முத்தமிடுதல் ஒரு கலை….
பரோட்டாவில் சால்னாவை கொட்டி அவசரமாக பிசைந்து உருட்டி உதடு துடைத்து கை கழுவி விட்டு செல்லும் செயல் அல்ல…
மெல்ல மானை வேட்டையாடி வாகான அல்லது தோதான இடத்தில் வைத்து பரபரப்பில்லாமல் ருசிக்கும் ஒரு புலியை போல மூர்கமில்லாமல் அதே நேரத்தில் ருசியின் பசியோடு முத்தமிட வேண்டும்.. மெல்ல ரத்த சுவை மூர்ந்து பார்த்து மெல்ல தோல்களை மெல்ல கவ்வி பிறகு தசைகளை வெறியோடு சுவைக்க வேண்டும்..
நம்ம ஊரை பொருத்தவரை முத்தமிடல் பெரும் குற்றம்.. நம் படங்களில் முத்தகாட்சிகள் வந்தால் கேமரா முன்னால் பூக்கள் சினுங்கி தொலையும்… கமல் வசூல்ராஜா படத்துல பத்துக்குள்ள நம்பர் சாங்குல பூஆட்டி உதடு துடைத்து போவது… தமிழ்சினிமா முத்தகாட்சியை நக்கல் விடும் ரகம்தான்.
பாண்டி ரத்னா தியேட்டரில் ஆங்கில படங்கள்தான் எனக்கு முத்தமிடுதலை கற்றுக்கொடுத்தன…ஐயே எச்சி என்று உதாசினப்பட்ட விஷயங்கள் பின்னாலில் சரியாக கற்று குட் பாய் பட்டம் கிடைக்க உதவின…
இந்திய சினிமாவில் அனேக முத்த காட்சிகள் வந்தாலும் சமீபத்தில் நான் பார்த்து ரசித்த முத்த காட்சி
#BandBaajaBaaraat இந்தி படத்துல Ranveer Singh | Anushka Sharma ரெண்டு பெரும் முத்தமிட்டு கொள்ளும் அந்த காட்சி என்னை பொருத்தவரை மிகசிறப்பான காட்சி என்பேன்.
அவனுக்கு அவள் மேல் மிகுந்த மரியாதை கலந்த பிரியமும் பயமும்….
அவளுக்கு அவனை முதலில் பிடிக்காது…அதன் பின் அவன் செயல்களின் பால் ஈர்க்கப்பட்டு அவனோடு பயணிக்கின்றாள்…
ஒரு கட்டத்தில் இருவரும் வெற்றியை கொண்டாட மது அருந்துவார்கள்..
மது போதையில் அனுஷ்கா சர்மா.. ரன்வீர் சிங் மேல் சாய்வார்..
மரியாதை பெண் அதனால் தள்ளி தள்ளி விட்டாலும் திரும்பவும் ரன்வீர் அனைப்புக்கு திரும்ப திரும்ப வருவாள்..
ஒரு கட்டத்தில் காமம் தூண்ட குளோசப்பில்….
முகம் பார்த்து கிட்டே அனுஷ்கா முதலில் நெருங்க… ரன்வீர் தயங்கி மெல்ல உதட்டில் பட்டும்படாமல் முத்தமிட்டு மரியாதை மற்றும் பயம் காரணமாக குழப்பதுடன் நகர்ந்து நிற்க…. அவளிடம் கொஞ்ச நேரம் கழித்து சின்ன புன் சிரிப்பை பார்த்து தயங்கி தயங்கி அழுத்தமான முதல் முத்தத்தை நோக்கி செல்லும் போது…
பின்னனி இசை சான்சே இல்லை.. குழப்பத்தில் இருக்கும் நேரத்தில் அந்த கால தூர்தர்ஷன் ஸ்டேஷன் ஆரம்பிக்கும் முன் ஒரு ஒளி கேட்குமே குன்ன்ன்ன்ன் என்று அது போல கேட்கும்…. இருவரின் தயக்கத்துக்கு பின் உதடு பட்டவுடன் டங் கென்று பியானோ ஒலி கேட்கும்… அற்புதமான பின்னனி இசை….
சமீபத்தில் பார்த்த ஆகச்சிறந்த முத்தக்காட்சி இது என்பேன்.. தமிழில் ஆஹா கல்யாணம் திரைப்படத்தில் இது போன்று ஒரு காட்சி இல்லவே இல்லை..
இவ்வளவு ஏன் ---?இன்றைக்கு முத்தம் பற்றி நீட்டி முழக்கி கொள்ள காரணம் இருக்கின்றது.. இன்று உலக முத்த தினம்….
காமத்துக்கு முன்னான நீண்ட நெடிய முத்தங்கள் அன்பின் அதீத வெளிப்பாடு என்பதை அறிக…
முத்தம் பற்றி உனக்கு என்ன தெரியும்????
நிறைய முத்தங்களை நான் பெற்றும் கொடுத்தும் இருக்கின்றேன்..
ஆனால் அந்த முத்தங்களை குறித்து திரும்ப திரும்ப நினைத்து பார்க்கவோ அல்லது...அது குறித்து பெருமையாக பொதுவெளியில் எழுதாமல் இருப்பதே ..........................
நான் பெற்ற , கொடுத்த முத்தங்களுக்கு....
நான் செய்யும் கைமாறு...
பிரியமுத்தங்களுடன்
ஜாக்கிசேகர்
06/07/2017
#இன்றுஉலகமுத்ததினம்
#WorldKissDay 2017 - Jul 06, 2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment