழுத்தாளர் சுபாவிடம் எழுத்தில் பிடித்த விஷயம், தத்ரூப சண்டைகாட்சிகளை எழுத்தில் எழுதியது அவர்கள்தான்... அப்புறம் அந்த இளமை துள்ளல் நடை...
பிகேபி யிடம் எனக்கு பிடித்ததும் ,அதே இளமை துள்ளல்தான்,அவரின் தொட்டால் தொடரும் நாவலின் அன்பு வாசகன் நான் ... இப்போதும் சுசீலா டி சர்டின் வாசகங்களுக்கு நான் அடிமை...
ஏன் எனது தளத்தின் பெயர் கூட பிகேபி சார் ஏ நாவல் டைமில் எழுதிய ஒர அரசியல் நையாண்டிக்கதையின் தலைப்புதான்
பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும் சட்டென இந்த தலைப்புதான் எனக்கு தளம் தொடங்கும் போது ஞாபகம் வந்தது.
ஆனால் பிகேபியை ஒரே ஒரு முறைதான் நான் சந்தித்தேன்...அது கூட இந்த போட்டோ எடுக்கும் போது சுரேஷ் சார் தங்கை திருமணத்தில் ...
ஆனால் இன்றளவும் என்மேல் பிரியம் வைத்து இருப்பவர் பாலகிருஷ்ணன் சார்தான், சுரேஷ் சார் கொஞ்சம் மூடி டைப்.... இந்த படம் சுரேஷ்சார் தங்கை திருமணத்தின் போது எடுத்தது என்று நினைக்கின்றேன். அந்த திருமணம் அடையாரில் நடந்தது என்று எண்ணுகிறேன். சரியாக நினைவில்லை... அதற்க்கு நான் அப்போது வீடியோ கேமராமேனாக போய் கல்யாணத்தை வீடியோ எடுத்தேன்... ஆனந்த விகடன் போட்டோகிராபர் பொன்காசிராஜன் எடுத்த போட்டோ இது.....இப்போதும் சுபா சாருக்கு போன் செய்தால் சொல்லுங்க தனுசு என்று சொல்லுவார்... அதன் பிறகு சென்னையில் நடந்த ஒரு சில உலகபடவிழாக்கள் தவிர்த்து எல்லா உலக படவிழாக்களிலும் நான் தவறாமல் சந்தித்து உரையாடி இருக்கின்றேன்....
கனாகண்டேன் படம் ரிலீஸ் ஆனதும் எழுத்தாளர் சுபாவிடமும், அந்த படத்தை இயக்கிய கேவி ஆனந் சாரிடமும் ஒரு மணிநேரம் அந்த படத்தின் பிளஸ் மைனஸ்களை பேசி இருக்கின்றேன்...
இப்படி சிறுவயதில் வியப்பாய் பார்த்வர்களை சமீபத்தில் அவர்களின் ஆத்மா ஹவுசில் வேறு விஷயமாக சந்தித்தேன்... யோசித்து பாருங்கள் ஆத்மா ஹவுஸ் கேனால்பேங் ரோடு ஆடையார் என்பது அப்போது அது பெரிய விஷயம்....
இப்போது நான் அந்த வீட்டில் போய் காபி சாப்பிட்டு விட்டு பாலா சாரிடம் இரண்டு புத்தகங்களையும் பரிசாக பெற்றுக்கொண்டு வந்தேன்...
இந்த புகைபடம் எடுத்து ஆறு, எழு வருடங்கள் இருக்கலாம், அதன் பிறகு சுபா சார் பல தளங்களுக்கு சென்று விட்டார்கள் இப்போதும், அப்போது பார்த்து போலவே கிஞ்சித்தும் கர்வம் இல்லாமல் இருக்கின்றார்கள்....அவர்களிடம் நான் கற்றுக்கொண்டது மனிதாபிமானத்தையும்,புகழ்போதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இயல்பாய் இருப்பதையும்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....
நன்றி
ஜாக்கி,
ReplyDeleteநான் கூட இப்பத்தான் ஒரு பதிவில பிகேபி கேரக்டரை முடிச்சுப் போட்டு தமிழ் மணத்திலே சேர்த்தேன்! அவரோட கதையில ஒரு இளமைத் துள்ளல் கொஞ்சம் தூக்கல் தான், As you said, especially சுசீலாவின் டி-ஷர்ட் வாசகங்கள்!, அப்புறம் அந்த ‘தொட்டால் தொடரும்’ நாவல், அதில வருகிற ’காதலென்பது’!!! என் கல்லூரிப் பருவத்திலே அது ஒரு HOT TOPIC!!!
அன்புடன் சங்கா
நன்றி சங்கர்,நல்ல நினைவு கூறல்...
ReplyDeleteகாதல் என்பது வாயில் பிரஷ்வுடன் கனவு காண்பது என்று அத்தியாத்துக்கு அத்யாயம் வந்து கொண்டே இருக்கும்
:))))
ReplyDeleteஇப்பத்தான் சங்கா பதிவுல பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன். சுபாவோட இராணுவம் சம்மந்தப்பட்ட கதைகள் விரும்பி வாசித்தது உண்டு. அப்புறம் மறக்க முடியாத ”தூண்டில் கயிறு” தொடர்!
present sir
ReplyDeleteசுபாவும், பிகேபியும் காமெடியில் பின்னி பெடலெடுப்பார்கள்
ReplyDeleteராஜேஸ்குமாருக்கு அது வராது!
பிகேபியின் பனியன் வாசகம் இன்றைக்கும் பிரசித்தம்!
சுபாவின் முருகேஷ் கேரக்டர் இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்!
நல்லாஇருக்குணே.. பழைய ஞாபகங்கள் வருது!
ReplyDeleteநான் கூட நினைத்ததுண்டு, விவேக் ரூபலா,நரேன் வைஜெயந்தி, பரத் சுசீலா, போன்ற கதாபாத்திரங்களை நாம் ஏன் தொடர் படம் எடுக்க கூடாது என்று! கண்டிப்பாக பாண்ட், டை ஹார்ட் அளவு தமிழில் கண்டிப்பாக வெற்றி பெறும்.. கேரளா நாட்டில் கூட துப்பரியும் கதைகள், சீரீஸ் கதைகள் அதிகமாக வெற்றி பெருகின்றன. நாம் ஏன் அதுபோல சிந்திக்கவும், முயற்ச்சிசெய்யவும் இல்லை?
//பாலா சாரிடம் இருண்டு புத்தகங்களையும் பரிசாக பெற்றுக்கொண்டு வந்தேன்...//
ReplyDeleteஜாக்கி..தயவு செய்து பப்ளிஷ் செய்யும் முன் ஒரு தடவை வாசித்து பிழை திருத்தவும்...
//பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும் //
ReplyDeleteஅண்ணாத்தே! இதோட காப்பி இருந்தால் கொடுத்து உதவ முடியுமா?
அப்புறம், மீசையில்லாமலும் ஆளு அழகாத்தான் ஓய் இருக்கேள்! :-)
// லக்கிலுக் said...
ReplyDelete//பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும் //
அண்ணாத்தே! இதோட காப்பி இருந்தால் கொடுத்து உதவ முடியுமா//
ஒரு வருசம் முன்னமேயே இதைப்பத்தி பதிவுல ஏத்தி இதை நீங்க கேட்டு யாரோ கொடுக்கறேன்னு சொன்ன ஞாபகம் இருக்குது. ஆனா யார்ன்னு தான் நினைவுக்கு வரலை :)
-சென்ஷி
\\மிக முக்கியமாக விவேக் ரூபலா ,நரேன் வைஜெயந்தி,பரத் சுசீலா,கனேஷ் வசந்த் போண்ற கதாபாத்திரங்களோடு கற்பனையில் வாழ்ந்து இருக்கிறேன்....\\
ReplyDeleteமறக்க இயலாதது ...
நரேன் வைஜ் தான் எனக்கு மிகவும் பிடித்தது ...
ஜாக்கி, ரிடையர் ஆன கேஸ் மாதிரி ஒரு வாரமா மலரும் நினைவுகளாக ஒட்டற...
ReplyDeleteரூட்ட மாத்து...
கேமரா வெளிய எடு...
இன்னொரு "கர்ணன்" உனக்குள் ஒளிந்திருக்கார்...
All The Best....
ராஜேஷ்குமார், பிகேபி, சுபா நாவல்கள் விரும்பி படித்ததுண்டு.
ReplyDeleteநல்ல நினைவுகூறல்.
போட்டோல மீசை இல்லாம ச்சும்மா கலக்கலா இருக்கிங்க ஜாக்கி
:))))))))))
அன்புடன்
மங்களூர் சிவா
:))))
ReplyDeleteஇப்பத்தான் சங்கா பதிவுல பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன். சுபாவோட இராணுவம் சம்மந்தப்பட்ட கதைகள் விரும்பி வாசித்தது உண்டு. அப்புறம் மறக்க முடியாத ”தூண்டில் கயிறு” தொடர்!-//
உண்மை சென்ஷி நன்றி
present sir//
ReplyDeleteயோவ் நைனா உன் பிரசன்ட் சாருக்காகவே டெய்லி பத்து பதிவு போடலாம்னு இருக்கேன்
சுபாவும், பிகேபியும் காமெடியில் பின்னி பெடலெடுப்பார்கள்
ReplyDeleteராஜேஸ்குமாருக்கு அது வராது!
பிகேபியின் பனியன் வாசகம் இன்றைக்கும் பிரசித்தம்!
சுபாவின் முருகேஷ் கேரக்டர் இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்!//
ஆம் வால்பையன் நீங்கள் சொல்வது உண்மை
நல்லாஇருக்குணே.. பழைய ஞாபகங்கள் வருது!
ReplyDeleteநான் கூட நினைத்ததுண்டு, விவேக் ரூபலா,நரேன் வைஜெயந்தி, பரத் சுசீலா, போன்ற கதாபாத்திரங்களை நாம் ஏன் தொடர் படம் எடுக்க கூடாது என்று! கண்டிப்பாக பாண்ட், டை ஹார்ட் அளவு தமிழில் கண்டிப்பாக வெற்றி பெறும்.. கேரளா நாட்டில் கூட துப்பரியும் கதைகள், சீரீஸ் கதைகள் அதிகமாக வெற்றி பெருகின்றன. நாம் ஏன் அதுபோல சிந்திக்கவும், முயற்ச்சிசெய்யவும் இல்லை?//
முயற்ச்சி செய்த படங்களை நாம் முடக்கி விட்டோம் கலை...
மம்முட்டி நடித்த மௌனம் சம்மதம், குருதிப்புனல்,கலைஞன், போன்ற படங்களை உதாணமாக சொல்லலாம்
//பாலா சாரிடம் இருண்டு புத்தகங்களையும் பரிசாக பெற்றுக்கொண்டு வந்தேன்...//
ReplyDeleteஜாக்கி..தயவு செய்து பப்ளிஷ் செய்யும் முன் ஒரு தடவை வாசித்து பிழை திருத்தவும்...//
நன்றி தன்டோரா எப்படி படிச்சாலும் எப்படியாவது வந்துடுது..
//பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும் //
ReplyDeleteஅண்ணாத்தே! இதோட காப்பி இருந்தால் கொடுத்து உதவ முடியுமா?
அப்புறம், மீசையில்லாமலும் ஆளு அழகாத்தான் ஓய் இருக்கேள்! :-)//
லக்கி இந் புத்தகத்தை இப்பவும் தேடிக்கிட்ட இருக்கேன்... அந்த அட்டைபடம் கூட நினைவில் இருக்கு.. ஒரு துப்பாக்கி வச்சிகிட்டு நிக்கறமாதிரி கார்ட்டுன் படம் அது..
மீசை வாழ்த்துக்கு நன்றி ஓய்...
\\மிக முக்கியமாக விவேக் ரூபலா ,நரேன் வைஜெயந்தி,பரத் சுசீலா,கனேஷ் வசந்த் போண்ற கதாபாத்திரங்களோடு கற்பனையில் வாழ்ந்து இருக்கிறேன்....\\
ReplyDeleteமறக்க இயலாதது ...
நரேன் வைஜ் தான் எனக்கு மிகவும் பிடித்தது ...// எனக்கும் ஜமால்
அதைவிட நரேன் சீன்டல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஜாக்கி, ரிடையர் ஆன கேஸ் மாதிரி ஒரு வாரமா மலரும் நினைவுகளாக ஒட்டற...
ReplyDeleteகண்டிப்பா நன்றி சூர்யா
போட்டோல மீசை இல்லாம ச்சும்மா கலக்கலா இருக்கிங்க ஜாக்கி//
ReplyDeleteநன்றி மங்களுர் சிவா
எனக்கும் ராஜேஷ்குமார், சுபா, பி.கே.பி ரொம்ப பிடிக்கும்.. அவர்களுடன் உங்களுக்கு அறிமுகம் உண்டு என்பது குறித்து கண்டிப்பாகப் பெருமைப்படலாம் நீங்க..
ReplyDelete//
ReplyDeleteவால்பையன் said...
சுபாவின் முருகேஷ் கேரக்டர் இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்!
//
அதுலயும் அவனோட அத்தைகளை மறக்க முடியுமா?? :))))
மற்றொரு அருமையான பதிவு. வாசிப்பனுபவத்தை நினைவுபடுத்தியது. கலக்குங்க.
ReplyDeleteஸ்ரீ....
அயன் படம் பார்த்த போது, 'சுபா'வின் அனைத்து ஹீரோக்களையும் ஒன்றாகப் பார்த்தது போல் இருந்தது. 'நரேன்'-சூர்யா, வைஜ் - தமன்னா, 'முருகேசன்' - நண்டு, டெல்லி - கருணாஸ், அப்புறம் அந்த அத்தை வீடுகளின் ஒன்றான கலைராணியின் வீடு.. இப்படிப் படம் முழுவதும் என் பால்ய நாட்களின் நாயகர்களை, கதாபாத்திரங்களை திரையில் கண்ட போது, எனக்கு பயங்கர மகிழ்ச்சி. நானும் செல்வா, முருகேசன் பற்றி கடந்த ஒரு வாரமாக எழுதலாம் என்று நினைக்கிறேன், ஆனால் நீங்கள் அவர்களை படைத்த ப்ரம்மாகளைப் பற்றியே எழுதி விட்டீர்கள்.
ReplyDeleteபழைய நினைவுகளைக் கிளறி விட்ட பதிவு. சென்னையில் சாவி நடத்திய தங்கச் சாவி பரிசு விழாவில் சுபாவை (பாலா) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் என் கட்டுரை ஒன்று விகடனில் பரிசு பெற்றிருந்தது. என் எல்லா கதைகளும் என்னை விட்டுப் போக மனமின்றி அனைத்துப் பத்திரிக்கைகளிலிருந்தும் திரும்பி வந்து கொண்டிருந்தன! சாவியில் சில சிரிப்பு துணுக்குகள், 'கடந்த வார இதழில் வந்த ... கதை மிக அருமை' போன்ற கடிதங்கள்!
ReplyDeleteசுபாவிடம் ஒரு பத்து நிமிடங்கள் பேசும் வாய்ப்பு இந்த விழாவில் அமைந்தது. மிக தயக்கத்துடன் தான் நெருங்கினேன். கணேச மூர்த்தி என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். மிக அழகாக அமைதியாக பேசினார். 'சார், உங்க கதையைப் பத்தி என் கடிதம் கடந்த வார சாவியில் வந்திருக்கு!' என்று சொன்னேன். அவர் உடனே, 'பார்த்தேன். சுபாவின் கதை பழைய கள், புதிய மொந்தை.. அது தானே?' என்று சொல்லி புன்னகைத்தார். இன்றளவும் மறக்காத சம்பவம் அது!
பக்கத்து ஊர் காரர் என்றாலும் நேரில் சந்திக்க முடியாமல் போன பிரமுகர் பட்டுக்கோட்டை பிரபாகர். நான் படித்த அதே கல்லூரியில் (செயிண்ட் ஜோசப், திருச்சி) எனக்கு சீனியர். இதைப் பற்றி குறிப்பிட்டு அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். முத்து முத்தான கையெழுத்தில் அவர் எனக்கு பதில் அனுப்பியிருந்தார். இரண்டு பக்க அளவுக்கு அந்த கடிதம் நீண்டிருந்தது! இதுவும் மறக்க முடியாத ஒரு இனிய அனுபவம்!
பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா - மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
நன்றி நாகா மிக்க நன்றி நரேன் சீண்டல்கள் அந்த நேரத்தில் நான் மிகவும் ரசித்த பொழுதுகள்...நன்றி விரிவாய் பகிர்ந்து கொண்டதற்க்கு....
ReplyDeleteஎனக்கும் ராஜேஷ்குமார், சுபா, பி.கே.பி ரொம்ப பிடிக்கும்.. அவர்களுடன் உங்களுக்கு அறிமுகம் உண்டு என்பது குறித்து கண்டிப்பாகப் பெருமைப்படலாம் நீங்க.//
ReplyDeleteநன்றி வெண்
பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா - மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.//
ReplyDeleteசுபமூகா நன்றி நீங்கள் குறிப்பிட்ட மூவரிடமும் கொஞ்சம் கூட பந்தாவும் இல்லை, தலைகணமும் கிடையாது....
//பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும்
ReplyDeleteஇன்னும் நினைவிருக்கிறது. கூழாங்கல்லில் இருந்து கரன்ட் எடுக்க முயல்வானே நாயகன். அந்த கதைதானே?
//விவேக் ரூபலா ,நரேன் வைஜெயந்தி,பரத் சுசீலா,கனேஷ் வசந்த் போண்ற கதாபாத்திரங்களோடு கற்பனையில் வாழ்ந்து இருக்கிறேன்...//
ReplyDeleteநிஜமாவே அதெல்லாம் மனக்கண் முன் வந்து லலா பாடுது பாஸ்..
பிகேபியின் வர்ணனைகள் மிகவும்
ReplyDeleteஅருமை."பார்ப்பவர்கள் எல்லோரும்
பால் பால் மேலும் பால் என்று சொல்வார்கள் அவளது முகத்தை பார்த்து" என்று ஒரு கதையில் வரும்.