மயிலை அழகிகள்
கல்லானாலும் மயிலாப்பூரில் கல்லாவேன்
மரமானாலும் மயிலாபூரில் மரமாவேன்
 என்று பாட சொன்னால் கூட பாடுவேன்…
காரணம் மயிலையில்தான்  ஒட்டு மொத்தமாக அழகு  தேவதைகள்  ஒட்டு மொத்தமாக குடி  கொண்டு இருக்கும் இடம்… நான்   பந்தையம் கூட கட்டுகின்றேன்…  அழகிகள் என்றால் மயிலைதான்…

 கடந்த மூன்று வருடத்தில்  அவர்களிடத்தில் பெரும் மாற்றம் தெரிகின்றது… ஆம் அவர்கள் நேருக்கு நேர் பார்க்கின்றார்கள். முன்பெல்லாம்   நாம் பார்த்தால் தலை குனிந்தோ அல்லது வேறு  எங்கோ பார்ப்பது போல பாவ்லா காட்டுவார்கள்.. ஆனால் இப்போது  அவர்கள் அப்படி இல்லை.. நீ பார்த்தா நானும் பார்ப்பேன் என்ற சமத்துவத்தை நிலைநிறுத்துகின்றார்கள். சில நேரத்தில் அவர்கள் பார்க்கும் பார்வை நமக்கே டரியலை ஏற்படுத்துகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்… அப்படி என்ன டரியல் என்கின்றீர்களா? வச்சக்கண்  வாங்காமல் பார்த்தல்….

 சரி விஷயத்துக்கு வருவோம் மயிலை அழகிகள் மயிலையில் மூன்று  விஷயத்துக்காக ஒன்று கூடுவார்கள்.. ஒன்று மயிலை அறுபத்தி மூவர் அப்புறம் மயிலாப்பூர் பெஸ்ட்டிவல்… அப்புறம் நாவராத்திரி கொலுகாலங்கள்..

 ஆறுபத்தி மூவர் நெரிசலில் சிக்கி துன்பபடும் அழகிகளை பார்த்து மனம் வருந்தி இருக்கின்றேன். ஆனால் மயிலை பெஸ்ட்டிவல்தான்  அழகிகள்  தங்கள் திறமையை வெளிப்படுத்தி  அழகிள் மிளிர்வார்கள்.

கொலுவுக்கு  வடக்கு மாடவீதியில் கொலு பொம்மைகள்  விற்பனைக்கு வைத்து இருப்பார்கள்… கொலு முடிந்தாலும்  அதற்கு பிறகு  ஒரு மூன்று நாட்கள்  அந்த தெருவே கலைக்கட்டும்.
 அப்படி களைக்கட்டும்  நேரத்தில் தோழி ஒருவருக்கு மாட்டலும் வில்லையும் வாங்க விஜயா ஸ்டோருக்கு  மனைவியும் யாழினியும் செல்ல வேண்டும் என்றார்.

 அவரை அனுப்பிவிட்டு கொலுபொம்மைகள் வாங்க வந்த  பதுமைகளை பார்த்து வியந்தபடி நின்று இருந்தேன்.

சரியாக பத்துநிமிடம் இன்னும் மனைவியும் யாழினியும் வராத காரணத்தால் நான்  விஜயா ஸ்டோர் முதல் மாடிக்கு சென்றேன்.
 அங்கே பேரழகி  ஒருவள் அவள் அம்மாவோடு தோடு தேடிக்கொண்டு இருந்தால்  வாரனம் ஆயிரம்ல சிம்ரனை பார்த்தும்   சூர்யா  சொல்லுவரே.. அழகுன்னா அவ அப்படி ஒரு  அழகு..
 இத்தனைக்கு ஒரு சாதாரண புளுடாப்பும் கருப்பு லெக்கின்ஸ்சும்தான் போட்டு இருந்தது.

அப்படியான அழகு பதுமைகளை மயிலையில் மட்டுமே காண முடியும்.

 அவள் என்னை பார்த்தாள்… அது என் வாழ்நாள் பாக்கியம்… பார்த்து விட்டு  இவன் என்ன வாங்க  இங்க வந்தான் என்ற ஐயம் கண்களில்  தெரிந்தது….
யாழினியும் யாழினி  அம்மாவும் எனக்கு முதுகு காட்டி மூம்முரமாக  மாட்டல் தேடிக்கொண்டு இருந்தார்கள். என்னை அவர்கள்  பார்க்கவில்லை… அவர்கள் பார்க்கட்டும் என்று  நான் 40  செகன்டுக்கு அமைதி காத்தேன்..

பெரிய ஆசை எல்லாம் இல்லை..  நாம பார்ம்ல இருக்கோமா என்ற சுய பரிசோதனை செய்ய நினைத்தேன்… ஒன்று அவள்  சில நிமிடங்களுக்காவது என்னை  நினைவு கூற வேண்டும் இரண்டு அவளிடம் பேச வேண்டும்.

பதுமையின் கண்களில் குழப்ப  ரேகைகள்  யார்இ வன் என்று… அந்த குழப்பரேகையை ரசிக்கும் போதே  … கடையில் வேலைபார்க்கும்    பெண் கேட்டார்…

 சார் என்ன வேணும்?

பொண்டாட்டி புள்ளையை பிரிஞ்சி இருக்க முடியலை அதான் வந்தேன் என்றேன்..

 ஜிமிக்கி கம்மல் வாங்கும் இடத்தில்  பொண்டாட்டி புள்ளை எங்க? என்ற கேள்வி மேலும் பதுமையை குழப்பத்தில் ஆழ்த்தியது.. கடைகார பெண்ணுக்கும் குழப்பத்தோடு என்னை பார்த்தாள்…

 என் குரல் கேட்டு யாழினி அம்மா திரும்பி நீங்களே வந்துட்டிங்களா…? இந்த ஜிமிக்கி அவளுக்குநல்லா இருக்குமா?என்றாள்..

 பதுமைக்கு புரிந்து களுக் என்று வாயை மூடிக்கொண்டு சிரித்தது…  முதல் வெற்றி இன்னும்   இன்னும் சில  நிமிடங்களுக்கு அவள் நினைவு அடுக்கில் நான்.

கடைக்கார பெண்ணுக்கு இன்னும் குழப்பம்..

 என்னவென்று புரியாமல் முழிக்க…

 ஹலோ இவங்க என் சம்சாரம் இவ என் பொண்ணு என்று சொன்னதும்  அவருக்கு ஜோக் லேட்டாக புரிய அவரும் சிரித்து வைத்தார்…

திரும்ப யாழினி அம்மா ஒரு ஜிமிக்கி எடுத்து  இது எனக்கு நல்லா இருக்குமா? என்றார்… இப்போது பதுமைக்கு ஆர்வம்  நான் என்ன சொல்ல போகின்றேன்..?- என்று..

நான் சொன்னேன் நல்லா இருக்கும்… ஆனா நாட்டுபுறத்துல கண்டாங்கி புடவை கட்டி புல்லா கொசுவம் வச்சி புடவை கட்டி இந்த ஜிமிக்கி  போட்டா  நல்லா இருக்கும் என்றேன்..

  நாட்டுபுறம், கண்டாங்கி புடவை, கொசுவம்   என்றால்  என்ன என்று பதுமைக்கு காலேஜ் கல்சுரல் கற்றுக்கொடுத்து இருக்க வேண்டும்…
களுக்கு என்று இரண்டாம் மூறை பதுமை  சிரிக்க..

 எங்க வீட்டம்மாவுக்கு புரியலை..

  அப்படின்னா என்ன என்றார்… நான் பதுமையிடம் சொன்னே.. ஹலோ  நீங்க எங்க வீட்டம்மாவை கண்டாங்கி சேலை ஜிமிக்கின்னு யோசிச்சிதானே சிரிச்சிங்க  என்றேன்..

பதுமையும் ஆம் என்று தலையசைத்து வாயில் கை வைத்து   சிரித்தபடி அடுத்த ரோவில் டாலர் பார்த்துக்கொண்டு இருந்த அம்மாவிடம் போய் ஒட்டிக்கொண்டது…

இரண்டாம் வெற்றியை என்று என் மனது சொல்லிக்கொண்டு குதியாட்ட  போடுவதற்குள்.
என் மனைவி சொன்னார்… நான் அவளுக்கு வாங்கிட்டேன்.. நீ எதுக்கு மேல வந்தேன்னு தெரிஞ்சிடுச்சி.. கீழ போலாமா? என்றார் சின்ன  முறைப்போடு…

இப்படியான  பதுமைகளை மயிலையில் மட்டுமே காண முடியும்.

அந்த பதுமை எப்படி இருந்தாங்க என்ற மில்லியன் டாலர் கேள்வியும்  பீலிங்கும் உங்களிடம்  இருப்பது  புரிகின்றது..

 துலா தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொண்ணை வைத்தால்.. துலாபாரம் தோற்காதோ பேரழகே வரிக்கு அந்த பதுமைதான் சொந்தக்காரர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிந்தன…

1 , கல்லானாலும் மயிலையில் கல்லாவேன்…

2, நான் இன்னும் பார்மில்தான் இருக்கேன்

 வீட்டில் இரவு நேரச்சோறு டவுட்தான் என்றாலும் ரசனைக்கார கலைஞனுக்கு சோறு ஒரு கேடா என்ன?

#mayilai #maylapore #மயிலை #மயிலாபூர் #கொலு #கபாலி  #அழகிகள்  #பதுமைகள்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
03/10/2017
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner