kurangu bommai 2017 | குரங்கு பொம்மை விமர்சனம்.




கெட்டவன் என்று தெரிந்தும்  ஆண்டனியிடம்  வேலை செய்த பாட்ஷா பாயோட அப்பா விஜயக்குமார்  என்ன ஆனார் என்று  நம்ம எல்லாருக்கும் தெரியும்…
 அப்படி இருந்தும்  பாராதிராஜா அதே தப்பை செஞ்சி இருக்ககூடாதுங்கறேன்.
 இருந்தும் விதார்த் அப்பா  பாரதிராஜா  வெளியுலகில்    மரவாடிவைத்து  பொழப்பு நடத்தினாலும் திரை மறைவில் சிலை கடத்தும் கெட்டவன் தேனப்பனிடம்  செஞ்சேற்றுக்கடனுக்காக வேலை  செய்கின்றார்…


 கெட்டவன் கிட்ட வேலை செஞ்சா பத்மஸ்ரீ பட்டமா கொடுப்பாங்க…  ?????
பிரச்சனைகளை விதார்த் குடும்பம் சந்திக்கின்றது.. அதில் இருந்து  அந்த குடும்பம் வெளியே வந்ததா?   இல்லையா என்பதுதான் குரங்கு பொம்மை திரைப்படத்தின் கதை.
விதார்த் மற்றும் நாயகி டெல்னா டேவிஸ் பழுதில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்..  பெண்  பார்க்கும் இடத்தில் பிரச்சனைக்கு நடுவில்  உன்னை பிடிச்சி இருக்கு என்று சொல்லும் இடத்திலும்  எங்க அப்பா எங்கடா என்று கூண்டு கலைந்த குருவியாய்  தவிக்கும் இடத்தில் ஸ்கோர் செய்கின்றார்..
பேருந்தில் விதார்த பக்கத்தில்  உட்கார டெல்னா அண்டு விதார்த் நடத்தும் ஓரங்க நாடகம் ரசிக்க வைக்கின்றது…
 பிஎல் தேனப்பன்  பின்னி இருக்கின்றார்… அதை விட குமாரவேல்  பாராதிராஜா  கதை சொல்லும் சீனில் இரண்டு பேருமே கலக்கி இருக்கின்றார்கள்..  குமாரவேல் கேரியரில் இந்த திரைப்படம் முக்கியமானது என்பேன்.. அழகிய தீயேவில் இருந்து கவனித்து வருகிறேன்.

   அதே  போல இந்த பிக்பாக்கெட் கேஸ் ஆராத்து சான்சே இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
இசை அஜினிஸ் லோகநாத்.. பின்னனி இசையும் இரண்டு பாடல்களும் ரசிக்கும் ரகம். உதயக்குமாரின்  ஒளிப்பதிவில் போலிஸ் ஸ்டேஷன் இன்டீரியர்  மற்றும் மரவாடி, குமராவேல் வீட்டு சீன்கள் ரசிக்க வைக்கின்றன.
 அபினவ் சுந்தரின்  படத்தொகுப்பில்  கேன்டினில் நாயகனும் நாயகியும்  சாப்பிடும் காட்சிகள்  மிக அழகாக எடிட் செய்து ரசிக்க வைத்து இருந்தார்கள்.
 படத்தின் பிளஸ் பாயிண்ட்.. இந்த திரைப்படத்தின் ஓப்பனிங் சீன் மற்றும் குளோசிங்  சீன்…  பாரதிராஜா கதை சொல்லும் சீன் என்று நிறைய காட்சிகளை சொல்லலாம்.
மைனஸ் என்று பார்த்தால் சேப்ட்டி லாக்கரை ரிலிஸ் செய்யாமல் துப்பாக்கி வெடிப்பது.
குறவன் குழந்தை லாரிக்கு பின்னால் போன கதை தொங்குது போன்று பல முடிச்சுகள் அவிழாமல் தொங்கி  நிற்பது என்று நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் ஒரு முறை இந்த குரங்கு  பொம்மையை பார்க்கலாம் என்று ஜாக்கி சினிமாஸ் பரிந்துரைக்கின்றது..
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner