இந்த தளத்தில் விளம்பரம் செய்ய அனுகவும்..ஜாக்கிசேகர்/09840229629 மெயில் .. dtsphotography@gmail.com

Thursday, July 16, 2009

(SLIVER) 18++அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவரா? அவசியம் படிக்கவும்



நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் குடி இருக்கின்றீர்கள். அது 35 மாடி உள்ள கட்டிடம் அது. அதில் உள்ள எல்லா வீட்டின் அறையிலும்,பெட்ரூம்,பாத்ரூம் உள்பட கேமரா வைத்து ஒருவன் கண்கானித்தால் எப்படி இருக்கும்...?பகீர் என்று இருக்காது?
அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்பது என்பது பால்யகால வெளிப்பாடு, அது சுவற்றில் ஒன்னுக்கு அடிக்கும் தூரத்தை கணக்கிட்டு ,ஏன் தூரம் கம்மியாக இருக்கின்றதே, அடுத்தவனுடையது எப்படி இருக்கின்றது? என்று அறியும் ஆவல் பாலய்காலத்து சங்கதிகள்... இருப்பினும் இந்த விழைவு படிப்படியாக வயதுக்கு வந்த பிறகு அது பெண்பால் பக்கம் போகின்றது...

எதிர்பால் உடலமைப்பு எப்படி இருக்கும்?, அதன் அங்க அமைப்பு எப்படி இருக்கும்? என்ற விழைவும்,இயற்கையின் ஆதார சுருதியும் அதை கிளறிவிட... அதை பற்றிய தேடல், ஒரு பெண்ணை முழுதாய் கானும் வரை ஆனை துரத்திக்கொண்டே இருக்கின்றது.

அந்த தேடல் ஆர்வம் ஒரு போதும் முற்று பெறுவதில்லை, அடுத்தவர் அந்தரங்கத்தை ரசிக்காத மனிதனே இந்த உலகில் குறைவு... இது அதிகபடியாக போகின்ற போதுதான்... அவன் இந்த விஷயத்துக்கு முழு நேரமும் செலவிடுகின்றான்... சதா சர்வகாலமும் அதனை பற்றிய எண்ணத்துடன் இருக்கின்றான்....அடுத்தவர் அந்தரங்க காட்சிகளை , வீடியோ கேமராவில் அல்லது செல்போனில் படம் பிடிக்கின்றான்....

அடுத்தவர் அந்தரங்கத்தை படம்பிடித்து மகிழ்ச்சிகானும்,அப்படிபட்ட ஒருவனை பற்றிய கதைதான் ஸ்லீவர் படத்தின் கதையும்...

ஸ்லீவர் படத்தின் கதை இதுதான்


ஸ்லீவர் அப்பார்மென்ட் என்பது ஒரு 35 மாடி அடுக்குமாடி குடியிருப்பு அதில் ஒரு எழுத்தாளர்Carly Norris( ஷெரன் ஸ்டோன்) 35 வயது பெண் குடி வருகின்றார்.... அவள் குடி வந்த 35 வது மாடி பால்கனி யிலுருந்து ஏற்க்கனவே அங்கு குடியிருந்தவள் மேலே இருந்து விழுந்து சாகின்றாள்...அவள் அந்த அப்பார்மென்ட் வீட்டில் இருக்கும் போது எல்லாம் அவளுக்கு அவளை கண்கானிப்பது போன்ற பிரமை வருகின்றது... அதே போல் அவள் அந்த குடியிருப்பில் இருக்கும் போதே சில விரும்பதகாத நிகழ்வுகள் நடக்கின்றன...

அவளுக்கு அதே அப்பார்ட்மென்டில் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவர் கொலையாகின்றனர், அதே அப்பார்ட்மன்டில் வசிக்கும்Zeke (Baldwin) பழக்கம் ஏற்படுகின்றது... அவனோடு உடலுறவும் வைத்துக்கொள்கின்றாள்.... ஒரு கட்டத்தில் அந்த அப்பார்ட்மென்டில் இருக்கும் எல்லா வீட்டிலும் ரகசிய கேமரா இரு்கின்றதை கண்டு பிடிக்கின்றாள்... அப்புறம் என்ன? வாயை திறந்து கதை கேட்காம போய் படத்தை வாங்கி பாருங்கைய்யா....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

அந்த காலத்து அழகான ராட்சசி நடித்தபடம்...இந்த ராட்சசி படட்ம் நான் ஷரனுக்கு கொடுக்க காரணம் பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தை பார்த்வர்களுக்கு தெரியும்...

1993ல் படம் வெளி வந்தது....

இந்த படத்தை நான் சென்னை சத்தியத்தில் பார்த்தேன்....இந்த படத்துக்கு, நிறைய கணவன் மனைவிகள் வந்து பார்த்து ரசித்தார்கள்....வயதுக்கு வந்தவன் ஆண்மகன் மட்டுமே என்று தப்பு கணக்கு நான் போட்ட காலம் அது... உடலுறவு காட்சிகளை கணவனோடு வந்த பெண்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்த போது எனக்கு முதலில் ஆச்சர்யம்... அவர்கள் கொஞ்சமாவது வெட்கத்தில் குனிவார்கள் என்று ஆர்வத்தோடு அந்த பெண்ணின் பின் சீட்டில் இருந்து பார்த்துகொண்டுதான் இருந்தேன்...ம்ஹும்.எந்த சலனமும் இல்லை... எனக்குதான் சற்று கூச்சம்... அப்போதைய என் மனது ஆப்பாயில் போல் உருபெறாமல் ரெண்டாம் கெட்டானாக இருந்த நேரம்....அதன் பிறகு செக்சில் ஆண்பெண் சமம் என்பதை வாழ்க்கை புரிய வைத்தது......


இந்த படத்தின் ஸ்கிரீன் பிளே ரைட்டர்Joe Eszterhas,தான், பேசிக் இன்ஸ்டிங்ட் படத்துக்கும்...

இந்த படத்தின் ஷரன் ஷவர் குளியலும், அதன் பிறகு அவளுக்கு குளியல் அறையில் ஏற்படும் விரகதாபமும் அதற்க்கு கேமரா விளையாட்டும், அதற்க்கான எக்ஸ்பிரஷனும் உலக பிரசித்தம்...

பெரிய மனிதர்கள் என்று நாம் நினைப்பவர்கள் அந்தரங்கத்தை உற்று பார்த்தால் ரொம்ப கலிஜாக இருக்கும் என்பதை உணர்த்தும் படம்...

இந்த படத்தி்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை சுட்டிகாட்டி இருப்பார்கள்...

ஷரன் நடிக்கும் கூடல் காட்சிகளின் போது காம போதையை இவர் அளவுக்கு உலகில் எனக்கு தெரிந்து எந்த நடிகையாலும் ஏற்ற முடியாது.... அவ்வளவு இன்வால்வ்மென்ட்....

இந்த படம் சினிமா விமர்சகர்களால் வெகுவாய் குத்தி கிழிக்கபட்டது....

இந்த படத்தில் ஆனின் முன்னபக்கத்தை காட்டி,பிரச்சனை ஆகி ,அப்புறம் ரீ ஷூட் செய்தார்கள்...
Directed by Phillip Noyce
Produced by Robert Evans
Written by Novel:
Ira Levin
Screenplay:
Joe Eszterhas
Starring Sharon Stone
William Baldwin
Tom Berenger
Music by Howard Shore
Cinematography Vilmos Zsigmond
Editing by Richard Francis-Bruce
William Hoy
Distributed by Paramount Pictures
Release date(s) May 21, 1993
Running time 108 min.


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..

Wednesday, July 15, 2009

(THE ARMOUR OF GOD) உலகில் என்னை வசீகரித்த ஒரே நடிகர் ஜாக்கிதான்...

ஒரு படத்தை நீங்கள் எத்தனை முறை பார்ப்பீர்கள்... ஒரு முறை அல்லது இரண்டு முறைஅல்லது 5 முறை... நான் இந்த படத்தை தியேட்டரில் 45 தடவை பார்த்தேன்... ஏன் அப்படி என்று இதுவரை தெரியவில்லை... இது போல் வேற எந்த படமும் என்னை வசீகரிக்கவில்லை...அப்புறம் டிவிடியில் பார்த்தவை கணக்கில் அடங்காதவை. அப்படி ஒரு படம் ஒருவனை வசியம் செய்யுமா?

இந்தனைக்கும் எனக்கு அவ்வளவு ஆங்கில அறிவு கிடையாது... எனது நண்பன் லட்சுமிநாரயணன் சுவற்றில் இரண்டு குருவி படம் வரைந்து, இரண்டும் பேசுவது போல் எழுதினான் ஒரு குருவி ஐ லவ் யூ என்றது பக்கத்து குருவி ஐ லைக் யூ என்றது... எனக்கு லைக்யூ என்றால் என்ன? என்ற அர்த்தம் தெரியாது... எனது எட்டாம் வகுப்பில் ஐலைக்யூ என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தம், தெரியவில்லை என்றால் என் கல்விதகுதியை சற்றே யோசி்த்துக்கொள்ளுங்கள்... அப்படி பட்ட எனக்கு அந்த ஆங்கலிபடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது....

அந்த நடிகன் குரங்கை விட வேகமாக இயங்கினான்... காற்றிலே லாஜீக்காக பறந்து எதிரிகளை பந்தாடினான்... கார் சேசிங் ஆகட்டும், அல்லத பைக் ஓட்டவதாக இருக்கட்டும் எதிலும் ஒரு லாவகம் இருந்தது...முகத்தில் எப்போதும் ஒரு குழந்தை தனமான புன்னகையை நிரந்தரமாக வைத்து இருந்தான் அவன் பாடி லாங்வேஜ்கள் என்னை வெகுவாய் கவர்ந்தன... என்னை அவன் வெகுசீக்கரத்தில் வசிகரித்தான்...


அவன் நடிகன்தான் என்றாலும் வேலையை இஷ்டப்பட்டு செய்தான் அந்த ஜாப் சேட்டிஸ்பேக்ஷன் எனக்கு அவனிடத்தில் பிடித்து இருந்தது... உயிர் போய்விடும் என்று தெரி்யும் அளவுக்கான காட்சிகளில்கூட டூப்போடுவதை அவ்ன தவிர்த்தான் .. மிக முக்கியமாக அவன் இளமை துள்ளலும், அந்த சுறுசுறுப்பும் என்னை அவன் அடிமையாக்கியது... அந்த ஹாங்காங் நடிகனின் பெயர் ஜாக்கிசான்... என் பெயரில் பாதியை எடுத்து விட்டு அவன் பெயரை வைத்துக்கொண்டதும் அவன் உழைப்பின்மேல் உள்ள காதாலால்தான்.... அப்படி பெரிய திரையில் மட்டும் 45 முறை நான் பார்த்த அந்த படம் ஜாக்கிசானின், தி ஆர்மர் ஆப் காட் இந்த படத்துக்கு பிறகுதான் எனக்கு ஆங்கில படத்தின் மேல் காதல் வந்து மொழி புரியாமல் பார்த்து பார்த்து இப்போது லேசாக புடிபடுகின்றது...


திஆர்மர் ஆப் காட் படத்தின் கதை இது தான்....
ஸ்பில் பெர்க்கின் இன்டியான ஜோன்ஸ் படங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம்... ஒரு பழங்கால பொக்கிஷத்தை பற்றிய தேடல்தான் கதைகரு... இந்த படமும் அப்படித்தான்... பழங்கால மதி்ப்பு மிக்க 5 முக்கிய பொருட்கள் தேி செல்கின்றான்... அதில் ஒரு பொருளான கத்தியை ஆப்பிரிக்காவின் பழங்குடினிரிடம் இருந்து மீட்கின்றான மீதம் 4 பொருட்களை ஆர்மர் ஆப் காட் எனும் சாமியார் கூட்டத்திடம் இருக்கும் மீத பகுதிகளை மீட்க ஜாக்கி தேடிச்செல்வதும் அதனால் ஏற்படும் இடர்பாடுகளை சுவைபடவும் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து சொல்லி இருப்பார் ஜாக்கி...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


இந்த படத்தின் ஒவ்வோறு காட்சியும் எனக்கு அத்துபடி.... எல்லா சீன்களும் என் நினைவுகளில்....

இந்த படம் 1986ல் வெளி வந்தது...


இந்த படத்தின் முதல் காட்சியில் ஜாக்கி பழங்குடியினரிடம் வாள் எடுத்து சண்டை போட்டு தப்பிக்கும் காட்சியில் ஒரு மரத்தை பிடித்து தாண்டும் போது மதல் ஷாட்டில் ஓகே... ஜாக்கி அந்த காட்சியை ரீடேக் எடுக்க மரக்கிளை முறிந்த பதினைந்து அடி உயரத்தில் இருந்து கீழே விழந்து மண்டையை உடைத்து கொண்டதும்.... அதன் 8 மணி நேரம் ஆப்பேரஷன் இருப்பினும் காது ஓரத்தில் நிரந்தரமாக இருக்க அதனை பிளாஸ்டிக் வைத்து அடைத்தனர்... ஒரு பக்க காத கேட்கும் திறன் கொஞ்சம் அவுட்....

எல்லா படத்திலும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தியேட்டரில் பாதி கூட்டம் இருக்காது ஆனால் ஜாக்கி படங்களில் மட்டும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தேசியகீதம் போட்டது போல மந்தித்துக்கு கட்டுபட்டது போல எல்லா மக்களும் நின்று அவர் படத்தில் பட்ட கஷடங்களை மக்களுக்கு தெரிவிப்பார்....

என் குறுபடங்கள் எல்லாவற்றிலும் இந்த முறையை விடாது பின் பற்றுகின்றேன்... அதனால் எனக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம்.. அது தனி கதை..

ஜாக்கியின் இந்த செயலால் அவரை எந்த இன்ஷுர் நிறுவனமும் அவரை சேர்த்தக்கொள்ள தயங்குகின்றன....அவர் உடம்பில் அடிபடாத இடமே இல்லை எனலாம்....

டூவின் பிரதர் படத்தை தவிர ஜாக்கி எந்த படத்திலும் சிகரேட் புகைப்பது போல் காட்சி வைத்து இல்லை... ஏனெனில் தன்னை பார்த்து எந்த ரசிகனும் கெடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் ...

அவர் போல் வேலைக்காக உயிரை கொடுத்து நடிக்கும் நடிகர்கள் இந்த உலகில் குறைவு...

இந்த படத்தில் கிளைமாக்சில் அந்த 4 பெண்களுடன் போடும் சண்டையும் அதில் ஒரு பெண்ணை மார்பில் குத்தி விட அந்த காட்சியை அப்போது எல்லோரும் பரபரப்பாய் பேசினர்... அதன் பிறகு அந்த பெண்களை வீழ்த்துவது அற்புதமான ஆக்ஷன் பேக்....

ஜாக்கி பப்புள் கம் கையில் வைத்து வில்லனிடம் பேசியபடியே சட் சடடென வாயில் போடும் அழகே அழகு...அதை தமிழில் யாரும் செய்து பார்க்கவில்லை...

ஜாக்கி நண்பனாக வரும்Alan Tam கேனத்தனமாக செய்யும் காட்சிகளில் சிரித்து மகிழலாம்...

கடைசிகாட்சியில் பலூனில் பறந்து வரும் போது, படத்தில் இடம் பெறும் அந்த கடைசி பாடல் ஜாக்கிதான் பாடுவார் என்று நினைக்கிறேன் ... அது யூடியுபில் இரந்தால் தேடி பிடித்து லிங்க் கொடுக்கவும் , அந்த பாடல் என் ஆல்டைம் பேவரிட்....

தன் நண்பனையும் காதலியையும் தப்பிக்கைவைக்க அவர் போடும் சண்டைகாட்சிகள் அபாரம்....

இந்த படத்தில் கார் இரண்டு பாலங்களுக்கு தாண்டும் அதே போல் ஒரு பைக்கும் தாண்டுவது போலான காட்சி மெய்சிலிர்க்கும் ரகம்....

பாமை பத்த வைத்து விட்டு அவர் செய்யும் காமெடிகள், தேர்ந்த நகைச்சுவையாளானால் மட்டுமே செய்ய முடியும்....படத்தின் பெரும்பாலான காட்சிகள் யுகோஸ்லோவாகியாவில் படம் பிடிக்கபட்டன...

எதி்ரிகளிடம் உதை வாங்கி அதன் பிறகு திருப்பி அடிக்கும் ஒரே ஹீரோ ஜாக்கி மட்டும்தான்...

அமெரிக்காவின் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டோலன் நடித்த படமான ராக்கி 5 பாகத்தின் வசூலை இந்த ஒரு படம் எடுத்துவிட்டதாக சொல்லுவார்கள்...

Directed by Jackie Chan
Eric Tsang
Produced by Leonard Ho
Chua Lam
Written by Jackie Chan
John Sheppard
Eric Tsang
Starring Jackie Chan
Alan Tam
Maria Dolores Forner
Rosamund Kwan
Music by Michael Wandmacher
Cinematography Bob Thompson
Distributed by Golden Harvest
Toho
Release date(s) 1986
Country Hong Kong
Yugoslavia
Croatia
Language Cantonese

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

உங்கள் மகளுக்கு 14 வயதா? எச்சரிக்கை...அவசியம்...


உங்கள் பெண்ணுக்கு 12 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே... நீங்கள் அவளை கண்கானிப்பது நல்லது என்றே கருதுகின்றேன்... அவளோடு அன்பு பாராட்டுங்கள்...மிகச்சீக்கரமாக அவள் மனதை கெடுக்கும் விதமாக பல விஷயங்கள் நம் சமுகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது...

கலாச்சாரத்தில் போ் போனவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் நம் இந்தியாவில் பஞ்சாப்பில், திருமணத்துக்கு முன் சோதனையிடப்பட்ட பெண்களில் 16 பேர் கர்பம் என்று தெரியவந்துள்ளது....நீங்கள் கலாச்சார முகமூடி வேண்டுமானல் போட்டுக்கொள்ளுங்கள்... அவர்களை இரண்டும் கெட்டானாக வளர்க்காதீர்கள்....

வலைதளத்தில் இரண்டு வீடியோக்கள் பார்த்தேன் ஒன்று ...

14 அல்லது 15 வயது மதிக்கத்க்க பெண் பிள்ளை. அது யுனிபார்முடன் இருக்கின்றது அவன் அந்த பெண்ணிடம் ஏதோ சொல்ல, மெல்ல எல்லா உடைகளையும் களைகின்றாள் மார்பு கச்சையை தவிர, அதன் பிறகு அந்த பெண்ணை அவன் இச்சைக்கு பயண்படுத்திகொள்கின்றான்...அதன் பிறகு அந்த பெண்ணை அவள் வேண்டாம் என்று சொல்லியும் முழு நிர்வானமாக்கி ,காம போதையில் அந்த பெண்ணை திளைக்க செய்து அதை வீடியோ படம் எடுத்து வைத்து, அது இப்போது வலையுலகில் உலா வருகின்றது....

வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதுவும் இப்போது தெரியாது... ஏன் சம்மந்தபட்ட அந்த பெண்ணுக்கே அது பற்றி தெரிய வாய்பில்லை.. அவள் அப்பார்ட்மென்டடில் குடி இருக்கும் யாராவது வலையில் பார்த்து விட்டால்? அந்த வீடியோவை வைத்து மிரட்டியே அந்த பெண்ணைமனசாட்சி இல்லாதவர்கள் சாப்பிட்டு விடுவார்கள்...

சரி இதெல்லாம் மெல்தட்டு மக்களிடம் மட்டும்தான் நடக்கும் இது கீழ் தட்டு மக்களை ஏதும் செய்யாது என்று தயவு செய்து நினைக்காதீர்கள்... இந்த இரண்டாவது வீடியோ அந்த நினைப்பை தவிடு பொடியாக்கியது....

அது ஒரு அரசு பள்ளியின் மாடிபடிகட்டு. அதில் அந்த பெண் படிக்கட்டில் உட்கார்ந்து இருக்கின்றான்...அந்த பெண் பள்ளியின் சீருடை அணிந்து இருக்கின்றாள்...15 வயதுக்கு மேல் சொல்ல முடியாது... அந்த சின்ன பெண்ணை ஓரல் செக்சுக்கு அவன் உட்படுத்துகின்றான்... அவள் முதலில் மறுக்கின்றாள் பின்பு ஒத்துக்கொள்கின்றாள்..“அதன்” மேல் இருக்கும் நாற்றத்தில் அவளுக்கு வாந்தியே வந்து விடுகின்றது, அவன் கேமரா செல்போனை அவன் பக்கம் திருப்பி, தன் பராக்கிரமத்தை பறைசாற்றி ஒரு கேவலமான சிரிப்பு சிரிக்கின்றான்...


அந்த பெண் அனுபவித்தது காமம் அல்ல நரக வேதனை... இந்த செயல் மலம் அள்ளி அந்த பெண்ணை தின்ன செய்வதற்க்கு சமம்... இதில் கொடுமை என்னவென்றால் இனி அந்த வீடியோவை காட்டியே அந்த பெண் மிரட்ட படலாம்.... அவன் நண்பர்களுக்கு அவள் விருந்து வைக்கபடலாம்....

வலைதளத்தில் மட்டும்தானே இதனை பார்க்க முடியும் என்ன ஒரு 25 சதவீதப்பேர்தானே, என்று அலட்சியம் காட்டாதீர்கள்... இது போன்ற வீடியோக்கள் வலைதளம் மூலம் டவுன்ட்லோட் செய்யபட்டு தென் மாவாட்டங்களில் சிடியாகவும் விற்பனை ஆகின்றது.... பட்டி தொட்டி, எல்லாம் விஷக்காய்சல் போல் வெகு விரைவாய் பரவுகின்றது...


இன்னும் இது பற்றிய விழிப்புனர்வு நம்மவர்கள் மத்தியில் அதுவும் பெண்கள் மத்தியில் சுத்தமாக இல்லை...சில வாரங்களுக்கு முன் இது போன்ற கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டது....இன்னும் இது வெகுஜனமக்களுக்கு போய் சேர வேண்டுமாயின், தற்போதைக்கு தொலைக்காட்சி தொடர்களில் இது போன்ற கதை அமைப்பை வைக்கலாம்....

என் கல்லூரி பெண்களிடமும், எனக்கு தெரிந்த பெண்களிடமும் பேசிய போது அப்படியா? இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று முகத்தில் ஆச்சர்யம் காட்டுகின்றார்கள்... என்னை பொறுத்தவரை நமக்கு தெரிந்த பெண்களிடம், உறவு பெண்களிடத்தில் முதலில் விழிப்புனர்வு ஏற்படுத்துவோம்.....

எங்கோ, எப்படியோ, எதோ ஒரு தருணத்தில் அவள் தன்னை மறந்து ஈடுபட்ட காரியம்.... இப்போது அந்த செயல் வரலாற்று பதிவாக வலைவுலகில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது... அந்த பெண்ணின்தகப்பனையும் அந்த பெண்ணின் அம்மாவையும் சற்றே எண்ணிபாருங்கள்... எவ்வளவு பெரிய அவமானம் இது... வெளியில் தலைகாட்ட முடியாது....காதலித்து ஓடிப்போதலையே இன்னும் தேவிடியா தனத்துக்கு ஒப்பாக பேசி வரும் நம் சமுகம்....இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களை பார்வையால் பார்த்தே சாகடித்து விடுவார்கள்...

என்னதான் குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுத்தாலும்...கேமரா செல்போனை பற்றியும் உங்கள் வயதுக்கு வந்த பெண்ணுக்கும், வயதுக்கு வரபோகின்ற பெண்ணுக்கும் புரியவையுங்கள்....சின்ன பெண்கள்தான்... ஆர்வகோளாறு என்று நீங்கள் சொன்னாலும் 40 வயதை கடந்த பெண்களும் இதில் மாட்டிக்கொள்வதுதான் வேதனை... அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்....

குறிப்பு... உடைகளையும் முன் யோசியுகள் பெண்களே கட்டுரைக்கு சில விமர்சனங்கள் முன் வைக்கபட்டன...விரிவான விவரனை என்பதாக குற்றச்சாட்டு வைக்கபட்டது... அது உங்கள் கருத்து... எதை எப்படி, எழுதவேண்டும் ,எதோடு நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும்... இங்கு யாரும் எனக்கு பயிற்ச்சி எடுக்க வர வேண்டாம்....மிக முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த தளத்திற்க்கு அனுமதி இல்லை.... அதே போல் நான் நல்லவன் என்று ஒரு போதும் சொன்னது இல்லை... அந்த முகமூடி எனக்கு கனக்கச்சிதமாக பொறுந்துவதும் இல்லை....நான் கடைசிவரை நல்லவனாக முயற்ச்சிக்கின்றேன் அவ்வளவே...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Tuesday, July 14, 2009

(No Man's Land) (உலக சினிமா/ போஸ்னியா)போரில், மனிதாபிமானமற்ற கொடுர முகங்கள்...



இந்த பூமியில் டைனோசர் கொடி நட்டு மண்ணோடு மண்ணாக போனபிறகு, இந்த பூமியில் நாம் ஜனித்து வளர்ந்தது, அடித்துக்கொண்டு வாழ்ந்து வருவது வரலாறு... ஆனால் நாம் போடும் ஆட்டம் இருக்கின்றதே? யம்மாடி கொஞ்சம் நஞ்சம் ஆட்டம் அல்ல... அப்படி அடங்காமல் பேய் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றோம்...


என்னை தவிர இந்த உலகில் யாரும் இருக்ககூடாது என்ற மனநிலையில்தான் பல மனிதர்கள் சுய நலத்தோடு வாழ்கின்றார்கள்... பல நாடுகளும் அப்படித்தான்... தோ பக்கத்தில் இருக்கும் இலங்கை கூட அப்படித்தான், அப்புறம் அமெரிக்கா என ஏராளமான தேசங்கள் இப்படி பட்ட மனநிலையில் தான் இருக்கின்றன...

இதனாலேயே நாடுகளுக்கிடையே போர்கள் உருவாகின்றன.... அப்பாவிகள் கொல்லபடுகின்றார்கள்.... அதிபர்கள் டிவி பார்த்து டீ குடித்து விட்டு, செக்கரட்டரி உள்ளே என்ன கலர் போட்டு இருக்கின்றாள் என்று கவனித்து விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட போகின்றனர்....
அங்கே போர் முனையில் வீரர்கள் அடித்துக்கொண்டு சாகின்றார்கள்....

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் மரணம் வெகு நிச்சயம், ஆனால் மயக்கமடித்து விழுந்தவன் திரும்பவும் அந்த இடத்தை விட்டு எழுந்தால், வெடித்து சிதறி விடுவான் என்றால் எப்படி இருக்கும்???? அதுவும் அவன் உடல் பிஸ் பிசாக போய் வீடும். உடலை பக்கெட்டி வழித்து போட்டுதான் எடுத்து செல்ல வேண்டும்...சாவில் கோரமான சாவு... அப்படி ஒருவன் போர் முனையில் பாம் அருகில் விழுந்ததால் மூச்சையாகின்றான், மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் அவன் வெடித்து சிதறிவிடுவான் என்பதும், அவனுக்கும் அது தெரிந்தால் அவன் நிலை எப்படி இருக்கும் என்பதையும் அழகாக சொன்னபடம் நோ மேன்ஸ் லேண்ட்....
நோ மேன்ஸ் லேன்ட் படத்தின் கதை இதுதான்....

போஸ்னியா நாட்டுக்கும் செர்பிய நாட்டுக்கும் போர், போஸ்னியா பகுதிக்கும் சொ்பிய பகுதிக்கும் நடுவில் உள்ள பகுதி மனிதர்கள் வாழ தகுதியற்றது... ஏனென்றால் அது இரு நாட்டின் எல்லை கோடு... எப்போது வேண்டுமானாலும் பாம் போடுவார்கள்.....

அதனால் அந்த இடத்தில் மனிதர்கள் வாழ முடியாது... இரண்டு பக்கமும் பதுங்கு குழி அமைத்து அதில் இரண்டு தரப்பு ராணுவமும் சண்டை போட்டுகொண்டு இருக்கின்றது... அதில் போஸ்னிய பகுதியில் உள்ள பதுங்கு குழியில் நடந்த சண்டையில் போஸ்னிய வீரன் ஒருவனும், செர்பியன் வீரன் ஒருவனும் உயிர் பிழைக்கின்றார்கள்....இதில் செர்பியர்கள் பினம் என்று நினைத்து மல்லாந்து படுத்து கிடக்கும் ஒரு வீரனின் முதுகுக்கு கிழே கண்ணி வெடி பொருத்தி விடுகின்றனர்.... அதாவது போஸ்னிய வீரர்கள் இறந்து கிடப்பவனின் உடலை புரட்டினால் அல்லது இழுத்தால் அங்கு இருக்கும் எல்லோரும் உடல் சிதறி இறப்பார்கள்( என்ன ஒரு கொடுர எண்ணம்) அனால் கொஞ்சம் நேரத்தில் அவனுக்கு மயக்கம் தெளிய... அவன் எழுந்தால் அந்த பதுங்கு குழியில் நடந்த சண்டையில் உயிர் பிழைத்து இரண்டு பேரும், படுத்துகிடப்பனை சேர்த்து மூன்று பேரும் இறக்கவேண்டி வரும்.. இதில் உயிர் பிழைத்த செர்பிய வீரனும் இன்னோருவனும் சேர்ந்துதான் அந்த கன்னிவெடியை போஸ்னிய வீரன் முதுகுக்கு கிழே வைத்து இருப்பார்கள்... அதனால் போஸ்னிய வீரன் அந்த மொட்டை தலை செர்பியன் மேல் கோபத்தில் இருக்கின்றார்கள்...

இந்த செய்தி மீடியாவுக்கும்...யுனைட்டேட் நேஷன் போர்சுக்கு தெரிகின்றது, அதன் பின் யுயைட்டேட் போர்ஸ் படை வீரர்கள், இரு நாட்டு சம்மதத்துடன் அந்த இடத்துக்கு மீடியா வோடு செல்கின்றனர்...

படுத்துகிடந்தவன் முதுகுக்கு கிழே இருந்த பாம் அகற்றப்பட்டதா? அந்த பதுக்கு குழியில் மாட்டிக்கொண்ட மூவர் நிலை என்ன என்பதை வெண்திரையில் கான்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படம் 2001ல் வெளி வந்த படம்.....

போரின் மறுபக்கத்தையும் அதன் தனிமனித வேதனைகளை உளவியல் ரீதியாக சொன்ன படம்...

இரண்டு எதிரி நாட்டு வீரர்கள் ஒரு பதுங்கு குழியில் மாட்டிக்கொண்டாள்? எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையோடு சொல்லி இருக்கின்றார்கள்...

செர்பிய வீரன் தன்னை அறிமுகப்டுத்திக்கொண்டு போஸ்னிய வீரனிடம் கை கொடுக்க முயலா... நாம் என்ன பிசினசா பண்ண போறோம், நீ உன் பக்கம் போனதும் நான் என் பக்கம் போனதும் திரும்பவும் சண்டை போடதான் போறோம்... என்று கையை தட்டி விடும் காட்சி, அடிப்படை உண்மையை அக்குவேறாக சொல்லி இருக்கும் அந்த காட்சி சுகம்...

வெந்த புன்னில் வேல் பாய்ச்சும் மீடியாவை ஒரு புடி புடித்து இருக்கின்றார் இயக்குனர் Danis Tanović இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகும் போது அதனை ஒழுங்காக ஷுட் செய்தாயா? என அந்த லேடி ரிப்போர்டர் கேமராமேனிடம் கேட்கும் காட்சியும் அதனை அழகாக காட்சி படுத்திய விதமும் அழகு....


விடியலும் அதன் பின் நடக்கும் போர் காட்சியும் ஒளிப்பதிவுக்கு ஜே போட்ட இடம்...


இந்த படம் ரசிகர்களாலும், பட ஆர்வலர்களாலும் மிகுந்த பாராட்டை பெற்றது* Best Foreign Language Film, (2001) 74th Academy Awards
* Best Foreign Language Film, 2002 Golden Globe Awards
* Best Screenplay, 2001 Cannes Film Festival

இந்தபடம் ஆஸ்கார் விருதில், சிறந்த பாரின் லான்ங்வேஜ் கேட்டகிரியில் வெற்றி பெற்றது அந்த நேரத்தில் இதனோடு போட்டி போட்டு தோற்ற படம் ,நம்ம அமீர்கானின் லகான் திரைப்படம்தான்...

இந்த படத்தின் கிளைமாக்ஸ் கனத்த இதயத்தோடு இருக்கும்.... இங்கு சேவை மனப்பான்மை, நிதர்சன உண்மை, எல்லாம் மாறுபாடு கொண்டவை என்பதை படத்தின் கிளைமாக்சில் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருப்பார் இயக்குனர்...

இந்த படத்தை பார்த்தால் இரவில் உங்களுக்கு உறக்கம் வராது...அந்த படுத்துகிடந்தவனின் முதுகுக்கு கீழே இருக்கும் பாம் எப்போது வெடிக்கும் என்ற யோசனையுடன் படுத்து இருப்பீர்கள்....

படுத்துகிடந்தவன் இருமும் போது அவன் அசைந்து பாம் வெடித்து விட்டால் என்ன செய்வது? என்ற அவன் அசையாமல் பார்த்துகொள்ளும் காட்சிகள்.. அருமை...


என்னதான் உதவி செய்ய முன்வந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலை வரும் பாருங்கள்... அதனை இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உங்களுக்கு உணர்த்தும்...

Directed by Danis Tanović
Produced by Čedomir Kolar
Written by Danis Tanović
Starring Branko Đurić
Rene Bitorajac
Filip Šovagović
Distributed by MGM Distribution Co.
Release date(s) 12 May 2001 (premiere at Cannes)
7 December 2001 (NYC only)
14 December 2001 (LA only) 17 May 2002 (UK)
Running time 98 mins
Language Bosnian / French / English / German

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(ANBESIVAM) அன்பேசிவம்.. பார்த்தே தீர வேண்டிய படம்...




சென்னை ஏஅர்எஸ் கார்டனில் நான் பந்தம் சீரியலுக்காக செகன்ட் யூனிட் கேமராமேனாக, பைட்சீன் எடுக்குக்கொண்டு இருந்தேன் அந்த சீரியல் அப்போது ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிகொண்டு இருந்தது...அதன் முதல்யூனிட் கேமராமேன் பாலமுரளி,இப்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்மனி சீரியல் பண்ணுகின்றார்..அவருக்கு அப்போது நான் அசிஸ்டென்ட் என்னை செகன்ட்யூனிட் செய்ய சொன்னார்....

நான் கிரேனில் பைட் சீன் எடுத்துக்கொண்டு இருக்கும் போதே 4 தண்ணீர் லாரிகள் வந்து நின்றன,அங்கு பள்ளிகூட செட் ஒன்று இருக்கும். கொஞ்சம் நேரத்தில் அங்கு சினிமா சூட்டிங் நடப்பதற்க்கான ஆயுத்தபணிகள் நடக்க ஆரம்பித்தன...சில மணி நேரங்ககளில் நடிகர் மாதவன் வந்ததார்...அதன் பிறகு சுந்தர்சீ வர அதன் பிறகு கமல். நான் கமலை அப்போதுதான் மிக மிக நெருக்கத்தில் பார்க்கின்றேன்... சந்தர் சீ டயலாக் பேப்பரை கொடுத்து விட்டு கை கட்டிக்கொண்டு நிற்க்க கமல் அதை பார்வையிட்டார்...
அதன் பிறகு எனக்கு அவலை இருந்தகாரணத்தால்நான் அந்த இடத்தை விட்டு அகன்றேன் அன்பே சிவம் படம் வந்த பிறகு அது எந்தத காட்சி என்று பார்த்த போது.. கையில் பணம் இல்லாமல் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கமல் மாதவன் ஷுவை விற்று விட்ட வருவாரே அந்த ஹோட்டல் சீன் அதுதான் அன்று படமாக்கப்பட்டது....

40 கோடி கொடுத்து வைர கீரிடம் சாமிக்கு கொடுப்பது கடவுளை கானும் வழியல்ல..மதத்தின் பெயரால் பாம் வைப்பதும்,மசூதி இடிப்பதும் கடவுள் கானும் செயல் அல்ல.. சகமனிதனின் துன்பத்தில் பங்கு கொள்வதே கடவுளை கானும் வழி.. என்பதை செவிட்டில் அறை விட்டு இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள்...
எல்லோரிடமும் கடவுள் இருக்கின்றார், எங்கும் இருக்கின்றார், எந்த இடத்திலும் இருக்கின்றார்...எல்லோரும் எல்லோருக்கும் நல்லதே செய்யும் போது... எல்லோருமே கடவுளாக மாறிவிட்டால், அப்புறம் எதற்க்கு கோவில் குளம்,பூஜைபுனஸ்காரம் எல்லாம்???

சக மனிதன் துன்புறுவதை பார்த்தால் நீ மனிதனே அல்ல...என்று சொன்ன படம் நாம் ஒரு வகையில் மிருகம்தான்..சகமனிதர்கள் அல்லல் படுவதை ஒரு போதும் நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை...

அன்பேசிவம் படத்தின் கதை இதுதான்....

ஒரிசாவில் அனை கட்டும் போது விபத்தில் இறந்த 100 தமிழர்களுக்கு ஊனமுற்ற காமரேட் நல்லசிவம் (கமல்) 32 லட்சம் நிவாரண தொகை செக்கோடு,ஒரிசா புவனேஸ்வரில் இருந்து கிளம்ப, வேறு வேலை விஷயமாக புவனேஷ்வர் வந்த விளம்பர பட இயக்குனர் அன்பரசுவும் (மாதவன்), நல்லசிவமும் எதிர்பாராமல் தவறான புரிதலோடு சந்திக்க... எதையுமே பணத்தால் சாதிக்கலாம் என்ற அன்புவுக்கு எதையும் பாசத்தின் மூலம் சாதிக்கலாம் என்ற நல்லலசிவமும் எதிர் எதிர் துருவங்கள்... அவர்கள் அவர்களுடைய சித்தாந்தங்கள், தர்க நியாங்களை இருவரும் வெளிபடுத்திக்கொள்கின்றார்கள்...

இருவரும் சென்னைக்கு வர வேண்டும். ஒரிசாவில் மழை வெள்ளம்... பிளைட் ,ரயில் எல்லாம் கேன்சலாக, அவர்கள் எந்த எந்த மார்கமாக சென்னை வந்தார்கள்? இதில் அன்பரசுவுக்கு சென்னையில் திருமணம் வேறு நடக்க இருக்கின்றது... அவன் திருமணத்துக்கு சரியான நேரத்துக்கு போய் சேர வேண்டும்...ஒரிசாவில் இருந்து சென்னை வருவதற்க்குள் அவர்கள் இருவரும் தங்களை எப்படி வெளிபடுத்திக்கொண்டார்கள், கடைசியில் அவர்கள் இருவரும் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதையும் ,ஊனமுற்ற அன்பரசுவின் காதல் பிளாஷ் பேக்கையும், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் , பிரச்சனைகளை மிக மிக அழகாக செல்லுலாய்டில் வடித்து இருக்கின்றார்கள்... மீதியை வெண்திரையில் காண்க.....

பார்த்த படம் தானே முழு கதையும் சொன்ன என்ன? என்று உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கின்றது...விமர்சனத்தில் அதாவது அது உலகம் சுற்றும் வாலிபன் படமாக இருந்ததாலும் முழுக்கதையையும் சொல்லக்கூடாது... அதுதான் விமர்சன தர்மம்...

அக்னி நட்சத்திரம் பார்த்த படம்தான் ஆனால் நேற்றைய பின்னுட்டத்தில் இராமலிங்கம் என்பவர் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை.... அது போல் இன்னும் ஏராளம் பேர் இருக்கின்றார்கள்... இன்னும் ஒரு சினிமா கூட பார்க்காத பலர் இருக்கின்றார்கள்... எப்போதாவது அவர்களுக்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தால் அவர்களுக்கு இந்த தளம் உதவும்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம்"Planes,Trains and Automobil” என்ற ஆங்கில படத்தின் ஆதார தழுவல்தான் இந்த படம்தான் என்றாலும் ஈயடிச்சான் காப்பியாக இந்த படம் காப்பி அடிக்கபடவில்லை....

கம்யுனிசம் என்பவர்கள் தெருவில் உண்டிகுலுக்குவோர் என்று முன்னாள் முதல்வர் சட்டமன்றத்தில் நக்கலடித்தவர்...அவர்கள் அப்படி அல்ல, இன்றளவும் விளிம்புநிலை மனிதர்களுக்காக தன் சுக துக்கங்களை இழந்து போராடும் சகாக்கள் நிறைய என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கின்றார்கள்...

கம்யுனிசம் என்பது என்ன,எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பது, எல்லோரும் பல்லக்கில் ஏறிவிட்டால் பல்லக்கை யார் தூக்குவது, அதற்க்காக முதாலாளி வர்க கூட்டம் சக மனிதனை மேலே வராமல் தடுக்க, அதனை எதிர்த்து குரல் கொடுப்பது கம்யுனிசம்...

கம்யுனிசம் என்பது சக மனிதன்பால் அன்பு செலுத்துவது என்பதை அழகாக புரியவைத்து இரக்கின்றார்கள்... அனால் இன்று அவர்கள் சித்தாந்தங்கள் காலத்தின் கட்டாயத்தால் சற்றே நீர்த்து போய் இருக்கலாம்...அவர்கள் சரியான புரிதல் இல்லாமல் சரிவை சந்தித்து விட்டார்கள்.... அவர்கள் மட்டும் இல்லை என்றால் முதலாளி வர்கம் நம்மை முழுதாய் முழுங்கிவிடும்.... அதை இவ்வளவு அழகாக சொல்ல முயற்சித்து இருக்கின்றார்கள்...

எம் என்சி இந்த படம் சகட்ட மேனிக்கு சாடுகின்றது ஆனால் எம்என்சி மட்டும் வரவில்லை என்றால் இத்தகைய வளர்ச்சியோ, வேலைவாய்ப்போ இருந்து இருக்காது....என்பது மறுக்க முடியாத உண்மை....

கமல் காமரேட்டாக வாழ்ந்து இருக்கின்றார்...ஒரு கம்யுனிச ஆபிஸ் எப்படி இருக்கும், அதில் தோழர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை,எங்கள் ஊரில் ஓலக்கொட்டாய் கட்சி ஆபிசை திரையில் பார்த்த மகிழ்ச்சி எனக்கு...

படத்தின் பலம் கமலின் திரைக்கதையும் மதனின் வசனங்க்ளும்தான்....
ஒரு தீவிரவாதி என்னை போல அசிங்கமா இருக்கவேண்டாம், உங்களை போல் அழகா இருப்பான்..என்று கமல் ஏர்போர்ட்டில் மாதவனிடம் பேசுவதாகட்டும்...

தாஜ்மகால் இடிந்துடுச்சின்னா காதல் செத்துடுமா? அது போல சோவியத் ரஷ்யா சிதறிடிச்சின்னா கம்யுனிசம் சிதறிடுமா?கம்யுனிசம் என்பது ஒரு உணர்வு என்று, ரயில்வே ஸ்டேஷனில் சொல்வதாகட்டும்...

கடைசியில் கமல் நடந்து போகையி்ல் கமல் எழுதிய கடிதத்தில் வரும் வசனங்கள் என் நெஞ்சை கொள்ளை கொள்ள செய்தவை...“பறவைகளுக்கும் துறவிகளுக்கு நிரந்தரமான சரனாலயம் இருப்பதில்லை நானும் ஒரு பறவைதான் நிரந்தரம் என்பதையே அசைளகர்யமாக கருதும் பறவைநான்.... அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்.... உங்களை சந்தித்து கூட அப்படி பட்ட ஒரு ஆச்சர்யம்தான்... ச்சே என்ன வரிகள்... அதனால்தான் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது...

தன் தொப்பை,தொப்புள், மார்பு என்று அழகாக பல படங்களில் வெளிபடுத்திய கிரன் இந்த படத்தில் நன்றாக நடிக்கவும் செய்து இருப்பார் அதற்க்கு உதாரணம் கமலோடு தீயேட்டர் கேபினில் அவர் அழுது பேசும் வசனம் மிகவும் அற்புதம்...அதற்க்கு பக்க பலமாக கிரனுக்கு பாடகி அனுராதா ஸ்ரீராம் பின்னனி குரல் கொடுத்து இருப்பார்...

அதே போல் உமா ரியாஸ்கான், கமல் மேல் அவர் வைத்து இருக்கும் காதலை அவர் வெளிபடுத்தும் இடம் ரொம்ப அழகு.. எவ்வளவு திறமையான நடிகை...எவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ்...உமாரியாஸ்கான் போன பின்பு பவுன் என்ற அந்த இளைஞர் உமாவை நினைத்து ஒருதலை காதலாக அழுவதும், அவளை நினைச்சு இங்க அழுவறதுக்கு உன்னோட கேராளா வந்து உன் கல்லயானத்துலயாவத கலந்துக்கி்றேன் என்று சொல்லி, டிரஸ் எடுத்து வைக்கட்ட வேனாமா என்று உரிமையோடு கேட்கும் அந்த சீன் ரொம்ப அருமை...
தியேட்டர்ஆப்பரேட்டர் எடிட்டர் பாடுபாவிங்க அந்த சீனை படத்துல இருந்து தூக்கிட்டாங்க... அப்புறம் நான் அதை டிவிடியிலதான் பார்த்தேன்..,


வித்யாசாகரின் இசையில் என் ஆல்டைம் பேவரிட்கமல் குரலில் யார் , யார் சிவம் அன்பே சிவம் என்ற பாடல்...

பிரபாகரின் கலை மிக அற்புதம் ரயில் விபத்து செட்,புவனேஷ்வர் ரயில் ஸ்டேஷன், போன்றவைகள் எல்லாம் செட் போட்டு எடுத்து இருப்பார்கள்....

இரு காட்சியில் வந்தாலும் யுகி சேது அற்புதமாக செய்து இருப்பார்....அதே போல் கார்டுனிஸ்ட் மதன் ஒரு சீனில் தலைகாட்டி இருப்பார்...

தன் பிளாஷ் பேக் காட்சி சொல்ல ரயி்ல் ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்து சொல்லுட் காட்சியில் ஆலம் விழுதுகளில் மழை நீர் சொட்டிக்கொண்டு இருக்க கமல் கதை சொல்ல அந்த இடமும் கமலும் மாதவனும் ஆம்புலன்சில் அந்த பையன் உயிருக்கு போராடும் போது ரோட்டில் ஓரத்தில் உட்கார்ந்து பேசம் காட்சிகளில் ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு அருமை... அதே போல் அந்த இரு காட்சிகளின் போது பேசப்படும் வசனம்.... சூப்பர்....

ஒரு நாயால் பள்ளதாக்கில் தலைகுப்புற கவிழும் பஸ், அதில் கமலும் ஒரு பெண் பிள்ளையும் தப்பிக்கின்றார்கள்... அவருடன் வந்த பவுன் ஈடுபாடுகளில் சிக்கி இருக்க, பவுனை காப்பாற்ற போய்தான் கம்லுக்கு இந்த கோரம் ஏற்படுகின்றது... அதன் முதல் காட்சியில் பஸ்சில் வரும் போது அந்த பவுன் கேரக்டர் கமல் மேல் சாய்ந்து தூங்குவார் அப்போது, பவுன் மேல் வெயில் படும் அதனை தடுப்பார்...

கமல் அந்த பவுன் என்ற சகா மேல் எந்தளவுக்கு அன்பு வைத்து இருந்தார் என்பதை விளக்க, அந்த ஒரு காட்சி போதுமானது... (அதுதான் சினிமா மொழி,நுனுக்கம்) அப்படி பட்டவன் ஈடுபாடுகளில் சிக்கி இருந்ததால் எப்படி விட்டு விட்டு போக முடியும்..?? அந்த நேரத்திலும் கமல் வீசிய தூணி கைக்கு எட்டாதபோது நான் என்ன 5,3தானே மெகரை விட குள்ளம்தானே என்று பேசும் காட்சி அருமை... அதுதான் கேரக்டரை மோல்ட் செய்தல்... சின்ன பாத்திரமாக இருந்தாலும் அந்த கேரக்டரின் பாடி லாஙவேஜ் புரிய படவேண்டும்...

ஆயிரம் சொன்னாலும் அந்த சிஸ்டர் வென்னாசா கேரக்டர் படத்தின் மகுடம் எனலாம்.. நான் நிறைய சிஸ்டர்களை நான் பார்த்து இருக்கின்றேன் நல்ல குணத்துடனும், பேய் குணத்துடனும் பார்த்து இருக்கின்றேன்....

கமல் அடிபட்டு ஆஸ்பத்திரியில் பார்த்துக்கொள்ளும் பாங்கு என்ன? அதே போல் எல்லாம் சரியாக சர்ச் வாசலில் கமல் நொண்டி நடக்கையில் மாத்திரை மருந்தை தவறாமல் எடுத்துக்கொள்ளவும் என்று சொல்லி “ i forgot something” என்ற சொல்லி விட்டு கமல் அருகில் வந்து மெலிதாய் அனைத்து உச்சிமுகர்வது கண்களில் நீர் வரவைக்கும் காட்சிகள்... இந்த சீன் பார்க்கறப்பலாம், எனக்கு என் அம்மா ஞாபகம் வந்து தொலைக்குது....

அதே போல் ரயில் விபத்தின் போது அதே சிஸ்டரை பார்த்ததும் “நல்லா
வாட் எ சர்ப்ரைஸ் என்று கூப்பிட அந்த நொண்டி காலோடு ஓடி அந்த சிஸ்டரை கட்டிக்கொள்வது அழுகு....


விபத்தில் ரத்தம் முகத்தில் இருந்த வழிய அப்போது ஒரு பிட்ஸ் முகத்தில் வர அதில் இருந்த அதனை படம் முழுவதும் கொண்டு வந்தது கமல் எனும் பிறவிக்கலைஞனால் மட்டுமே நடிக்க முடியும்...

வேட்டைநாய் என்று சொல்லும் சந்தானபாரதி அதே போல் அந்த பாத்திரத்துக்கு ஏற்ப வாழ்ந்து இருப்பார்... அதே போல் நாசர் தென்னாட்டுடைய சிவனே பேச்சு படம் பார்த்து முடிந்தாலும் நம் நினைவில் நிற்க்கும்....

சுந்தர் சீ கேரியரில் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளகூடிய படம் இது...

இந்த படத்தை பற்றி இன்னும் எழுதலாம்...படத்தில் நிறைய குற இருந்தாலும்... நிறைய நல்லதையும் சமுதாய விழிப்புனர்வை ஏற்படுத்தியதற்க்காக அதனை மன்னிக்லாம்...

கமல் உங்களிடம் ஒரே கேள்வி? நல்லது செய்வதும், நல்லது நினைப்பதும் இந்த உலகில் தகுதி இழப்பா? கமல், நல்ல சிவம் படம் முழுவதும் நல்லதுதானே செய்தார்,அவர் நல்லது செய்ததால் அவருக்கு காதல் கை கூட வில்லை, விபத்தில் சிக்கி கோரமாகிறார், மொத்த்தில் அவருக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை...பஸ்சில் இறக்காமல் உயிர் பிழைக்கின்றார் அவ்வளவே... அதே போல் நல்லது செய்ய வேண்டும் என்ற உறுதியின்பால் கடைசிவரை எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அரிச்சந்திரன் போல் நல்லது செய்வதை கட்டிகாக்கின்றார்... அவ்வளவே.

ஒரு சாமனியன் பார்வையில் இந்த படம் நல்லது செய்தால் துன்பம் அனுபவிக்க வேண்டி வருமோ என்ற தவறான எண்ணம் கொள்ளவும் வாய்பு இருக்கின்றது... என்னதான் இந்தபடம் இயல்பை அப்பட்டமாக சொன்னாலும் நம் ரசிகர்கள் அந்த இயல்பை ஒத்துக்கொள்ளவில்லை......

Directed by Sundar C
Produced by K. Muralitharan
V. Swaminathan
G. Venugopal
Written by Kamal Haasan
Madhan
Starring Kamal Haasan
R. Madhavan
Kiran Rathod
Nasser
Santhana Bharathi
Music by Vidyasagar
Cinematography Arthur Wilson
Editing by Suresh Pai
Distributed by Lakshmi Movie Makers
Release date(s) Flag of India January 14, 2003
Running time 160 mins
Country India
Language Tamil
Budget $2 million
Gross revenue $3 million


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Monday, July 13, 2009

(AGNINATCHATRAM) அக்னி நட்சத்திரம் (மீள்பதிவு)




நான் சினிமா மீது காதலான கதையும், என்னை முதல் முதல் ஈர்த்த படமும்...


தொலை தொடர்பு அதிக வசதிகள் இல்லாத என் பால்ய பருவமான 1980களில் நான் விழுப்புரத்தில் வசித்த என் பாட்டி வீட்டிற்க்கு எல்லா லீவுகளுக்கும் சென்றுவிடுவேன்.
அப்போதெல்லாம் எப்படி நகர்வு படங்களின் மேல் காதலாக தமிழ் சமுகம் இருந்ததோ அதே போல்தான் எனக்கும், அந்த நகர்வு படங்களின் மேல் ஒரு அலாதி பிரியம்..

என் அம்மா அந்த காலத்து பியுசி. தன் மகன் ரொம்பவும் ஒழுக்கம் உள்ளவனாக வளரவேண்டும் என்று பேராசைப்பட்டாள்.
என் அப்பாவுக்கு கைத்தொழில் என்று ஏதும் இல்லை. பிற்காலத்தில் என்நிலை குறித்து அப்போதே என் அம்மா கவலை பட்டாள். நான் என்னவோ அப்போது ஐஏஎஸ் பரிச்சைக்கு படிப்பது போல் என்னை எந்த சினிமாவுக்கு அழைத்து போக மாட்டாள்.


எப்போதாவது ரிலி்ஸ் ஆகும் கந்தன் கருனை, பக்த பிரகலாதா,சரஸ்வதிசபதம்,திருவிலையாடல் போன்ற படங்களுக்கு அழைத்து போய் என்னை பக்தி பழமாக ஆக்கினாள். ஆனால் அவள் மட்டும் எல்லா படங்களையும் பார்த்து விடுவாள். படம் பார்த்து விட்டு அந்த படத்தின் கதையை அரிசி கலையும் போது மிக அற்புதமாக சொல்லுவாள்.

“அப்புறம் அவன் கதவை திறந்து பார்த்தா, அவ அந்த இடத்தில இருக்க மாட்டா, எங்க போயிருப்பா?”

அம்மா எங்கம்மா போயிருப்பா சொல்லும்மா? என்று கேள்வி கேட்டால் போய் அரை லிட்டர் கடலை எண்ணையும் கொஞ்சம் கொத்தமல்லிதழையும் வாங்கி வா அப்புறம் அம்மா கதை சொல்றேன் என்று சொல்லுவாள்....

சீக்கரம் ஓடிபோய் கடலை எண்ணெய், வாங்கிவாட செல்லம் என்று சொல்லி அந்த கதையில் சஸ்பென்ஸ் வைத்து வீட்டு வேலைகளை வாங்கி கொள்ளும் சாகசகாரி.

எனக்கு படம் பார்க்காமலே ரஜினியும், கமலும், அம்பிகாவும் மனத்திரையில் காட்சிகளாக உருவெடுத்தார்கள். அந்த அளவுக்கு எனக்கு சினிமா ஆசை ஊட்டியது என் அம்மா எனலாம். ஆனால் எனக்கு சினிமா மீது அதிகமான மோகத்துக்கு காரணம் என் பாட்டி சத்யா என்றால் அது மிகை இல்லை.

என் பாட்டியை பற்றி சொல்ல வேண்டும். அவள் ஒரு எம்ஜியார் படபைத்தியம். ஏன் அவள் எம்ஜியார் பைத்தியமானால் என்பதற்க்கு ஒரு சிறிய பிளாஷ் பேக்...

என் தாத்தா சொக்கலிங்கத்துக்கு முதல் மனைவி என் அம்மாவை பெற்ற பாட்டி சத்யா அவர்கள்.
அந்த காலத்திலேயே கடின உழைப்பாளி எங்காவது கட்டிட வேலை நடந்தால் சாரத்தில் ஏத்து சத்யாவதியை என்று சொல்லுவார்களாம். ஏன் என்றால், அந்த அளவுக்கு ஆண்பிள்ளை போல் எந்த பயமும் இல்லாமல் சாரத்தில் நின்று வேலை செய்யும் பெண்மணி.


என்தாத்தா என் பாட்டியின் தங்கையை ஒரு சுபயோக சுப தினத்தில் படுக்கையில் வீழ்த்த, என் பாட்டிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது... நான் உயிரோடு இருக்கறப்பவே உனக்கு என் சொந்த தங்கச்சி கேட்குதா? என்று கோபத்துடன்சேலை தலைப்பை உதறி தோளில் போட்டுக்கொண்டு அப்புறம் அதை இடுப்பிலும் செறுகிக் கொண்டு, தன் ஒரே மகளான என் அம்மாவை தர தர என இழுத்துக்கொண்டு பண்ருட்டியில் இருந்து விழுப்புரத்துக்கு அழைத்து வந்து விட்டாள்.

அப்புறம் என் பாட்டி தெருத் தெருவாக ஜாக்கெட் பிட் வித்து ஒற்றை ஆளாக என் அம்மாவை பத்தாவது வரை படிக்க வைத்து, எவனோடும் ஓடிப்போகாமல் கண்ணியமாக வளர்த்து என் அப்பாவுக்கு கட்டிக்கொடுததாள்.

அதன் பிறகு என் தாத்தாவை என் அம்மாவின் கல்யாணத்துக்கு பாத பூசை செய்வதற்க்காக, தாத்தாவோடு முகம் கொடுத்து என் பாட்டி பேசியதாக சொல்வார்கள். அது ஒரு உழைப்பின் கதை அதை அப்புறம் பார்க்கலாம்.

தான் இருக்கும் போதே தன் தங்கையை கட்டிலில் சாய்த்த என் தாத்தாவை நினைக்கும் போது என் பாட்டி எவ்வளவு மனதுக்குள் புழுங்கிபோயிருப்பாள்,அதே நேரத்தில் திரையில் பெண்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் வரிந்து கட்டி களம் இறங்கும் ஒரே தலைவர் அந்த காலத்தில் எம்ஜியார்தான். அதனாலே எம்ஜியார் என் பாட்டிக்கு ஆதர்ச புருசனாக திகழ்ந்தார்.


நான் காலண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு முடிந்த லீவு நாட்களில், என் பாட்டி வீட்டுக்கு செல்வேன். என் பாட்டி வீடு விழுப்புரத்தில் மந்தக்கரையில் உள்ள அமைச்சார் கோவில் வளாகத்தில் ஒரு ஒன்டு குடுத்தனத்தில் இருந்தது...என் பாட்டியின் அண்ணன் தயவில் என் பாட்டி வாழ்ந்தார்.நாளெல்லாம் ஜாக்கெட் பிட் தெரு தெருவாக விற்று வந்த பெண்மணியின் சோர்வை போக்கியது எம்ஜியார் படங்கள்தான்.

அதனாலே அதிகமான எம்ஜியார் படங்களுக்கு நான் வலுக்கட்டாயமாக அழைத்து போக பட்டேன். அந்த படங்கள் அந்த காலத்தில் ரசிக்க தக்கவையாகவே இருந்தன.
கந்தன் கருணைக்கும் பக்த பிரகலாதாவுக்கும் இது எவ்வளவோ தேவலையாக இருந்ததது.
சிவாஜி நடிக்க தெரியதாவன்... எம்ஜியார்தான் நன்றாக நடிப்பார் என்ற வன்மத்தை எனக்கு ஊட்டியவள் எனது பாட்டிதான், எம்ஜியார் படத்தின் வசனங்கள் என் பாட்டிக்கு அத்துபடி.

எம்ஜியார் திரையில் தோன்றியதும் தேங்காய் உடைத்து விசில் அடித்த பெண்மணி தமிழகத்தில் என் பாட்டியாகத்தான் இருப்பாள் என்பதில் சிறிதளவும் எனக்கு அவமானம் இல்லை. கடந்த கால வாழ்க்கையின் வலிகளையும், ரன ,மன வேதனைகளையும் என் பாட்டிக்கு அந்த காலத்தில் மற்க்க வைத்தது எம்ஜியார் படங்கள்தான்.

பொதுவாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எம்ஜியார் ரசிகர்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களாகவே இருப்பார்கள் அதற்க்கு காரணம் கொடுங்கோலனான வீட்டு உரிமையாளர் நம்பியார் சின்னத்தப்புக்கே சாட்டையை உருவி வேலைக்காரர்களை போட்டு உதைப்பார். அவரையே எம்ஜியார் போட்டு புரட்டி புரட்டி எடுப்பார், அது எல்லா வேலைக்காரர்களும் தன் முதலாளியை புரட்டி எடுப்பது போல் மனதில் உருவகப்படுத்தி கொள்வார்கள் அதனால் அவர்கள் மத்தியில் எம்ஜியார் போற்றபட்டார்.


எம்ஜியார் எல்லா தவறுகளையும் தன் படங்களில் தட்டிக்கேட்டவர், அதனாலே அவர் எல்லோருக்கும் பிடித்து போனார். அதே போல் அவர் ஏற்ற பாத்திரங்கள் அனைத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையப்படுத்தியே இருக்கும். படகோட்டி ,ரிச்சாக்காரன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

அப்புறம் தொலைக்காட்சி வருகை, நான் தொலைக்ககாட்சியில் முதல் முதலாக பார்த்த படம் கே ஆர் விஜயா, சிவாஜி நடித்த செல்வம் திரைப்படம்தான். அப்புறம் எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என் ஆதர்ச நாயகனாக மாறினார்.அப்போது சிவாஜியை திட்டியது போல் இந்த முறை நான் கமலை திட்டினேன்.

நான் முதன் முதலாக தனியாக பார்த்த படம் ரஜினி நடித்த விடுதலை திரைப்படம் . அப்போது தங்கமணி ரங்கமணி வாமா நீ என்ற பாடல் என் தேசிய கீதம்.



அதன் பிறகு என்னை சலனப்படுத்திய படங்கள் நிறைய என்றாலும் என்னை நிமிர்ந்து உட்கார வைத்த தமிழ் சினிமா,

இன்றளவும் தமிழ் சினிமா மேல் காதலாக இருக்க வைத்த தமிழ் சினிமா,

இன்றளவும் சினிமா மீது பைத்தியமாக மாற வைத்த தமிழ் சினிமா,

தொடந்து 5 மாதங்கள் இரவு காட்சி பார்க்க வைத்த தமிழ் சினிமா,

சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டும என்ற உத்வேகத்தை ஏற்படுத்திய தமிழ் சினிமாக்களை பற்றி இப்போது பார்ப்போம்....

குறிப்பு / எனக்கு சினிமா மீது காதல் ஏற்படக்காரணமான என் பாட்டி சத்யாவதியும், என் அம்மா ஜெயா என்கிற ஜெயலட்சுமியும் தற்போது உயிரோடு இல்லை.
நான் இயக்கிய குறும்படம் மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற போது அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, என் அம்மாவை எலும்பு நொறுங்க அனைத்து மகிழ நினைத்தேன். ஆனால் என் அம்மா இப்போது உயிரோடு இல்லை.அவள் என்னை உச்சி முகர்ந்து நெற்றி முத்தம் கொடுத்த அந்த உதடுகள் இப்போது இல்லை.

என்ன செய்ய, காசநோய் முதலில் என் பாட்டிக்கு வந்து, அப்புறம் அது என் அம்மாவுக்கு தொற்றி இருவரும் இறந்து போனார்கள். கடைசி வரை சந்தோஷ காற்றை சுவாசிக்காமல் இருவரும்இறந்து போனார்கள்.சுதந்திர இந்தியாவில் காசநோயல் இருவர் மடிந்து போனார்கள் அப்போது அந்தளவுக்கு விழிப்புனர்வு இல்லை.

காச நோய் விளம்பரத்தில் சமுகப் பொறுப்புடன் கலந்து அந்த காச நோய் விளம்பர படங்களில் நடித்து, கிராமத்து மக்களிடம் காசநோய் பற்றி விழிப்புனர்வு இப்போதும் ஏற்படுத்தும் நடிக்ர் சூர்யா என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்.
சிவாஜிக்கு பிறகு என் அம்மாவுக்கு சாகும் வரையில் பிடித்த ஒரே நடிகர் கமலஹாசன்தான்

எனக்கு சினிமாவை முதன் முதலில் சுவை பட அறிமுகப்படுத்தி ,சொல்லிதந்த குரு
என் தாய்.....திருமதி ஜெயலட்சுமிவடமலை அவர்கள்.....


வாழ்வில் எவ்வளவோ படங்கள் பார்த்து இருக்கிறோம். ஆனால் எல்லா படங்களும் மனதில் நிற்பதில்லை. சின்ன வயதில் எனக்கு சிவாஜி படங்களை பிடிக்காது ஏனென்றால் அவர் எப்போதும் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பார், என் அம்மாவுக்கு சிவாஜி படங்கள்தான் பிடிக்கும். என் அம்மாவுக்கு சிவாஜி படம் பார்த்து புடவை தலைப்பில் மூக்கை சிந்த வில்லை என்றால் தூக்கம் வராது.

என் பாட்டிக்கு கை தட்டி விசில் அடித்து குஜாலாக ஒரு படத்தை பார்க்க வேண்டும்.
நம்பியார் நாலு அடி வாங்கினால்தான் அன்னைக்கி ராத்திரிக்கு எங்க பாட்டிக்கு தூக்கம் வரும்.
காரணம், என் பாட்டி நம்பியார் உதை வாங்கினால் என் தாத்தா உதை வாங்கியது போல் எண்ணி மகிழ்வாள்.
என் பாட்டிக்கு பரலோகத்தில் இடம் கிடைத்த உடன்,அதன் பிறகு படம் பார்க்க நானும் என் அம்மாவும் செல்லுவோம். ஒரு வகையில் நல்ல சினிமா பார்க்க கற்றுக்கொடுத்தது என் தாய் என்றால் அது மிகையில்லை.

முதல் மரியாதை படம் வந்த போது அந்த படத்தை என் அம்மாவும் என்சித்தியும் சிலாகித்து பேசி இருக்கிறார்கள்.அது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். அப்போது என் தானை தலைவன் நடிகர் ரஜினிதான். யாராவது ரஜினி பற்றி, அவர் படத்தை பற்றி, அவதூறாக பேசினால் அவ்வளவுதான் எதிராளி மூக்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும். அந்த அளவுக்கு ரஜினி வெறி.... முதலில் எம்ஜியார் வெறி அப்புறம் ரஜினி.


1987ல் நாயகன் படம் வந்தது அந்த படம் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த படம் கற்றது தமிழ் போல் ரொம்ப சோக மாக இருந்தது. அந்த வயதில் அந்த சோகத்தை தாங்கும் பக்குவம் என்னிடத்தில் இல்லை எனலாம்.
இன்று அந்த படத்தை கொண்டாடும் அளவுக்கு அந்த வயதில் அந்த படத்தை நான் கொண்டாட வில்லை. வாழ்க்கை அப்போது வறுமையை எனக்கு அறிமுகப்படுத்த வில்லை.

அடுத்த வருடம் அதாவது 1988ல் அந்த படம் ரிலிஸ் ஆகியது. அந்த படம் என்னை என்16ஆம் வயதில் வசீகரித்தது. அந்த படம் ஒருவெள்ளிக்கிழமை ரிலிஸ் ஆகியது . அந்த படம் கடலூரில் அப்போது ரமேஷ் இப்போது பாலாஜி என்றழைக்கபடும் தியேட்டரில் திரையிடப்பட்டது.

படத்தின் முதல் நாளே காலை காட்சியை என் அந்தை பையன் தாமோதரனும் சம்ட்டி என்பவரும் அந்த படத்தை பார்த்து விட்டு படம் ரொம்ப நல்ல இருக்கு...
அதுவும் சினிமா போட்டோகிராபி ரொம்ப நல்லா இருந்ததாக சொல்ல , கடலூர் கூத்தப்பாக்க கிராமத்தில் போட்டோகிராப்பி் நல்லா இருக்கு என்று முதல் டேக்னிக்கள் வார்த்தையை உபயோகப்படுத்தியது என் அத்தை மகன் தாமோதரன்தான் என்பேன்.

பொதுவான விஷயங்கள் அதிகம் கற்றுக்கொண்டது. என் அத்தைபையன் தாமோதரனிடம்தான். அவன் பார்த்து விட்டு போட்டோகிராப்பி படத்துல நல்லா இருக்கு என்று சொல்லிய பிறகு, நான் அந்த படத்தை பார்க்க வில்லை என்றால் என் பரம்பரைக்கே அவமானம் என்பதாலும், அந்த படத்தை நான் அடுத்த காட்சியான மதிய காட்சி பார்க்க தீர்மானித்தேன் . பையில் பரம்பைசா கிடையாது கடவுள் மனது வைக்க வேண்டும். கடவுள் மனது வைத்தார். கடவுள் என் அம்மா உருவில் என் பணத்தேவையை நிறைவேற்றினார்.

என் அம்மா அழைத்தார் அதுவும் எப்படி தனுசு ராஜா என்று ,

“போய் கருப்பன் கடையில பத்துக்கிலோ அரிசி வாங்கி வாப்பா.. ”

எங்கம்மாவுக்கு வேலை நடக்க வேண்டும் என்றால் ராஜா கூஜா என்றெல்லாம் என் பெயருடன் சேர்த்து என்னை வசியம் செய்வது உங்கள் எல்லோருக்கும் முன்பே தெரிந்து இருக்கும்.


ஒரு கிலோ அரிசி 5 ருபாய் பத்துக்கிலோ அரிசி 50 ரூபாய் அதற்க்கு மேல் என் அம்மாஒரு நையா பைசா கூட கொடுக்கமாட்டாள். பாவி மக 25 பைசா கொடுத்து தேன்மிட்டாய் வாங்கி சாப்பிட கூட கொடுக்கமாட்டாள். எனென்றால் ஒரே பையன் கெட்டுவிடுவேன் என்ற பயம்தான் காரணம்.

எனக்கு அப்போதுதான் சத்தியம் கம்ப்யூட்டர் ராஜூவை போல் என் மனம் வேலை செய்ய தொடங்கியது, நான் பத்துக்கிலோ அரிசிக்கு வாங்குவதற்க்கு பதில், 9 கிலோ அரிசி வாங்கினேன் எனக்கு 5 ருபாய் கிடைத்தது. உலகில் எந்த அம்மாவாவது வாங்கிய அரிசியை அளந்து பார்க்க முடியுமா? கிராமத்து அம்மாக்கள் அந்த அளவுக்கு டேலன்ட் இல்லை. அதை விட பிள்ளை மேல் அவ்வளவு நம்பிக்கை.

நான் பரபரப்புட்ன் வேர்த்து விறு விறுக்க சைக்கிளில் தியேட்டர் சென்றேன் 2,50 டிக்கெட்வாங்கினேன். தியேட்டரில் படம் போடாததால் விசில் பறந்தது. அது நல்ல வெயில்காலம் . படத்தை போட்டார்கள் ஒரு சன்ரைஸ் காட்சி அது....

மேகத்தில் மறைந்து இருக்கும் சூரியன் மெல்ல மெல்ல வெயியே வந்து சுட்டு எரிக்கும் சூரியனாக மாறும் காட்சி. அதில்தான் படத்தின் டைட்டில் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்கள் போடப்பட்டது.

சூரியன் மேகத்தில் மறைந்து இருக்கும் போது எந்த ஆடியோவும் இருக்காது.மெல்ல மெல்ல கதிர் பெரிதாக மாறும் போது நகரம் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்து பரபரப்பாக மாறுவதை மிக அற்புதமாக ஆடியோவில் வெயிப்படுததி இருப்பார்கள். முதலில் குருவி காக்கா போன்ற பறவைகள் சவுண்டும் பிறகு சைக்கிள் கார்ஹாரன் சவுண்டும், அதன் பிறகு டிராபிக்கில் ஏற்படும் வாகனத்தின் இரைச்சலும் அதன் பிறகு ரயில் விமானம் போன்ற சத்தங்கள் பெரிதாகும் பொது சூரியன் தன் உக்கிரத்தை நகர் முழுவதும் காட்டிக்கொண்டு இருப்பான்.


அந்த படம் ஆரம்பித்து 15 வது நிமிடத்தில் அந்த படடத்தின் வித்யாசத்தை நான் உள்வாங்க ஆரம்பத்தேன். அந்த படம் வழக்கமான படங்க்ளில் வரும் கேரக்டர் போல் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை. எல்லாம் இயல்பாக இருந்தது.

ஒரு அப்பா ,இன்டர் வீயுவில் தகராறு பண்ணிய மகனை அழைத்து ஆறுதல் சொல்கிறார் அடுத்த இன்டர்வியு நடக்கும் இடத்தை சொல்கிறார் அங்கு போய் ஒருவரை பார்க்க சொல்கிறார். அந்த இடத்தில்.

நேற்று கிருஷ்ணனை பார்த்தேன்,

“பிரேக்ஸ் இன்டியா பர்சனல் மேனஜர், அவங்க கம்பேனியில டிரெய்னிஸ் ரெக்ருமன்ட் எடுக்கறாங்களாம். உன்னை பத்தி அவுரு கிட்ட சொல்லி இருக்கேன். கம்பெனி பாடியில இருக்கு, உன்னை இன்னைக்கு 3 மணிக்கு அங்க வந்து பார்க்க சொன்னாரு, என்று சொல்ல ...

வரேன் என்று கிளம்பும் மகனை அசோக் என அழைத்து அங்க கிருஷ்ணன்கிட்ட

“நீ என் புள்ளன்னு சொல்லாத அவுரு சசீலா ரிலேஷனாம்.... அவுரு எங்கயாவது சொல்லி அது இங்க வந்து அன்னெசசரி காம்ளிகேஷன் பிராப்ளம் பாரு”

என்று ஒரு அப்பன் சொன்னால் எப்படி இருக்கும் பெத்த தகப்பன் என்னை அப்பா என்று அடுத்தவனிடம் சொல்லாதே என்று சொல்லும் போது ஒரு பையனுக்கு எப்படி இருக்கும்.

அதே போல் அப்பா சின்ன வீடு வைத்து இருப்பதால் தான் எல்லா இடத்திலும் தான் அவமானப்படுவதாக நினைத்து பொருமும் பெரிய சம்சாரத்தின் மகன்.

என்னை அப்பா என்று சொல்லாதே என்று அவமானப்படுததும் சின்ன சம்சாரத்தின் மகன் என்று இரு துருவங்களில் இருக்கும் வயதுக்கு வந்த மகன்களின் உணர்ச்சி போராட்டம்தான் அக்னி நட்சத்திரம் படத்தின் கதை.

ஒருவர் இரண்டு பொண்டாட்டி வைத்து இருப்பதால் ஏற்படும உறவு சிக்கல்களையும் உணர்ச்சி பிறவாகத்தையும் மிக அற்புதமாக அதன் அழகியல் மாறாமல் சொல்லி இருப்பார் இயக்குநர் மணி.

எழுத்தாளர் பாலகுமாரனை போல் இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லாத விஷயம். அது யாருக்காவது ஒருவருக்கும் கிடைக்கும் பாக்கியம். ரோட்டில் போகும் பெண்ணை பைக் ஓட்டும் போது திரும்பி பார்த்தாலே, போ அவ கூடவே போய் குடும்பம் நடத்து என்று என் மனைவி முகம் திருப்பிக்கொள்வாள்.

அக்னி நட்சத்திரம் படத்தின் கதை இதுதான்.

இரண்டு பெண்டாட்டி வைத்து இருக்கும் விஸ்வநாதனுக்கு மூன்று பிள்ளைகள் முதல் தாரத்து மனைவிக்கு ஒரு பையனும், இரண்டாம் தாரத்து மனைவிக்கு ஒரு பையனும் ஒரு பெண் குழந்தையும் இருக்க.....

இரண்டு மனைவிகளின் ஆண் பிள்ளைகளும் அடித்துக்கொண்டு மங்கம்மாய்வதும், இரண்டு பிள்ளைகளின் அப்பாவான ,விஸ்வநாதனுக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது அந்த இரண்டு பிள்ளைகளின் நிலைப்பாடு என்ன, அவர்கள் இருவருக்கும் ஏற்படும் காதல் என்று, படத்தை படு சுவாரஸ்யமாக எடுத்து இருப்பார் இயக்குநர் மணிரத்னம். படத்தின் கேப்டன் மணி என்றாலும் அவரை தான்டி இரண்டு பேர் அப்போது கொண்டாட பட்டார்கள் அந்த இருவர் ஒன்று இசைஞானி இளையராஜா, மற்றவர் ஒளிப்பதிவாளர் பீசி ஸ்ரீராம்.

இந்த படம்தானா என்று கேட்கும் அத்தனை பதிவர்களுக்கும் ஒரு செய்தி. இந்த படம் வந்து 21 வருடங்கள் ஆகின்றன.அந்த படத்தை நீங்கள் ரசித்தவற்றிர்க்கும் நான் ரசித்த முறைக்கும் உள்ள வேறுபாடுங்கள், இந்த படம் அப்போது ஏற்படுத்திய தாக்கம் ரசனை போன்றவைகளை அலசுவதும், அதனால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை பார்த்தவர்கள் அடுத்த முறை பார்க்க வைப்பதும் இதுவரை பார்க்காதவர்கள் இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

நான் முதன் முதலாக அப்பா சரக்கு சாப்பிடும் போது பக்கத்தில் பெண் உட்காந்து கொண்டு அப்பா இதுதான் கடைசி ரவுண்டு என்றுசொல்லி அப்பாவை தடுக்கும் காட்சியை நான் மிகவும் ரசித்தேன்.

அதே போல் இருபது வருடங்களுக்கு முன்பு மேல்தட்டு வர்கத்தில் பெண்கள் சிகரெட் பிடிப்பதை காட்டி அக்கால கல்லூரி மாணவிகளின் குறும்புகளை காட்டி இருப்பார். ஆனால் இந்த காலத்துல பாத்தியன் சாலையில் நம்ம எதிரேயே ஜீன்ஸ் டி சர்ட் போட்ட பொண்ணு, நல்லா நிதானிச்சு தம்கட்டுது. அது கட்டுற கட்டுக்கு நமக்கு இருமல் வந்து தொலைக்குது.



அஞ்சலி என்ற பெயரை ஒரு எலி ரெண்டு எலி என்று சொல்லி அஞ்சலி என்று அழகாக சொல்லியது இந்த படத்தில்தான்.

பொதுவாக கேமராவுக்கு வெளிச்சம் வந்தால் அதனை கிளார் என்று சொல்லி அதனை பிளாக் கிளாத் அல்லது கட்டர் போட்டு கட் செய்து, காலம் காலமாக எடுத்தார்கள். அந்த கட்டுப்பாட்டை இந்த படத்தில் உடைத்து இருப்பார் பிசி.

இந்த படம் தமிழ் திரை உலகின் ஒளிப்பதிவில் பிரேக்த ரூல்ஸ் மூவி என்றால் அது நூத்துக்கு நூறு உண்மையே.

படத்துக்கு பெயர் அக்னி நட்சத்திரம் என்பதால் படம் முழுவதும் ஒரு அனல் வீசுவது போலவே காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். மிக முக்கியமாக கார்த்திக் முதல் அறிமுக காட்சி, கார்த்திக் மைதானத்தில் விளையாடும் போதுஅவர் தங்கை வந்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை சொல்லும் காட்சிகளில் கானல் நீர் பறக்கும். அற்புதமான ஒளிபதிவு...

இந்த படத்தின்இளமை துள்ளல்தான் இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு அடிப்படை .


வசனங்களும் பக்கம் பக்கமாக இல்லாமல் ரத்தின சுருக்கமாக இருக்கும், உதாரனத்துக்கு உடம்பு சரியில்லாத கார்த்தி்கின் அம்மா ஜெயசுதா படுத்து இருக்க கணவர் விஜயகுமார் பணிவிடை செய்து கொண்டு இருப்பார் அப்போது வரும் கார்த்திக் விஜயகுமாரிடம் நன்றி சொல்லுவார்...

தேக்ஸ்

எதுக்கு?

அம்மாவை பார்த்துகிட்டதுக்கு...

உனக்கு அவ அம்மாவா இருக்கிறதுக்கு முன்னாடி அவ எனக்கு பொண்டாட்டி, நான் நல்ல அப்பாவா இல்லாம இருக்கலாம் ஆனா நல்ல புருசனா என்னால இருக்க முடியும் என்பார்.

மியுஸியம் எதிரே நண்பர்களோடு உட்கார்ந்து இருக்கும் கார்த்திக்கிடம் உதடு குவித்து நிரோஷா லவ்யு சொல்லி காரில் வேகம் எடுக்கும் போது கார்த்திக்கும் நண்பர்களும் பைக் எடுத்து பறக்கும் போது அந்த உணர்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்ளும். அதே போல் இன்றைய சென்னை மியூசியம் எதிரில் மேம்பாலங்கள இல்லாமல் அது எப்படி இருந்தது என்று பார்க்க இந்த படத்தை பார்க்கவும் நல்ல வரலாற்று பதிவும் கூட....

பிரபு உடற்பயிற்ச்சி செய்யும் போது உங்க அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியாமே? என்று கேள்வி கேட்டு வாங்கிகட்டிக் கொள்ளும் அமலாவிடம் காதலை சொல்லி அதற்க்கு அமலாமுகத்தில் எல்லா இடத்திலும் கிஸ் கேட்கும் இடம் இளமை குறும்பு.


நிரோஷாவீட்டை கண்டுபிடித்து கார்த்திக் உள்ளே செல்ல பகவான் இளையராஜா பின்னனி இசையுடன் மஞ்சள் துணி போர்த்தியபடி நிரோஷா நடந்து வந்து, அந்த ஒப்புக்கு உடலை சுற்றிய மஞ்சள் துணியையும் எடுத்து தூர கடாசி விட்டு, பொலக் என்று தண்ணீரில் குதித்தபோது தளும்பியது தண்ணி மட்டும் இல்ல, அந்த காலத்து ஜாக்கியோட அந்த சின்ன , பச்ச மனசும்தான்.

பூங்காவனம் பாடலில் நிச்சல் குளத்தில் இருந்து வெயியே வந்து அந்த குளத்தை சுற்றி வந்து டைவிங்போர்டில் நின்று ரெண்டு குதி குதித்து பொலக் என்று தண்ணிரில் குதிக்கும் போது அப்போதும் இந்த ஜாக்கியோட மனசு அப்ப இருந்த நிரோஷா பொண்ணு மேல ரொம்ப பிலாயிடுச்சுபா....பைக்கில் வந்து ஹெல்மட் கழட்டி பத்து ரூபாய்க்குதான் இந்த அலட்டளா? என்று கேட்க, அந்த பணணத்தை விசிறி போல் விரிக்க அதன் பிறகு வரும் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல் வரும் போது அப்போது தியேட்டரில் நடந்த கொண்டட்த்துக்கு அளவே இல்லை. தியேட்டரே சாமியாட்டம் போட்டது.

மைதானத்தில் கார்த்திக்வெயிலில் படுத்து இருக்கும் போது மூச்சு இரைக்க ஓடி வந்து புது ஏசி வந்து இருக்கிறார் பேரு கெளதம் விஸ்வநாத் என்ற சொல்ல, புது ஏசிக்கு விஷ் பண்ணிட்டு வரலாம் என்று கார்த்திக்கும் நண்பர்களும் ஓடும் போது ராஜா போட்ட பின்னனி இசை இன்னும் உற்சாக துள்ளல்தான்.

வாரன்ட் இல்லாமல் அரஸ்ட் பண்ண முடியாது என்று கார்த்திக் பேச பிரபு காக்கி சட்டையில் விறைப்புடன் நடந்து வந்து கார்த்திக்கை அரஸ்ட் செய்யும் காட்சியில் ராஜா ராஜாதான். அதன் பிறகு ஜீப்பில் கார்த்திக்போகும் போது பின்னால் ஸ்லோமோஷனில் ஓடிவரும் நண்பர்கள் காட்சி அழகான அழகு...கார்த்திக் பிரபு இருவரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். பிரபு போலிஸ் விரைப்பை படம் முழுவதும் வெளிபடுத்தி இருப்பார்.

அதே போல் பிசி ராஜா ராஜாதி ராஜன் இந்த பாடலின் போது தண்டவாளத்தில் கார்த்திக் டான்ஸர் வரிசையாக நிற்க்க டாப் லைட் கொடுத்து ரிம் லைட் ஏபெக்ட் கொடுத்து இருப்பார். அதே போல் அந்த பாடலில் லோவ் ஆங்கிளில் ரயில் பெட்டியில் தாவும்காட்சியில் கடலூரில் விசிலி பறந்தது என்றால் யோசித்து பாருங்கள்...படம் முழுவதும் இரவில் வாகனங்கள் வரும் போகும் காட்சிகளை ஸ்டார் பில்லடர் போட்டு ஏடுத்து இருப்பார் பிசி ஸ்ரீராம். படத்தில் அந்த கிளைமாக்ஸ் ஆஸ்பிட்டல் கரண்ட் சார்ட் சர்க்கியுட் ஆன சீன் மாத்திரம் படத்தின் திருஷ்ட்டி எனலாம்.


படத்தின் நெகிழ வைத்த காட்சிகளாக, ஜெயசுதா ஸ்டேஷனில் ஜாமினில் கையெழுத்து போடும் இடம், ரயிலில் கார்த்திக் தங்கையை என் தங்கை என்று பிரபு சொல்வதும்,சிரியசாக இருக்கும் அப்பாவுக்கு பிரசாதம் எடுத்து ஓடி வரும் பெண்ணை தடுக்கும் போலிசை அவள் எங்க பொண்ணுதான் என்றும் சொல்லும் காட்சிகளில் என் கண்களில் நீர்த்திவலைகள்.

முதலும் கடைசியாக இந்த படத்தில் வில்லனாக நடித்த ஆனந் தியேட்டர் ஓனர் உமாபதி தோபார் ராஜா எற்றுஆரம்பித்து வசனம் பேசும் அழகே அழகு. விஜயகுமார் காப்பற்றுவிட்டார் என்று தெரிந்து ஏப்படிடா என்று கர்ஜனையாக உறுமுவதில் ஆகட்டும், தீக்குச்சி கிழித்து கிட்டே வரும் கார்த்திக்கை உப் பென்று ஊதி கை சுட்ற போவுது கண்ணா போய் உங்கப்பன காப்பாத்து என்ற காட்சிகளில் அவருக்கு அப்போது பறந்த விசில் இன்னும் என் செவிகளில்.

என்ன ஒரு சோகம் கால மாற்றத்தில் நடந்தது என்றால் அனந்தியேட்டரும் அதன் நிர்வாகிஉமாபதியும் மண்னோடு மண்ணாகி பொனார்கள் ஆனால் அவர்களின் நினைவுகள் என்றும் நம்மிடம்.

விகே ராமசாமியும் ஜனகராஜும் காமெடி பண்ணாலும் அது தனி டிராக் அதிலும் அந்த பி்எப் படம் பார்க்கும் போது ஏற்படும் குறிக்கீடுகள் காமெடி என்றாலும் அது எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த நிகழ்வுகள்தான்.

ரோஜா பூ வாடி வந்தது, நின்னுக்கோரி வரனும், ராஜாதி ராஜா போன்ற பாடல்கள் அந்த காலத்து பென்டசி வகை என்றாலும், வாவா அன்னே அன்பே, தூங்காத விழிகள் போன்ற பாடல்களுக்கு ரசிக கண்மணிகள் எல்லோரும் தியேட்டர் விட்டு வெளியே போய் ஒரு தம் போட்டு வந்து உட்கார்ந்தார்கள்..

இன்றைய பிரபுதேவா அன்று முதன் முதலாக பாடலில் தலைகாட்டியது இந்த படத்தில்தான்.

நான் சினிமாவை வெறித்தனமாக காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்துதான்... அதே போல் படத்தை படமாக பார்க்காமல் டெக்னிக்கலாக படம் பார்க்க கற்று கொண்டதும் இந்த படத்தில்தான்.

ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், போன்றவர்கள் தமிழ்சினிமாவை வேறுதளத்துக்க எடுத்து சென்றார்கள் என்றாலும் கதை சொல்லும் விதத்திலும் வசன உச்சரிப்பி்லும், தொழில் நுட்பத்திலும்
மணிரத்னம் தமிழ் சினிமாவை உலகலாவிய அளவுக்கு எடுத்து சென்றார் என்பதால் மணி எப்போதும் என் நன்றிக்கு உரியவர்.







இDirected by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Karthik
Prabhu
Vijayakumar
Amala
Nirosha
Jayachitra
V. K. Ramaswamy
Janagaraj
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films
Pyramid Saimira
Release date(s) 1988
Running time 146 mins
Language Tamil


இந்த படம் தமிழக அரசின் சிறந்த படம் விருதை பெற்றது.

எனக்கு தெரிந்து நான் எழுதியதில் பெரிய பதிவும் இதுதான்.



அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாண்ட்விச் அண்டு நான்வெஜ்.18+(13,07,09)

ஆல்பம்...

பதிவுலகில் நடந்த சமீபத்திய சண்டை எல்லோருக்கும் நினைவில் இருந்தாலும் அதில் காணப்பட்ட உண்மை என்பது எல்லா பக்கத்திலும் அனானி பின்னுட்டம் இட்டு உசுப்பி விட ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதே...அனானியாக வருபவர்கள் ஏதாவது சொல்ல, அதற்க்கு மறு மொழிய.... பிரச்சனை வேறு திசையில் ரக்கை கட்டி கொண்டு பறந்தது....என்னை பொறுத்தவரை இந்த பிரச்சனையில் யார் மீதும் தவறு இல்லை...அறியாமை மட்டுமே இதற்க்கு காரணம்... பழையபடி இரண்டு பக்கங்களில் இருப்பவர்களும் நட்பு பாராட்டபட வேண்டும் என்பதே , எல்லோருடைய விருப்பம்...

எவ்வளவுதான் தீப்பொறி பறக்க சண்டை நடக்கின்றது என்றாலும், கம்யூட்டர் ஆப் செய்து விட்டு வெளியே வந்தால், இப்படி ஒரு சண்டை சென்னையில் நடக்கின்றதா? என்று யோசிக்க வைக்கின்றது... பஸ்கள் வழக்கம் போல ஓடுகின்றன, ஆட்டோக்கள் நடுரோட்டில் சட்டென பிரேக் போட்டு பயணிகளை ஏற்றுகிறார்கள் இறக்குகின்றார்கள்.... ஆனால் கம்யூட்டரை ஆன் செய்தால் திரும்பவும் தீப்பொறி பறக்க சண்டை...


உலகில் உள்ள எல்லோரும் இலங்கை அரசு தமிழக மக்களை அடிப்படை வசதி இன்றி வாட்டி வதைக்கின்றது என்று கூக்குரல் இட்டுவரும் வேலையில், இந்து ராம் அவர்கள், போரில் பாதிக்கபட்ட இலங்கை தமிழர்கள் சுபிட்ச வாழ்வு வாழ்வதாகவும், நேரில் கண்கண்ட சாட்சி நானே என்றும் சொல்லி வருகின்றார்... எல்லா தமிழர்கள் குடில்களிலும் ராஜபக்சே அரசு ஏசி போட்டு இருக்கின்றது என்று அவர் சொல்லி இருக்கலாம்.... சொன்னாலும் சொல்லுபவர்தான் அவர்...



கஸ்டமர் கேர் என்பது நுகர்ந்தவர்களின் பிரச்சனைகளை உடன் சரி செய்திட வேண்டிய அமைப்பு அது... ஆனால் எந்த கஸ்டமர் கேரும் அப்படி இல்லை, யார் வீட்டு ஈழவோ பாய போட்டு அழுவோ என்பது போலவே பல கஸ்டமர் கேர் குழுக்களின் செயல்பாடுகள் உள்ளது....அவர்களின் அலட்சிய பதில்களும், சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்வதும் போன் செய்பவர் பீப்பியை எகிற வைக்கின்றன....


மிக்சர்...
377 என்றால் இந்தியாவில் செய்தி வாசிக்கும் அனைவருக்கும் இப்போதுதெரியும் இருப்பினும் இந்த எண்ணை வைத்து சில வருடங்களுக்கு முன், சென்னை எஸ் ஆர் எம் கல்லூரி விஷுவல் கமயூனிகேஷன் மாணவர்கள் ஒரு டெலி பிலிம் எடுத்தார்கள்.... தைரியமான முயற்ச்சி, நகரில் காணமல் போகும் இளைஞர்கள் ஹோமோ ஒருவனால் கொலை செய்யபடுவது போன்ற கதை அமைப்பு... ஒரு கல்லூரியில் இது போன்ற படம் எடுபபதற்க்கு மிகுந்த துனிச்சல் வேண்டும்...நம் ஊரில்தான் அதை பற்றி வெளியே பேசவே பயப்டுகின்றனர்...
குமரி ஆனந்தன் மகள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் இந்த விஷயத்தில் குரல் கொடுத்து வருகின்றார். இன்னும் கொஞ்சம்மேலே போய் இதை பற்றி வெளிப்படையான விவாதம் தேவையற்றது என்று ஒரு சிலர் சொல்ல, அதற்க்குள் மெரினாவில் வெளிப்படையாக ஊர்வலமே சென்று விட்டார்கள்...


இந்த முறைபருவ மழை தப்பி விட்டது அல்லது லேட்டாக வருகின்றது...நேற்று கூட சென்னையில் கத்தரியை விட மோசமாக வெயில் காய்ந்தது...இந்த முறை சென்னையில் கலர் பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள், அதிகம் விற்பனையாகுமோ என்று பயமாக இருக்கின்றது...


நான்வெஜ்...

உயர் நீதி மன்றத்தில் அந்த வழக்கு நடந்த கொண்டு இருந்தது... அந்த அழகான பெண் நீதிபதி முன் கண்ணீரோடு இருந்தாள், நீதிபதி பிரச்சனை என்ன என்று கேட்டார்? அதற்க்கு அந்த பெண் எனக்கு நாளைக்கு திருமணம் அனால் இன்று ஒரு கயவன் என்னை கெடுத்துவிட்டான் என்றாள்... அதற்க்கு நீதிபதி உன் உடம்பில் எதாவது நகக்குறிகள் எதாவது இருக்கின்றனவா? என்று கேட்டார் அவள் இல்லை என்று பதில் கொன்னாள்... சரி உன்னை ரேப் செய்யும் போது நீ போராடவே இல்லையா? என்ற கேட்டார்... அதற்க்கு அவள் என் கையில் மருதானி வைத்து இருந்தேன் என்றாள்.... சரி போனது போகட்டும அடுத்த முறை மருதானி எப்போது வைப்பாய் என்று சொல் என்றார் அந்த நீதிபதி...

கல்யாணம் ஆகாதாவனுக்கும்,கல்யாணம் ஆணவனக்கும் என்ன வித்யாசம்?

கல்யானம் ஆகாதவன் நேரா வீட்ற்க்கு போய் பிரிட்ஜ் திறந்து பார்ப்பான், கல்யாணம் ஆனவன் நேரா பெட்ரூம் போய் பார்த்துட்டு அப்புறம் வந்து பிரிட்ஜை திறப்பான்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Friday, July 10, 2009

பெங்களூரில் ஆஞ்சிநேயரும், அல்லாவும் நட்போடு...

சில ஆபூர்வங்கள் இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது...கடலூரில் சின்ன வயதில் நான் பார்த்த அதிசயம் ஒரு தென்னை மரத்திற்க்கு 4 கிளைகள் இருந்தது... அந்த வயதில் தென்னை மரத்திற்க்கு பனை மரத்திற்க்கு கிளைகள் கிடையாது, என்று படித்துகொண்டு இருக்கும் போது தென்னை மரத்துக்கு 4அ கிளைகள் இருக்கும் போது அது அதிசயம்தானே.... அந்த தென்னை மரம் கடலூர் பதுநகர் சென்ட்மேரிஸ் பெண்கள் பள்ளிக்கு போகும் வழியில் இருந்தது....

அதே போல் பனை மரத்தக்கு கிளைகள் கிடையாது.. ஆனால்9கிளைகள் கொண்ட பனை மரம் கடலூர் திருப்பாதிரிபூலியு்ர் எஸ் எஸ் ஆர் நகரில் அதாவது லட்சமி சோர்டியா பள்ளி அருகில் இருந்தது... சின்ன வயதில் கோடைகால விடுமுறையில் ஊருக்கு வரும் பசங்களிடம் தென்னை, பானை மரத்துக்கு கிளை உண்டா ?என்ற கேள்வி கேட்டு 25 பைசா பெட் வைத்து ஜெயித்து தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அனுபவம் இன்றும் நாக்கில்....

அதே போலதான் பெங்களுர் போய் என் மச்சான் ஆனந்தும் நானும் அந்த ரயில்வே ஸ்டேஷன் போகும் போது பெட்ரோல் போட ஒரு பெட்ரோர் பங்க் வாசலில் நிறுத்தினான்... நான் எதிரில் பார்க்க பிரமாண்ட ஆஞ்சிநேயர் சிலையை பார்த்தேன்... அது ஒரு ஆஞ்சிநேயர் கோவில்....சிலை மிக பிரமாண்டம்... நான் போட்டோ எடுத்துக்கொண்டு இருந்த போது , இன்னொரு அதிசயம் ஆச்சர்யம் நடந்தது... என் மச்சான் ஆனந் அந்த கோவில் பக்கத்துல என்ன இருக்கு தெரியுமா ? என்றான். நான் என்ன என்று கேட்ட போது... பக்கத்தில் இருக்கும் அந்த கட்டிடம் ஒரு மசூதி என்றான் என்னால் நம்பவே முடியவில்லை... உண்மைதான் பக்கத்தில் இருப்பது மசூதிதான்.... அதாவது ஒரு அடி வித்யாசம் கூட இல்லை.. பக்கத்து பக்கதில்....

அல்லா ஓதுவது இங்கே தெளிவாக கேட்கும் அதே போல் அஞ்சிநேயருக்கு சொல்லும் மந்திரங்கள் அங்கே தெளிவாக கேட்கும்....


கரசேவைன்னு சொல்லி மசூதி இடிச்சவனும்,மதத்தின் பேரால் கொலை செய்தவனும் , பாம் வச்சவனும் போய் பாருங்கள்... அங்கே ஆஞ்சிநேயரும் அல்லாவும் கை கோர்த்து இருப்பதை.... இடத்தின் பேர் நினைவில் இல்லை பெங்களுர் நண்பர்கள் பின்னுட்டம் இட்டு தெரியபடுத்தவும்.... ஆனால் இந்த கோவில்கள் சர்ஜாபுரா போகும் வழியில் உள்ளன....
புகை படம் /ஜாக்கி
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(FEMME FATALE/ உலகசினிமா)18++ ஜகஜாலஜிக்கியான வைரக்கொள்ளைகாரி

கொள்ளையடிப்பது பெரும்தவறு அதைவிடகொள்ளையடித்த பணத்தை பிரித்து கொள்ளாமால், ஒருவர் மட்டுமே ஆட்டையை போடுவது அதைவிட பெரும் தவறு... அப்படி ஆட்டையை போட்டது மட்டும் ஒரு பெண்ணாக இருந்ததால், அவளின் கதி என்னவாகும்???

ஃபெம்மி பேட்டல் படத்தின் கதை இதுதான்.... இது பிரெஞ்ச் தலைப்பு... என் மனைவி இது பீமேல் ஃபேட்... அதாவது பெண்ணின் தலைவிதி என்கின்றாள்....

கேன்ஸ் உலக படவிழா நடக்கின்றது... அங்கே ரெட்கார்பெட் வரவேற்ப்பு கொடுக்கபடுகின்றது, அந்த விழாவுக்கு விலைமதிக்க முடியாத வைரங்களுடைய உடையை அனிந்து வருகிறாள்...(மேலே இருப்பது அத்தனையும் அப்படியே அப்பட்டமாக தெரியும் போது,அது எப்படி உடையாகும்) அந்த வைரத்தை ஒரு பெண் உட்பட மூன்று பேர் கொண்ட கொள்ளை கூட்டம் கொள்ளையடிக்கின்றது...அதில்வைர உடையை, அந்த பெண்Rebecca Romijn-Stamos மட்டும் சாதுர்யமாக அடித்துக்கொண்டு போய் விடுகின்றாள்....


அவளை கொள்ளை அடித்த கும்பலில் மீதம் இருக்கும் இருவர் அவளை வெறியோடு தேடி அலைகின்றனர்... ஆனால் அவர்களுக்கு அவள் அல்வா கொடுத்துவிட்டு பிரர்ன்சில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பி போகிறாள், போகும் வழியிலேயே...பக்கத்துசீட்டில் உட்கார்ந்து இருக்கும் அமெரிக்கரை கண்ணில் ஜலம் வைத்து ஜலம் நிகழ்த்தி அவனை மயக்கிவிடுகின்றாள்.....

எழுவருடம் கழித்து அவள் பிரான்ஸ் வருகின்றாள் அதுவும் எப்படி அந்த கொள்ளைகாரி கல்யாணம் செய்து கொண்டது பிரான்சுக்கான அமெரிக்க துதரை.... அந்த கொள்ளை காரி அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் வந்ததில் இருந்து... யாருக்கும் முகம் காட்ட மாடடேன் என்கிறாள். அவளை போட்டோ எடுத்து வெளியுலகுக்கு காட்ட வேண்டும் என்று ஒரு பத்திரிக்கை விரும்புகின்றது... அந்த அசைன்மென்டை ஒரு பெப்பரசி புகைபடக்காரனானAntonio Banderas இடம் ஒப்படைக்கபடுகின்றது... அந்த போட்டோ வெளியிடப்பட்டால் பிரான்சில் இருக்கும் அந்த கொள்ளைகாரர்களுக்கு தெரிந்தால் இவள் காலி ... அதே போல் இப்போது அம்பாசிடர் ஒய்பாக வேறு அவள் இருக்கின்றாள் அவளின் கடந்தகாலம் வெளியே தெரிந்தாலும் சிக்கல்...


வைரம் என்னவானது....? கொள்ளையர்கள் அவளை கண்டுபிடித்தார்களா? அம்பாசிட்டர் என்ன செய்து கொண்டு இருந்தார்???? போன்ற கேள்விகளுக்கு ரொம்ப சூடாக உடைகளை குறைத்து பதிலை சொல்லி இருக்கின்றார்கள்....இந்த படம் பார்க்கும் போது அனிச்சையாக கால் மேல் கால் போட்டு படம் பார்க்க வைக்கின்றார்கள்..... அதே போல் கிளைமாக்ஸ் வருவதற்க்கு முன் 15 நிமிடத்திற்க்கு முன் நாம் யாரும் எதிர்பார்க்காத டூவிஸ்ட் படத்தில் உண்டு...அது உங்களை கண்டிப்பாக அடிவயிற்றில் குத்தும் டுவிஸ்ட்.....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

வைரம் என்னவானது என்பது மெயின் டெம்டை வைத்துகொண்டு ரொம்ப அழகான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கின்றார்...Brian De Palma

இது பிரெஞ்சு தேசத்துபடம் என்பதால் அரை நிர்வான காட்சிகளுக்கும் உடலுறவு காட்சிகள் சாதாரணமாக லாலா கடை ஜீலேபி போல் வந்து போகின்றன....

இந்த படத்தின் காட்சிகளில் ஒரு உலகதரம் இருப்பது போன்றதொறு மேக்கிங்...

அஞ்சாதே படத்தில் ஒரு காட்சி முழுவதும் லோ ஆங்கிளில் காலிலேயே எடுப்பதான காட்சியை எடுக்க இந்த படத்தில் இருந்து கூட இன்ஸ்பயர் ஆகி இருக்கலாம்...

பல காட்சிகளில் சினிமாவின் அடிப்படை மொழியான விஷுவல் என்ற விஷயத்தில் பல காட்சிகளில் பி்ன்னுகின்றார்கள்...

ராணுவ உடையுடன் போகும் அந்த பெண்ணின் காலையும் பூட்ஸ் சத்தங்களையும் சத்தமாக காட்டி அந்த பெண் ஒரு வீட்டின் உள்ளே போய் வெளியே வரும் போது அவள் ஓடி வருவதை அவளின் காலை மட்டும் காட்டி அதன் பின் அவளை இரண்டு ஜோடி கால்கள் துறத்தி வருவதை ஸ்லோமோஷனில் காண்பிப்பது அழகோ அழகு...

இந்த படம் 2002ல் வெளிவந்தது... அவார்டு ஏதும் இந்த படம் பெறவில்லை....

இதே காட்சியை பாலஜி சக்திவேல் காதல் படத்தில் பரத் காலை மட்டும் காட்டி, ரிப்பேர் ஆன ஸ்கூட்டி பியூட்டி சந்தியாவுக்கு உதவுவதா? வேண்டமா? என்பதை முடிவெடுக்கவும் மனம் அலைபாய்வதையும் அந்த காலை காட்டும் காட்சியில் வைத்து இருப்பார்....

திரையரங்கில் நடக்கும் லெஸ்பியன் காட்சி டெம்ட் ஏற்றும் ரகம்...

முதல் காட்சியில் அவள் உடையற்று டிவி பார்த்து கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் நிக்ரோ அவளிடம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அவள் பாஸ்போர்ட்டை வாங்கி சிரித்து பேசி கொண்டே பச் என கண்ணத்தில் அறையும் போதே இந்த படம் வேறு ஜாதி படம் என்பதை சொல்லாமல் சொல்கின்றது....

மாஸ்க் ஆப் சாரோ அன்டனியோ இந்த படத்தின் கதாநாயகன் என்றாலும் அவருக்கு வேலை அதிகம் இல்லை... ஆனால் கதாநாயகியுடன் பாரில்.................?????

கதாநாயகி ஒரு சில காட்சிகளில் அழகாக இருக்கின்றாள் ஒரு சிசல காட்சிகளில் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்வது போல் இல்லை...

ஹோட்டல் சீன்கள் மற்றும் வெளிப்புற காட்சிகளிலும், மிக முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவாளரின் உழைப்புதெரிகின்றது...Thierry Arbogast

பேப்பரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் அதை காட்சி படுத்தும் போதுதான் பயிறுகள் இறையும்.....அந்த வகையில் ஒளிப்பதிவாளரின்Thierry Arbogast துவரம் பருப்புகள் இறைந்து இருக்கின்றது....

சொல்ல போனால் இது பார்க்க வேண்டிய லேபிளில்தான் வர வேண்டும் ஆனால் அந்த கடைசி அரைமணிநேர டுவிஸ்ட் மற்றும், விஷுவலாக பல காட்சிகள் சொன்னதால் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படங்கள் வரிசையில் வருகின்றது....
போட்டோவுல தாடி வச்சிக்கினு இருக்காறே அவருதான் கேப்டன் ஆப் த ஷிப்பு...



Directed by Brian De Palma
Produced by Tarak Ben Ammar
Written by Brian De Palma
Starring Rebecca Romijn-Stamos
Antonio Banderas
Music by Ryuichi Sakamoto
Cinematography Thierry Arbogast
Editing by Bill Pankow
Distributed by Warner Bros.
Release date(s) France
April 30, 2002
USA
November 6, 2002
Running time 114 min.
Country France
Language English
French
Budget $35 million
Gross revenue Domestic
$6,630,252
Worldwide
$16,838,910



அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner