பத்தாவது படிக்கறப்ப… கம்பியம் பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது… நான் பார்த்து விட்டு வந்த திரைப்படத்தை மிக சுவாரஸ்யமாக நண்பர்களுக்கு விவரிப்பேன்.. என்னை சுற்றி ஒரு பெரிய கூட்டமே நின்றுக்கொண்டு இருக்கும்.
அந்த பழக்கம் என் அம்மாவிடம் இருந்து தொற்றிக்கொண்டது என்று சொல்லலாம்…
காரணம் அப்போது எல்லாம் அம்மா என்னை படத்துக்கு அழைந்து செல்ல மாட்டாள்… படிப்பு கெட்டுவிடும் என்பதுதான் காரணம்..
அதிக பட்சம் சரஸ்வதி சபதமும் கந்தன் கருனைக்கும் அழைத்து செல்வாள்… மற்ற திரைப்படங்கள் நான் பார்த்தது இல்லை என்றாலும் நான் பார்த்த ஒரு பீலை என் அம்மா கதை சொல்லும் போது கிடைக்கும்.. அப்படியான அழகான கதை சொல்லி அவள்..
ஒரு கிலோ அரிசி மற்று உளுந்தினை அரை மணி நேரத்தில் அம்மா ஆட்டுக்கல்லி ஆட்ட நான் மாவினை குழிக்குள் லாவகமாக தள்ள… மிக சுவாரஸ்யமாக முதல் நாள் நான் பள்ளிக்கு போய் இருக்கும் போது பாடலி கொட்டாயில் பார்த்த படத்தை சீன் பை சீனாக சொல்லுவாள்…
ஒரு விஷயத்தை மிக சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்ற விஷயத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது எனது அம்மா ஜெயா என்கின்ற ஜெயலட்சுமிதான்…
யாழினி நிறைய கதைகள் தினமும் தொன தொன என்று சொல்லுவாள்.. கதை சொல்லுதால் யாழினிக்கு சிறுவயதில் இருந்தே தண்ணிப்பட்ட பாடு என்றாலும் மிக நேர்த்தியாக ஓரங்க நாடகம் போல நடித்து காட்டி சொல்வது எனக்கு ஆச்சர்யம்தான்..
அப்படியான வீடியோதான் இதுவும்.. அவள் சொல்லும் கதைகள் இன்னும் மெருகேற்றப்பட்ட டிஜிட்டல் வடிவில் நேரம் கிடைக்கும் போது பதிவேற்றுகின்றேன்.
பார்த்து விட்டு கருத்தினை சொல்லுங்கள்..
எங்க அம்மா எங்க யாருடைய வளர்ச்சியையும் பார்க்கலை...
யாழினி கதை சொல்ல சொல்ல எங்க அம்மா மாவு ஆட்டிக்கிட்டே சினிமா கதை சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது....
யாழினி கதை சொன்னப்ப அவளைதான் பார்த்தேன்.
ம்…
மறந்து விட்டேன்…
எட்டாம் வகுப்புவரை ஐ லைக் யு என்பதற்கு என்ன என்று அர்த்தம் தெரியாதவனின் பிள்ளை சொன்ன கதை இது என்பதுதான் இந்த வீடியோவின் சுவாரஸ்யம்.
யாழினி சொன்னது போல வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment