#வியட்நாம்பயணகுறிப்புகள். 7
ஒரு நாட்டோட மக்கள் அவுங்க பழக்க வழக்கங்களை பத்தி தெரிஞ்சிக்கனும் அல்லது பேசனும்னா…… அவங்க நாட்டோட வரலாற்றை ஓரளவுக்கு தெரிஞ்சாதான்.... கொஞ்சமாவது அந்த மக்களை புரிஞ்சிக்க முடியும்….அதனால் வியட்நாம் வரலாற்றை நாம சிம்பிளா தெரிஞ்சிக்குவோம்.
ரொம்ப வள வளன்னு இழுக்க விரும்பலை.
சிம்பிளா சொல்லறேன்… வியட்நாம் நம்மை போன்று பழமையான ஒரு நாடு…
முதலில் பண்டைய வியட்நாமில் நிறைய அரசர்கள் ஆட்சி செய்து அந்த நாட்டை வளப்படுத்தினாலும் முதலில் வியட்நாமின் அழகில் மயங்கி அதன் மேல் கை வைத்த நாடு சீனாதான்…
ஒரு வருஷம் இல்ல இரண்டு வருஷம் இல்லை… ஆயிரம் வருஷத்துக்கு சீனாதான் வியட்நாமை வச்சி இருந்துச்சி…. அதன் பிறகு கிபி 938 இல் பதாங் நதிப்போரில் சீனாவோட நடந்த போரில் சீனாவை தோற்கடித்து வியட்நாம் சுதந்திர நாடாக மாறியது…..
அதுக்கு அப்புறம் வியட்நாம் அழகில் மயங்கிய நாடு பிரான்ஸ்தான்..
காரணம் இல்லாமல் இல்லை…. கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது குரங்கு போல கூத்தியா தேடிய கதை என்று கிராமங்களில் சொல்லுவார்கள்… அது போல தன்னுடைய நாடு பாரம்பரியமிக்க நாடாக இருந்தாலும் சூத்து கொழுப்பெடுத்து 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தும், பிரான்சும் புதிய கடல் வழியை கண்டு பிடித்ததோடு… நாடு பிடிக்கும் ஆசையில் கப்பலில் இருந்து காலை வைத்த மண்ணை எல்லாம் கபளீகரம் செய்துக்கொள்ள இரண்டு நாடுகளும் அடித்துக்கொண்டன….
1850 களில் மெல்ல பிரான்ஸ் வியட்நாம் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமித்து மெல்ல மெல்ல முக்கிய இடங்களை வியட்நாமை போரில் வென்று 19 ஆம் நூற்றாண்டில் இருந்து இரண்டாம் உலக போர்வரை பிரஞ்சு நாட்டின் காலனி நாடாக வியட்நாமை பிரான்ஸ் வைத்துக்கொண்டது....
வியட்நாமில் இன்றும் சீன மற்றும் பிரான்ஸ் கட்டிட வடிவமுள்ள கட்டிடங்களை நாம் காணலாம்..
அது மட்டுமல்ல.. பிரேஞ்சுகாரனுங்க ஒன்னும் சாப்ட்டா எல்லாம் ஆட்சி செஞ்சி கிழிக்கலை… தன் நாட்டில் வந்து சொம்பு வச்சிகிட்டு பஞ்சாயத்து பண்ணா யார்தான் பொறுத்துப்பாங்க… புரட்சி வெடித்தது… வீரர்கள் தோன்றினார்கள்… அவர்களை தேடி தேடி துரத்தி துரத்தி வேட்டையாடியது பிரெஞ்ச் அரசாங்கம்.
இதன் பின் இரண்டாம் உலகபோரின் முடிவில் பிரான்ஸ் ஜெர்மனியிடம் தோற்றது… வியட்நாம் ஜப்பான் கைக்கு போனது… முதலில் இந்திய அமைதிய படையை கொண்டாடிய இலங்கை தமிழர்களை போல பிரான்ஸ் சனியனுக்கு ஜப்பான் சனியன் எவ்வளவோ மேல் என்று ஜப்பான் ஆதிக்கத்தை வரவேற்றார்கள்.. ஆனால் ஜப்பான் வியட்நாம் மக்களை பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.. பஞ்சம் தலைவிரித்தாடியது… லட்சத்துக்கு மேற்பட்டோர் மாண்டு போனார்கள்..
இந்த நேரத்துலதான் நம்ம ஹோசிமின் என்ட்ரி கொடுகின்றார்… பத்தாயிரம் கொரில்லா விரர்களுடன் களத்தில் இறங்கினார்… வாலு போய் கத்தி வந்த கதையாக பிரான்ஸ் போய் ஜப்பான் வந்து இருக்கின்றது…. அவ்வளவே ஆனால் தனது நாட்டு மக்கள் ஜப்பானியர்களை ஏற்றுக்கொண்டதில் ஹோசிமினுக்கு பிடிக்கவில்லை..
நாதாரிங்களா…. அதிகாரம்தான் மாறி இருக்கின்றது.. ஆனால் நாம் இன்னும் யாருக்கோ ஒருவருக்கு அடிமையாக இருக்கின்றோம் என்பதை மண்டையில் பதிய வைத்துக்கொள்ளுங்கள் என்று எவ்வளவு சொல்லியும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை..
இரண்டாம் உலக போரில் அமெரிக்கா அனுகுண்டு போட்டு ஜப்பான் வகையாக சிக்கி போரில் பின் வாங்க… வியட்நாமில் பிரான்சும் இல்லாமல் ஜப்பானும் இல்லாத அந்த அதிகாரமாற்ற பீரி பிளாங்க் ஸ்பேசை ஹோசிமின் பயண்படுத்திக்கொண்டார். 1948 ஆம் ஆண்டு ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி வியட்நாமை சுதந்திரநாடக அறிவித்தார்.
பிரான்ஸ் எப்படி அப்படியே விட்டுக்கொடுத்து விடுமா என்ன? பிரான்ஸ் நேசநாடுகள் பிரான்சுக்குதான் வியட்நாம் சொந்தம் என்று கூக்குரலிட்டன… பிரான்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வியட்நாமை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்க…
எலெக்ஷன் வைத்து ஹோசிமின் வியட்நாமின் ஜனாதிபதிஆனார்… வடக்கு வியட்நாட் ஹோசிமின் பக்கமும் தெற்கை பிரான்ஸ் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டியது…
பிரான்சுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியது… வடக்கு வியட்நாமுக்கு ரஷ்யாவும் சீனாவும் உதவிகள் புரிந்தன.. பிரான்சுக்கு அமெரிக்க உதவ காரணம்.. கம்யூனிச அரசாங்கம் ஆசியாவில் தழைத்து ஓங்க கூடாது என்ற ஒற்றை நல்ல எண்ணம்தான்.
கொரில்லா போர் உக்கிரமானது பத்தாயிரம் பிரெஞ்சு வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
பிரான்ஸ் பின் வாங்கியது…
பின் பேச்சு வார்த்தை என்றார்கள்.. பொம்மை அரசாங்கத்தை நிறுவினார்கள்…
வடக்கையும் தெற்கையும் அடித்துக்கொள்ள வைத்தார்கள்…
தொக்காக இருக்கும் வியட்நாமை விட பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கு விட மனசில்லை…. அமெரிக்காவில் கென்னடி சுட்டுக்கொல்லப்படும் வரை…. மறைமுகமாக உதவி செய்தது அமெரிக்காதான் விரர்களை தவிர சகலத்தையும் வாரி வழங்கியது....
1963 இல் துப்பாக்கிக்குண்டுக்கு கென்னடி பரலோகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன் பிறகு வந்த அமெரிக்க அதிபர் லின்டான் ஜோன்சன் தன் படைகளை நேரடியாக வியட்நாமில் களம் இறக்க திட்டமிட்டார்….
உலகத்திலேயே நாங்கதான் பெரிய துவரம் பருப்பு… எங்களை ஆட்ட முடியாது அசைக்க முடியாது என்று ஆட்டம் ஓட்டம் காட்டிக்கொண்டு ஆடிக்கொண்டு இருந்த அமெரிக்காவை இந்த சின்ன தேசம்தான் மீசையில் மண் ஒட்ட வைத்து…. எங்களை விட்டு விடுங்கள் என்று கதற வைத்தாதோடு அமெரிக்காவை மண்டியிட வைத்து அழகு பார்த்ததும் இந்த வியட்நாம் மண்ணும் இந்த வீர மக்களும்தான்.….
காரணம் ஐந்தாயிரம் அளவில் இருந்த கொரில்லா படையினர் ‘ லட்சக்கணக்கில் பெருகி மக்களோடு மக்களாக கலந்தனர்.. யார் புரட்சியாளன் யார் சாதாரண பிரஜை என அமெரிக்க படையால் அறிந்துக்கொள்ள முடியவில்லை..
இந்த போரில் பெண்களின் பங்கு அளப்பறியாதது… ஆம் அவர்கள் வெகுண்டெழுந்தார்கள் ஆயுதம் தரித்தார்கள்….அதனால்தான் இன்றளவும் வியம்நாமில் இருக்கும் நினைவு சின்னங்களில் வீரபெண்கள் தவறாமல் இடம் பிடிக்கின்றார்கள்….
சொப்பன சுந்தரியை யார் வச்சி இருக்கா என்பது போல வியட்நாமை ஆள் ஆளுக்கு வச்சிக்கிட்டு இருந்தானுங்க… பொருத்தது போதும் மனோகரான்னு அங்க இருக்க மக்கள் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக பொங்கினாங்க…
வயல்வெளிகளில் வேலை செய்தவர்கள்… துப்பாக்கி தரித்தார்கள் காடுகளில் மலைகளில் மறைந்து கொரில்லா தாக்குதல் நடத்தினார்கள்..
அமெரிக்கபடையால் தாக்கு பிடிக்க முடியவில்லை… ஆசிய பிராந்தியத்தில் படைபலத்தை நிறுவ அந்த இடம் தோதாக இருக்கும் என்பதால் அமெரிக்காவுக்கு வியட்நாம் மீது தீராத மோகம் உண்டு.
ஹோசிமின் தலைமை வகுத்தார். கொரில்லா படைகள் காடுகளிலும் சுரங்கங்களிலும் மறைந்து இருந்து தாக்குதல் நடத்தியது அமெரிக்கா நவீனரக ஆயுதங்களை இறக்கியது… வியட்நாமியர்கள் பக்கம் இழப்பு அதிகம் என்றாலும்… அதிகம் என்றால் தோராயமாக இருபத்தி ஐந்து லட்சம் வியட்நாமியர்கள் கொல்லப்பட்டார்கள்..
அமெரிக்க படைகள் பக்கம் ஐம்பத்தி எட்டாயிரம் பேர். கொல்ப்பட்டார்கள்…
அமெரிக்க மக்கள் அப்பாவி வியட்நாம் மக்கள் கொல்லப்படுவதையும் தங்கள் வீரர்கள் பினப்பெட்டியில் வருவதையும் பார்த்து வெகுண்டு எழுந்து அரசுக்கு எதிராக போராடினார்கள்…
புத்த பிட்சுகள் வியட்நாமில் தங்களை தாங்களே நடுரோட்டில் எரித்துக்கொண்டு எந்த அலறல் சத்தமும் இல்லாமல் உயிர் விட்டார்கள்..
வியட்நாமுக்கு இழப்புகள் அதிகம்தான் ஆனாலும் மண்டியிடவில்லை.. யுத்த வெற்றியை தீர்மாணிப்பது.. ஆயுதங்களும் படைபலமும் அல்ல.. மக்கள்தான் என்பதை உலகிற்கு வியட்நாம் மக்கள் உணர்த்தி காட்டினார்கள்.
போர் நடந்த உக்கிரமான 1965 இல் இருந்து 1968 வரை மூன்று வருடங்களில் அமெரிக்கபடை வியட்நாம் மக்களின் மீதும் அந்த மண்ணின் மீதும் மூர்க்கமாக பயண்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களின் அளவு… ஒரு மில்லியன் டன் என்றால் போரின் கோரத்தை நீங்களே உணர்ந்துக்கொள்ளுங்கள்.
நேபாம் என்ற கொடுரமான ரசாயண ஆயுதங்களை வடக்கு வியட்நாம் மீது பயண்படுத்தி மக்களை அதீத இன்னலுக்கு உள்ளாக்கியது… போரின் புகைபடங்கள் கல் நெஞ்சையும் கரைத்து விடும் அளவுக்கு அவலங்களை வெளிக்கொண்டு வந்தது…. முக்கியமாக நிர்வாணமாக ஓடி வரும் சிறுமியின் புகைப்படமும் அந்த கதறலும் உலகில் உள்ள மக்கள் மனங்களை உலுக்கியது….
அமெரிக்கா வியாட்நாமை விட்டு வெளியேற வேண்டும் என்று உலகெங்கும் எதிர்ப்பு உருவானது. 18 லட்சம் பேரை கொண்டிருந்த முதலாளித்துவ படைகளை, வெறும் நாலரை லட்சம் வீரர்களைகொண்ட வடக்கு வியட்நாம் படைகள் தோற்கடித்து வரலாறு படைத்தனர்...
1973 இல் அமெரிக்கா மீசையில் மண் ஒட்ட சிறிய விவசாய நாடான வியட்நாம் மக்களிடம் சரணடைந்தது….
அமெரிக்கா சரணடைந்தாலும் நக்கலாக எந்த ஸ்டேட்மென்டும் வியட்நாம் விடவில்லை..குதுகலிக்கவில்லை.
வியட்நாம் ஜெனரல் வோ-குயன்-கியாப் ஒரு ஸ்டேட்மென்ட் விட்டார்…
போரில் வெற்றி பெற்றவர்கள் வியட்நாம் மக்கள், அமெரிக்க இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. வியட்நாம் மக்கள் போரை விரும்பவில்லை, அமைதியை விரும்பினார்கள். அமெரிக்க மக்கள் போரை விரும்பினார்களா? இல்லை, அவர்களும் அமைதியை விரும்பினார்கள். எனவே எங்கள் வெற்றி வியட்நாம் மக்களின் வெற்றி, அமெரிக்காவில் அமைதியை விரும்பிய மக்களின் வெற்றி.” என்றார் ஜெனரல் கியாப்.
எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே…
அப்படியான வீரமான வியட்நாம் தேசத்தின் தலைநகர் ஹனாயில் பத்து நாட்கள் நான் சுற்றிவந்தது இறைவன் எனக்களித்த வரம்.
குறிப்பு
ஒரு நாட்டின் வரலாற்றை பற்றி தெரிந்துக்கொண்டால்தான் அந்த நாட்டில் மக்களின் பழக்க வழக்கம் போன்றவற்றை எழுதினால் புரிந்துக்கொள்ள முடியும் என்பதால்… இந்த பெரிய மற்றும் சுருக்கமான வரலாற்று பதிவு… சுவாரஸ்ய தகவல்கள் இருந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்… அதே போல வரலாற்று பிழைகள் கண்ணில் பட்டாலும் சொல்லவும்…
வியட்நாம் சுவாரஸ்யங்கள்.
இன்னும் வரும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
20/06/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அப்படா ஒரு கட்டுரை வந்திருச்சு ... நன்றி
ReplyDeleteVaralatru Perasiriyar Jackie Sekar VALGA VALGA
ReplyDelete