
ஜப்பான்,மொராக்கோ,அமெரிக்கா,மெக்சிக்கோ இந்த நான்கு நாடுகளில் நடக்கும் முன்னுக்கு பின் முரனான சம்பவங்களை, மல்லிகை சரம் போல் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தபடுத்தி ,சரம் கோர்த்து படையல் வைத்து இருக்கின்றார்கள்...
எல்லா பொருட்களுக்கும் ஒரு வரலாறு நிச்சயம் உண்டு... அதன் தரம் ,அது ஜனித்த இடம், அதன் தன்மை என்று நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கின்றது....
இந்த படத்தில் ஒரு துப்பாக்கியின் வரலாறு பற்றி மண்டை குழப்புவது போல் குழப்பி, சுவாரஸ்யமாக கதை சொல்லி இருக்கின்றார்கள்....
ஒரு விளிம்புநிலை குடும்பம்,ஒரு செல்வசெழிப்புள்ள இரண்டு குடும்பம் அவர்களின் பிரச்சனையை மையப்படுத்தி அதன் மூலம் திரைக்கதை அமைத்து இருக்கின்றார் இயக்குனர்....

மொரோக்கோ பாலைவண தேசத்தில் ஆடு் மேய்த்து குடும்பம் நடத்தும் அப்துல்லா என்பவருக்கு ஒரு பெண் இரண்டு மகன்கள்.... ஆடுகளை ,தினமும் பாலைவனத்து நரிகள், அப்துல்லா ஆட்டு மந்தையை டிபன் சாப்பிடும் இடமாகவும் டின்னர் சாப்பிடும் இடமாகவும் அந்த நரிகள் தேர்ந்து எடுத்து, அப்துல்லாவுக்கு டார்சர் கொடுக்கின்றன... அதனால் பக்கத்து ஊரில் இருக்கும் இப்ராஹீம் என்பவரிடம் இருக்கும் ரைபிளை விலைக்கு வாங்கி தனது இரு மகன்களிடமும் நரி சுடுவதற்க்கு கொடுக்க....நிற்க்க

ஜப்பானில் பெரிய பணக்காரார் Yasujiro Wataya (Kōji Yakusho அவருடைய ஒரே மகள் Chieko Wataya (Rinko Kikuchi) பருவப்பெண் அவளுக்கு காது கேட்காது... அவள் சமுகத்தால் புறக்கனிக்க படுகின்றாள், பல இடங்களில் அவமானப்படுத்த படுகின்றாள்...அவள் வயது ஒத்த ஆண்கள் கூட அவள் குறைப்பாட்டை கேலி பேச, பொறுத்துக்கொள்ள முடியாமல் அவள் காமத்தை கையில் எடுக்கின்றாள்...
கீழே உள்ளாடை போடாமல் தன உறுப்பினை காட்டுவது மூலம் பல ஆண்கள் அவளை ரசிப்பதை தெரிந்து, அவள் ஆண்களை மயக்க ஒரே வழி காமமும், அடை அவிழ்ப்பு என்பதை தெரிந்து ,அவள் யாரிடமாவது தன் இச்சை தீர்க்க ஆண் துனை தேடுகின்றாள்... அவள் அம்மா வேறு சமீபத்தில் தற்க்கொலை செய்து கொண்டு விட்டாள்....அதரவு தேடும் அந்த காது கேட்காத பெண் தேர்ந்து எடுத்த வழி காமம்... நிற்க்க....


“இந்த ரைபிள் மூனு கிலோமீட்டர் தூரம் சூடும்னு அப்பா சொன்னாரே”
என்று ஒருவன் சொல்ல, அதை ஒருவன் விளையாட்டுக்கு டெஸ்ட் செய்ய மீதியில் வெண்திரையில் காண்க....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
கோழி குப்பையை கலைப்பது போல், கதையை கலைத்து போட்டு அதனைஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தி திரைக்கதையாக்கும் ஸ்டைல், இயக்குனர் அமரோஸ்பேரோஸ்க்கு சொந்தமானது....
அவர் இந்த படம் போல் கதையை குப்பை போல் கலைத்து போட்டு திரைக்கதை கோர்க்கும் பாணி, படமான 21 கிராம்ஸ் விரைவில் நமது வலைதளத்தில்....
இது போன்ற திரைக்கதையின் ஆதார சுருதி என்று பார்த்தால் அது திரையுலக பிதாமகர் அகிரா குரோசேவையே சாரும்.....
இந்தபடம் சிறந்தபடமாக கோல்டன் குளோப் விருது பெற்றது..., எழு அக்காடமி விருதுக்கு இந்த படம் பரிந்துரைக்கபட்டது....

நமது மாணவ செல்வங்களும், உதை வாங்கி உதடு வீங்கி உப்பிய முகத்தோடு நாம் இதுவரை பலரை பார்த்து விட்டோம்...இன்னமும் நம் அரசு கண்டனம் தெரிவித்து கொண்டு இருக்கின்றது...
சரிடா, இலங்கையில இருக்கறவன் தமிழன் அவனை கேட்க நாதியில்லைன்னு பார்த்தா? இந்திய மாணவர்கள் கதியும் நாதி அத்துதான் போயிடுச்சி....
அந்த காது கேட்காத ஜப்பான் பெண் முழுநிர்வாணமாய் அந்த போலிஸ் ஆபிசர் முன் வந்து நிற்க்க, அவன் அந்த பெண்ணை குழந்தையை போல் டிரிட் செய்வது கவிதையான காட்சி...
அதே போல் நிர்வாணமாய் தன் மகள் பால்கனியில் நின்று இருக்க மெல்ல போய் ஆதராவாய் அனைக்கும் அந்த அப்பன் கேரக்டரும் அதன் பின் கேமரா சூம் பேக் ஆகும் காட்சியும் கவிதை.....
ஆட்டுக்கார அப்துல்லா வீட்டில் இரவில் உணவு உண்ணும் காட்சியும் பாலைவண வெளிப்புற காட்டசிகளும் நல்ல ஒளிப்பதிவு கவிதை என்பேன்...
பிராட் பிட் மற்றும் வேலைக்காரியாக நடித்த பெண் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கின்றார்கள்...
அடக்கபட்ட காமம், பறக்கனிப்பின் வலி, எல்லை மீறும் என்பதை மிக அழகாக பல காட்சிகளில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்...
சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை ....அந்த வேலைக்கார பெண்ணை விசாரிக்கும் போது அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை நீங்களே உணர்வீர்கள்.......
வலியால் துடிக்கும் பெண்ணிடம் சுருட்டை பத்த வைத்து அவளை இரண்டு இழுப்பு இழுக்க வைக்கும் போது அவளுக்கு அந்த போதையில் வலி மறக்கும் போது, அந்த பாலைவணகிழவி நம் நெஞ்சில் நிற்க்கின்றார்...
ஹெலிகாப்டரில் ஏறப்போகும் போது செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து பணத்தை அந்த கெய்டு இடம் பிராட் பிட்அள்ளிக் கொடுக்கும் போது அதனை மறுப்பது கவிதை... அதே போல் அந்த காடசிகளின் போது பின்னனி இசை சூப்பர்...
அந்த இரண்டு சிறுவர்களில் இளையவன், தன் அக்கா குளிப்பதை மறைந்து இருந்து பார்த்து ரசிப்பதும், அதனை அவள் கண்ட கொள்ளாமல் விடுவதும், ஆடு மேய்க்கும் போது கைமைதுனம் செய்வதும்,அதனை பிரச்சனையின் போது அண்ணன்காரன் குடும்பத்தில் போட்டு உடைப்பதும், அதற்க்கு அந்த அப்பா கேரக்டர் வெளிபடுத்துவது நடிப்பு அல்ல.... அது வாழ்ந்த வாழ்கையை அப்படியே காட்டி இருப்பார்....
எல்லா காட்சிகளையும் மிக இயல்பாக எடுத்ததும் எந்த காட்சிக்கும், கொஞ்சமும் காம்பிரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் படம் எடுத்துள்ளதற்க்கு இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...

Produced by Steve Golin
Jon Kilik
Written by Guillermo Arriaga
Starring Brad Pitt
Cate Blanchett
Gael García Bernal
Kōji Yakusho
Music by Gustavo Santaolalla
Editing by Douglas Crise
Stephen Mirrione
Distributed by Paramount Vantage
Release date(s) May 23, 2006 (premiere at Cannes)
October 27, 2006 (US, limited)
November 10, 2006 (US, wide)
November 10, 2006 (Mexico)
November 15, 2006 (France)
December 7, 2006 (MIFF)
December 26, 2006 (Australia)
January 19, 2007 (UK)
April 28, 2007 (Japan)[1]
Running time 143 minutes
Country Japan
Mexico
Morocco
USA
Language English
Spanish
Arabic
French
Japanese
Japanese Sign Language
Berber
Budget US$25 million (estimated)
Gross revenue $135,330,182
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி....