யாழினிக்கு ஜூஸ் சொல்லி இருந்தேன் ..
கடையில் இருக்கும் பூமர் பப்பிள்காம் டப்பி அருகில் போய் நின்றுக்கொண்டு என்னை ஒரு மாதிரியாக பார்த்தால்...
அதற்கு அர்த்தம்.. பிளீஸ் எனக்கு பப்பிள்காம் வேண்டும் என்பதுதான்...
வேண்டாம் என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை... காரணம் அந்த குழைவான பார்வை அப்படி..
வாங்கி தந்தேன்...
அதற்கு முன் முழுங்கிட கூடாது... அப்புறம் முழிங்கிட்டன்னே நான் அம்மாகிட்ட திட்டு வாங்கனும்..
சரிப்பா...
ஓகே.... அப்பா நீங்க பப்பிள் காம் வாங்கி கொடுத்ததை அம்மாக்கிட்ட ஏன் சொல்லறிங்க..?
நான்தான் எல்லாத்தையும் ஷேர் செய்யனும்னு சொல்லி இருக்கேனே... எதையும் மறைக்ககூடாது... அதனாலதான் ... ஆனாலும் அம்மா உனக்கு பப்பிள் காம் வாங்கி கொடுத்ததுக்கு என்னை திட்டதான் போறா....போ எல்லாம் உன்னாலதான்... செம திட்டு இருக்கு.,.
எப்படி திட்டுவா தெரியுமா?
நீங்கதான்ங்க அவளை கெடுக்கறிங்கன்னு சொல்லுவா... அதானே,...
ஆமாம்.
அப்பா.. நீங்க பப்பிள்காம் வாங்கி கொடுத்ததா சொல்ல வேண்டாம்.. நான் அடம் பிடிச்சதால வாங்கி கொடுத்திங்கன்னு சொல்லுங்க.. பழியை என் மேல போட்டு விடுங்க...
i will face the problem
அந்த வார்த்தை அவ சொல்லிட்டு என் கழுத்தை சேர்த்து கட்டிக்கிட்ட... அந்த அணைப்பும் நேர்மையும் என்னை ரொம்ப பெருமை படுத்திச்சின்னு சொல்லலாம்....
அப்பா....
நான்தானே கேட்டேன் நானே திட்டு வாங்கிக்கறேன்... நீங்க திட்டு வாங்காம நான் பார்த்துக்கறேன்...
இரவு பதினொன்னரை மணிக்கு அவள் அம்மாவை அவள் அலுவலகத்தில் இருந்து பிக்கப் செய்தோம்...
அவள் அம்மா வண்டியில் ஏறியவுடன்...
அம்மா... அப்பா எனக்கு ப்பிள்காம் வாங்கி தந்தார்... அவர் வேண்டாம்ன்னுதான் சொன்னார்... நான்தான் அடம் பிடிச்சி வாங்கிக்கிட்டேன்.... அப்பாமேல எந்த தப்பும் இல்லை ... திட்றதா இருந்தா என்னை திட்டும்மா... என்றாள்..
ஏஒன் குற்றவாளிக்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டும் ஊரில் இவ்வளவு நேர்மை எனக்கு பெரும் பயத்தை கொடுக்கின்றது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
30/06/2017
#யாழினி
#யாழினிப்பா
#யாழினிஅப்பா
#யாழினிஜாக்கிசேகர்
#மகளதிகாரம்
Ha!! Ha!! semma :)
ReplyDelete