என்ன சிரிக்கறே...?
ஒரு பார்வேடு ஜோக் அதான் சிரிச்சேன்.
எங்க சொல்லு..
ராவணன்... ஏன்டா உங்க பொண்டாட்டியையாட நான் கடத்தினேன்.... ராமரோட பொண்டாட்டியை தாண்ட கடத்தினேன். அதுக்காக வருஷா வருஷம் என்னை கொளுத்துவிங்களாடா?
எங்க பொண்டாட்டியையும் ஏன் கடத்தலைன்னுதான்டா வெண்ணை வருஷா வருஷம் கொளுத்தறோம் என்று சொல்லி விட்டு புன்முறுவல் பூத்தாள்..
நான் சுதாரித்து இருக்க வேண்டும்....
ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்து விட்டேன்... சிரித்தது பிசகு,.
மனைவி இப்படியான ஜோக் படிக்கும் போது இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று சொல்லும் பக்குவம் கை வர வேண்டும்...
அந்த பக்குவம்தான் ஏழு கழுதை வயசாயும் வந்து தொலைக்கலையே....
இது போட்டு வாங்கும் செயல் என்பதை சட்டென உணரவேண்டும்...
உணர்ந்தேன் சத்தமாக ஹா ஹா ஹா என்று சிரித்து பிறகு உணர்ந்தேன்..
தலைக்கு மேலே வெள்ளம் போனதை உணர்ந்து விட்டேன்...
இனி ஜான் போனால் என்ன கிரிஸ்டோபர் நோலன் போனால் என்ன?
எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற துணிவோடு... மனைவியை பார்த்தேன்..
இப்படி ஹா ஹா ன்னு சிரிக்கறியே... உனக்கு வெட்கமா இல்லை என்றார்...
நான் மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டே... சில வினாடிகளுக்கு பிறகு பாஸ் விட்டு ஆரம்பித்தேன்...
ஐ புரோ யார் செஞ்சது...?
ஏன்-?
இல்லை நல்லா இருக்கு...
பொற்கலைதான் செஞ்சாங்க...
செமையா பண்ணி இருக்காங்க...
டேய் நீ யாரு எப்படி டைப் டைப்பா பேச்சை மாத்துவேன்னு எனக்கு தெரியும்..
நீ சொன்னா போல என்னை ரொம்ப நல்லா மோல்ட் பண்ணி வச்சி இருக்கே.... குட் பொழச்சிப்போ என்றாள்..
நான் அத்தோடு விட்டு இருக்க வேண்டும்...
உன்னை மாதிரி ஆளை 20 வருஷமா மெயின்டெயின் பண்ணறது அவ்வளவு சுளுவான காரியாமா?
என்று மைன்ட் வாய்ஸ் என்று சத்தமாக சொல்லி விட்டேன்...
அவள் எரித்து விடுவது போல 130 டிகிரி பாரன்ஹீட்டில் என்னை பார்க்கின்றாள் என்பதை என் முதுகு சூடு உணர்த்தியது..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
19/09/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

0 comments:
Post a Comment