(படங்கள் பெரிதாக தெரிய கிளிக்கவும்)
சில நாட்களுக்கு முன்பு வேளச்சேரி டூ தரமணி இருப்பு பாதை மார்கத்தில் ரயிலில் அடிபட்டு எலிசெபத் என்ற இளம் பெண் இறந்து போனார்...
அவர் இறந்த தகவல் கேட்டு அவரோடு பணிபுரிந்தவர்கள் ரயி்லை நிறுத்தி அந்த மார்கத்தில் 3 மணிநேரம் போக்குவரத்துக்கு இடையுறு ஏற்படுத்தினர் .
அந்த மார்கத்தில் ரயில் சர்வீஸ் 3நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது என்றும்,அந்த பெண் இறக்ககாரணம் அந்த பெண்ணின் ஆஜாக்கிரதை என்றும் அவர் இருப்புபாதை கடக்கும் போது செல் பேசினார் என்றும் பல தகவல்கள் வருகின்றன...
இப்போதெல்லாம் குறிப்பாக இளம்பெண்களை நீங்கள் ரோட்டில் பார்த்தாள் , 95 சதவீகித இளம் பெண்கள் சொல்லி வைத்தாள் போல, எல்லா பெண்களும் லேசான புன்முறுவளுடன் யாரோடாவது செல்போனில் பேசிக்கொண்டு போவதை பார்த்து இருக்கலாம்...
அது அண்ணாவாக ,சித்தியாக,காதலனாக, அம்மாவாக,அப்பாவாக, யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ரோட்டில் பேசிக்கொண்டே, பேச்சு சுவாரஸ்யத்தில் ரோட்டின் ஓரத்தில் இருந்து ரோட்டின் நடுப்புற பகுதிக்கு வந்து விடுகின்றார்கள் அந்த பெண்களை ஹாரண் அடித்தும் திட்டியும் அந்த இடம் விட்டு நாம் தினமும் நகர்கின்றோம்....
பேசுவது போதையான விஷயம் அதுவும் பெண்களுக்கு, அதுதான் அவர்களது உற்சாக டானிக்... அந்த செல்போன் பேச்சு பலரின் விலைமதிப்பில்லா உயிரை காவு வாங்கி வருகின்றது. கடந்த ஆண்டில் மட்டும் செல்பேசி ரயிலில் அடிப்ட்டு இறந்வர்கள் எண்ணிக்கை 7 பேர்....
இறந்தவர் எவருக்கும் சாகும் வயசு அல்ல ,எல்லாம் 25க்குள் இருப்பவர்கள்...
எதிர் முனையில் யார் இருந்தாலும் , எந்த உறவாக இருந்தாலும் ,ரோட்டில் நடக்கும் போதோ அல்லது ரயில்வே ஸ்டேஷன் அருகில் உங்கள் பிரியமானவர் இருந்தார்கள் என்றால் பேச்சை சீக்கிரம் முடித்து , ரயிலோஅல்லது பஸ்ஸோ,எறிய பிறகு செல்பேச சொல்லுங்கள்....
பொதுவாக பெண்கள் ஹெட் போன் போட்டுக்கொண்டு பாட்டு கேட்பதும்,செல் பேசுவதும் சமீபகாலமாக இந்த பழக்கம் அதிகரித்து இருக்கின்றது.. ஆதவம் காதல் பாடல்கள் என்றால் மனம் பழைய நினைவுகளில் முழ்கி என்ன செய்கின்றோம் ? எங்கு நடக்கின்றோம் ?என்று தெரியாமலே மந்திரிச்சு விட்ட கோழிபோல ரோட்டில் நடப்பவர் அநேகம் பேர் ...வயது பெண்ணின் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் இது குறி்த்து பேசுங்கள், அல்லது எச்சரிக்கை செய்யுங்கள்...
இந்த காலத்து பசங்க நாம சொல்லறதை எது கேட்குது ? என்ற அசட்டை வேண்டாம். நீங்கள் எச்சரிக்கும் சத்தம் திடும் என்று கூட அவர்களால் நினைவுகூறப்படலாம்.. அதனால் உங்கள் கடமை சொல்வது... அதனை சொல்லி விடுங்கள்....
இந்த எச்சரிக்கை ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்....
புகைப்படம்/கருத்து,
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும், தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி
உங்கள் பதிவுகளில் சமூக அக்கறை அதிகரித்துவிட்டது. பதிவைப் படிக்கும் வாய்ப்புள்ள பெண்கள் மாறுவார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
ReplyDeleteஸ்ரீ....
//இந்த எச்சரிக்கை ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்./
ReplyDeleteபிறகு ஏன் தலைப்பில் பெண்கள் மட்டும் இருக்கு?
//இந்த எச்சரிக்கை ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்./
ReplyDeleteபிறகு ஏன் தலைப்பில் பெண்கள் மட்டும் இருக்கு?
பதிவை முதல்ல இருந்து படிச்சி இருந்திங்கன்னா? இந்த கேள்வி எழ வாய்ப்பே இல்லை... கடைசி வரி மட்டும் படிச்சா கேள்வி இப்படித்தான் வரும்... சரி கேள்வி கேட்கனும்னு கேட்டிட்டுங்க போல....
உங்கள் பதிவுகளில் சமூக அக்கறை அதிகரித்துவிட்டது. பதிவைப் படிக்கும் வாய்ப்புள்ள பெண்கள் மாறுவார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
ReplyDeleteஸ்ரீ....--//
நன்றி ஸ்ரீ நீங்க இப்படி பாராட்டி புட்டிங்க ஆனா, பலர் இதை கருத்தாக பார்ப்பதே இல்லை
:(
ReplyDeleteஎச்சூஸ் மீ...
ReplyDeleteஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் போடணும்... ஆமா நான் சொல்லிபுட்டேன்...
அதுக்கு நீங்க
எங்கள் தங்கம்,
தென்னகத்தின் சிங்கம்,
பதிவுலகின் பீஸ்மர்... அண்ணன் உண்மை தமிழன் மாதிரி பெருசா பதிவை போட்டுறாதீங்க....
வாழ்க உண்மை தமிழன்,
வளர்க அவரது புகழ்.
(அவரது பதிவு மட்டும் சுருங்குக).
இப்படிக்கு
நையாண்டி நைனா.
பொருளாளர்-
உண்மைதமிழ் மக்கள் முன்னேற்ற கலக்கம் (எழுத்துப்பிழை இல்லை)
Thanks
ஜாக்கி,
ReplyDeleteயார் என்ன கருதுகிறார்கள் என்ற கவலை வேண்டாம். இதுபோன்ற தரமான பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள். இது உங்கள் இடம். உங்கள் பதிலுக்கு நன்றி.
ஸ்ரீ....
கோடம்பாக்கம் fly over ல ஒரு 30 வயசு லேடி காதுல மொபைல் வச்சுகிட்டு தலைய சாய்ச்சு ஸ்கூட்டி ஓட்டிட்டு போனாங்க சார்....அதுவும் சாயந்திரம் 6.30 இருக்கும்..அந்த நேரத்துல அந்த fly over ல என்ன traffic இருக்கும் தெரியுமா...அவங்களா புரிஞ்சுகிட்டு திருந்தினாதான் உண்டு
ReplyDeleteபொதுவாக பெண்கள் மற்றவர்களின் கவனிப்புகளை அலட்சியப்படுத்தவும், ஒரு துணையாகவும் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் அவர்கள் சாலையிலும் ரயில் பாதைகளிலும் கைபேசியை தவிர்த்தல் நலம்
ReplyDeleteகார்க்கி said...
ReplyDelete//இந்த எச்சரிக்கை ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்./
பிறகு ஏன் தலைப்பில் பெண்கள் மட்டும் இருக்கு?//
அதானே???பதிவை முழுதும் படித்து விட்டுத்தான் எழுதுகிறேன்.....பொதுவாக ஆண் பெண் இரு பாலாருமே இப்போது செல் பேசிக் கொண்டோ பாட்டுக் கொண்டோதான் செல்கிறார்கள்.இதில் ஆண் என்ன?? பெண் என்ன?இரு பாலாருக்கும் சொல்ல வேண்டிய அறிவுரை இது....
நல்லபதிவு ஜாக்கி.
ReplyDeleteமுப்பாலரும் கவனமா இருக்கணும்.
செல்பேசி ஒரு தொல்(லை) பேசியா ஆகிக்கிட்டு வருது.
பொய் சொல்லும் விகிதம் கூடுனதும் இதாலேதான்.
நன்றி நைனா வால்பையன்
ReplyDeleteயார் என்ன கருதுகிறார்கள் என்ற கவலை வேண்டாம். இதுபோன்ற தரமான பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள். இது உங்கள் இடம். உங்கள் பதிலுக்கு நன்றி.
ReplyDeleteஸ்ரீ....//
நன்றி ஸ்ரீ தங்கள் தொடர் ஆதரவுக்கு
கோடம்பாக்கம் fly over ல ஒரு 30 வயசு லேடி காதுல மொபைல் வச்சுகிட்டு தலைய சாய்ச்சு ஸ்கூட்டி ஓட்டிட்டு போனாங்க சார்....அதுவும் சாயந்திரம் 6.30 இருக்கும்..அந்த நேரத்துல அந்த fly over ல என்ன traffic இருக்கும் தெரியுமா...அவங்களா புரிஞ்சுகிட்டு திருந்தினாதான் உண்டு//
ReplyDeleteநன்றி ராஜ் ஒரு செய்தியை சொன்னதற்க்கு
பொதுவாக பெண்கள் மற்றவர்களின் கவனிப்புகளை அலட்சியப்படுத்தவும், ஒரு துணையாகவும் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் அவர்கள் சாலையிலும் ரயில் பாதைகளிலும் கைபேசியை தவிர்த்தல் நலம்//
ReplyDeleteநன்றி தீப்பெட்டி நடு நிலையான பின்னுட்டம்
அதானே???பதிவை முழுதும் படித்து விட்டுத்தான் எழுதுகிறேன்.....பொதுவாக ஆண் பெண் இரு பாலாருமே இப்போது செல் பேசிக் கொண்டோ பாட்டுக் கொண்டோதான் செல்கிறார்கள்.இதில் ஆண் என்ன?? பெண் என்ன?இரு பாலாருக்கும் சொல்ல வேண்டிய அறிவுரை இது....//
ReplyDeleteசெத்தது பெண் அருனா, ஆண்களை விட பெண்கள் பாடல்களில் தன்னையே மறப்பவர்கள் நீங்கள் வேண்டுமானால் அப்படி இல்லாமல் இருக்கலாம்... ஆணின் சூட்டிகை பல இடங்களில் பெண் பிள்ளைகளிடம் இல்லை அதனாலே பெண்களுக்கான எச்சரிக்கை பதிவு..தவறு இருபாலர் பக்கம் என்பதை யாரோ எல்லாம் வந்து சொல்ல வேண்டாம் ....பதிவின் முடிவில் நானே சொல்லி இருக்கின்றேன் 5 வருட கல்லூரி வாழ்க்கையில் நான் நிறைய பெண்களை கவனித்த வரையில் நான் சொல்லுகின்றேன்...
நல்லபதிவு ஜாக்கி.
ReplyDeleteமுப்பாலரும் கவனமா இருக்கணும்.
செல்பேசி ஒரு தொல்(லை) பேசியா ஆகிக்கிட்டு வருது.
பொய் சொல்லும் விகிதம் கூடுனதும் இதாலேதான்.//
உண்மை துளசி கோபால் கண்டென்ட் என்ன என்பதை புரிந்து பதில் சொல்லியமைக்கு என் நன்றிகள்...
//தவறு இருபாலர் பக்கம் என்பதை யாரோ எல்லாம் வந்து சொல்ல வேண்டாம்//
ReplyDelete...தவறு எங்கிருந்தாலும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம் என்றுதான் நான் நினைத்தேன்....சாரி இங்கே யாரோவெல்லாம் சொல்லக் கூடாது போலிருக்கே....
இவ்வளவு விரிவாய் உங்களுக்கு பதில் சொல்லியும் நீங்கள் திரும்பவும் தவறாக புரிந்து கொண்டால் நான் ஏதும் செய்ய முடியாது...பதிவின் கடைசில் இந்த தவறு இருபாலருக்கும் பொறுந்தும் என்பதையும் குறிப்பிட்டு உள்ளேன் அதுமட்டும அல்ல..செல்போனில் அடதிகம் ரோட்டில் பேசுவது பெண்கள்தான் என்பதை மறவாதீர்... போனில் பேசி இறந்து போனது ஒரு பெண் அதனால் தான் அந்த எச்சரிக்கை...
ReplyDeleteஉங்கள் கோபம் தவறாக புரிந்து கொள்ளப்ட்டு விட்டது
great post. we must have awareness about it.
ReplyDeleteIt is not only for girls. This post is common for both men and women.
Really gud message.. to be followed by both men and women..
ReplyDeleteஇது மாதிரி நிறைய் செய்தி வருது ஜாக்கிண்ணா வருத்தமாதான் இருக்கு. திருந்தமாட்டிக்கிறாங்களே :((((
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNeengal sonnadhu nootruku nooru unmai jackie..pengale adhigam ippadi alatchiyamaga nadakirargal..Engha office bus l oru penmani cell pesiyapadiye yeruvar,1 mani nera travel ku appuram kooda adhe call ai pesukonde irunguvaaar.Ippadi niraya per..Atleast road cross pandra maadhiri samayangalil Oru nimisam call cut pannitu apparama pesunaa kuranja poiyidum?-UM.Krish
ReplyDeleteஅய்யா, வணக்கம்....
ReplyDeleteசெல் போண்ல பேசி அவங்க சாகுறாங்கலோ.. இல்லையோ... போண்ல அந்த பக்கம் பேசற பசங்கல சாவடிக்கிறாங்க... இது உண்மை... இத பத்தி ஒரு பதிவு போட கூடாது... ம்ம்ம் பசங்கல யாரு மதிக்கற... உங்க எல்லா பக்கத்திலும் பெண்பால் பக்கமே சாயுதே... ஏனய்யா...?