Tuesday, June 6, 2017

சிநேகமுள்ள மனிதர்கள்.என்னை பொறுத்தவரை சிறுவயதில் இருந்து இன்று வரை  உடற்பயிற்சி என்பது… மார்கழி மாதத்தில் பதினைந்து நாட்கள்  ரன்னிங் ஓடி  குளிரை  விரட்டி, மீதி பதினைந்து நாட்கள் போர்வை போர்த்திக்கொண்டு படுத்து உறங்குவதே என்னை பொருத்தவரை உடற்பயிற்சி…

ஜாக்கிசான் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால்.. ஒரு பத்து  நாளைக்கு தண்டால் எடுத்து கண்ணாடி முன் மார்பை விரித்து   முறைத்து பார்க்கும் ரகம்.
20 வருட சென்னை வாழ்க்கையில்  நேரம் கிடைக்கும்  போது ஜாக்கிங்க அல்லது வாங்கிங் போகும் ரகம் எதையும் ரெகுலராக செய்தது  இல்லை…
இன்னோரு விஷயமும் இருக்கின்றது… இந்த 20 வருட சென்னை வாழ்க்கையில் தினமும் ஒரு நண்பரிடம் போனில் பேசியோ.,. அல்லது  அவரோடு தொடர்ந்து அனு தினமும் டிராவல் செய்யும் ஆள் நான்  இல்லை..


 நான் பூனை போல தனித்தே இருப்பேன் விரும்பியவர்களிடம் எனக்கு செட் ஆகின்றவர்களிடம்  நானாக பேசி பழகுவேன். அதனாலோ என்னவோ..  தினமும் சந்தித்து அல்லது போனில் பேசிஅளவலாவ பெரிய நண்பர்கள் கூட்டம் என்பது எனக்கு இல்லைவே இல்லை.


ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஒரளவுக்கு தினமும் வாங்கிங் போக ஆரம்பிதேன்…  வாங்கிங் போய் வந்த அன்று மனம் புத்துணர்ச்சியாக இருந்தது. அந்த புத்துணர்ச்சி தினமும்  தேவையாய் இருக்கின்றது..  சோம்பல் விரட்டுகின்றது..

காலையில் எழுந்து  ஒரு  வேளையை சரியாக செய்தேன் என்ற நிறைவு இருக்கின்றது…
வாங்கிங்கின் போது பிளாக் காலத்தில் இருந்தே என்னோடு பழகி வரும் தம்பி பிரகாஷை நான் அவ்வப்போது  சந்திப்பேன். அண்ணா  டெய்லி  வாங்க என்று வற்புறுத்துவான் நான் கண்டுகொண்டதே இல்லை..

ரொம்ப நாள் கழித்து  தற்செயலாக அவனை  நேற்று மெரினாவில் பார்த்தேன்...

அவன் நண்பர்கள் குழுவில் என்னை  அறிமுகப்படுத்தி வைத்தான்.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று வியக்க வைத்து விட்டார்கள்…

தினமும்  வாங்க.. என்று பலமுறை வலியுறுத்தினார்கள்.. இத்தனைக்கு அவர்களுக்கு எனக்கும் இருக்கும்  ஒரே வேவ்லென்த்.. உடற்பயிற்சி  என்ற ஒற்றை புள்ளி ‘மட்டுமே,

 சிநேகமாக  விட்டுக்கொடுத்து புதியவன் என்று தள்ளி வைக்காமல் பல வருடம் பழகியவர்கள் போல எப்படி இவர்களால் பழக முடிகின்றது என்று நேற்றில் இருந்து யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்…

 இத்தனைக்கும் நான் இன்றுதான்  காலையில்  சிலரை சந்தித்தேன்… அவர்களும் யார்  எவர் என்று எல்லாம் கேட்வில்லை..  நம் குழுவில்  நம் நண்பரின் நண்பர் வந்து  இருக்கின்றார்… நண்பனின் நண்பன் எனக்கு நண்பன் எனக்கும் நண்பனே என்ற ஒரே கான்சாப்ட். அப்படித்தான் பழகுகின்றார்கள்.,

 இத்தனைக்கும் அதில் பலர்  உயர் பதவியில் இருக்கின்றார்கள் அவர்களை பற்றி தம்பி சொன்னான்… காதில் வாங்கிக்கொள்ளவில்லை..

என்ன பொருத்தவரை  சிநேகமுள்ள மனிதர்கள்…
இன்று பில்ட் எக்சசைஸ்… சுந்தர் என்பவர் கிளாஸ் எடுத்தார். 20 வருட சென்னை வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு குழுவில்  இணைந்து ஒர்க் அவுட் செய்தேன்.


 இரண்டு மணி நேர பயிற்சி… உடல் வலி பின்னி எடுக்கின்றது.. ஆனால் நண்பர்களோடு சேர்ந்து செய்யும்  போது மனம் இன்னும்  உற்சாகமாக இருக்கின்றது.

அதன் பிறகு வேர்வை கசகசப்போடு  விவேகனாந்தாவில் காபி அதன் பின் கொஞ்சம் அரட்டை.

கால் கையில் எல்லாம் வலி பின்னி எடுக்கின்றது…
நேசமிக்க நண்பர்களால்  வலி சுகமாய் இருக்கின்றது…

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
06/06/2017நினைப்பது அல்ல
 நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner