(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் பாட்டில்...
சரியாக பதினைந்து வருடங்களுக்கு முன் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிகுடித்தேன் என்ற சொன்னால் வாயால் மட்டும் அல்ல வேறு ஏதாவது ஆலும் சிரிப்பார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு கூட வாட்டர் பாக்கெட் வாட்டர் பாட்டில் போன்றவை இருந்தது ஆனால் பெரும்பாலான மக்களால் அறியப்பட்டு பயண்படுத்தபட்டது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்தான்.
சென்னைக்கு என்று பெரிய கல்சர் என்று எதுவும் கிடையாது. அது பிழைப்பு தேடி வந்த அனைத்து சமுக மக்களின் கலாச்சாரத்தின் சங்கமம். அனால் தென்மாவட்டத்தில் நீங்கள் எந்த வீட்டிக்கு போனாலும் வந்து இருக்கும் விருந்தாளிக்கு வீட்டு பெண்கள் முதலில் செம்பில் தண்ணீர் கொடுத்த பிறகு அப்புறம்தான் நலம் விசாரிப்பார்கள்.
அப்படி நலம் விசாரிக்க கொடுக்கப்பட்ட தண்ணீர் இப்போது தமிழகம் எங்கும் பாக்கெட்டுகளில் அடைத்து ஒன்றரை ரூபாய்க்கு விற்க்கப்படு்கின்றது. தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் கேன் வாட்டர் கொடுக்கப்டுக்கின்றது.
சென்னையில் நடுத்தர வீடுகள் எல்லாம் கேன் வாட்டர் வாங்கி குடிக்கும் பழக்கத்துக்கு எப்போதோ வந்து விட்டார்கள். சமையலுக்கு மட்டும் கார்ப்ரேஷன் வாட்டர் அல்லது பில்டர் வாட்டர், வீட்டு உறுப்பினர்கள் குடிக்க கேன் வாட்டர்.
எப்படியோ பொதுமக்களை காசு கொடுத்த தண்ணீர் வாங்க வைத்த உத்தியில் பண்ணாட்டு நிறுவணங்கள் வெற்றி பெற்றுவிட்டன என்பதே நிஜம்.
எப்பாடு பட்டாவது நல்ல குடிநீர், நல்ல சாலைகள் வழங்குவதுதான் எந்த அரசாக இருந்தாலும் அதன் கடமை. அனால் நம் ஊரில் கார்ப்ரேஷன் தண்ணி குடிச்சா வாந்தி பேதி வந்திரும், சில நேரங்களில் குடிநீர் குழாயில் சாக்கடை கலந்து விடுகின்றது, அந்த நீரை குடித்ததால் வாந்தி பேதி வரும். அப்புறம் எந்த மக்கள் சுத்தம் இல்லாத கார்ர்ரேஷன் குழாய் தண்ணீர் குடிப்பார்கள்?.
இன்னமும் அதே கார்ப்பரேஷன் தண்ணீர் குடித்து, பிள்ளையை கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்க வைத்து உடம்புக்கு நோவு என்றால் கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரியில் த/அ மாத்திரை வாங்கி சாப்பிட்டு உயிர் வாழும் வெள்ளந்தி மக்கள் இன்றும் நிறைய பேர் இருக்கின்றார்கள்.
அவர்களை பற்றி எப்போதாவது வாட்ட்ர்பாட்டிலில் தாகம் தீர்க்கும் மேல்தட்டு சமுகம் நினைத்து பார்த்து இருக்குமா? அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த சொல்லி கேட்கவில்லை, அவர்கள் வாழ்வு ஆதாரமான குழர்ய்களில் நல்ல குடிநீர் கிடைக்க, அதாவது கழிவு நீர் கலக்காத குடிநீர் எப்போதும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
பொதுவாக வாட்டர் பாக்கெட் பயன்பாடு என்பது சாமான்ய மக்களும் பயண்படுத்தும் பொருளாக மாறி விட்டது. என்பதே நெருடும் உண்மை. இது இந்த பதினைந்து வருடகாலத்தில் புதிதாய் வந்த மாற்றம்.
அதைவிட முக்கியம் முன்பெல்லாம் பாருக்கு போனால் சரக்கு கலப்பதே தெரியாது. குடிமகன்களின் அலப்பரை மட்டுமே காதில்கேட்கும் இப்போதெல்லாம் சரக்கு ஒரு கட்டிங் வாங்கி கூடவே ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி அதன் முனையை வாயால் கடித்து துப்பி வாங்கிய கட்டிங் கிளாசில் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சரக்கு கலக்கும் சத்தம், கால ஓட்டத்தில் பதிதாய் வந்தது என்பேன்.
அன்புடன்/ஜாக்கிசேகர்
குறிப்பு / எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போட்டு என்னை உற்சாகபடுத்த மறவாதீர்
Labels:
கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை
Subscribe to:
Post Comments (Atom)
//அதன் முனையை வாயால் கடித்து துப்பி வாங்கிய கட்டிங் கிளாசில் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சரக்கு கலக்கும் சத்தம் கால ஓட்டத்தில் பதிதாய் வந்தது என்பேன்//
ReplyDeleteஇந்த ஒரு விசயத்துக்கு தான் வாட்டர் பாக்கெட் யூஸ் ஆகுது
அண்ணே.. முன்னாடி எல்லாம், சரக்கை வாட்டர் கலக்காமயா அடிச்சானுங்க?
ReplyDeleteகொடலு, பெடலாயிருக்குமே!
அப்ப வாட்டர் பாக்கேட் வந்தது நல்லதா? கெட்டதா?
70 %த்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கான காரணம் சுகாதாரமற்ற குடி நீர் என்றால் மிகை இல்லை.ஒரு வகையில் பணம் கொடுத்தாலாவது தூய நீர் கிடைக்கிறதே என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
ReplyDeletejeevaflora
காசு குடுத்தாக் கூட நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. கேனிலும் Dupilcate நிறைய. தண்ணீர் பற்றிக் குளிர்வான பதிவு.
ReplyDeleteஸ்ரீ....
என்ன செய்யறது ஜாக்கிண்ணா கேடு கெட்ட அரசாங்கம் இருக்கிற வரைக்கும் இப்படித்தான். இன்னும் கொஞ்ச நாள்ல ஆக்ஸிஜனும் காசு குடுத்து வாங்க வேண்டி வந்தாலும் வந்துடும் :((((((((((
ReplyDeleteவாட்டர் பாக்கெட் டேஞ்சர் என்கிறார்களே?
ReplyDeleteஜாக்கி.........சென்னையில் வாட்டர் பாக்கெட்டை முதலில் அறிமுகபடுத்தியவர்கள் team கம்பெனிதான்.இன்றும் கூட வாட்டர் பாக்கெட்டை டீம் ஒன்னு கொடுங்க என்று கேட்கிறார்கள்.மற்றபடி டாஸ்மாக் பாரில் வாட்டர் பாக்கெட் வாங்குவதை விட ராவாக அடிப்பதே உ(கு)டலுக்கு நல்லது.
ReplyDeleteசாமானியனுக்கு குடிதண்ணீர் கிடைக்காததை பற்றி அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை? அவர்களுக்கு என தனியாக மினரல் வாட்டர் நிலையமே வீட்டில் இயங்குமாக இருக்கும்.
ReplyDeleteஆனால் நம் மக்களும் சாமானியப்பட்டவர்களா என்ன?
கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் கிடைக்கும் தண்ணீரையும் இசடத்துக்கு வீணாக்க வேண்டியது...பிறகு தண்ணீர் இல்லை தண்ணீர் இல்லை என்று புலம்ப வேண்டியது.....
thank you thandora murali pattampoochi
ReplyDeletecan waterlaum duplicate vanthiruchi:-(
ReplyDeletesorry late aaki pochu... naalaikku vanthu kudikkiren.... sorry padikiren.
ReplyDeleteவாட்டர் பாக்கெட் தடை செய்யப் பட வேண்டிய ஒன்று...
ReplyDeleteதண்ணீரெல்லாம் விற்பனைக்கு வந்த பிறகு அரசாங்கத்துக்கு பெரிய நிம்மதி...
முரளி வாட்டர் பாக்கெட் டேன்ஜர்தான். அதில் எந்த சந்தேககும் இல்லை
ReplyDelete/அதன் முனையை வாயால் கடித்து துப்பி வாங்கிய கட்டிங் கிளாசில் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சரக்கு கலக்கும் சத்தம் கால ஓட்டத்தில் பதிதாய் வந்தது என்பேன்//
ReplyDeleteஇந்த ஒரு விசயத்துக்கு தான் வாட்டர் பாக்கெட் யூஸ் ஆகுது//
நன்றி அத்திரி
அண்ணே.. முன்னாடி எல்லாம், சரக்கை வாட்டர் கலக்காமயா அடிச்சானுங்க?
ReplyDeleteகொடலு, பெடலாயிருக்குமே!
அப்ப வாட்டர் பாக்கேட் வந்தது நல்லதா? கெட்டதா?//
நல்லது கெட்டதா அல்லபதிவு இதெல்லாம் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை அவ்வளவுதான்
70 %த்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கான காரணம் சுகாதாரமற்ற குடி நீர் என்றால் மிகை இல்லை.ஒரு வகையில் பணம் கொடுத்தாலாவது தூய நீர் கிடைக்கிறதே என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
ReplyDeletejeevaflora//
நீங்கள் சொல்வது உண்மைதான் அனால் காசு இருப்பவனுக்கு மட்டுடே நல்ல குடிநீர் கிடைக்கும் என்பது ஏற்புடையது அல்ல...
காசு குடுத்தாக் கூட நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. கேனிலும் Dupilcate நிறைய. தண்ணீர் பற்றிக் குளிர்வான பதிவு.
ReplyDeleteஸ்ரீ....//
நீங்கள் சொல்வது உண்மைதான் ஸ்ரீ
என்ன செய்யறது ஜாக்கிண்ணா கேடு கெட்ட அரசாங்கம் இருக்கிற வரைக்கும் இப்படித்தான். இன்னும் கொஞ்ச நாள்ல ஆக்ஸிஜனும் காசு குடுத்து வாங்க வேண்டி வந்தாலும் வந்துடும் :((((((((((
ReplyDeleteSaturday, May 30, 2009 11:41:00 PM//
நன்றி மங்களுர் சிவா,காசு கொடுதது ஆக்சிஜன் வாங்கும் காலம் விரைவில் வரும்