Brindhaavanam 2017 பிருந்தாவனம் திரைவிமர்சனம்.



சசியின்  சொல்லமாலே திரைப்படத்தையும் அவர் எடுத்த மொழி படத்தையும் மிக்சியில் போட்டு சுவிட்ச் போட்டாலோ அல்லது..  கிரைன்டரில்  அரைத்தா ரிசல்ட் பிருந்தாவனம் திரைப்படமாக இருக்கும்…

இன்னும் எத்தனை நாளைக்குதான் ராதாமோகன் அரைத்த மாவையே அரைக்க போகின்றார்.?

எம் எஸ் பாஸ்கரை அவர் படத்தில் பார்த்து போர்  அடித்து விட்டது…
மொழி படத்தை பார்த்தது போல ஒரு  எபெக்ட்… என்று   இப்படியெல்லாம் பிருந்தாவனம் திரைப்படத்துக்கு என்னாலும்  விமர்சனம் எழுத முடியும்..



ஆனால் ராதாமோகன் தமிழ் சினிமாவின் பாசிட்டிவ் வைபரேஷனுக்கு  சொந்தக்காரர்..


  அவருடைய எந்த திரைப்படத்திலும் நெகட்டிவ் வைபரேஷன் இருக்கவே இருக்காது..

இந்த திரைப்படத்திலும் அதேதான்.. அது மட்டுமல்ல வயிறு குலுங்க சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் வசனங்கள் இந்த படத்திலும்  உண்டு..

அருள்நிதி வாய்பேசமுடியாத காது கேட்காத வாலிபன்.. ஊட்டியில் சவர தொழிலாளியாக இருக்கின்றார்..அதே ஊரில் தன்யா.. டிப்பார்மென்டல் ஸ்டோர் வைத்து இருக்கின்றார்… இரண்டு பேரும் சின்ன வயதில்  இருந்தே  நண்பர்கள்..  ஒரு கட்டத்தில்  இவர்கள் வாழ்வில்  நடிகர் விவேக் நடிகர் விவேக்காகவே என்ட்ரி  ஆகின்றார்.. குழப்பங்கள் உருவாகின்றது.,. முடிவு என்ன என்பது வெண்திரையில்..

அருள்நிதிக்கு மவுனகுரு, ஆறுவது சினம்  வரிசையில் பிருந்தாவனம்  அவருடைய கேரியரில் பெஸ்ட் திரைப்படம். முக்கிமாக முதல் காட்சியில் பஞ்சர் கடைக்கு வழி சொல்வதில் இருந்து… இன்டர்வெல்லில் காதல் வேண்டாம்  வெடிக்கும் இடம் என அசத்திக்கொண்டு போகின்றார்.



தன்யா.,. என்ன  பொண்ணுய்யா… சிரிப்பும் அந்த  துறு தறுப்பும்  யப்பா  படம் முடிந்து இன்னும் கண்ணில் அப்படியே இருக்குய்யா..கேஷுவல் டயலாக்  டெலிவரியில் அசத்துகின்றார்


எம்எஸ்பாஸ்கர் இந்த படத்திலும் அள்ளுகின்றார்.. முக்கியமாக அவருடைய பிளளாஷ் பேக் சீனும்… சர்ச் சீனும் சான்சே இல்லை.. கிளைமாக்ஸ் சர்ச்சீன் அதுவும்.. நம்பிக்கை என்ற  வார்த்தையை உச்சரிக்கும் போது உடம்பு சிலிர்கின்றனது..


விவேக் தனி ஆவர்தனமே செய்கின்றார்…  நான் மரம் நட்ட கேப்புல மொட்டை ராஜேந்திரன் போகி பாபு எல்லாரும் வந்துட்டாங்க.. அப்புறம் எப்படிநான் சினிமாவுல  வர முடியும் என்று அவரே அவரை கலாய்த்துக்கொண்டு இருக்கின்றார் எல்லாத்தையும்விட சரவணா ஸ்டோர் அண்ணாச்சி எப்ப  ஹீரோவா நடிக்க வருவார் என்று கேட்கும் காட்சியில் தியேட்டருக்கு சிரித்து வயிறு வலிக்கின்றது…

 பொன் பார்த்தீபனின் வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்…  முக்கியமாக விபத்து காலத்துல பெண்களையும் குழந்தைகளையும் ஏன் வெளியே அனுப்பறாங்க தெரியுமா?

அப்பதான் அந்த ஆடம் அமைதியா இருக்கும் எப்படி அந்த  இடத்துல இருந்து தப்பிக்க முடியும்ன்னு யோசிக்க முடியும்ன்னு  சொல்ற டயலாக் என  சொல்லிக்கொண்டே போகலாம்.
விஷால்  சந்திர சேகர் பாடல்களை விட பின்னனி  இசை அருமை.
மீண்டும் ஒரு பேமிலி என்டர்டெயின்மென்ட் பீல் குட் முவியை ராதாமோகன் கொடுத்து இருக்கின்றார்.. பிரியாக இருந்தால் தியேட்டருக்கு போய் குடும்பத்துடன் சிரித்து விட்டு வாருங்கள்.


இந்த படத்துக்கு ஜாக்கிசினிமாஸ்  ரேட்டிங்..

5/3,75




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner