அவன் கார் டிரைவர்… நார்த் கொரியாவுல இருக்கான்.
ஒரே ஒரு சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க வயசான அம்மா பார்த்துக்குறாங்க..
சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே கேட்கறிங்க..? சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா ?
ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்..
நைட்டு படுத்தா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது..
அம்மாக்காரி குழந்தையை பார்த்துக்கிட்டாலும் வேலைக்கு போனா பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டே புள்ளைக்கிட்ட சொல்லறா….
உன் பொண்டாட்டி ஆரம்பத்துல இருந்தே சரியில்லை.. அவ கண்ணே ஒரு மாதிரி சாய்வான கண்ணு… அவ கண்ணு அவ வெஜினா விரிஞ்சி இருக்கறது போல விரிஞ்சி இருக்கும்… அவ ரொம்ப தப்பான பொம்பளைன்னு சொல்லறா…
அதுக்கு டிரைவர் அம்மாகிட்ட சொல்லறான்,
ஏன்டி கிழவி குழந்தை எதிர்க்க என்ன பேசறதுக்கு தெரிய வேணாம்?
உன் கண்ணு கூடத்தான் சாய்வா இருக்கு என்று சொல்ல.. அம்மாகாரி கோவமாக தேவிடியா பையா என்கின்றாள்..
போ… நிறைய சம்பாதி… சவுத் கொரியாவுக்கு போ ஒரு அழகான பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.. அவ எதிர்க்க வாழ்ந்து காட்டுன்னு வேற தூபம் போடுறா… இந்த குழந்தையை பத்தி கவலைபடாதே.. நான் பார்த்துக்கறேன்னு சொல்லறா..
சூதாட்ட விடுதியில ஒருத்தன் பழக்கம் ஆகறான்… அவன் இவன் பண கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு ஒரு வேலையை கொடுக்கறான்…
பத்து நாள் டைம்.. சவுத் கொரியாவில சியோல்ல.. நான் சொல்ற அட்ரஸ்ல இருக்கறவனை நீ கொலை செய்யனும்.. அது மட்டுமல்ல. அவன் கட்டை விரலை கட் பண்ணி எனக்கு எடுத்து வந்து காட்டினா? உனக்கு 50 லட்சம் பணம் தரேன்…
ஹலோ நான் உன்னை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறியா? தோ பாரு பணத்தை நான் இப்பயே பேங்க் அக்கவுண்ட்ல போட்டு வச்சிட்டேன்… நீ வேலை முடிச்சிட்டு அவன் கட்டை விரலை எடுத்துக்கிட்டு வந்தா உனக்கு பாஸ்வேர்ட் கொடுத்துடுவேன்.. நீ செம ஜாலியா வாழலாம் என்ன சொல்லற..?
முதலில் மறுக்கின்றான்..
ஆனால் இந்த வேலையா போனா.. சவுத் கொரியாவுக்கு இவன் செலவுல போலாம் ஒன்று.. ரெண்டாவது.. அங்க காணமல் போன தன்னோட மனைவியை கண்டுபிடிக்கலாம்.. என்ற நோக்கத்தில் முகம் தெரியாதவனை கொலை செய்ய ஒப்புக்கறான்…
வடகொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு கள்ள கப்பலில் பயணம் செய்கின்றான்…
அவன் மனைவியை கண்டு புடிச்சானா? பணத்துக்காக கொலை செய்து கட்ட விரலை எடுத்தானா என்பதை வெண்திரையில் பாருங்கள்.
இந்த படத்தை எடுத்த Na Hong-jin முதல்ல கொரியாவுல ஷார்ட் பிலிம் எடுத்துக்கிட்டு இருந்தார்.. 2008ல தி சேசர்ன்னு ஒரு படம்… ஓத்தா அந்த ஒரே படத்து மூலமா உலகத்தையே திரும்பி பார்க்க வச்சார்.
அதான் Na Hong-ji ….. பன்னி குட்டி போடறது போல படம் எடுத்து தள்ளுற ஆள் இல்லை… இதுவைரை பத்து வருஷத்துல மூனே மூனு படம்தான்… அந்த மூன்று படமுமே வெற லெவல்.. கீழ கொடுத்து இருக்கேன் பாருங்க… மூன்று படமும் வேற லெவல்…
ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு டைப்புல இருக்கும்
The Chaser (2008) - director, screenplay
The Yellow Sea (2010) - director, screenplay
The Wailing (2016) - director, screenplay
தி சேசர் படத்துல சைக்கோ வில்லன் Ha Jung-woo இந்த யெல்லோ சீ படத்துல நாயகன் அதே போல சேசர் படத்துல மாமா கேரக்டர் பண்ண ஹீரோ Kim Yoon-seok இந்த படத்துல கொடுரமான வில்லன்.
சான்சே இல்லை..
இந்த இரண்டு படத்தையும் அடுத்து அடுத்து பார்த்தா எந்த அளவுக்கு ரெண்டு பேருமே நடிப்புல பின்னி இருப்பானுங்கன்னு புரிஞ்சிக்க முடியும்.
Kim Yoon-seok யப்பா என்ன கொடுரதனம்..????
பொண்ணாசைதான் படத்தோட பிரதானம் ஒன்லைன்… ஆனா சில விஷயங்கயை ஓப்பனாவும் சிலதை பட்டும் படாமலும் சொன்ன விஷயத்தில் இயக்குனரின் மேதாவிதனத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.
படம் என்னவோ கிரைம் திரில்லர்தான்.. ஆனா வடகொரியாவோட வறுமையையும் அவர்கள் தென்கொரியாவுக்கு செல்ல படும் பாடுகளையும்… பொட்டில் அரைந்து சொல்வதோடு ஒரு கவித்துவமான சோகத்தையும் படம் நெடுகிலும் இயக்குனர் விதைத்து இருப்பதே அவரின் வெற்றி என்பேன்.
படத்தின் கிளைமேக்ஸ் உங்களை நெகிழ வைக்கும்…
மஞ்சள் கடலில் ஒருவேளை நீங்கள் கப்பலில் பயணம் செய்ய நேர்ந்தால்… இந்த கடலில்தானே அந்த கார் ஓட்டியும் அவன் மனைவியும் பயணம் செய்து இருப்பார்கள் என்று தோன்ற வைத்தால் அதுவே இந்த திரைப்படத்தின் வெற்றி என்பேன்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment