உலகம் ரொம்ப சின்னதுதான்.






2012 ஆம் ஆண்டு  அதே ஜூன் மாதத்தில் நான் இந்த பதிவை எழுதினேன்.. காரணம்   எனக்கு பிடித்த புகைப்படங்களுள் இந்த புகைப்படமும் ஒன்று…

திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களில் ஊட்டிக்கு பேமலியுடன் நண்பி திருமணத்துக்கு சென்ற போது, என் மச்சான் எடுத்த படம்..

சைட் சீயிங் போகும் போது ஒரு சென்னை குடும்பம் பழக்கமானது.. நான் அந்தரத்தில் தூக்கி வைத்து இருக்கும் குட்டி பெண் நிறைய என்னிடத்தில்  பேசினாள்…



 அவள் பெயர் மறந்து விட்டேன்.. ஆனால் அவளுக்கு அலட்டி என்று பெயர் வைத்தேன்.. இப்போது மூன்றாவதோ அல்லது நான்காவதோ படிக்கலாம்..

 அவள் அப்பா சதர்ன் ரயில்வேயில் பணி.. அம்மா வக்கிலாக இருக்கின்றார்… எப்போதாவது ஆன்லைனில் பேசும் போது அலட்டி பற்றி விசாரிக்காமல் நான் இருந்ததில்லை..

 எங்கள் இருவர் முகத்திலும்தான் எவ்வளவு சந்தோஷங்கள்.... வாவ்.

 சரி விடுங்கள்…

இந்த உலகம் ரொம்ப சின்னது…  திரும்ப 2015 ஆம் ஆண்டு அதே கொடைக்கானல் சைட் சீயிங்… 2012 ஆம்  ஆண்டு சந்தித்த அதே குடும்பம் மூன்று  வருடத்தில் அவர்களை அதே கொடைக்கானலில் மீண்டும் சந்தித்தேன்.

எதிர்பாராதது என்றாலும் மீண்டும் சந்தித்ததில்  மிக்க மகிழ்ச்சி.


இப்போது நான் ஒற்றைக்கையில்   தூக்கிய  அதே பெண்  வளர்ந்து பெரியவளாகி இருந்தாள்..
 என்னை  அவள் மறந்து விட்டாள்.... நான்  தூக்கட்டுமா என்று கேட்ட போது மறுத்து விட்டாள்… பெரிய மனுஷிதனம் வந்து  விட்டது..

அவர்கள் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு..  அந்த பெண்ணோடு யாழினியையும் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன்., நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வர சொன்னார்கள்..

2015 ஆம் ஆண்டே எழுத வேண்டிய பதிவு இது… சோம்பேறிதனத்தை தவிற வேறென்ன…இப்பவாவது எழுதினேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.,

ஆங்..

ஒன்னு சொல்ல மறந்துட்டேன்…
அந்த பொண்ணு பேரு இப்பயும் எனக்கு நியாபகத்துல இல்லை…

என்னை பொருத்தவரை  அவ என்னைக்குமே எனக்கு அலட்டிதான்..

அலட்டி ஐ லவ்யூ…



ஜாக்கிசேகர்
08/06/2017


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
EVER YOURS...
 

2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner