கடைசியாக எப்போது என் பர்ஸ் தொலைத்தேன்.?



கடைசியாக எனது பர்ஸ் எப்போது தொலைத்தேன் என்று  நினைவில் இல்லை…ஒரு சின்ன பாக்கெட் சைஸ்  நோட்டு புத்தகம் அதில்  போன் நம்பர் நடுநடுவே ஐம்பது, நுறு ருபாய் தாள்கள்… சில்லரைகள்  பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வேன்…

பாக்கெட் சைஸ் நோட்டு புத்தகம் நைந்து  போனால்  அதில் ஒரு ரப்பர் பேன்ட் போட்டு அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்வேன்…

ஒரு முறை பாக்கெட்சைஸ் நோட் புக்கை  இப்படி கட்டுக்குள் வைத்த ஒரு நாளில் என் காதலியான என் மனைவி முறைத்தாள்…

 என்னடி  முறைக்கிறே…




பர்ஸ் வச்சிக்கற பழக்கம் எல்லாம் இல்லையா?
 அது பணம்  வச்சி இருக்கறவன்  வச்சிக்கவேண்டியது...   எனக்கு எதுக்கு? என்றேன்…
காலேஜ்ல வேலைக்கு போவப்போறே... பர்ஸ் வச்சிக்கோ...
முதல் முறையாக பர்ஸ் வாங்கி கொடுத்து அதில் பத்து ரூபாய் பணம் வைத்துக்கொடுத்தவள் என் காதல் மனைவி.


அதன் பிறகு பர்ஸ் எப்போது தொலைத்தேன் என்று நினைவு அடுக்கிள் இல்லை என்றாலும்.. பர்ஸ் பிரித்து பணம் எடுத்துகொடுப்பது பாக்கெட் சைஸ்  நோட்புக்கில் இருந்து எடுத்துக்கொடுப்பதை  காட்டிலும் சற்று ஸ்டைலாகவும்  அதே நேரத்தில் தன்னம்பிக்கை கொடுக்கும் விஷயமாகவும் மாறிப்போனது…

 அதன்பின்  பேன்ட்டின் பின் பாக்கெட் நிறைமாத கர்பினியின் வயிற்றை போல  மாறி போனது…
 மார்பு எடுப்பான பெண் கவன ஈர்ப்புக்காக  அவளை பார்க்கும் போது எல்லாம்   மாராப்பை சரி செய்துக்கொள்வாலே அப்படி அடிக்கடி  பர்ஸ்   இருக்கின்றதா? என்று என் பேன்ட் பின் பாக்கெட்டை  தொட்டு பார்த்துக்கொள்வேன்…

 சென்னை ரங்கநாதன் தெரு கூட்டத்தில், சென்னை மின்சார ரயிலில்….  தியேட்டரில் படம் விட்டு வெளியே  வரும் போது… கோவிலில் சாமி கும்மிடும் மக்கள்  நெருக்கத்தில் என்று எல்லா  இடத்திலும் என் பின் பக்கத்தை  தொட்டு பார்த்துக்கொள்வேன்.

சார்  உங்க பர்ஸ் என்று தியேட்டரில்  இரண்டூ மூன்று முறை  என் பின் சீட்டுக்காரர் கீழே விழுந்த பர்சை எடுத்துக்கொடுத்து இருக்கின்றார். நானும் அதில் இருந்து எத்தனை சுவாரஸ்யமான படமாக இருந்தாலும் பர்ஸ் அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொண்டு படம் பார்ப்பேன்…

 ஏன் இவ்வளவையும் எழுதுகின்றேன் என்றால்… அவ்வளவு கவனமாக பார்த்துக்கொள்வேன் என்பதற்காக…


இரண்டு வருடத்துக்கு முன் சபரிமலை போய் ஐயப்பனை தரிசித்து  விட்டு செங்கனுர் பகவதியை பார்க்க நண்பர் ஆனந் மற்றும் அவர் நண்பர்களோடு  பிஎம்டபிள்யூ காரில்  பயணித்துக்கொண்டு இருந்தோம்…

அதில் நண்பர் ஜீவா கேட்டார்…

ஜாக்கி இதுக்கு முன்ன செங்கனூர் பகவதியை பார்த்து இருக்கிங்களா-?

இல்லைங்க…

 செம சக்திவாய்ந்த  அம்மன்… நீங்க ஒன்னா பாருங்க அவளை பார்த்துட்டு வந்தா ஒரு பெரிய திருப்பம் நடக்கும்…

நான் நம்பவில்லை..

 கோவிலுக்கு சென்றோம்  வேட்டி கட்டிக்கொண்டுதான் போக வேண்டும் என்று சொன்னார்கள்.. வேட்டி மாற்றிக்கொண்டு அம்மனை தரிசித்து விட்டு காருக்கு வந்து குருவாயுருக்கு செல்ல வேண்டும்.. வேட்டியை மாற்றி பேண்டுக்கு மாறும் போது கையில் இருந்த பர்ஸ்சை காரின் மீது வைத்து விட்டேன்..


இரவு தரிசனத்தில் குருவாயிருப்பனை  பார்த்து விடலாம் என்று  நண்பர் ஆனந் அவசரப்படுத்த பர்ஸ் காரின் மீது இருந்ததை … நான் கவனிக்கவில்லை அதனால்  எடுக்கவில்லை…

ஆலப்பி வழியாக கார் சென்றுக்கொண்டு இருந்தது.
பாவனா , முத்து சாட்  கொலை விவகாரம் நடந்ததே… அந்த இடத்தை கடக்கும் போது எனது போனுக்கு ஒரு கால் சார் நான்… மெக்கானிக் பிஜ்ஜு பேசறேன்..

உங்க பர்ஸ் காரின் மேல் இருந்து விழுந்துச்சி… அதை நான் எடுத்து இருக்கேன்…  நீங்க எவ்வட உண்டு என்று விணவ..? நான் இடத்தை சொன்னேன்.. நான் இருக்கும் இடத்தில் இருந்து 20 கிலோ  மீட்டர்  பின்னே இருந்தார் மெக்கானிக் பிஜ்ஜூ.. இன்னும் பதினைந்து நிமிடத்தில் வருகின்றேன் என்று சொன்னார்.. பர்சில் ஒரு நான்காயிரம்  பணம் இருந்தது…

வந்தார் கொடுத்தார்… கை பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.. ஆனந் பர்ஸ் பிரித்து 500 ரூபாயை பிஜ்ஜூ கையில்  திணக்க….
 வேண்டாம் என்று மறுத்தவர் ரொம்ப வற்புறுத்த வாங்கிக்கொண்டார்…


செங்கனூர் பகவதி சக்திவாய்ந்தவள்தான்…
 கடந்த வியாழக்கிழமை 27/07/2017  இரவு  பெங்களுர் போகும் வழியில்  கிருஷ்ணகிரியில் இருக்கும் விஜய்தாபாவில் சாப்பிட்டோம். யுடியூபில் லைவ்  போய் நண்பர்களோடு மகிழ்ச்சியாக பேசி விட்டு.. சாப்பிட்ட பில்லுக்கு  பணத்தை  பே செய்து விட்டேன்..

 யாழினியும் யாழினி அம்மாவும் ரெஸ்ட்  ரூம் போக ..  நான்  சப்பாடு பார்சல், இரண்டு வாட்டர் பாட்டில், இரண்டு போன், எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு காருக்கு வர முதலில் எல்லாவற்றையும் காரின் மீது வைத்தேன்….

போன் எல்லாம் பத்திரமாக வைக்க வேண்டும் என்று காரில் மிக சேப்ட்டியாக வைக்க..  வாட்டர் பாட்டிலை அதன் இடத்தில் வைத்தேன். சப்பாட்டினை   பத்திர படுத்தினேன்..


பர்ஸ்.. ஹங்- அது வழக்கம் போல காருக்கு மேல…

  சரி பண்ணிரண்டு மணிக்குள்ள பேங்களுர் போய்  விட வேண்டும் என்று அவசரத்தில் காரில் மேல் இருக்கும் பர்ஸ் மறந்து காரை ஸ்டார்ட் செய்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் வாசலில் வண்டியை நிறுத்தி  இருவரையும் ஏற்றுக்கொண்டு வண்டியை வேகம் எடுக்க…


எப்பயுமே கார் எடுக்கும் போது போன்,  பர்ஸ் எல்லாத்தையும் செக் செய்துக்கொண்டே வண்டியை எடுப்பேன்…. ஒரு கிலோ  மீட்டர் தூரம் போனதும் பர்ஸ்   நியாபகம் வந்து தேட… இல்லை திரும்பவும் விஜய்தாபாவுக்கு  போய்  தேடினேன் சிசிடிவியில் ஓட விட்டு பார்த்தோம் பர்ஸ் காரின் மீது ஸ்பஷ்ட்டமாய் உட்கார்ந்து இருந்தது….

அதன் பின் அது  எவ்வளவு தூரம் போய்  விழுந்தது யார் எடுத்தார்கள் என்று  நினைவில் இல்லை… பர்சில் அதே நாலாயிரம் ரூபாய் இருந்தது..

பிரஸ்கார்ட், கிரெடிட் கார்ட், லைசென்ஸ் எல்லாம் ஓகயா….

பெங்களுர் போகும் வரை செங்கனூர் பகவதி, ஆனந் ,ஜீவா, ராஜேந்திரன் மெக்கானி பிஜ்சு போன்றவர்கள் நியாபகத்தில்  திரும்ப திரும்ப வந்துக்கொண்டே  இருந்தார்கள்…

புதிதாய் சேலை கட்டும் பெண் மாராப்பில் கவனத்தோடு இருப்பது போல் நான் பர்சின் மீது கவனமாய் இருந்து இருக்க வேண்டும்…

கிருஷ்ணகிரி ரோட்டில் செங்கனூர் பகவதியும் இல்லை…மெக்கானிக் பிஜ்ஜூம் இல்லை.
அதனால் எனது பர்ஸ் ஒரு போதும் திரும்ப கிடைக்கபோவதில்லை..


 என் மனைவியின் சொந்த அத்தை ஹேமா என்னை நலம் விசாரித்தார்.. பர்ஸ் தொலைஞ்சி போச்சாமே?
ஆமாம்  எப்படி என்றார்…?

நான் விளக்கினேன்.

நீங்க கெட்டிக்காரர் ஆச்சே எப்படி மிஸ் பண்ணிங்க??? என்றார்..

பர்ஸ் தொலைந்த வேதனையை விட அந்த கெட்டிக்காரர் ஆச்சே வார்த்தைதான் மேலும் எனக்கு வலியை தந்தது.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
31/07/2017

============

குறிப்பு…

  கோடு  போட்ட சிவப்பு சட்டை 20 கிலோ  மீட்டர் துரத்திக்கொண்டு வந்து பர்ஸ் கொடுத்த மெக்கானிக் பிஜ்ஜூ மற்றும்  ஆனந் மற்றும்  நண்பர்கள்.


கடந்த  வியாழக்கிழமை  இரவு 27/07/2017 பெங்களூர் போகும் போது இந்த காமெடி என்றால் நேற்று ஞாயிற்று கிழமை திரும்ப வரும் போது செம காமெடி  நடந்தது..


அது விரைவில்.





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....

EVER YOURS...

 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner