விக்ரம் வேதா…
விக்ரமாதித்யன் வேதாளத்தை முறுங்கை மரத்தில் இருந்து வெட்டி தோளில் போட்டுக்கொண்டு நடக்க… வேதாளம் கதை சொல்லும்… கதை முடிவில் வேதாளம் விக்ரமாதித்யனிடம் கேள்வி கேட்கும்.. பதில் தெரியாமல் விக்ரமாதித்தன் முழிக்க வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏற. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் என்ற கதை சுழன்று கொண்டே இருக்கும்…
மேல இருக்கும் கதையை பேஸ் பண்ணி புஷ்கர் காயத்ரி தம்பதிகள் சிறப்பாக திரைக்கதை அமைத்து இருகின்றார்கள்.
ஆரண்யகாண்டம் திரைப்படத்துக்கு பிறகு அதிகம் பிசிறில்லாமல் வெளி வந்து இருக்கும் கேங்ஸ்டர் திரைப்படம் விக்ரம் வேதா…
படத்தின் கதை.. விக்ரமாதித்யன்…விக்ரம் மேடி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், வேதளாம் விஜய்சேதுபதி பெரிய ரவடி. கைது பண்ணினால் விஜய் சேதுபதி கதை சொல்ல மேடிக்கு பதில் தெரியாமல் விழிக்க இந்த இரண்டு பேரின் ஆடுபுலியாட்டம்தான் இந்த திரைப்படத்தின் கதை.
மாதவன் இன்ட்ரோ சீன் மற்றும் விஜய் சேதுபதியின் வடை இன்ட்ரோ சீன் செமை. டோன்ட மிஸ் இட்.