பிரச்சார நெடிகொண்ட திரைப்படங்கள்தான் சமுத்திரகனி இப்போதேல்லாம் எடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு… நல்லவன் என்ற டேக் லைனுக்கு சமுத்திரகனி போய் பல மாதங்கள் ஆகி விட்டன…
இனி அவரே நினைத்தாலும் கமர்ஷியல் மசாலாக்கள் பக்கம் திரும்பவே முடியாது.. நல்லவன் அப்படின்னு பேர் எடுக்கறது கூட ரொம்ப ஈசிதான்.. ஆனா அதை தக்க வைக்க ரொம்பவே போராடனும். அவர் போராடிக்கிட்டு இருக்கார் அம்புட்டுதேன்.
உதாரணத்துக்கு தொண்டன் படத்தின் காதல் காட்சியில் கூட இரண்டு அடி டிஸ்டென்ஸ் கொடுத்தே நடிக்க வேண்டி இருக்கும்..
அப்பா படம் மொக்கை என்றார்கள்.. பி அன்டு சியில் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டாடினார்கள்… மாணவர்களின் கல்வி சூழலை நெகிழ்ச்சியாக சில காட்சிகளில் பேசியது… தம்பிராமய்யாவின் நடிப்பு அமிர்தாஞ்சன் தைலம் வாங்க வைத்தது…
இப்போது தொண்டன் திரைப்படம் வந்து இருக்கின்றது.. எலைட் ஆடியன்ஸ் சொல்கின்றார்கள்… இவர் என்ன சொன்னாலும் ஏத்துக்குவாங்களா? என்று.. நிச்சயம் இந்த திரைப்படமும் பி அன்டு சியில் நன்கு ஓடும்… அப்படி ஓடாவிட்டாலும் பெரிதாய் கையை கடிக்காது..
ஆம்புலன்ஸ் டிரைவர் சமுத்திரகனிக்கு சுனைனா மீது காதல் வருகின்றது.. ஆனால் அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதியிடம் பகைத்துக்கொண்டார்.. நிம்மதியாக இருக்க முடியுமா? அன்பின் வழியா அல்லது வன்முறை வழியை சமுத்திரகனி தேர்ந்து எடுத்தாரா? என்பதே தொண்டன் திரைப்படத்தின் கதை.
விக்ராந்க்கு இந்த திரைப்படம் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும் படியான திரைப்படம்.
கன்னத்தில் இருக்கும் ரத்தகறை துடைக்க கொடுக்கும் பஞ்சில் கவனம் ஈர்க்கின்றார்.
பொண்ணு பிடிக்கலைன்னா எப்படி அவளுக்கு புடிக்கறது போல நடந்துக்கறதுன்னு சொல்லிதரும் விஷயம் அற்புதம்..
அதே போல யாரையும் அசால்டாக வந்து கொன்று போட்டு விட்டு போக முடிகின்றது அதற்கும் இந்த திரைப்படத்தில் தீர்வை முன் வைக்கின்றார் சமுத்திரகனி.
இந்த படம் பிரசார நெடி திரைப்படமாகவே இருந்தாலும் இளைஞர்கள் ஒரு முறை பார்ப்பது நல்லது. காரணம் அவர்களை யோசிக்க வைக்க இந்த படத்தில் நிறைய காட்சிகள் உள்ளன..
இந்த படத்துக்க ஜாக்கிசினிமாஸ் ரேட்டிங்க.
5/3
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
26/05/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
0 comments:
Post a Comment