நான் மாறத்தான் வேண்டுமா ? நீங்களே சொல்லுங்க.....

அருன்குமார் என்பவர் ஒரு கேள்வியை முன் வைத்தார்.... அதற்கு எனது பதிலும் வீடியோவும்.. காரணம் இந்த கேள்விகள் நான் யூடியூப் சேனல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்னை துரத்தி வருகின்றது... அதனால் இந்த பொதுவான பதில் அனைவரின் கேள்விகளுக்கும்.
========


தி௫ Jackie sekar அவர்களுக்கு.... தங்களை சில வ௫டங்களாக பார்க்கிறேன் youtubeல்... நீங்கள் மிகவும் நியாயமான நேர்மையான நபர் என்பது என்னுடைய கருத்து.... நான் இப்பொழுது கூறு இ௫ப்பது மன வ௫த்தத்தை தந்தால் மன்னிக்கவும்.... மிக நியாயமான உங்க videosக்கு view rating, மற்றும் subscribers குறைவாக இ௫ப்பது எனக்கு வ௫த்தமே.... என்ன காரணம் என்று எனக்கு தோன்றுகிறது என்றால்.... நம் People psychology படி... அழகாக இ௫ப்பவர்கள், பனக்காரர்கள், வெள்ளையாக இ௫ப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பு த௫வார்கல்...... Youtubeல் புதிதாக ஒ௫வர் Jacki cinema videoவின் preview imageல் உங்களை பார்க்கும் போது,சற்று வயதான ஆல்.... வழக்கு தலையுடன் இ௫ப்பதை பார்த்து... Just like that ஆக கடந்து விடுகிறார்கள் videoவை பார்க்காமல்..... இது அனைவருக்கும் உள்ள இயல்பு.... ஒ௫ ஆளை பார்த்து எடைபொடுவோம் அல்லவா அது போன்று.... Video preview image மாற்றுங்கள்.... மாற்றம் வ௫ம் என்று நம்புகிறேன்..... நன்றி
==============
எனது பதில்...
வைரமுத்துவிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.. நீங்கள் கருப்பாக இருப்பதற்கு என்றாவது வருத்தம் அடைந்து இருக்கின்றீர்களா? என்று கேட்டதற்கு வைரமுத்து சொன்னார்... என் வீட்டு கண்ணாடி ஒரு போது என்னை கருப்பாக காட்டியதில்லை என்றார்,... அது போல நான் வயதான ஆள் , வழுக்கு தலை ஆள் என்று என்னை ஒரு போதும் டீ கிரேட் செய்துக்கொண்டதில்லை... நான் அழகன்... இன்னமும் என்னை நேசிக்கும் பெண்கள் டஜன் கணக்கில்... காதலித்துதான் திருமணம் செய்துக்கொண்டேன்... என் தளத்தின்ச சப்ஸ்கிரைபர் பற்றி கவலை கொண்டதுக்கு மிக்க நன்றி... விக் வைத்து அதனை அவிழ்த்து சொட்டைதலையுடன் இருக்கும் போது ஒரு வெறுப்பு வருமே... அது போல கவரில் வேறுபடம் வைத்து உள்ளே வந்து வழுக்கை தலையுடன் இருக்கும் என்னை பார்த்தாலும் வெறுப்புதான் வரும்.. என்னை பொருத்தவரை நான் இப்படித்தான் என்று சொல்லிவிட்டு ராவாக பழகும் நபர் நான்.. போலித்தனங்களை அதிகம் விரும்பாதவன்... அதனாலே நான் இப்படி... இயல்பாய் இருத்தாலே எனக்கு கம்போர்ட்... பிரிவியூ , இமேஜ் மாற்றி உள்ளே வர வைத்து என்னை நேசிக்க வைப்பதைவிட நான் இப்படித்தான் என்று சொல்லி என்னை உண்மையாக இரண்டு பேர் நேசித்தாலே போதுமானது... ரசிக்கவும் நேசிக்கவும் அதிக நாள் போலித்தனம் கை கொடுக்காது என்பது என் எண்ணம்... என் தளம் மீதான உங்கள் காதலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
இப்படிக்கு
தன்னம்பிக்கை அழகன்
ஜாக்கிசேகர்.
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner