(ladam)காதல்வயப்பட்டவரா அல்லது காமவயப்பட்டவரா? இந்த பாடலை கேளுங்கள்...


காதல் வயப்படு்ம் போதும், காம வயப்படும்போதும், முழுமையான போதை சமாச்சாரம் காதல் பாடல்களை கேட்பதுதான் என்பேன். இந்தக்கையில் சிகரேட் புகைய அடுத்த கையால் தொடையில் தாளம் போட்டபடி சிஸ்டத்தில் காதல் பாடல்கள் கேட்கும் எத்தனையோ நண்பர்கள் கூட்டத்தை நான் பார்த்து இருக்கி்றேன்.

இது எனக்கு கல்லூரி பேருந்தில் பயணம் செய்யும் போது இந்த பாடலை கேட்க சொன்னாள் என்னோட தினம்பயணம் செய்யும் பெண். முதலில் அந்த படம் ஓடவில்லை அதில் எந்த பாடலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது போலவும் தெரியவில்லை என்பதால் நான் அந்த பாடலின் மேல் கவனம் செலுத்தவில்லை.
ஒரு நாள் ஏதெச்சையாக கவனம் செலுத்த அந்த பாடல் என்னை மிகவும் வசீகரிக்க வைத்து விட்டது.

சில படங்கள் ஓடாது ஆனால் அதில் ஏதாவது ஒரு பாடல் பட்டையை கிளப்பும். அந்த வகையில் சமீபத்தில் வெளி வந்து பெரிய அளவில் வெற்றி பெறாத படம் லாடம் இந்த படத்தில் தரன் இசையில் ஒரு பாடல்...


சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க..
வரும் இரவுகளில்இன்னும் இன்னும் நான் கேட்க......
இதுவரையிலும் நான் என்னவில்லையே இனிமையை வாங்க
சில நொடிகளிலே உன்தன் அன்பிலேநான்...

என்ற தொடங்கும் பாடல் கேட்டுபாருங்கள் மெய் சிலிர்த்து போவீர்கள். காதலியோ, மனைவியோ இருவரில் யார் இருந்தாலும் மனதில் குதி ஆட்ட போடுவார்கள்.

நான் ரசித்த வரிகள் சில ....

ஆண் /எனக்கே என்னை தெரியாமல் இருந்தேன் அன்பே எதற்க்காக

சிரிப்பால் உலகை கொடுத்தாயே,இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே?

பெண்/ நான் உனக்கென இருப்பது தெரியாதா? எதை நான் சொல்வேன் பதிலாக?
இனிப்பாய் எனை நீ கவர்ந்தாயே, இயல்பாய் மனதை திறந்தாயே...

இப்படியே போகும் பாடலில்

ஆண் /அலையே இல்லா கடல் போல இருந்தேன் அன்பே எத்ற்க்காக?

கிடைத்தாய் கரையாய் நடந்தேனே..., கிழக்காய் உதித்தாய் விடிந்தேனே...

பெண்/ மழையே இல்லா நிலம் போல,பொறுத்தேன் அன்பே உனக்காக....

கொடுத்தாய் உனை நீ முழுதாக... எடுத்தாய் எனை நீ அழகாக என்ற அற்புதமான வரிகளை நீங்கள் ரசிப்பீர் என்று என்னுகிறேன்.

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.10109/




அன்புடன்/ஜாக்கிசேகர்

7 comments:

  1. அண்ணே, நேத்திக்கி இதப் பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல. ம்யூசிக் சேனல் எதுலயாச்சும் வந்தா நானும் இந்தப் பாட்ட ரசிச்சுக் கேப்பேன். படத்த இன்னும் பாக்கல.

    ReplyDelete
  2. நல்ல பாடல்..
    நானும் ரசிப்பேன்..

    ReplyDelete
  3. உங்க பதிவை படித்துவிட்டு, பாடலை கேட்க சென்றேன். oh my god, how did i miss listening to this song! it is reallllly toooooooo good!!

    ReplyDelete
  4. அண்ணே, நேத்திக்கி இதப் பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல. ம்யூசிக் சேனல் எதுலயாச்சும் வந்தா நானும் இந்தப் பாட்ட ரசிச்சுக் கேப்பேன். படத்த இன்னும் பாக்கல.-//

    பாடலை பத்தி பேசி இருந்தா, நிச்சயமா அதை பத்தி பேசி இருப்பேன் விஜய்

    ReplyDelete
  5. நல்ல பாடல்..
    நானும் ரசிப்பேன்..//

    நன்றி தீப்பெட்டி சமீபத்தில் வந்த பாடல்களில் இது ரொம்ப அற்புதம்

    ReplyDelete
  6. உங்க பதிவை படித்துவிட்டு, பாடலை கேட்க சென்றேன். oh my god, how did i miss listening to this song! it is reallllly toooooooo good!!//

    நன்றி தமிழ்

    ReplyDelete
  7. நல்ல ரசனை உங்களுக்கு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner