கவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...
சில மாதங்களுக்கு முன்பு காபி வித் அனு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவும் ,தயாநிதிமாறனும் கலந்து கொண்டு பல விஷயங்களை கலந்துரையாடினார்கள்.
அப்போது நிகழ்ச்சியின் முடிவில் வைரமுத்துவுக்கு, ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போது நீங்கள் வைத்திருக்கும் பரிசினை யாருக்கு கொடுப்பி்ர்கள் என்று...?
அதற்க்கு கவிஞர் இப்படி ஆரம்பித்தார்,
அந்த மனிதர் மிக நல்லவர், என் வாழ்க்கையில் நான் இந்தளவுக்கு முன்னேற காரணமானவர். அவரால் தான் நான்.கால ஓட்டத்தில் நான் வளர்ந்துவிட்டேன்.எந்த பொருளாதார சுமையும் எனக்கு இல்லை. சுபிட்சமான வாழ்க்கையை நான் வவாழ்கிறேன். ஆனால் அந்த மனிதருக்கு என் மேல் கோபம், நான் அவரை மதிக்கவில்லை அல்லது அவரோடு முன்பு போல் பேசவில்லை என்ற கோபம் என் மீது. அந்த மனிதருக்கு கடுங்கோபம் என் மீது்..நான் விரும்பி அதனை செய்யவில்லை, காலச்சுழலில் அப்படி ஒரு விஷயம் நடந்து விட்டது ஏது எப்படியோ நான் இந்த தொலைக்காட்டிசி வாயிலாக பல்லாயிரக்கனக்கான மக்கள் முன்னிலையில் நான் மானசீகமாக என் தந்தை ராமசாமி தேவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மனிதன் இறந்து வி்ட்ட பின்பு அவனிடம் கால் மாட்டில் விழுந்து புரண்டு அழுவதை விட வாழும் காலத்திலேயே, அந்த மனிதனின் மானசீகமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பா நீங்கள் இந்த பேட்டியை இப்போது பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும். அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். இப்போதுகூட நீங்கள் குலுங்கி குலுங்கி அழுவதை என்னால் உணர முடி்கின்றது. என்று கவிஞர் தன் பேட்டியில் முடிவில் சொல்லி எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.
பேட்டியில் அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே வராவிட்டாலும் அதன் சாரம்சம் இதுதான்... சரி வைரமுத்து பெரிய கவிஞர், அவர் அவர் அப்பாவிடம் விஜய் டிவி வழியாக மன்னிப்பு கேட்டு விட்டார். அனால் நான் எப்படி கேட்பது...
சரி நான் ஏன்? என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கின்றீர்களா?
உங்கள் அப்பாவை நீங்கள் அடித்துவிட்டால் நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா? மாட்டீர்களா? ஆம் நான் வெட்கப்பட்டு சொல்கிறேன். என் அப்பாவை அடித்து விட்டேன். உலகத்தில் நான் பல தவறு செய்து இருந்தாலும், நான் செய்த இமாலாயதவறு என் அப்பாவை நான் அடித்ததுதான்.
என் அப்பாவை அடித்தற்க்கான காரணம் அது ஒரு பெரிய கதை இருப்பினும் சின்னதாக...
எனக்கு 4 தங்கைகள்,என் அப்பாவுக்கு பெரிய சொத்தோ ,அல்லது பெரிய சொந்தங்களின் பின்புலம் இல்லாதவர் ஆனால் மிக நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பிரியபடுபவர். அகாராதியில் நேர்மை என்று இருக்கும் வார்த்தைக்கு எதி்ரில் கவலைபடாமல் வடமலை என்று எழுதலாம். அவ்வளவு நேர்மை. நல்லவரும் கூட. காபி, டீ, வெத்தலைபாக்கு ஏதும் இந்த வயதுவரை உஹும். அனால் எல்லா விஷயத்தையும் நக்கல் விடும் பழக்கம் என்னால்தான் சாத்தியப்பட்டது என்று வார்த்தை பிரயோகம்... இதுதான் என்தந்தை.
எனக்கு கல்லூரி வேலை கிடைத்ததும் நான் செய்த வேலைகள் எங்கள் வீட்டு்க்கு பக்கத்தில் இன்னோரு வீடு கட்டியதுதான்.எனென்றால் சின்ன வீடாய் இருக்கின்றது என்ற காரணத்தால் என் தங்கையை பெண் பார்க்கும் வரன்கள் தள்ளிபோய் கொண்டு இருந்தன.
என் அம்மா என் அப்பாவிடம்,
“ஏங்க நாலு பொம்பளை பிள்ள பெத்து வச்சு இருக்கோம் காதுல கைல போடறதுக்காகவாவது ஏதாவது செய்ய வேண்டும்”. என்ற போதுவரதட்சனை வாங்காத ஆண்பளை வந்து கல்யாணம் பண்ண போதும் என்று வரட்டு
விதன்டாவாதம் பேசியவர்.
அம்மா இறந்து விட்டார்,என் அப்பாவுக்கு கை கால் துவண்டு விட்டது. அதற்க்கான மருத்துவ செலவு ரூபாய்60,000 ஆயிரம் அதையும் நான்தான் பார்த்தேன். என் முன்றாம் தங்கை அரசு வேலையில் இருந்ததால் அவள் சம்பளத்தை வாங்கி நகை சீ்ட்டு போட்டு கொஞ்சம் நகை சேர்த்து வைத்து இருந்தார். மற்றபடி கடந்த இரண்டு வருடத்தில் என் இரண்டு தங்கை மற்றும் என்திருமணம் நடந்து இருக்கின்றது...ஆறு மாதகாலத்தில் இரண்டு திருமணம் யோசித்து பாருங்கள் இரண்டு பெண்பிள்ளைகள் திருமணம் என்றால், எவ்வளவு அலைச்சல். எந்த உறவுகளின் உதவியும் இல்லாமல்.
உலகத்தில கொடுமையான செயல்வீட்டுக்கு பெரிய பிள்ளையாக பிறப்பதுதான். இப்போது நான் முன்றரை லட்சத்துக்கு கடனாளி கொஞ்சம் கொஞ்சமாக இப்போது அடைத்து வருகிறேன். இப்போது வேலை வேறு எனக்கு இல்லை...
ஊரில் என் அப்பா அப்போது 15க்கு 60வதுக்கு கோமன துணி போல் ஒரு பிளாட் வாங்கி போட்டு இருந்தார். மூன்றாம் தங்கைக்கு திருமணம் செய்யும் போது கொஞ்சம் பணம் கையை கடிக்க அப்போது என் தந்தை அந்த மண்ணை வீற்று திருமணச்செலவுகள் செய்ய சொன்னார்.
நான் இப்போது வேண்டாம் நான் கேட்கும் போது கொடுங்கல் அதுவரை அது உங்களிடம் இருக்கட்டும் என்ற போது ஓகே என்றார். அதன் பிறகு பணம் புரட்டி என் மூன்றாம் தங்கை திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. அனால் என் திருமணத்துக்கு பணம் முடையானது , அந்த மண்ணை விற்க்க பத்திரம் கேட்டேன், என் அப்பா தரமாட்டேன் என்று மறுத்தார்.
துரோகம் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சரி உன் பெண் பிள்ளைகளுக்கு நான் கடன் வாங்கி திருமணம் செய்த வைத்தேனே அந்த பணத்தையாவது அந்த மண்னை விற்று கொடுங்கள் என்ற போது உன் தங்கைகளுக்கு திருமணம் செய்தது உன் கடமை என்று சொல்லிவிட்டார்....
நீதான் லவ் பண்ணற இல்லை எதுக்கு மண்டபத்துல கல்யானம் பண்ணிக்கிற கோயில்ல கல்யாணம் பண்ணிக்கோ என்று எகத்தாளமாக அட்வைஸ் வேறு கொடுத்து விட்டார்.
நாங்கஎல்லாம் அந்த காலத்துல என்று தான் தோல்வி அடைந்த கதையை நீட்டி முழங்குவார். எந்த சொத்தும் இல்லை. உதவிக்கு எடுத்துக்கட்டி செய்ய எந்த உறவுக்கூட்டமும் இல்லை. இவ்வளவு செய்த என்னை,
“ நீ என்ன செய்து கிழித்தாய் ”
என்று கைக்கால் துவண்டு போனவர் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் , கடன்காரர்கள் என் கழுத்தை நெருக்கும் போது எனக்கு என்பிரச்சனையை சொல்லி அழ ஆள் இல்லை, என் காதல் மனைவி தவிர...
எனக்கு என் வாழ்க்கை என்று நான் சுயநலமாக சிந்தித்து இருந்தால் எனக்கு எப்பபோதே திருமணம் ஆகி இருக்கும்.
என் அப்பா மட்டும்அந்த மண்ணை வி்ற்று ஒரு லட்சம் எனக்கு கொடுத்து இருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடன் என் கழுத்தை நெறித்து இருக்காது.
இதில் என் அப்பா இந்த வயசுவரை நான் யார்க்கிட்டயும் கை நீட்டி கடன் வாங்கியதில்லை என்று ஜம்பம் பேசுவார்...
ஒரு நாள் என் ஊர் சென்று நான் மட்டும் கடன் பிரச்சனையில், ஒரு கட்டிங் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போய் படுத்த போது இந்த பிரச்சனை எழுந்தது..
என் அப்பா , பேசும் போது நீ என்ன செய்து கிழித்தாய் ?என்றார் பெட்டில் படுத்துக்கொண்டு இருந்த என் அப்பா மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு சட்டையை பிடித்து உலுக்கி கோபத்தில் கண்ணத்தில் அடித்துவிட்டேன்.
அதன் பிறகு என் திருமணம் நடந்தது, பணம் புரட்ட முடியாமல் ரொம்பவும் சிரம பட்டு, என் திருமணத்தை நடத்திக்கொண்டோம். மனதில் நிறைய வலிகள் இருந்தாலும் என் அப்பாவிடம் நின்று சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம்.
அதன் பிறகு என் வீட்டில் நான் தங்குவதே இல்லை. என் அப்பாவை பார்க்கும் போதே கோபமும் அவர் செய்த நம்பிக்கை துரோகமும்தான் என் நினைவில் வருகின்றது. என் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போது நான் அவரிடம் சென்னை வரச்சொன்னேன். வரமாட்டேன் என்று மறுத்துவிட்டார். உடம்புக்கு முடியாத போது உன் பிள்ளை இருக்கறதை மறக்காத என்று சொல்லிவிட்டு சென்னைக்கு கார் ஏறினேன். வேறு என்ன செய்வது பெற்றவர் ஆயிற்றே....
இப்போது கூட அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது ஆனால் அதற்க்காக நான் அவரை அடித்த செயலை நான் நியாயப்படுத்வில்லை. சிங்கம் போன்று வாழ்ந்த மனிதரை சிறு நரியான நான் அந்த தவற்றை செய்து இருக்ககூடாது. இப்போதும் என் இதயத்தின் ஓரத்தில் அந்தவலி அனுதினமும் வந்து வந்து செல்கின்றது. (என் தகப்பனார் வடமலை)
அப்பா நான் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் செய்த துரோகத்தை என்னால் எந்த ஜென்மத்துக்கு மறக்க முடியாது. ஆனால் அதற்க்காக உங்களிடம் அந்த சிறு கைகலப்பில் கை நீட்டியதற்க்கு மிகவும் வருத்தபடுகின்றேன். அப்பா என்னை மன்னியுங்கள்.
ஒரு மனிதன் இறந்து வி்ட்ட பின்பு அவனிடம் கால் மாட்டில் விழுந்து புரண்டு அழுவதை விட வாழும் காலத்திலேயே, அந்த மனிதனின் மானசீகமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இப்போது என் அப்பா “முதல் மரியாதை” கிளைமாக்ஸ் சிவாஜி போல் கடலூரில் தனியாகத்தான் இருக்கின்றார்.
அன்புடன்/ஜாக்கிசேகர்
(குறிப்பு)
இந்த பதிவை பிரின்ட் அவுட் எடுத்து நீங்கள் அளித்த பின்னுட்டதுடன் என் அப்பாவுக்கு போஸ்டலில் இந்த மன்னிப்பு பதிவை அனுப்ப போகிறேன்.
குறிப்பு / எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போடமறவாதீர்
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
நன்று அண்ணா...
ReplyDeleteமன்னிப்பு கேட்பது மிக நன்று.
நீங்கள் மன்னிப்பு கேட்கும் சமயத்தில் எனது வணக்கங்களையும் சேர்த்து சொல்லுங்கள்.
ஆனால் பெற்றோருக்கு தீங்கு செய்யும் பிள்ளையை விட நல்லது செய்யும் பிள்ளைகளை போட்டு வாங்குவது ஒரு கலை. இதை நாமும் பைபிள் கதைகளில் படித்து இருக்கிறோம், "The Prodigal Son" என்று.
நன்றி நைனா, என் வருத்தத்தை புரிந்து ஆறுதல் சொன்னதற்க்காக....
ReplyDeleteமனம் திருந்தி மன்னிப்பு கேட்டு விட்டால் மனிதன் மாமனிதராகி விடுவார்.
ReplyDeleteஉயர்ந்து விட்டாய் நண்பா.
நீங்க கேட்ட கேள்விகெல்லாம் பதில் சொல்லியாச்சு.
ReplyDeleteவந்து பாரு
http://mynandavanam.blogspot.com/search/label/FAQ
நானும் உங்களை போலவே என் அப்பாவை எடுத்தெறிந்து பேசியும், கை நீட்டியும் இருக்கிறேன்.
ReplyDeleteஅப்போது பொருளாதார ரீதியாக முடியாத நிலை. ஆனால், இப்போது எல்லாம் இருக்கிறது,
அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்க மாட்டாரா,
நான் அவரை நல்லபடியாக பாத்துக்கொள்ள மாட்டேனா என்று ஏங்குகிறேன்.
அடுத்த ஜென்மத்திலாவது அவருக்கு மகனாக பிறந்து என் பாவத்தை போக்க வேண்டும்!
அதனால்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதை விட அவர்களை அரவணைத்து உங்களை
இந்த உலகத்துக்கு கொண்டு வந்த உங்கள் அப்பாவுடன், சேர்ந்து வாழவே என் மனம் பிரியப்படுகிறது.
நான் ஏதாவது தப்பாக எழுதியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள் ஜாக்கி!
உங்கள் அப்பாவுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்!!
ஜாக்கி, இதை இங்கே எழுதுனதுக்கு பதிலா உங்க அப்பாவுக்கு கடிதமா எழுதியிருக்கலாம். சொல்ல வந்ததை அழகா சொல்லியிருக்கீங்க. உங்க அப்பா சந்தோசப்படுவது கியாரண்டி..
ReplyDeleteமன்னிகறவன் மனுஷன்
ReplyDeleteமன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுஷன்
விருமாண்டி வசனம்
மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு விட்டால் மனிதன் மாமனிதராகி விடுவார்.
ReplyDeleteஉயர்ந்து விட்டாய் நண்பா.-//
நன்றி வண்ணத்துப்பூச்சி மிக்க நன்றி.
நீங்க கேட்ட கேள்விகெல்லாம் பதில் சொல்லியாச்சு.
ReplyDeleteவந்து பாரு
http://mynandavanam.blogspot.com/search/label/FAQ//
பாத்துட்டேன் ரசிச்சிட்டேன்
நானும் உங்களை போலவே என் அப்பாவை எடுத்தெறிந்து பேசியும், கை நீட்டியும் இருக்கிறேன்.
ReplyDeleteஅப்போது பொருளாதார ரீதியாக முடியாத நிலை. ஆனால், இப்போது எல்லாம் இருக்கிறது,
அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்க மாட்டாரா,
நான் அவரை நல்லபடியாக பாத்துக்கொள்ள மாட்டேனா என்று ஏங்குகிறேன்.
அடுத்த ஜென்மத்திலாவது அவருக்கு மகனாக பிறந்து என் பாவத்தை போக்க வேண்டும்!
மனதை தொட்டு விட்டாய் நண்பா, ஏறக்குறைய நம் இருவரும் ஒரே மாதிரியான படகில் பயணம் செய்தது போல் ஒரு பிரம்மை.
நான் ஏதாவது தப்பாக எழுதியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள் ஜாக்கி!
ReplyDeleteஉங்கள் அப்பாவுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்!!//
எதுக்கு இதுக்கு போயி பெரிய வார்த்தையெல்லாம் நான் எத்தனையோமுறை அழைத்து விட்டேன் அவர் வர அதாவது சென்னை வர அவருக்கு விருப்பம் இல்லை. அது மட்டும் இல்லாமல் தன் மனைவி இருந்த வீட்டிலேயே வாசம் பண்ண வேண்டும் என்று தீர்மானித்து விட்டார் நான் என்ன செய்ய....
அப்பா நான் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் செய்த துரோகத்தை என்னால் எந்த ஜென்மத்துக்கு மறக்க முடியாது..!
ReplyDeleteஇதை முதல்ல நீங்க மன்னியுங்க,மறந்திருங்க..!
அவரு உங்களை மன்னிச்சிருவாரு..!
ஓக்கே வாண்ணே..!
-)))))))))))))
ReplyDeleteகண்ணத்தில் ???? தமிழை கொஞ்சம் பெரிய மனது வைத்து காப்பாற்றுங்கள்
ReplyDeleteஜாக்கி..மற்றபடி மன்னிப்பு கேட்கிறவன் மாவீரன்
This comment has been removed by the author.
ReplyDelete//இப்போது கூட அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது//
ReplyDeleteஅதயெல்லாம் மறந்துருங்க ஜாக்கி..
இன்னைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு உங்களுக்குதான கிடைக்கப் போகுதுனு அவர் நினச்சுருக்கலாம்..
சொத்த விக்கிறத விட சிக்கனமா கல்யாணம் பண்ணிணா நாளைக்கு நம்ம மகனுக்கு சொத்தா இந்த வீடு பயன்படுமேன்னு அவர் யோசித்திருந்திருக்கலாம்..
மறந்துடுங்க..பாஸ்..
அவர் ஏற்கனவே உங்கள மன்னிச்சுருப்பாருன்னு நினைக்கிறேன்..
நீங்க கேட்கிற இந்த மன்னிப்பு உங்கள இன்னும் நல்ல நிலைக்கு உயர்த்தும்.
மாற்றத்திற்கு காரணம் வைரமுத்துவா இல்ல உங்க பையனா?
ReplyDeleteவைரமுத்து ஊறுகாய் இல்லையே?
அண்ணே, மனச என்னமோ பண்ணுது. என் மேல ரொம்பப் பாசமா இருந்தாரு என் சித்தப்பா. ஏதோ சின்ன வாக்குவாதம், கைகலப்புல முடிஞ்சிருச்சு. நீங்க மன்னிப்பு கேட்ட மாதிரி என்னால சட்டுன்னு மன்னிப்பு கேக்க முடியாது. ஏன்னா, அவரு பாசமா இருந்தாரு! இருந்திருந்தா இப்பவும் பாசமாத்தான் இருந்திருப்பாரு.
ReplyDeleteமன்னிப்பு கேக்கறத நாலு செவுத்துக்குள்ளாற கேக்காம இப்படி பகிரங்கமாக் கேக்கவும் ஒரு மனசு வேணும். அது உங்களுக்கு இருக்கு.
இருந்தாலும் அப்பாவோட உணர்வுகளுக்கும் மதிப்பு குடுத்து அவரா வற்ற வரைக்கும் காத்திருங்க.
ஜாக்கி, இதை இங்கே எழுதுனதுக்கு பதிலா உங்க அப்பாவுக்கு கடிதமா எழுதியிருக்கலாம். சொல்ல வந்ததை அழகா சொல்லியிருக்கீங்க. உங்க அப்பா சந்தோசப்படுவது கியாரண்டி..-
ReplyDeleteநன்றி வெண்பூ எதோ இப்பதான் என் பீலிங்கை இறக்கி வச்சா போல இருக்குது....
மன்னிகறவன் மனுஷன்
ReplyDeleteமன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுஷன்
விருமாண்டி வசனம்//
நன்றி பி்ஸகோத்துபயல் மிக்க நன்றி நல்லவசனங்கள்
இதை முதல்ல நீங்க மன்னியுங்க,மறந்திருங்க..!
ReplyDeleteஅவரு உங்களை மன்னிச்சிருவாரு..!
ஓக்கே வாண்ணே..!--//
நன்றி மீனவன்
நன்றி உண்மைத்தமிழன்
ReplyDeleteகண்ணத்தில் ???? தமிழை கொஞ்சம் பெரிய மனது வைத்து காப்பாற்றுங்கள்
ReplyDeleteஜாக்கி..மற்றபடி மன்னிப்பு கேட்கிறவன் மாவீரன்//
நன்றி தண்டோரா முடிந்த வரை தமிழ் தப்பில்லாமல் அடிக்க பழகுகின்றேன்
மறந்துடுங்க..பாஸ்..
ReplyDeleteஅவர் ஏற்கனவே உங்கள மன்னிச்சுருப்பாருன்னு நினைக்கிறேன்..
நீங்க கேட்கிற இந்த மன்னிப்பு உங்கள இன்னும் நல்ல நிலைக்கு உயர்த்தும்.//
நன்றி தீப்பெட்டி நீங்கள் சொல்வது படியே நடக்கின்றேன்...
இப்போதுதான் முதன்முதலாக ஒரு நெகிழ்ச்சியான பதிவை உங்கள் வலையில் படிக்கிறேன். தப்பை தப்புனு ஒத்துக்கொள்வதற்கே ஒரு தைரியன் வேணும் நண்பரே..அந்த தைரியம் உங்களுக்கு வந்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் காலம் தாழ்த்தியிருக்கவே கூடாது.. பரவாயில்லை.. போனது போகட்டும். நிச்சயம் உங்கள் தந்தை உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வாராக. அடுத்த முறை நீங்கள் இருவரும் சந்திக்கும்போது, ஆரத்தழுவி ஆனந்தக்கண்ணீர் வடிப்பீர்கள். நீங்கள் நினைத்ததுபோல் எல்லாம் நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஅன்புடன்
உழவன்
நெகிழ்வு நண்பா...
ReplyDeleteஇப்போதுதான் முதன்முதலாக ஒரு நெகிழ்ச்சியான பதிவை உங்கள் வலையில் படிக்கிறேன். தப்பை தப்புனு ஒத்துக்கொள்வதற்கே ஒரு தைரியன் வேணும் நண்பரே..அந்த தைரியம் உங்களுக்கு வந்திருக்கிறது.///
ReplyDeleteநன்றி உழவன் என்மேல்கொண்ட பற்றுக்கும் நீங்கள் எனக்கு கூறிய ஆறுதலுக்கும்... மிக்க நன்றி
நெகிழ்வு நண்பா...//
ReplyDeleteநன்றி நர்சிம்
Jackie,
ReplyDeleteSame blood here. But I never raised my hands over my father. But he back stabbed me and undermined my initiatives in a cunning way that nobody would believe. I will never forget that in my life. Time will answer him. I 100% agree with you.
/
ReplyDeleteதுரோகம் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சரி உன் பெண் பிள்ளைகளுக்கு நான் கடன் வாங்கி திருமணம் செய்த வைத்தேனே அந்த பணத்தையாவது அந்த மண்னை விற்று கொடுங்கள் என்ற போது உன் தங்கைகளுக்கு திருமணம் செய்தது உன் கடமை என்று சொல்லிவிட்டார்....
/
அநியாயம். அயோக்கியத்தனம்.
/
எனக்கு என் வாழ்க்கை என்று நான் சுயநலமாக சிந்தித்து இருந்தால்
/
பலமுறை நானும் இப்படி யோசித்திருக்கிறேன். ஆனால் செயல் படுத்தியதில்லை.
விட்டுத்தள்ளுங்க ஜாக்கி. இறைவன் அருளால் மிக நல்ல நிலைக்கு வருவீர்கள்.
You might not be able to forget. But, forgiving will help you heal.
ReplyDeleteIt takes a lot of courage to admit the fault. You are a good man. Keep it up.