பிலிமில் போட்டோஎடுத்த காலங்கள் வாழ்வில் மறக்க முடீயாத காலங்கள்.. முகூர்த்த நேரம் வரும் முன் புது ரோல் மாற்றி வைத்துக்கொள்வேன்.. ரொம்பவும் பரபரப்பாக இருந்த காலகட்டம் அது....
பென்டக்ஸ் 1000 மற்றும் நிக்கான் எப்எம் டென் காலத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருக்கின்றேன்... அடுத்ததாக நிக்கான் டி 40 எக்ஸ்... கேமராவோடு நான் அப்கிரேட் ஆகவில்லை...
அப்படி ஆனால் அதே வழியில் பயணித்து விடுவேன் என்று எனக்கு பயம்...
‘
அம்மா சொன்னார் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்றார்.. கற்றுக்கொண்டேன் ... அது சோறு போட்டது.. ஆனால் அது மட்டும் என் வாழ்க்கையில்லை...
நிறைய திருமணங்கள்.. ஆல்பங்கள் பெயர் புகழ் என்று 20 வருடத்தில் எத்தனையோ பார்த்தாகிவிட்டது... நிறைய நிகழ்வுகள்... இருந்தாலும் ....ஒரே மாதிரி வேலையை செய்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்தது இல்லை..
அதனால் புகைப்பட தொழிலை பகுதி நேரமாக மாற்றிக்கொண்டேன்... எப்போது வேண்டுமானாலும் எனக்கு பிடித்த இந்த துறைக்கு மீண்டும் பகுதி நேரமாகவாவாது வருவேன்....
எதிர்கால லட்சியம் 5டி கேமரா செட்டப்போடு மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்பதே....
வருவேன்... திரும்ப வருவேன்..பழைய ஜாக்கிசேகரா வருவேன்.
நான் எடுத்த எத்தனையோ புகைப்படத்தில் ஒன் ஆப் த பெஸ்ட் என்று எப்போதும் சொல்லக்கூடிய புகைப்படம் இது...
புகைப்படகலைஞன் ஒரு வேட்டைக்காரன் எப்போது அவன் கவனமாக இருப்பான்... அப்படி ஒரு கவனமான பொழுதுதில் கவனத்துடன் கிளிக்கியது இந்த புகைப்படம்.
#worldphotographyday
ஜாக்கிசேகர்
19/08/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நைஸ்
ReplyDelete