தந்தி வாசிப்பதில்லை... காரணம்.?


தினத்தந்தி வாசிப்பதை குறைத்து இருந்தேன்.. காரணம் அதில் வரும் சில செய்திகள் அன்றைய தினத்தை ரொம்பவே டிஸ்டர்ப் செய்துவிடும் தன்மை கொண்டது... சிலது கதைகளை அவிழ்த்து விட்டு சுவாரஸ்யத்தை சேர்த்தாலும் உண்மை என்பது சுடும் தன்மை கொண்டது..,,



பட் நிறைய கதைகள் அதற்கான கரு.. தந்தியில் இருந்துதான் கிடைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மூன்று நாட்களுக்கு முன் படித்த செய்தி...
22 ஆம் தேதி பையனுக்கு பர்த்டே...
அவனுக்கு ஆறு வயசுன்னு நினைக்கறேன்...
அப்பா ஆட்டோ ஓட்டுறார்... அம்மா ஹவுஸ் ஒய்ப்.
பையனோட பர்த்டே
எங்க கொண்டாடுவது என்ற கேள்வி தம்பதிகளுக்குள்ளே எழுகின்றது..
அவள் சொல்கிறாள்... எங்கம்மா வீட்டுல கொண்டாடலாம் என்கிறாள்..
புருசன் சொல்றான் நம்ம வீட்டுலயே கொண்டாடுலாம்...
பேச்சு விவாதமாகி வார்த்தை தடித்து சண்டையில் முடிகின்றது..
புருசன் வேலைக்கு போறான்...
பொண்டாடி குழந்தையை டிவி பார்க்க சொல்லிட்டு பேனில் புடவை போட்டு அதுக்கு கழுத்து கொடுத்து நாக்கு தள்ளி செத்து போறா...
புருசனுக்கு செய்தி தெரியுது.... அழுது புலம்பரான்... கொள்ளி வைக்கறான்.. ஒரு சின்ன சண்டை... பொண்டாட்டி உயிரை எடுக்க வச்சிடுச்சேன்னு பீல் பண்ணி... இரண்டு நாள் கழிச்சி..
சென்னை புறநகர் மின்சார ரெயிலில் விழுந்து அவனும் தற்கொலை செஞ்சிக்கறான்..
மொத்தமே மூனு நாளுதான்...
அந்த பொறந்தநாள் கொண்டாடுன பையன் இன்னைக்கு ஆனாதை...
அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
யார் வளர்ப்பார்கள்?
இந்த நேரத்துக்கு அவன் சாப்பிட்டு இருப்பானா?
குறிப்பு..
இதுக்குதான் நான் தந்தி படிக்கறதில்லை.
ஜாக்கிசேகர்
29/06/2017
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

3 comments:

  1. நான் தினமலர் வாசிப்பதில்லை. அவர்களின் உண்மை திருஉருவம் அப்படி

    ReplyDelete
  2. ஐயைய்யே, நீங்களா இப்படி மனசைக் கோழையா வச்சிருக்கீங்க?

    ReplyDelete
  3. எங்கவீட்டுலேயும்தான் டெயிலி சண்டை நடக்குது .... ம்ம்ம் அதுக்கெல்லா ஒரு குடுப்பினை வேணும், ஜாக்கி சார்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner