மீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்காட்சிகள்....


ரியாலிட்டி ஷோ என்று அழைக்கபடும்,குற்றம் நடந்நது என்ன? , நிஜம், நம்பினால் நம்புங்கள் போன்ற நிகழ்ச்சிகள்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது நாம் அறிந்ததே...


முதலில் வித்யாசமான குற்றங்களை பார்வையாளனுக்கு சொன்ன இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் பார்வையாளன் இந்த மாதிரி கூட நடக்குமா? இது அடுக்குமா? என்று ஆச்சர்யப்பட்டு போனான். நாளைடைவில் குற்றம் நிகழ்ச்சிகளில் அமானுஷ்யம் என்ற சொல் வந்ததில் இருந்து எல்லோருக்கும் தலைவலி ஆரம்பம் ஆனது...

நேற்று விஜய் டிவியில் செய்வினை, செய்யபாட்டுவினை போன்றவற்றை எப்படி செய்கின்றார்கள் என்று விலாவரியாக காட்டினார்கள், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகின்றது என்பதால் ரொம்ப விலாவரியாக காட்டினார்கள்....

எற்க்கனவே ஜாதகம் பார்த்து பொறுத்தம் பார்த்து கல்யானம் செய்து வைக்கும் நம் சமுகத்தில் ஜாதகம் ,தோஷம்,பரிகாரம் போன்றவற்றை நம்பி, திருமணவயதை தான்டியும் இன்னும் திருமணம் செய்து வைக்காமல் இருப்பதால், நிறைய இளைஞர்கள்தினமும் இரவில் லுங்கியை பிழிந்து கட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்... பெண்கள் பாடு சொல்லவே வேண்டாம்.

செய் வினை எப்படி செய்கின்றது அது எப்படி எல்லாம் பிறரை பாதிக்கின்றது என்பதை காட்டும் போது இந்த செய்திகளை படித்தவர்களும் நம்ப வாய்ப்பு இருக்கின்றது... எற்க்கனவே எதை தின்னால் பித்தம் தெளியும் என்று தெரு தெருவாக அலையும் சமுகம், இப்போது இது போன்ற முட நம்பிக்கைகளை தொலைக்காட்சியில் பார்த்தாள்...?????

“நடக்காததையா காட்டுவாங்க” என்று சொல்லி மேலும் பலபைத்தியக்காரதனங்கள் அறங்கேற கிரமபுறங்களிலும் ,நகர்புறங்களிலும் அதிக வாய்ப்பு உண்டு...

உங்களுக்கு நினைவு இருக்கலாம் சில மாதங்களுக்கு முன்பு வரை,கிராமப்புரங்களில் தலைச்சன் பிள்ளைகளை, பெற்ற அப்பன்களே நரபலி கொடுத்தார்கள், காரணம் அப்போதுதான் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கை.

இது யாராலோ எப்போதோ ஊதிய கட்டுக்கதை இன்றும் பல இளையதலைமுறையை காவூ வாங்கி வருகின்றது....

என்னை பொறுத்தவரை நான் எழுத்தாளர் சுஜாதா கட்சி...நிருபிக்கபடாத எந்த விஷயத்தையும் என் மனம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை.
அப்படி செய்வினையும், செய்யபாட்டு வினையும் உண்மையென்றால் ராஜபக்சேவுக்கு வைக்கலாம், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு வைக்கலாம், எதிர்கட்சி தலைவருக்கு வைக்கலாம் என்று அடிக்கிகொண்டே போகலாம்...




பேய்பிடித்து இருப்பதாக இன்னமும் நம்பி மனநலம் பிழன்றவர்களை போதிய மருத்துவம் பார்க்காமல் ,மொத்தி எடுக்கும் சமுகம் நம்முடையது. இந்த வசியம்,செய்வினை போன்றவற்றை டிவியில் பார்த்து எத்தனை குடும்பம் அழியப்போகின்றதோ? அல்லது எத்தனை புருடா மந்திரவாதிகள் அண்ணா நகரிலும் , அசோக்நகரிலும் பிளாட் வாங்க போகின்றார்களோ?????

அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்....


விவேக் சொல்வது போல் இனி எத்தனை பெரியார் வந்தாலும் நம் சமுகத்தை திருத்த முடியாது...



நிழற்படம்
அன்புடன்/ஜாக்கிசேகர்

(ஓட்டு போட மறவாதீர்)

20 comments:

  1. உண்மை.. ஏற்கனவே இது போன்ற விஷயங்கள் நம் சமூகத்தில் ஊறிப் போய் கிடக்கின்றன.. இதில் தொல்லைக்கட்சிகள் எண்ணை ஊற்றும் வேலையை செய்வது மகா கேவலம்..

    ReplyDelete
  2. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..!

    ReplyDelete
  3. இல்லாததை இருப்பது போல சொன்னல் ஒரு curiosity வரும். ஊடகங்கள் காசாக்க இது ஒரு காரணம்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  4. இந்த மூட நம்பிக்கையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதல்லே... உங்க பிளாக்லே, சைடு பாரிலே வருகிற நடிகைகளை கொஞ்சம் "மூட"நம்பிக்கை வைங்க...
    அண்ணே....

    ReplyDelete
  5. ஜாக்கி!பிளாக் மேஜிக் எனப்படும் பில்லி,சூனியம் என்பவை இந்தியாவில் சட்டப்படி குற்றம் என நினைக்கிறேன்.தெளிவுபடுத்துங்கள்.ஆனால் வளைகுடாவில் இந்த மாதிரி செய்வது சட்டப்படிக் குற்றம்.ஆனால் சட்டத்தையும் மீறி செய்து மாட்டிக்கொண்டால் களிதான்.அப்படி ஒரு சிங்களப்பெண்ணை நான் அறிவேன்.

    சில தினங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் காட்டியதாக ஒரு சாமக் கோடங்கிகள் காணொளி ஒரு இடுகையில் காண நேர்ந்தது.இந்தமாதிரி நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வருவது எதைச்சொன்னாலும் நம்புறாங்கப்பா மக்களுக்கு நல்லதல்ல.

    ReplyDelete
  6. // அப்படி செய்வினையும், செய்யபாட்டு வினையும் உண்மையென்றால் ராஜபக்சேவுக்கு வைக்கலாம், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு வைக்கலாம், எதிர்கட்சி தலைவருக்கு வைக்கலாம் என்று அடிக்கிகொண்டே போகலாம்...
    //

    அப்பிடி சொல்லுங்க...

    இந்தியாவில் மாத்திரமின்றி இலங்கையில்,யாழ்ப்பாணத்தில் இந்த செய்வினை சூனியம் போன்றவற்றில் நம்பிக்கையுடன் உள்ளார்கள்...

    அத்துடன் கிழக்குப்பகுதியான மட்டக்களப்பு பகுதியில் இன்னும் அதிகமாம்.

    ReplyDelete
  7. Instead of watching these shows, we can write some more mokkai posts or read some good posts..

    //
    நேற்று விஜய் டிவியில் செய்வினை, செய்யபாட்டுவினை போன்றவற்றை எப்படி செய்கின்றார்கள்

    ReplyDelete
  8. //
    லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு வைக்கலாம்,
    //
    அடடா இது முன்னமே தெரிஞ்சிருந்தா, பாஸ்போர்ட் ஆபீஸ்-ல பல பேருக்கு வைச்சிருப்பேனே? ஹீ ஹீ! ;-)

    ReplyDelete
  9. உண்மை.. ஏற்கனவே இது போன்ற விஷயங்கள் நம் சமூகத்தில் ஊறிப் போய் கிடக்கின்றன.. இதில் தொல்லைக்கட்சிகள் எண்ணை ஊற்றும் வேலையை செய்வது மகா கேவலம்..--//

    பாண்டியன் அந்த நிகழ்ச்சி பார்த்த போது அவ்வளவு கோபம் வந்தது எனக்கு...

    ReplyDelete
  10. நன்றி டக்ளஸ், வண்ணத்துபூச்சி, தமிழன்,

    ReplyDelete
  11. இந்த மூட நம்பிக்கையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதல்லே... உங்க பிளாக்லே, சைடு பாரிலே வருகிற நடிகைகளை கொஞ்சம் "மூட"நம்பிக்கை வைங்க...
    அண்ணே....//

    நைனா உனக்காகதான் அந்த படமே

    ReplyDelete
  12. சில தினங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் காட்டியதாக ஒரு சாமக் கோடங்கிகள் காணொளி ஒரு இடுகையில் காண நேர்ந்தது.இந்தமாதிரி நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வருவது எதைச்சொன்னாலும் நம்புறாங்கப்பா மக்களுக்கு நல்லதல்ல./=/

    உண்மைதான் ராஜநடராஜன்

    ReplyDelete
  13. இந்தியாவில் மாத்திரமின்றி இலங்கையில்,யாழ்ப்பாணத்தில் இந்த செய்வினை சூனியம் போன்றவற்றில் நம்பிக்கையுடன் உள்ளார்கள்...

    அத்துடன் கிழக்குப்பகுதியான மட்டக்களப்பு பகுதியில் இன்னும் அதிகமாம்.//
    தர்மா எல்லா தமிழர்களும் அப்படிதான்

    ReplyDelete
  14. Instead of watching these shows, we can write some more mokkai posts or read some good posts..

    //
    நேற்று விஜய் டிவியில் செய்வினை, செய்யபாட்டுவினை போன்றவற்றை எப்படி செய்கின்றார்கள்//


    நன்றி தமிழ் நெஞ்சம சில வேலைகளில் இதனை பார்த்து தொலைய வேண்டி இருக்கின்றது என்ன செய்ய..???

    ReplyDelete
  15. //
    லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு வைக்கலாம்,
    //
    அடடா இது முன்னமே தெரிஞ்சிருந்தா, பாஸ்போர்ட் ஆபீஸ்-ல பல பேருக்கு வைச்சிருப்பேனே? ஹீ ஹீ! ;-/=/

    நன்றி ஜோ, டாக்டர் புருனோ...

    ReplyDelete
  16. அருமையான செய்தி நான் இதுபோன்ற கருமத்தை எல்லாம் பார்ப்பதில்லை.

    // அப்படி செய்வினையும், செய்யபாட்டு வினையும் உண்மையென்றால் ராஜபக்சேவுக்கு வைக்கலாம், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு வைக்கலாம், எதிர்கட்சி தலைவருக்கு வைக்கலாம் என்று அடிக்கிகொண்டே போகலாம்...
    //

    :)))))))))))
    ROTFL

    ReplyDelete
  17. எற்க்கனவே ஜாதகம் பார்த்து பொறுத்தம் பார்த்து கல்யானம் செய்து வைக்கும் நம் சமுகத்தில் ஜாதகம் ,தோஷம்,பரிகாரம் போன்றவற்றை நம்பி, திருமணவயதை தான்டியும் இன்னும் திருமணம் செய்து வைக்காமல் இருப்பதால், நிறைய இளைஞர்கள்தினமும் இரவில் லுங்கியை பிழிந்து கட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்... பெண்கள் பாடு சொல்லவே வேண்டாம்.//

    நல்லா சொல்லியிருக்கீங்க நண்பரே!
    கேமராவுடன் இருக்கீங்களே!!
    ஒரு டிஜிடல் எஸ்.எல்.ஆர் கிடைக்குமா?

    ReplyDelete
  18. Tv Media want to make money . . at any cost . . .thats it . .

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner