=
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
#மெர்சல்… #Mersal
விஜய் தனது படத்தில் அரசியலும் பேசி விட்டு நலத்திட்ட உதவிகளையும் செய்தால் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்பதற்கு உதாரணம் நடிகர் விஜய்..
இந்த படம் தீபாவளிக்கு ரிலிஸ் ஆவதற்குள் பலவகையான போராட்டங்களை சந்தித்து விட்டது … ஒரு கட்டத்தில் விஜய் ரசிகர்கள் இந்த தீபாவளிக்கு மெர்சல் ரிலிஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று திடமாக நம்பினார்கள்.
இன்று காலை நாலு மணி ஷோவுக்கே படம் ரிலிஸ் ஆகுமா என்று தியேட்டர் வாசலில் தூக்கம் கெடுத்து தெவுடு காத்த நிலை.. ஒரு வழியாக தடைபல கடந்து படம் ரிலிஸ் ஆகிவிட்டது.
=
மெர்சல் திரைப்படத்தின் கதை என்ன?
நகரத்தில் மருத்துதுறை சம்பந்தபட்ட ஆட்கள் கடத்தப்பட்டு கொடுரமாக கொலையகின்றார்கள்… அவர்கள் ஏன் கடத்தப்பட்டு கொல்லபடுகின்றார்கள் என்பதுதான் மெர்சல் திரைப்படத்தின் கதை.
விஜய் விடைலையாக மெச்சூரிட்டியாகவும் நடிப்பில் பின்னி இருந்தாலும் இடைவேளைக்கு பிறகான கிராமத்து வெள்ளந்தி வேடத்தில் தாடியும் அவர் கெட்டப்பும் செட்டாகாத ஒரு பீலை கொடுக்கின்றன.. அதே நேரத்தில் நித்தியா மேனன் மற்றும் அவர்கள் இருவரின் காதலும் படம் பார்க்கும் நமக்கு கடத்துகின்றார்கள்
காஜல் ஒரு பாட்டுக்கு சமந்தா ஒரு பார்ட்டுக்கு வருகின்றார்கள்.காஜல் மாச்சோ பாடலுக்கு ஒரு கருநீல கலர் உடை ஒன்றில் வருகின்றார்… ஒரு இரண்டு மணி நேரத்துக்கு பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற அழகை கொடுத்து இருக்கின்றது.
சமந்தா டேய்தம்பி வாடா உனக்கு ரோஸ்மில்க் வாங்கி தரேன் என்று சொல்லிவிட்டு நீதானே பாடலும் அந்த செட்டும் ஆர்ட் டிபார்ட்மென்டும் அருமை.
எஸ்ஜே சூர்யாவும் சத்தியராஜூம் பின்னி இருக்கின்றார்கள்.. ரொம்ப நாட்களுக்கு பிறகு வடிவேலுவை திரையில் பார்க்க முடிகின்றது. பெரிதாய் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை.
விஷ்னுவின் ஒளிப்பதிவு படத்துக்கு ரிச்நஸ்சும் ஒரு யூத் பீலையும் கொடுக்கின்றது… ரகுமானின் இசையில் மெர்சல் அரசன் மற்றும் ஆளப்போறானுக்கு ஒட்டு மொத்த தியேட்டரே எழுந்து ஆடுகின்றது.
ரூபனின் எடிட்டிங் பாடல்களில் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றது.
காளி வெங்கட் அவரின் மகளாக நடித்த பெண்.. இரண்டு பேருமே நடிப்பில் கலக்கி இருக்கின்றார்கள்..
செகன்ட் யூனிட் டைரக்டர் சூர்யா பாலகுமாரன் என்ற பெயர் பார்த்த போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.. வாழ்த்துகள்டா தம்பி.
அட்லி எழுதி இயக்கி இருக்கின்றார். இந்த படத்துக்கு வில்லனே சென்டிமென்ட் காட்சிகள்தான் முதல் பாதியிலும் இரண்டாம்பாதியிலும் நிறைய சென்டிமென்ட் காட்சிகள். இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து இருக்க வேண்டும்… இன்னும் கிரிஸ்ப்பாக இருந்து இருக்கும்.
இந்த படத்தை பார்க்கும் போது அபூர்வசகோதரர்கள், ரமனா, கஜினி, ஜாக்கிசானின் ரம்பிள் இன் தி புரோனக்ஸ் போன்ற திரைப்பபடங்கள் நியாபகத்துக்கு வருகின்றன..
மருத்துவதுறை தகிடுதத்தங்களை ஒரளவுக்கு அலசி இருக்கின்றார்கள்.. ஒருமுறை பார்க்கலாம்..
இவன்
ஜாக்கிசேகர்
ஜாக்கிசினிமாஸ்
என் நண்பர்கள் சொந்தங்கள் அனைவருக்கும் தங்கள்
வாழ்வில் தீப ஒளி போல பிரகாசமாகவும் வளமானதாகவும் இருக்க
ஜாக்கியின் இனிய உளம்கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யங்கள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment