தொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால் வாசித்து பார்க்கவும்...


தொடர்பதிவில் என் பேரை சேர்த்து என்னை எழுத உரிமையுடன் அழைத்த கலையரசன்(வடலூர்காரருக்கு) நன்றி

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் இயற்பெயர் தனசேகரன் நான் பதிவு எழுதுவதற்க்காக வைத்துக்கொண்ட பெயர் ஜாக்கிசேகர். பெயர் காரணம் எனக்கு நடிகர் ஜாக்கியை ரொம்பவும் பிடிக்கும். நான் இந்த நிலைக்கு முன்னேற அவரும் ஒரு காரணம். அவர் ஜெயித்த விதம். அதனால் ஜாக்கிசேகர்....

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
உணர்ச்சிகரமான திரைப்பட காட்சிகளின் போது அவ்வப்போது என் கண்கள் கலங்கும். ஓ என்று நன்றாக அழுதது, என் அம்மா ஆஸ்பத்திரியில் இருந்த பெட் காலியாக இருக்க பக்கத்து பெட்டில் இருப்பவர்கள் என் அம்மா இறந்ததை தெரிவித்து ஆறுதல் சொல்ல, என்தங்கை என் அம்மாவை சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் எடுத்து சென்று விட்டதாக அறிவிக்க, (அப்போதெல்லாம் இந்த பாழப்போன செல்போன் அப்ப இல்லை) பதட்டத்துடன் என் வீட்டு பக்கத்து கடைக்காரரை கடை எண்ணுக்குதொடர்பு கொள்ள, தனுசு “பாடி இங்க வந்துடிச்சு சீக்கரம் வாடா.” என்று சொன்ன போது சில மணி நேரங்களுக்கு முன் ஜெயலட்சுமி என்ற அழைக்கப்பட்டவர் சட்டென என் அம்மாவை பாடி என்று அழைத்ததை மனம் தாங்காமல், வெட்கம் பாராமல் நடு ரோட்டில் கதறி தீர்த்தது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையெழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்...அதைவிட என் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்.

4).பிடித்த மதிய உணவு என்ன?

எனக்கு எந்த நேரத்து உணவாக இருந்தாலும் அதில் அசைவம் இருக்க வேண்டும். அட்லீஸ்ட் ஒரு வேக வைத்த முட்டையாவது என் உணவில் இருக்க வேண்டும், இல்லையென்றால் சாப்பாடு தட்டு பறக்கும், அது அந்த காலம் கடவுள் தட்டு பறக்கும் கோபத்தை குறித்து கொண்டார். என்னை ஒரு ஐயங்கர் வீட்டு அழகை நேசிக்க செய்தார், நான் அவள் இல்லாமல் நான் இல்லை என்ற நிலைக்கு என்னை வர வைத்தார். ஐயங்கர் பெண்ணை திருமணம் செய்தேன். இப்போதெல்லாம் மாவடு,உசிலி,பொடி சாப்பாடு,பருப்புசாதம் , மோர்மிளகாய்,சாத்தமுது,கலவைசாதம்.அரைச்சிவிட்ட குழம்பு,மோர்குழம்பு,வத்தக்குழம்பு,புளிசாதம்,தயிர்சாதம்,எலுமிச்சைசாதம் என்று போட்டதை சாப்பிடுகிறேன். என் அசைவ ஆசையை விருதுநகர்,பாண்டியன்மெஸ் மதுரை அப்பு, பாய் வீட்டு கல்யானம் போன்றவைகள் என் ஆசைகளை நிவர்த்தி செய்கின்றன. எந்த அசைவ உணவும் எனக்கு பிடித்ததுதான் முக்கியமாக மீன் குழம்பு, அதிலும் நேத்து வச்ச மீன் குழம்பு என் மோஸ்ட் பேவரைட்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நான் பூனை மாதிரி நான் எல்லோரிடமும் உடனே நட்பு பாராட்டமாட்டேன், நான் விருப்ப பட்டு நானே அவர்களை தேர்ந்த எடுப்பேன்.எனென்றால் அவர்கள் என் அலைவரிசையை ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இதுவரை எந்த பெரிய அருவியிலும் குளித்தது கிடையாது. கடலில்தான் அதிகம் அதனால் கடல்தான் எனது பதில்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்களின் கண்கள்


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
எனக்கு என்கிட்ட பிடிச்ச விஷயம் பெண்கள் என்னை ரொம்பவும் நேசிப்பார்கள். அதே போல் என்னை முதல் பார்வையில் பிடிக்காதவர்கள் , என் பேச்சை கேட்டு என்னை நேசிப்பவர்கள்தான் அதிகம் நான் வேலை செய்த கல்லூரியில் கூட எனக்கு நண்பக்ளாக பெண் நண்பிகளும் ,மாணவிகளும்தான் அதிகம். இறைவனுக்கு நன்றி...

பிடிக்காத விஷயம் மூக்கின்மேல் கோபம் வருவது.

அந்த கோபத்துக்கு உதாரணம், என் எதிரில் சென்ற பைக்காரன் போன் பேசிக்கொண்டே சட்டென பிரேக் போட நான் என்மனைவியுடன் பைக்கில் சென்று அவன் மீது சின்னதாக இடிக்க அவனிடம் சாரி கேட்டும் அவன் என் மனைவியை பார்த்தும் சீன் காட்ட அவன் சத்தத்தை கூட்ட நடு ரோட்டில் பைக்கையும் மனைவியும் விட்டு விட்டு, “ங்கோத்தா” இன்னைக்கு என் உருவுல உனக்கு சனிடி என்று கத்தி அவனை நோக்கி நான் ஓட ,அவன் பைக்கை போட்டு விட்டு ஓடியவன்தான் நான் பைக் எடுத்து கிளம்பும் வரை அவன் வரவேயில்லை.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என் மனைவிகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆட்டோ ஓட்டிய என்னை( படிப்பிலும் அழகிலும்) ஐயங்கர் பெண்ணான அவள் என்னிடம் அவள்காதலை வெளிப்படுத்தியது. என்னை அப்படியே ஏத்துக்கிட்டு, என்னை கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்தியது.சமுகத்தில் என்னை மதிக்கத்தக்க மனிதனாக மாற்றியது.
இந்த தடிமாடுவை இன்னும் குழந்தை போல் கொஞ்சுவது. என்னை ரொம்பவே நேசிப்பது. மிக முக்கியம் அவள் மனிதர்களை மனிதர்களாக பார்ப்பது.

பிடிக்காத விஷயம்...
சூழ்நிலை புரிந்து கொள்ளாமல் கோபம் கொள்வது.எத்தனை தடவை சமைத்தாலும் சாப்பாடு வெந்ததில் இருந்து உப்பு உரைப்பு வரை என் தலையாட்டலுக்கு காத்து இருப்பது.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் அம்மா, மர்ர்கழியில் அவளை கட்டிக்கொள்ளும் இதமான சூட்டு அனைப்பு, படிப்பும் இல்லை, கைத்தொழிலும் எதும் தெரியாது எப்படி நான் உருப்பாட போறேன்னு ஒரு பயம் என் மீது எப்போதும்.
என் பிள்ளை என்பிள்ளை என்று என்னை கொண்டாடியவள். கடைசிவரை வறுமையை மட்டும் ருசிபார்த்து மறைந்து போனவள்.


(எனது அம்மா ஜெயலட்சுமி வடமலை அவர்கள்)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெயிலின் தாக்கத்தால் லுங்கி“ மட்டும்”
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இரண்டு பாடல்கள் இப்போது எனது பேவரிட் ஒன்று லாடம் படத்தில் வரும் “சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்” என்ற பாடல் இரண்டாவது பசங்க படத்தில் வரும், “ஒரு வெட்கம் வருதே வருதே” என்ற பாடல்.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஹீரோ பேனா போல் தங்க மஞ்சள் மற்றும் கருப்பு

14.பிடித்த மணம்?

மல்லிகைமணம், மீன்குழம்பு மணம்.பெட்ரோல்மணம், உழைத்து கலைத்து உடலெங்கும் வியற்வை வழியும் போது என் அக்குளில் இருந்து வெளிப்படும் வியற்வை (நாற்றம் அது மற்றவர்களுக்கு) மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

புருனோ
நல்ல நண்பர்.சிரித்த முகத்துடன் எல்லா விஷயங்களையும் பேசும் பாங்கு, சமுகத்துக்கு பயன் உள்ள, தனக்கு தெரிந்த விஷயங்க்ளை பதிவு மூலம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல்

வண்ணத்து பூச்சி....

நல்ல நண்பர். பல விஷயங்களை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆவல். அவ்வளவே.

அக்னிப்பார்வை...
நல்ல நண்பர், பதிவர்வட்டத்தில் கடைசியாக பேசி பிரியும் நண்பர். பலவிஷயங்களை பற்றி சகஸமாக பேசும் திறன்.
இன்னும் நிறைய பேர் இருக்கின்றார்கள் அல்லது தொடர்பதிவில் எழுதி இருக்கின்றார்கள். ஏன் மேலே சொன்னவர்களே கூட எழுதி இருக்கலாம். அப்படி இருந்தும் நான் மேலும் சிலரை அழைப்பது, உண்மை தமிழன், நித்யகுமாரன், தன்டோரா,நையாண்டி நைனா, போண்றவர்களை எழுத சொல்வேன்.
(நண்பரின் குழந்தையுடன் நான்)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

பதிவர் கலையரசன். அவர் பதிவை விட என்மேல் அவர் வைத்திருக்கும்,மதிப்பு மரியாதை, அதனாலேயே இதனை எனோ தனோ என்ற எழுதாமல் நேரம் விழுங்க விழுங்க எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

17. பிடித்த விளையாட்டு?

பெண்கள் விளையாடும் அனைத்தும்...

18.கண்ணாடி அணிபவரா?
என் மனைவி, மச்சான்,மச்சினி போண்றவர்கள் பவருக்காக போடுவார்கள் நான் பைக்கில் போகும் போது மட்டும்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஸ்பீல்பெர்க்,ஜான் வூ, ஜாக்கிசான் இயக்கிய திரைப்படங்கள் போல்,20.கடைசியாகப் பார்த்த படம்?

தியேட்டரில் மனைவியுடன் ஏஞ்சல்ஸ் ஆப் டீமோன்,


டிவிடியில வால்-ஈ

21.பிடித்த பருவ காலம் எது?


மழைக்காலம் மற்றும் மார்கழி குளிரில் முழுதாக போர்த்திய படி
அம்மன் கோவிலில்ஒளிபரப்பும் பார்வேந்தே பார்வேந்தே என்ற திருவிளையாடல் ஒளிச்சித்திரம் கேட்டபடி படுத்து இருப்பது.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சில பதிவுகளை தவிர ஏதும் இல்லை.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
தோனும் போது மாற்றவேன் நான் முன்பே போட்ட முத்தழகு படத்தை டெஸ்க்டாப்பில் வைக்க, என் மனைவி இந்த கம்யூட்டர் தூள் தூளாக பார்க்கனும்னு உனக்கு ஆசை இருக்கா? என்றாள் இல்லை என்றேன் அப்ப இந்த படத்தை உடனே எடுத்துடு என்று செல்ல மிரட்டலில் கதி கலங்கி வேறு படத்தை வைத்தேன்.(அந்த முத்தழகுபடம் இதுதான்.... எனக்கு ரொம்ப பிடித்த படம் என் மனைவிக்கு பிடிக்காத படம்)

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ஹோம் தியேட்டரில் பாட்டு கேட்பதும் படம் பார்ப்பது, நாய் குலைப்பது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அதிக அளவு குறும்படங்கள் இயக்க ஆசை. ஆனால் அதற்க்கு நடிக்க பெண், பொருள் இரண்டம் தேவை.

மற்றது நான் நன்றாக பாடுவதாக நினைத்து பாட, என் மனைவி பிலீஸ்பா உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன் என்பாள்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இலங்கை பிரச்சனையில் தாய் தமிழர், மற்றும் இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் அலட்சி ய மனோபாவம்.28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம், கட்டுபடுத்த முடியாத கோபம். கோபத்தில் அகராதியில் இல்லாத வார்த்தைகளை தேடிப்பி்டித்து அந்த நேரத்தில் சினேகம் கொள்வது.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மலைவாசத்தளங்கள் எல்லாம்...30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எல்லோரும் மதிக்கதக்க பிரபலமான நபராக, பிரபல ஒளிப்பதிவாளராக, அல்லது மீடியாவில் எதாவது சாதனை செய்ய வேண்டும்.


31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

நெட்ல ஒக்காந்து டைப் அடிக்கறப்ப கேட்கற கேள்வியா இது?

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்க்கை ஒரு இலவச சர்க்கஸ் தேவை கொஞ்சம் கவனம்...அன்புடன்/ஜாக்கிசேகர்
39 comments:

 1. நல்லா இருக்குதுண்ணே..

  உங்கள் அம்மாவிடம் உங்களுக்கு இருக்கும் பாசம்
  அவர்கள் இப்போது இல்லாமல் இருக்கும் துயரம்.
  அப்புறம், உங்க மனைவியிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு..
  அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள் என்று
  உங்கள் பதிவின் பதில்களிருந்து தெரிகிறது!

  மகிழ்ச்சி எழுதியமைக்கும்.. உங்களை அறி்ந்து கொண்டமைக்கும்!!

  ReplyDelete
 2. டெஸ்க்டொப்ல மட்டும் வச்சா போதாதுன்னு..
  பதிவுல வேற அந்த படத்தை போஸ்ட் பன்றீங்களே..
  நீதான் பதிவுலகின் S.J.சூர்யா!

  (யப்பா.. வந்த வேல முடிஞ்சுது, காலையில பிளாஸ்டரோட போஸ் குடுங்க!)

  ReplyDelete
 3. எவ்ளோ பெரிய பதிவு.... சூப்பர்... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. //இப்போதெல்லாம் மாவடு,உசிலி,பொடி சாப்பாடு,பருப்புசாதம் , மோர்மிளகாய்,சாத்தமுது,கலவைசாதம்.அரைச்சிவிட்ட குழம்பு,மோர்குழம்பு,வத்தக்குழம்பு,புளிசாதம்,தயிர்சாதம்,எலுமிச்சைசாதம் என்று போட்டதை சாப்பிடுகிறேன்//

  குயில புடிச்சு...கூண்டில் அடச்சு கூவ சொல்லுகிற உலகம்!

  உங்க முக ஜாடை..உங்க அம்மாவோட பொருந்துது.

  ReplyDelete
 5. தொடர் பதிவில் எனது சுயபுராணம்...

  விருப்பம் இருப்பதால் வாசித்தேன்

  ReplyDelete
 6. உங்கள் அம்மாவிடம் உங்களுக்கு இருக்கும் பாசம்
  அவர்கள் இப்போது இல்லாமல் இருக்கும் துயரம்.
  அப்புறம், உங்க மனைவியிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு..
  அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள் என்று
  உங்கள் பதிவின் பதில்களிருந்து தெரிகிறது!

  மகிழ்ச்சி எழுதியமைக்கும்.. உங்களை அறி்ந்து கொண்டமைக்கும்!!--//

  நன்றி கலை மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 7. டெஸ்க்டொப்ல மட்டும் வச்சா போதாதுன்னு..
  பதிவுல வேற அந்த படத்தை போஸ்ட் பன்றீங்களே..
  நீதான் பதிவுலகின் S.J.சூர்யா!

  (யப்பா.. வந்த வேல முடிஞ்சுது, காலையில பிளாஸ்டரோட போஸ் குடுங்க!)//

  எஜமானியம்மா வேலைக்கு போய் இருக்காங்க. வந்த பதிவை படிச்சிட்டுதான் தெரியும் சேதி.

  ReplyDelete
 8. எவ்ளோ பெரிய பதிவு.... சூப்பர்... வாழ்த்துக்கள்//

  நன்றி கவிதை காதலன்

  ReplyDelete
 9. குயில புடிச்சு...கூண்டில் அடச்சு கூவ சொல்லுகிற உலகம்!//
  நன்றி ராஜ் உங்களுக்காவத என் வேதனை புரியுதே...

  ReplyDelete
 10. தொடர் பதிவில் எனது சுயபுராணம்...

  விருப்பம் இருப்பதால் வாசித்தேன்

  Wednesday, June 03, 2009 4:03:00 AM//

  நன்றி பிஸ்கோத்துபயல்

  ReplyDelete
 11. படித்ததில் பிடித்த சுயபுராணம்.

  உங்கள் அம்மாவின் மீதான பற்று பிரமிக்கவைக்கிறது

  ReplyDelete
 12. கலக்கல் பதிவு ஜாக்கி அண்ணாச்சி. உங்கள் அம்மா பற்றிய வரிகள் ரொம்ப டச்சிங். நிச்சயம் உங்கள் கனவுகள் ஒரு நாளில் நிறைவேறும். முத்தழகின் பெரியசைஸ் படம் கிடைக்கவில்லையா? ஹிஹிஹி

  ReplyDelete
 13. /*17. பிடித்த விளையாட்டு?

  பெண்கள் விளையாடும் அனைத்தும்...*/

  இதன் ஸ்பெல்லிங் எல்லாம் கரெட்டு தானா?
  இல்லை ___________ என்று மாத்தனுமா???
  * * * * * * * * *
  உங்களை நான் கூப்பிடலாம்னு இருந்தேன்.... அந்த "கலை" மட்டும் என் கைலே மாட்னா....????

  ReplyDelete
 14. /அந்த முத்தழகுபடம் இதுதான்.... எனக்கு ரொம்ப பிடித்த படம் என் மனைவிக்கு பிடிக்காத படம்//

  எப்படி பிடிக்கும் அடி விழமா தப்பிச்சிட்டிங்களே அதுவே பெருசு ..

  /உங்கள் அம்மாவிடம் உங்களுக்கு இருக்கும் பாசம்
  அவர்கள் இப்போது இல்லாமல் இருக்கும் துயரம்.
  அப்புறம், உங்க மனைவியிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு..
  அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள் என்று
  உங்கள் பதிவின் பதில்களிருந்து தெரிகிறது!//

  ரிப்பீட்டு

  ReplyDelete
 15. உங்களை பற்றி என் நினைப்பில் உள்ளவற்றிற்கு மாறாக இருக்கின்றது தங்கள் பதில்.

  அல்லது

  உங்களை பற்றி அதிகம் நினைத்தேனா என சரியாக தெரியவில்லை, ஆனால் இப்படி கற்பனை செய்ததில்லை.

  ReplyDelete
 16. உங்கள் தாயன்பு நெகிழ வைக்கின்றது.

  அவர்கள் படத்தையும் பதிவுல போட்டு, அதுக்கு கீழே இப்படி ஒரு படமா

  ஏன் அண்ணா ...

  ReplyDelete
 17. படித்ததில் பிடித்த சுயபுராணம்.

  உங்கள் அம்மாவின் மீதான பற்று பிரமிக்கவைக்கிறது--//

  நன்றி மதிபாலா தங்கள் பாராட்டுக்கு

  ReplyDelete
 18. கலக்கல் பதிவு ஜாக்கி அண்ணாச்சி. உங்கள் அம்மா பற்றிய வரிகள் ரொம்ப டச்சிங். நிச்சயம் உங்கள் கனவுகள் ஒரு நாளில் நிறைவேறும். முத்தழகின் பெரியசைஸ் படம் கிடைக்கவில்லையா? ஹிஹிஹி//

  நன்றி வந்தியதேவன், பெரியபடம் கிடைக்க அதை கிளிக்செய்து பார்த்துக்கொள்ளவும். அப்படி படம் போட்ட வீட்ல சாப்பாடு கிடைக்காது

  ReplyDelete
 19. *17. பிடித்த விளையாட்டு?

  பெண்கள் விளையாடும் அனைத்தும்...*/

  இதன் ஸ்பெல்லிங் எல்லாம் கரெட்டு தானா?
  இல்லை ___________ என்று மாத்தனுமா???
  * * * * * * * * *
  உங்களை நான் கூப்பிடலாம்னு இருந்தேன்.... அந்த "கலை" மட்டும் என் கைலே மாட்னா....????--//

  யோவ் நீ முன்னாடியே கூபபிட்டு இருக்கனும் கூப்பிட்டவனை போய் திட்டற. அதே போல் நீ எதையும் மாத்தவானாம் நன்றி நைனா

  ReplyDelete
 20. நன்றி சூரியன் மிக்க நன்றி பாராட்டுக்கு

  ReplyDelete
 21. உங்களை பற்றி என் நினைப்பில் உள்ளவற்றிற்கு மாறாக இருக்கின்றது தங்கள் பதில்.

  அல்லது

  உங்களை பற்றி அதிகம் நினைத்தேனா என சரியாக தெரியவில்லை, ஆனால் இப்படி கற்பனை செய்ததில்லை.//

  எப்போதுமே நாம் சில விஷயங்களுக்கு எதிர்பார்த்து போல் சிலது இருக்காது, நீங்கள் அந்தளவுக்கு என்னை பற்றி யோசித்தீர்களா? நன்றி ஜமால்

  ReplyDelete
 22. உங்கள் தாயன்பு நெகிழ வைக்கின்றது.

  அவர்கள் படத்தையும் பதிவுல போட்டு, அதுக்கு கீழே இப்படி ஒரு படமா

  ஏன் அண்ணா ...//

  தாய் படத்தை போட்டு கீழே இந்த படத்தையும் போட்டு 32 கேள்விகள் அம்மாவை பற்றிய கேள்வி எப்பேதே முடிந்து போய் விட்டது. இருண்டாவது இது அம்மாவை பற்றிய முழு பதிவல்ல...

  நன்றி ஜமால்

  ReplyDelete
 23. நன்றி மனிப்பாக்கம் தங்கள் தொடர் பின்னட்டத்தக்கும் பாராட்டுக்கும்

  ReplyDelete
 24. ஹலோ எச்சூஸ் மீ....
  என்னையும் யாரவது கூப்பிட்ட பிறகுதானே அண்ணே கூப்பிட முடியும்...

  ReplyDelete
 25. அப்புறம் நம்ம கடை பக்கம் உங்களை அடிக்கடி பார்க்க முடியலே...
  என்னோட வந்தேண்டா பால்காரன் பதிவுலே ஒரு எச்சரிக்கை போட்டிருக்கேன் பார்த்து சூதானமா நடந்துங்கங்க...சொல்லிபுட்டேன்

  ReplyDelete
 26. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான பதிவு.

  நன்றி ஜாக்கி என்னையும் அழைத்ததிற்கு. ஆந்திரா சென்று நேற்று தான் திரும்பினேன்.

  விரைவில் பதிவிடுகிறேன்.

  வாழ்த்துகள் ஜாக்கி..


  பி.கு: அடப்பாவி அந்த முத்தழகை விட மாட்டியா..??

  ReplyDelete
 27. கம்ப்யூட்டர் தூள் தூளாகப்போகுது சாக்கிரதை

  :))))))))))))

  பதிவு அருமை.

  ReplyDelete
 28. ரொம்ப பொறுமையா படிச்சேன்!.. நல்லா எழுதியிருக்கீங்க :-)

  ReplyDelete
 29. ஒளிவு மறைவு இல்லாத மனம் திறந்த பதிவு ஜாக்கி.

  என்ன ஒன்னு............இந்தப் பூனை விசயம்தான்.....

  அதுகள் எல்லோரோடும் நட்புப் பாராட்டாது. மனிதர்களில் இருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன் அதுகளுக்குத் தெரியுமாம்.

  வீட்டுக்குப் புதியவர் யாராவது வந்தால், பூனை சட்ன்னு அறையை விட்டு வெளியே போனால் அந்த நபரை நம்பிக்கையானவர் இல்லை(யாம்) என் பரிசோதனையில் இது உண்மைன்னும் தெரிஞ்சது.

  எங்க கோகியின் நடவடிக்கையும் இதுதான். அவன் நம்பாத ஆளை நானும் நம்பமாட்டேன்.

  தங்குஸுக்கு என் வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

  நல்ல மனுசனைக் கண்டுபிடிச்சு மனுசனா மாத்துனதுக்கு வச்சுக்கலாம்:-))))

  ReplyDelete
 30. ஹலோ எச்சூஸ் மீ....
  என்னையும் யாரவது கூப்பிட்ட பிறகுதானே அண்ணே கூப்பிட முடியும்...//

  உண்மைதான் நைனா அதான் நான் கூப்பிட்டு விட்டேனில்லை அப்புறம் என்ன?

  ReplyDelete
 31. அப்புறம் நம்ம கடை பக்கம் உங்களை அடிக்கடி பார்க்க முடியலே...
  என்னோட வந்தேண்டா பால்காரன் பதிவுலே ஒரு எச்சரிக்கை போட்டிருக்கேன் பார்த்து சூதானமா நடந்துங்கங்க...சொல்லிபுட்டேன்//

  கண்டிப்பா வருகிறேன்...

  ReplyDelete
 32. நன்றி தல//

  நன்றி புருனோ

  ReplyDelete
 33. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான பதிவு.

  நன்றி ஜாக்கி என்னையும் அழைத்ததிற்கு. ஆந்திரா சென்று நேற்று தான் திரும்பினேன்.

  விரைவில் பதிவிடுகிறேன்.

  வாழ்த்துகள் ஜாக்கி..


  பி.கு: அடப்பாவி அந்த முத்தழகை விட மாட்டியா..??///

  நீங்கள் வெளியூர் போய் விட்டிர்கள் என்பது நீங்கள் பீன்னுட்டம் போடதபோதே தெரிந்து விட்டது.

  ReplyDelete
 34. கம்ப்யூட்டர் தூள் தூளாகப்போகுது சாக்கிரதை

  :))))))))))))

  பதிவு அருமை.//

  என்ன செய்ய சிவா நமக்கு பதிவு போட வேனுமில்லை

  ReplyDelete
 35. ரொம்ப பொறுமையா படிச்சேன்!.. நல்லா எழுதியிருக்கீங்க :-)//

  நன்றி சென்ஷி தங்கள் பாராட்டுக்கும் , வாசிப்புக்கும்

  ReplyDelete
 36. எங்க கோகியின் நடவடிக்கையும் இதுதான். அவன் நம்பாத ஆளை நானும் நம்பமாட்டேன்.

  தங்குஸுக்கு என் வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

  நல்ல மனுசனைக் கண்டுபிடிச்சு மனுசனா மாத்துனதுக்கு வச்சுக்கலாம்:-))))//

  நன்றி துளசி டீச்சர் உங்கள் வாழ்த்துக்களை என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். பாராட்டுக்கு நக்றி டீச்சர்

  ReplyDelete
 37. ஊரில் இல்லாததால் உடனே பின்னூட்டமிட இயலவில்லை. தொடர் பதிவுக்கு என் பெயரை மறந்து விட்டீர்களே? நியாயமா?

  ஸ்ரீ....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner