வீட்டில் எல்லோரும் ரவுண்ட் கட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மற்ற பொருட்களை பீச்சாங்கையால் தொடக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு… சில குழந்தைகள் பீச்சாங்கையால் எழுதுவார்கள் பேட் பிடிப்பார்கள்… அவர்களையும் இந்த சமுகம் வலது கையால் செய்ய சொல்லி டார்ச்சர் செய்யும்…இடது கையை வெறுக்க முக்கியகாரணம்… அது சூத்து கழுவும் என்பதுதான்…அது கூட இந்த பொறம் போக்கை நாறவிடாமல் இருக்க அருவறுப்பு எல்லாம் பார்க்காமல் பீச்சாங்கை அவனுக்கு நல்லதைதான் செய்கின்றது…
ஆனாலும் அந்த கைக்கு கொடுக்கும் மரியாதை என்னவென்றால் கேவலமாக பார்ப்பதுதான்… பீச்சாங்கையில் அடிப்பட்டுவிட்டால் சாப்பிடும் கையால் கழுவ வேண்டும்… கழுவிய கையால் சாப்பிட வேண்டும்… அம்புட்டுதான் மேட்டர்.
பீச்சாங்கை திரைப்படத்தின் கதை என்னவென்றால்..?
இடது கை பழக்க உள்ள பிக்பாக்கெட்காரன் வாழ்வில் கொஞ்சம் நேர்மையாக இருக்க போய் அவன் படும் இன்னல்கள்தான் இந்த திரைப்படம். முக்கியமாக ஹீரோவின் பீச்சாங்கை அவர் சொல் பேச்சை கேட்கவில்லை என்பதுதான் படத்தின் சுவாரஸ்யம்.
#Peechaankai
ஆர்எஸ் கார்த்திக்தான் ஹீரோ.. புதுமுகம் நன்றாகவே தன் பாத்திரத்தை செய்து இருக்கின்றார்.. ஹீரோவுக்கு அவர் சொல் பேச்சை பீச்சாங்கை கேட்காது அதனால் படும் இன்னல்களை அழகாக செய்து இருக்கின்றார்.
ஹீ‘ரோயின் அஞ்சலி ராவுக்கு பெரிய அளவுக்கு வேலை இல்லை என்றாலும் போன் செய்து காதலை சொல்லும் இடத்தில் அசத்துகின்றார்..
அதே போல படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்கள்.
கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு இந்த லோ பட்ஜெட் படத்துக்கு பெரிய பலம்.. அதே போல பால முரளியின் பின்னனி இசை படத்தை மேலும் ரசிக்க உதவுகின்றது.
படத்தின் மைனஸ்… இன்னமும் எஸ்டிடி பூத் வைத்து இருக்கின்றார்கள்.. என்பது படத்தின் முதல் 20 நிமிடம் நீங்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும…
இயக்குனர் அசோக்கிற்கு பிளாக் கமெடி நன்றாக வருகின்றது… இரண்டாம் பாகம் முழுக்க சிரித்து சிரித்து வயிறு மாளலை… போங்க.. இந்த வார வீக்கென்டில் இந்த திரைப்படத்துக்கு போய் ஜாலியாக சிரித்து விட்டு வரலாம்..
ஜாக்கி சினிமாஸ் ரேட்டிங்.
3,25/5
பார்க்க வேண்டிய திரைப்படம் என்று ஜாக்கிசினிமாஸ் பரிந்துரைக்கின்றது.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
0 comments:
Post a Comment