(INDIANA JONES AND THE LAST CRUSAD)இயேசு நாதர் ரத்தம் சேகரித்த குவளை எங்ககே???...

பழம் பெரும் பொருட்கள் மீதான காதல் என்பது எல்லாதேசத்திலும் இது போன்ற விஷயங்களை ரசிக்க சேகரிக்க என்று ஒரு மாபெரும் கூட்டமே உண்டு...
இது போன்ற விஷயங்களுக்காக பல கோடிகள் செலவு செய்து வாங்குபவர்களும், அந்த வாங்குபவர்களின் ஆசையை புரிந்து கொண்டு அவர்களுக்காக கள்ள மார்க்கெட்டில் அது போன்ற பொருட்கள் கடத்தபடுவதும் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.... அதற்க்கு மிகப்பெரிய உதாரணம் நம் நாட்டின் ஐம்பொன் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தபடுவதுதான்....

நான் கூட பல வருடங்களுக்கு முன் அலங்கார்,தேவி, தியேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டு இருந்தேன். அப்போது விற்க்காத பல டிக்கெட்டுகளை பத்திரப்படுத்தி பல வருடங்கள் ப்த்திரமாக பாதுகாத்து வைத்து இருந்தேன்....சில வருடங்களுக்கு முன் நான் வீடு காலி செய்த போது அந்த பொக்கிஷங்கள் காணாமல் போய்விட்டன... அன்று முழுவதும் நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன்....

இந்த சின்ன விஷயத்துக்கே நான் பீலிங் காட்டி வருத்தப்படும் போது, இயேசுநாதர் சிலுவையில் வைத்து அறைந்த போது அப்போது சிந்திய இரத்தத்தை
சேகரித்த குவளை என்றால் அந்த குவளைக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று சற்றே எண்ணி பாருங்கள்....
INDIANA JONES AND THE LAST CRUSADE படத்தின் கதை இதுதான்...


(Sean Connery) Professor Henry Jones பழமையான பொருட்கள் மீது ஈடுபாடும் அதனை பற்றிய ஆராய்ச்சிகளிலேயே வாழ்வின் பெரும் பகுதியை செலவு செய்பவர்... அவர் பல வருடங்களாக செய்து வரும் ஆராய்ச்சி இயேசுநாதர் சிலவையில் உயிர் துறக்கும் போது அவர் ரத்தம் சேகரித்த குவளை எங்கே இருக்கின்றது என்பதை பற்றிய ஆராய்கிறார்... ஓரளவு அதன் இருப்பிடத்தையும் கண்டு பிடித்து விட்டார்.... அவர்மகன் (Harrison Ford ) Indiana Jones நேர்மையான ஆள் எந்த காலகட்டத்திலும் இது போன்ற பொக்கிஷங்கள் கொள்ளைக்காரர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்றும் அது எல்லாம் அரசு பொருட்காட்சிகளில் இருக்க வேண்டும் என்று போரடுபவன்....

இயேசு ரத்தம் சேகரித்த குவளையை கண்டுபிடிக்க போகும் நெடும் பயணமும் அதில் அவர்கள் சந்திக்கும் ஆபத்துகளையும் அழகாக சொல்வதுதான் இந்த படத்தின் மீதி கதை..,

அந்த குவளையை காலம் காலமாக பாதுகாத்து வரும் காவல் கூட்டமும், அதை கொள்ளை அடித்து அதன் சக்திகளை தன் வசப்படுத்த நினைக்க முயலும் இன்னொரு கொள்ளைகூட்டமும் அதனை கெட்டவர்களிடம் சிக்க கூடாது என்று போராடும் ஜோன்ஸ் குடும்பமும் இந்த போராட்த்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை வெள்ளித்திரையில் பாத்து மகிழவும்.....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....


இன்டியான ஜோன்ஸ் பட வரிசையில் இது மூன்றாவது படம் ...இந்த படத்தின் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் ...

ஸ்பில்பெர்க் திரையுலகின் பிதாமகன் என்றால் அது மிகையில்லை...பிரமான்டத்தினை திரையில் புகுத்திய சாதனைக்கு சொந்தக்காரார்...

ஒரு கௌபாய் பாத்திர படைப்பு போல் இருந்தாலும் இந்த கேரக்டர் அதிகம் துப்பாக்கி எடுக்காமல் முடிந்த வரை சாட்டை வைத்து விளையாடும் ரகம்....

எவ்வளவு ஆக்ஷன் படம் என்றாலும் அந்த படத்தில் காமெடி காட்சிகளை மெலிதாக இழையோட விடுவது ஸ்பில் பெர்க் இயல்பு....

இந்த படத்தை மூலமாக வைத்துக்கொண்டு பல காட்சிகள் தமிழ் திரைபடத்தில் ஆதார தழுவலாக உபயோகப்டுத்தி இருப்பார்கள்.... அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படம்.....

அப்பா மகன் காட்சிகள் எல்லாம் மிக மிக ரசிக்கதக்கவகையில் எடுக்கப்பட்டு இருக்கும்...



இந்த படம் 1989ம் வருடம் வெளியாது.... இப்போது பார்த்தாலும் இந்த படம் உங்களுக்கு வியப்பை கொடுக்க வல்லது என்று உறுதி கூறுகின்றேன்....


படம் போகிற போக்கில் ஹிட்லரையும் நக்கல் விட ஸ்பில் பெர்க் தவறவில்லை...

அதே போல் இந்த படத்தில் ஜெர்மனில் இருந்துஜோன்ஸ் இருவரும் தப்பிக்கும் போது ஒரு பெரிய பலூன் போன்ற விமானத்தை காட்டுவார்கள் அது ஏதோ பெரிய விபத்து ஏற்பட்டதால் அது தோல்வியுற்றது என்றார்கள் அது பற்றிய விவரங்கள் உங்கள் மூலம் ஆறிய ஆவலாய் உள்ளேன்

மிக முக்கியமாக நூலகத்தில் சீல் குத்தும் போது எடுத்த சீன் சூப்பர்....

படம் முழுவதும் ஜுனியர் என்யே அழைக்கும் அப்பா அவன் உயிருக்கு போராடும் போது இன்டியான என அழைக்கும் போது அப்பாவை ஹரிசன் கனிவோடு பார்க்கும் காட்சி கவி நயம்...

ஹரிசன் அதாவது ,ஹீரோ அறிமுகக் காட்சி ரொம்பவும் அற்புதம்....

இந்த படத்தில் அப்பாவாக நடித்த பழைய 007, சீன் கானெரி கோல்டன் குளோப் விருது பெற்றார்...

பெஸ்ட் சவுன்ட், பெஸ்ட் எடிட்டிங், பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோருக்காக இந்த படம் அக்காடமி விருது பெற்றது..

Directed by Steven Spielberg
Produced by Robert Watts
Executive producers:
George Lucas
Frank Marshall
Written by Screenplay:
Jeffrey Boam
Tom Stoppard
(uncredited)
Story:
George Lucas
Menno Meyjes
Starring Harrison Ford
Sean Connery
Alison Doody
Denholm Elliott
Julian Glover
River Phoenix
John Rhys-Davies
Music by John Williams
Cinematography Douglas Slocombe
Editing by Michael Kahn
Studio Lucasfilm Ltd.
Distributed by Paramount Pictures
Release date(s) United States:
May 24, 1989
Australia:
June 8, 1989
United Kingdom:
June 30, 1989
Running time 127 min.
Country United States
Language English
Budget $55,364,887[1]
Gross revenue $474.17 million


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி...

14 comments:

  1. தொடர்ந்து படங்களை பற்றி எழுதி கலக்குகிறீர்கள் ..தொடருங்கள்

    ReplyDelete
  2. சரி சரி நடத்துங்க....
    வந்தாச்சு...
    படிச்சாச்சு....
    போட்டாச்சு...

    ReplyDelete
  3. பிளாக் டிக்கேட் மேட்டர் சூப்பர்.

    ReplyDelete
  4. செம ஆக்சன் படமாச்செ இது!

    (சும்மா ஜாலிக்கி ஏன் கீழ போச்சு)

    ReplyDelete
  5. பகிர்விற்கு நன்றி நண்பரே... ரொம்ப வெளிப்படையா... இருக்கிறீர்

    ReplyDelete
  6. தொடர்ந்து படங்களை பற்றி எழுதி கலக்குகிறீர்கள் ..தொடருங்கள்--//

    நன்றி அக்னி தொடர் வாசிப்புக்கு

    ReplyDelete
  7. சரி சரி நடத்துங்க....
    வந்தாச்சு...
    படிச்சாச்சு....
    போட்டாச்சு...//
    நன்றி நைனா... என் பதிவு தவறுதோ இல்லையோ உன் பின்னுட்ம் தவறுவதில்லை
    நன்றி
    அன்புடன்
    ஜாக்கிசேகர்

    ReplyDelete
  8. செம ஆக்சன் படமாச்செ இது!

    (சும்மா ஜாலிக்கி ஏன் கீழ போச்சு)//

    உண்மை வால்பையன்

    ReplyDelete
  9. பகிர்விற்கு நன்றி நண்பரே... ரொம்ப வெளிப்படையா... இருக்கிறீர்//

    நன்றி பேரரசன் அது என் சுபாவம்

    ReplyDelete
  10. பிளாக் டிக்கேட் மேட்டர் சூப்பர்.//

    நன்றி முரளி கண்ணன்

    ReplyDelete
  11. ஓட்டு போட்டாச்சு நண்பரே!


    இந்த படம் இருக்கு என்னிடம்

    இன்னும் பார்க்கவில்லை ...

    ReplyDelete
  12. இந்த படமும் டிவிடி இருக்கு பாத்தாச்சு. நல்லா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  13. இந்தப் படத்தில் முக்கியமாக சீன் கானரியின் அசத்தலான நகைச்சுவை மிகவும் ரசிக்கவைக்கிறது.

    ReplyDelete
  14. //
    அது ஏதோ பெரிய விபத்து ஏற்பட்டதால் அது தோல்வியுற்றது என்றார்கள் அது பற்றிய விவரங்கள் உங்கள் மூலம் ஆறிய ஆவலாய் உள்ளேன்
    //

    ஹிண்டன்பெர்க் (hindenberg) ஏர் ஷிப் ஆக்ஸிடெண்ட் என்று தேடுங்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner