
1965 ஆம் ஆண்டில் வியட்நாமின் ரகசிய ஆயுத கிடங்குகளை அழிக்கின்றது அமேரிக்க ராணுவம் அப்போது கடற்படை விமானியாக பணியாற்றுபவன்
Dieter Dengler
இவனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ரெஸ்க்யூ டவுன்....இதில் பிரதான பாத்திரத்தில்
Christian Bale நடித்து இருக்கின்றார்...
அதாவது ரகசியமான நடவடிக்கை ஆதலால் குடும்பத்தினர் யாருடனும் கடிதம் மற்றும் போன் தொடர்பு வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.. அமேரிக்கா தலமை அதிகாரிகள், அது மட்டும் இல்லாமல் எதிர்பாராத விதமாக, அங்கும் மாட்டும சூழல் ஏற்பட்டால், எப்படி எல்லாம் அந்த அடர்ந்த காட்டில் தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கபடம் காட்டி அவர்களை வீயட்நாமுக்கு அனுப்புகின்றார்கள்.

வியட்நாமின் அழகான வயல்வெளிகளுக்கு நடுவில் இருக்கும் ரகசிய ஆயுத கிடங்குகளை எவுகனை வீசித் தகர்கையில் டென், விமானம் குண்டு பட்டு நிலைகுலைந்து வியட்நாம் வயல் வெளியில் விபத்துக்குள்ளாகின்றது...
வியட்நாம் வீரர்கள் அவனை பிடித்து பல கொடுர சித்தரவதைகள் செய்கின்றார்கள்... போர்கைதியாக எதிரியிடம் பிடிப்ட்டால் அவன் நிலமை என்னாகும் என்பதே கதை.....

படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்...
டென் தங்கி இருக்கம் கொட்டடியில் இருந்து அவன் தப்பிக்கும் முயற்ச்சிகள் மிக மிக அற்புதமான காட்சிகள்....
அதை விட இந்த படத்தின் பெரும்பாலான படப்பி்டிப்பு நடந்த இடங்கள் எல்லாம் தாய்லாந்தின் கிராமபுர பகுதிகள்...
மிக மிக அற்புதமான ஒளிப்பதிவில் பச்சை பசேல் கிராமங்கள் கவிதை...

சாப்பாடு ஏதும் இல்லை பசி உயிர் போகின்றது எதிரிகளிடம் இருந்து தப்பிக்க உயிர் வாழ வேண்டும் அதற்க்கு உடலில் தெம்பு வேண்டும்...பக்கத்தில் போகும் பாம்பை பிடித்து பச்சையாக சாப்பிடுவது பகீர் ரகம்.
Christian Bale மாட்க்கொண்டு தவிக்கும் கொட்டடிகாட்சிகள் இயல்பாய் இருக்க வேண்டும் என்பதற்க்காக, நம் சியான் சேது விக்ரம் போல் உடம்பை பட்டினியால் குறைத்து நடித்து இருக்கின்றார். அவர் டெடிக்கேஷனுக்காகவாவது படத்தை பார்க்க வேண்டும்....
கடைசியாக தன் நண்பர்கள் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க? எனக்கு மீன் இறைச்சி வேண்டும் என்கிறான்... அந்த அளவுக்கு பட்டினியால் நொந்து போயிருப்பான்...

Directed by Werner Herzog
Produced by Elton Brand
Steve Marlton
Written by Werner Herzog
Starring Christian Bale
Steve Zahn
Jeremy Davies
Music by Klaus Badelt
Cinematography Peter Zeitlinger
Editing by Joe Bini
Distributed by Metro-Goldwyn-Mayer
Running time 126 minutes
Language English
Budget $10,000,000
Gross revenue $7,037,886
அன்புடன்/ஜாக்கிசேகர்
ஓட்டுப்போட மறவாதீர்கள்
mee Firstu.
ReplyDeleteNaalaikku vanthu mulusum padikiren.
இந்தியாவில் ரிலிஸ் ஆகிவிட்டதா நண்பரே ....
ReplyDeletemee Firstu.
ReplyDeleteNaalaikku vanthu mulusum padikiren.//
நன்றி நைனா
இந்தியாவில் ரிலிஸ் ஆகிவிட்டதா நண்பரே//
ReplyDeleteதெரியவில்லை நண்பரே
இந்த படம் பார்க்க வேண்டும்..
ReplyDeleteஇந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம் என்பது என் கட்சி.
ReplyDeleteசிறையில் சிக்கி சின்னாபின்னமாகி சிதிலமடைந்தும் சற்றும் மனம் தளராமல் வேதாளத்தை தோளில் வைத்து அலையும் நம்ம விக்கிரமாதித்தன் போல நம்ம hero படத்தில் போராடுவது அட்டகாசம்.
அன்பு நித்யன்
ஜாக்கி சேகர் இந்த படத்தை பரிந்துரைத்தமைக்கு நன்றி
ReplyDeleteஇன்று தான் பார்த்தேன்.. ரொம்ப நல்ல படம்..இடையில் கொஞ்சம் போர் அடித்தாலும் கடைசி 20 நிமிடம் நம்மை கட்டி போட்டு விடுகிறது....
மிகவும் மெலிந்து போய் பேசவே திராணி இல்லாமல் தள்ளாடி நடித்து கலக்கி இருக்கிறார்..