Kidnap (2017 film) தாய் கண் எதிரில் கடத்தப்பட்ட பிள்ளை கதி என்ன?

ஆறு  வயசு ஆம்பளை புள்ள கடத்தபடுகின்றான்..

அதுவும் புள்ளைய கடத்தும்  போது….

ஸ்கூல்ல இருந்து வெளிய வந்த போது அல்ல..

சரவணாஸ்டோரில் மும்முரமாக துணி எடுத்துக்கொண்டு இருக்கும் போது அல்ல..


பொருட்காட்சியில் டெல்லி அப்பளம் தின்னுக்கொண்டு இருக்கும் போது அல்ல…

ரயில் நிலையத்தில் ரெஸ்ட் ரூம் போய் விட்டு வருவதற்குள் கடத்த படவில்லை..

மெரினாவில்  காணும் பொங்கல் பெருங்கூட்டத்தின்  போது கடத்த படவில்லை..

 ஆனால்

சிங்கள் மதர் ஹேலிபெர்ரி தன் புள்ளைய பார்க்குக்கு அழைச்சிகிட்டு போகும்  போது ஒரு  போன் கால் வருது…   போன்பேசிக்கிட்டு இருக்கும் போது கண்ணுல மண் தூவி தன் பையன் அவ கண் எதிரில்   கடத்த படறான்…

அதுவும் கண்  எதிரே  திமிர திமிர காரில் கடத்தபடுகின்றான்..


 ஓடி பிடிக்க முயற்சிக்கிறாள்.. முடியவில்லை… தன்னுடைய காரில் துரத்து கின்றாள்..  காரில் துரத்தும் போது  செல்போனை மிஸ் செய்து விடுகின்றாள்…
காரை பின் தொடர்கின்றாள்… காரை இடித்து தடுத்து நிறுத்தலாம்… ஆனால் கையில்  கத்தி வைத்து குழந்தையை  கொன்று விடுவேன் என்று   கடத்தல்காரன் மிரட்டுகிறான்..

கையில் போன் இல்லை..... இருந்தால்  911 அழைக்கலாம்
.கண்ணைவிட்டு கடத்தபட்ட கார் மறைந்து விட்டால்… அவ்வளவுதான் பத்தோடு பதினொன்றாக மிஸ்சிங் கேசில் தன் பையன் புகைப்படமும் எல்லா போலிஸ் ஸ்டேஷனிலும் இடம் பெரும்..


என்னாச்சின்னு  கேட்டா?


ஏம்மா உன் புள்ள மட்டுமா? காணா போவுது…  வருஷத்துக்கு தமிழ் நாட்டுல  8000 பசங்க  காணம போவுது…  நாங்களும்  தேடிக்கிட்டுதான் இருக்கோம் என்று  விஜயகாந் போதல புள்ளி விவரம் சொல்லுவார்கள்…


அதனால் காரில்  பிள்ளை இருக்கிறான்..  கையில் கார் இருக்கின்றது..
ங்கோத்தா எங்க போனாலும் தெருத்து தெருத்தி புள்ளைய   மீட்கறது மட்டும்தான் அம்மாக்காரிக்கு வேலை அதை விட  எனக்கு என்ன புடுங்கற வேலை இருக்கு.. என்று  ஹேலிபேரி   பிள்ளையை  கடத்திய  காரை வெறிகொண்ட மட்டும் துரத்துகின்றாள்..


கடத்தப்பட்ட தன் பிள்ளையை  காப்பாற்றினாலா? இல்லையா என்பதே கிட்நாப் திரைப்படத்தின் கதை.
அதை விட டேக்கன்  படம் போல ஒரு சவால் விடுகின்றாள்..


 ஒக்காலி நீ எங்க போனாலும் சரி… எந்த இடத்துக்கு போனாலும் சரி .. என் புள்ளை உன் காரில் எத்தைனை மணி நேரமா‘ இருந்தாலும் சரி நான் உன்னை எங்க  போனாலும் சரி.. உன்னை பாலோ செய்யாம விடமாட்டேன்னு  சபதம் போடுகின்றாள்… சபதத்தில் வெற்றி பெற்றாளா? இல்லையா?- என்பதே இந்த திரைப்படத்தின் சுவாரஸ்யம்.
===============

படத்தின் சுவாரஸ்யன்னு  பார்த்தா.? 2009 ல படத்தை ஆரம்பிச்சி.. 2014 இல்  படத்தை முடிச்சி… இப்பதான் 2017 மார்ச்ல ரிலிஸ் பண்ணி இருக்காங்க…
ஹேலி பெர்ரியோட தி கால் திரைப்படம் எத்தனை பேர்  பார்த்து இருக்கிங்கன்னு தெரியாது… ஆனா அந்த படம் பார்த்து இருந்தா இந்த படமும் அதே போல  இருக்குன்னு  சொல்லி இருப்பிங்க.. ஆனாலும் படம் சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் கொடுக்குது என்பதே நிஜம்.
 எல்லாத்தைவிட ரொம்ப நல்லா நடிச்சி இருக்காங்க. பெர்ரிக்கு 50 வயநு ஆகுது.. ஒரு ஷாட்டுல பிள்ளைய  கடத்தின காரை துரத்த ஓடுவாங்க பாரு… 50 வயசுல அப்படி ஒரு ஓட்டம் நம்ம எல்லாம் ஓட முடியாமான்னு டரியலா இருக்கும்..செம பர்பாமன்ஸ்… அதுவும் புள்ளைய கொண்ணுடுவேன்னு  சொல்லிட்டு காரை  நிறுத்திட்டு கை எல்லாம் படபடப்பாய் நடுங்கி அழும் காட்சி அற்புதம்.
==============
படத்தோட டிரைலர்.


==================
படக்குழுவினர் விபரம்.

Directed by Luis Prieto
Produced by
Gregory Chou
Lorenzo di Bonaventura
Erik Howsam
Joey Tufaro
Halle Berry
Elaine Goldsmith-Thomas
Screenplay by Knate Gwaltney
Starring
Halle Berry
Sage Correa
Lew Temple
Chris McGinn
Music by Federico Jusid
Cinematography Flavio Martinez Labiano
Edited by Avi Youabian
Production
company
Di Bonaventura Pictures
Gold Star Films
606 Films
Lotus Entertainment
Rumble Entertainment
Well Go USA Entertainment
Distributed by Aviron Pictures
Running time
94 minutes
Country United States
Language English
Budget $21 million
========
பைனல் கிக்.

பெர்ரிக்கு வயசாயிடுச்சி.. நமக்கும்தேன்.. ஸ்வார்டுபிஷ் படத்துல  சன் பாத் எடுத்துகிட்டு புத்தகம் படிச்சிக்கிட்டு இருக்கற சீன் மற்றும் உடை மாற்றும் சீன்  இந்த படத்தை பார்க்க சொல்ல அந்த சீன் தேவையில்லாம வந்து தொலைஞ்சிது..


அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் இந்த கிட்நாப்…
ஜாக்கிசினிமாஸ் ரேட்டிங்… 3.25/5


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
22/05/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....EVER YOURS...
 

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner