வேட்டையாடு விளையாடு எனக்கு பிடித்த காதல் காட்சி.#வேட்டையாடுவிளையாடு #கமல் #காதல்காட்சி #எனக்குபிடித்தகாதல்காட்சி
#kamalhaasan  பாகம்  ஒன்று.
காதல் வந்த அடுத்த நிமிடம் சொல்லி விடும் கவுதம் திரைப்பட காதல் காட்சிகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த வகையில்  வேட்டையாடு விளையாடு  எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
ரத்தம்,  கத்தி, விரல், எலுமிச்சை என்ற  ரத்தம் தெறிக்கும் கிரைம் திரில்லரில்  மிகவும் ஒரு அற்புதமான காதல் கதையை பதிவு செய்து இருப்பார் கவுதம்.


 எத்தனை பேர் ரசித்தார்கள் என்று எனக்கு தெரியாது.. என்னை பொருத்தவரை வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கமல் ஜோதிகா காட்சியை மட்டுமே ஸ்கிப் பண்ணி ஸ்கிப் பண்ணி பார்க்கும்  பழக்கம் எனக்குன்டு… ஒரு அழகான காதல் கதையை எத்தனை முறை பார்த்தாலும் கிட்டும்    சந்தோஷத்தை நான் அனுபவித்து இருக்கிறேன்.
அவன் ஒரு விடோயர்… அவள் ஒரு குழந்தைக்கு தாயான  டிவோர்சி  இரண்டு பேருக்கும் அரும்பும் நட்பும் அதன் பின் அது காதலாக மாறும் அந்த கணமும் சான்சே இல்லை…
டயலாக் எல்லாம் செம மெச்சூர்டா இருக்கும்…ஒரு மெச்சூர்டான ஆள் எந்த பெண்ணிடம் இருந்தும் விலகி செல்ல  மட்டுமே விரும்புவான் திரும்ப திரும்ப அவனிடம் நெருங்கும் போதுதான்..  கல்யாணம்  பண்ணிக்கிட்டாதான் என்ன என்ற கேள்வி வரும்… இதுல இன்னொரு பிரச்சனை இருக்கு… எங்கயாவது  செமையா வழியாறான்னு நினைச்சிட்டா..??
ஹீரோயின் என்ட்ரியே கண்ணீரும் கம்பலையுமாக ஆரம்பிக்கும் அந்த கட்ஸ் கவுதமுக்கு மட்டுமே உண்டு.
முதல்பாகத்தில் அவர்கள் இருவரும்   இடையே ஏற்படும் நட்பை பேசி இருக்கின்றேன்….பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

23/05/2017நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner