ஸ்பைடர் திரைவிமர்சனம்.





125 கோடி பட்ஜெட்… தமிழில் முதல் முறையாக  நேரடி தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு  நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம்…

மகேஷ்பாபுவை ஒக்கடுவில் இருந்து பாலோ செய்தாலும் நேரடியாக தமிழ் பேசி நடிப்பதை பார்க்க  சந்தோஷமாக இருக்கின்றது..



ஸ்பைடர் படத்தின் கதை என்ன?

இன்டலிஜென்ட் பியூரோவில் போன் கால் டேப் செய்யும்  வேலை பார்க்கும் மகேஷ் பாபுவுக்கு பொதுமக்களின் கால்களை டிரேஸ் செய்யும் போது சிலருடைய பிரச்சனைகளை  தீர்க்கின்றார்… ஆனால் அவருக்கு தெரிந்த இரண்டு பெண்கள்  கொடுரமான  முறையில்  இறந்து போகின்றார்கள். அதற்கு காரணமான கொலையாளியை அவர் கண்டு பிடித்தாரா? இல்லையா என்பதே கதை.


மகேஷ்  பாபு வயதாக வயதாக இளைமையாக மாறிக்கொண்டே போய் நம் வயித்து எரிச்சலை கொட்டிக்கொள்கின்றார்….  ராகுல் பீரித் சிங் தமிழல் கவுதம் கார்த்திக்கோடு ஒரு படம் செய்து தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் ஒதுங்கி தற்போது பிசியான ஆர்ட்டிஸ்ட் அவர்.
இந்த படத்தில் தமிழ் சினிமாவின் சாபமான அதே லூசு பெண்  கேரக்டர். ஆனால் சில காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார்.

பரத் சில காட்சிகளில் வந்தாலும் படத்தின் டேர்னிங் பாயிண்ட் அவர்தான்… படத்தின் பெரிய பலம் எஸ்ஜே  சூர்யா.. மனுஷன் பின்னி இருக்கின்றார்… தமிழ்  தெலுங்குக்கு அற்புதமான வில்லன் கிடைத்து இருக்கின்றார் மனுஷன் பின்னுகின்றார்.

எனக்கு அவரின் ஹேர் ஸ்டைல் பாத்திர படைப்பை பார்க்கும் போது சோ கண்ட்ரிபார் ஒல்டு மேன் திரைப்படத்தில் ஆன்டன் கதாபாத்திரத்தில்  நடித்த `   சேவியர்  பேர்டெம்மை நினைவுபடுத்துகின்றார்..
 படத்தின் கிளவரான சீன் மகேஷ்பாபு தனது அம்மா தம்பியை காப்பாற்றும் சீன்..

 மற்றபடி படம் பரபரப்பான  ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் அதே நேரத்தில்  பார்க்க வேண்டிய திரைப்படம் என ஜாக்கிசினிமாஸ் பரிந்துரைக்கின்றது..

… கொஞ்சம் கிளைமாக்சில் கவனம்  செலுத்தி இருக்கலாம்..



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner