கிழிந்தது உன்னிகிருஷ்ணன் மட்டுமல்ல
 காட்சி 1
அம்மா அவன் கிட்ட எதுக்கு பேசறே… என்கிட்ட பேசு..
இல்லைம்மா ஆபிஸ்ல நடந்த விஷயம் யாழினி… அப்பாக்கிட்ட சொல்லிட்டு வரேன்..
அப்புறம் என்னாச்சி… சென்டர்  ஹெட் போன் பண்ணி அப்ரிசியேட் செஞ்சார்..

அம்மா இது எல்லாம் எதுக்கு அவன்கிட்ட சொல்லறே..? என்கிட்ட சொல்லு… ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட். அதன் பின் யாழினி எங்கள் இருவரையும் பேசவே விடவில்லை… நடு நடுவில் ஏதோ ஏதோ கதை பேசி பேச  விடாமல் செய்துவிட்டாள் காட்சி 2

கிருஷ்ண ஜெயந்திக்கு  வீட்டம்மா பயங்கர வேலை.. சரின்னு நைட்டு  அப்படியே ஒரு ரவுண்ட் வரலாம்ன்னு அழைச்சிக்கினு போக டூவிலர்ல போக முடிவு செஞ்சோம். புடவை கட்டி இருந்தாங்க..
  ஒரே பக்கம்  உட்கார்ந்து இடுப்பை சுத்தி  கை வச்சி பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்தாங்க.. யாழினி   முன்னாடி உட்கார்ந்து அம்மா அவனை கட்டி பிடிக்காதே…
தேர் இஸ் நோ ஹோல்ட் யாழினி  அதனால அப்பாவை பிடிச்சிக்கிட்டேன்.. புடவை வேற வழிக்கிக்கிட்டே போகுது..
 அம்மா நீ அவனை பிடிக்காதே.. என்னை புடிச்சிக்கோ..

 எப்படி  யாழினி பிடிச்சிக்கறது.??

எனக்கு அதெல்லாம் தெரியாது.. அவனை பிடிக்ககாதே   என்றாள்….

 காட்சி 3

 அம்மா அவனை  பக்கத்துல படுக்காதே… நீ அவன்கிட்ட பேசிக்கிட்டே இருக்கே.. எனக்கு தூக்கம் வருது..

ரியலி ஐ நீட் டூ ஸ்லீப்.. டோன்ட் டிஸ்டர்ப் மீ… என்று எங்களை பேச விடாததோடு  அவள்  அதன் பிறகு தூக்க  ஒன்றரை மணி நேரம் ஆனாது வேற கதை..


காலையில்  அலுவலகத்துக்கு  வீட்டம்மாவை  அழைத்து போய்  விட செல்லும்  அந்த 20  நிமிடம் மட்டுமே  எங்களுக்கானது..  அப்போதுதான் பேச வேண்டியவற்றை பேசி முடிப்போம்.

காலையில் வாகனத்தில் செல்லும் போது யாழினி பற்றியும்   யாழினி பொசசிவ் பற்றியும் பேசினோம்.
 களுக் என்று நக்கல் சிரிப்பு சிரித்தாள்..

எதுக்குடி  இப்ப  சிரிக்கறே…

இல்லை விதை ஒன்னு போட்டா சொர  ஒன்னா முளைக்கும் என்று நீட்டி முழங்கினாள்.

 புரியறது போல சொல்லு…

  பொசசிவ் பத்தியெல்லாம் நீ பேசற பார்த்தியா-? இதெல்லாம் நேரக்கொடுமை..

 எதுக்குடி சிரிச்ச சொல்லு?-

உன்னிகிருஷ்ணன் போட்டோ நினைப்பு இருக்கா?

எனக்கு கொசு வத்தி சுத்தியது..

சரியா  17 வருசத்துக்கு முந்தி என் பொண்டாட்டி காலேஜ் பர்ஸ்ட் இயர்.

பர்ஸ்ல பணம் எடுத்து கொடுக்கும் போது பார்த்தேன்…

அவ பர்உஸ்ன்னில கிருஷ்ணன் போட்டோ…


எதுக்கு இது -?

 நல்லா பாடுவாப்புல… செம குரல் தெரியுமா? என்னவளே அடி என்னவளே.. சான்சே இல்லை…

 அதுக்கு…??? பர்ஸ்ல போட்டோ வச்சிக்குவாங்களா?-

எனக்கு  உன்னி குரல் புடிக்கும்ன்னு விகடன்ல இந்த போட்டோ வந்துச்சின்னு பிச்சி  எடுத்து வந்து  பிரியா கொடுத்தா…

சரிஅவ எதிர்க்க எதுக்கு  சீன் போடனும்ன்னு பர்ஸ்ல வச்சிக்கிட்டேன்…

 அந்த  பேப்பரை  இங்க  கொடு… வாங்கினேன்…

உன்னி விகல்பம் இல்லாமல் வானம் பார்த்து மீசை   இல்லாமல்  சிரித்துக்கொண்டுஇருந்தார்..

குரல் நல்லா இருந்தா பாட்டை கேளு… பிரியா  கொடுத்தாளாம்.. மயிரா கொடுத்தாளாம் என்  போட்டோ பர்ஸ்ல இல்லை… இதுல  ங்கோத்தா  உன்னி போட்டோ வாழுதா?? என்று சொல்லி..

உன்னி   போட்டோவை…

நாலாய் எட்டாய் பண்ணிரண்டாய் பதினாறாய்  இருபதாய் இருபத்திநான்காய் இருபத்தி எட்டாய் முப்பத்தி இரண்டாய் முப்பத்தி ஆறாய்  கிழித்து போட்டேன்..

கொசு வத்தி சுத்தறதை நிறுத்தி இயல்பு நிலைக்கு வந்தேன்.

 நீயே இப்படின்னா உன் பொண்ணு எப்படி இருக்கும்..???

 அது 32 அடியாவது பாயவேணாம்??? என்றாள்….

பொசசிவ் பத்தியெல்லாம் நீ பேசாதே என்றார்.

நான் நாலாய் எட்டாய் பண்ணிரண்டாய் பதினாறாய்  இருபதாய் இருபத்திநான்காய் இருபத்தி எட்டாய் முப்பத்தி இரண்டாய் முப்பத்தி ஆறாய்  கிழித்து போனேன்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
15/09/2017

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

  1. யாழினி அழகாக இருக்கிறாள். சுட்டித்தனத்தை நினைக்க சிரிப்புதான் வருகிறது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner