மாட்டை மேச்சோமா கோலை போட்டோமான்னு இருக்கனும் ஆனா.. விஜய் நடிச்ச படங்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது..
இதுவரை விஜய் நடித்த எழு திரைப்படங்கள் பிரச்சனைகளை சந்தித்து இருக்கின்றது. முக்கியமாக புலி திரைப்படம் வரும் போது அவர் வீட்டில் ரெய்டே நடத்தினார்கள்…
தலைவா படத்தில் டைம் டூ லீட் என்று ஒரு வாசகம் ஆளும் கட்சியை சீண்டி பார்க்க அவரை கோடநாடு வரை அழைத்து சென்றது… இன்றைக்கு எடப்பாடியை சந்தித்தது போல சந்திக்க முடியாமல் காக்க வைத்து திருப்பி அனுப்பினார்கள்..
மற்றவர்களை விட்டு விடுங்கள்.. அவரது ரசிகர்கள் இன்னமும் படம் வெளிவர வேண்டும் ஆண்டவா என்று பயத்தோடு டிராவல் செய்கின்றார்கள்…
காரணம் அவர்கள் சமீபகாலமாக எல்லா திரைப்படத்துக்கும் எந்த பக்கத்தில் இருந்து எதிர்ப்பு வரும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்…
எல்லா படத்தை விட மெர்சல் திரைப்படத்து மெர்சலாக்கிவிட்டார்கள்..
ஜிஎஸ்ட்டி பிரச்சனை,
மெர்சல் டைட்டில் பிரச்சனை மற்றும் வழக்கு
விலங்கு நல வாரியம்
சென்சார் பிரச்சனை.
டிக்கெட் கட்டண உயர்வு
என்று ஏகப்பட்ட பிரச்சனை மெர்சலுக்கு…
இதுகுறித்தும் இதற்கு முந்தைய திரைப்பட பிரச்சனைகளை லைட்ட அலசி இருக்கின்றேன்.
பிடித்தால் வீடியோ ஷேர் செய்யுங்கள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment